Tamil Islamic Media

ரியாளுஸ்ஸாலிஹீன் ஆடியோ புத்தகம் (MP3)



Audio (MP3) Tamil Book (PDF) English Book (PDF)

RiyadusSaliheen இமாம் நவவி(ரஹ்) அவர்கள் பல்வேறு தலைப்புகளில் பயனுள்ள பல நூல்களை எழுதியுள்ளார்கள். அவை
யாவும் மக்களின் வரவேற்பையும் நன்மதிப்பையும் பெற்றன. மார்க்க அறிஞர்கள் அந் நூல்களை பல கோணங்களில் ஆய்வு செய்தனர்., தாங்களும் பயன் பெற்றனர்., மக்களுக்கும் பயனளித்தனர்.

இமாம் நவவி அவர்களின் நூல்களில் மக்களின் அதிகப் பயன்பாட்டிற்குரிய, பாமரர் - பண்டிதர் அனை
வரிடையேயும் அறிமுக மான நூல்தான் ரியாளுஸ் ஸாலிஹீன் மின் கலாமி ஸைய்யிதில் முர்ஸலீன்.
அனைத்துத் தரப்பு மக்களிடையும் இத்தொகுப்பு அதிகஅளவு புகழ் பெற்றதற்குக் காரணம், இந்நூல்
வாழ்க்கையின் எல்லாத் துறைகளுக்கும் வழிகாட்டக்கூடிய சீரான அறிவுரைகளைத் தனித் தனித் தலைப்புகள் அமைத்துச் சிறப்பாய் வழங்குகிறது என்பதுதான்.

இஸ்லாத்தின் நன்நெறிகளிலும் நற்குணங்களிலும் நல்லார்வத்தை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு
பாடத்திற்கும் குர்ஆன் வசனங்களை மணி மகுடமாகச் சூட்டி ஆர்வமூட்டுதல், அச்சறுத்துதல் எனும் இரு
அம்சங்களைக் கொண்ட ஹதீஸ்களையும் அணிகலன்களாக அணிவித்துப் பார்ப்போரும் படிப்போரும் கேட்போரும் இன்புறும் வகையில் அறிவுக்கு அருசவை விருந்தொன்றை இந்நூல் படைத்துத் தருகிறது!.

புத்தகங்களை படிக்க, நேரமின்மையையும், சலிப்பையும் காரணம் காட்டி நபிகளாரின் பொன்னான மொழிகள் நம் உள்ளத்தை அடையாமல் இருப்பதை தவிர்க்க இவ்வகை ஒலி வடிவங்கள் உதவக்கூடும். இதனை வாகனங்களில் பயணிக்கும்போதும், கடைகளில் வேலைப்பார்க்கும்போதும், பெண்கள் வீட்டுவேலைகளைப்பார்க்கும்போதும், சமையலறையில் இருக்கும்போதுமாக, இப்படி பல நேரங்களிலும், வகைகளிகும் கேட்கலாம். மேலும் தங்கள் அலைபேசியில் சேமித்து வைத்து நண்பர்களுக்கு ப்ளூடூத் (Bluetooth) மூலமும் அனுப்பலாம். (நன்றி: http://www.tamilaudioislam.com/)
ஆடியோ புத்தகம்
ரியாளுஸ்ஸாலிஹீன்
0. ரியாளுஸ்ஸாலிஹீன்: நூல் அறிமுகம் Posted Date
0-0-2013
ரியாளுஸ்ஸாலிஹீன் என்ற இந்த புத்தகம், அபூ ஸக்கரியா யஹ்யா பின் ஷரஃப் அன் நவவி (ரஹ்) அவர்களின் உருவாக்கம். மிக பிரபலமான-அதாரப்பூர்வ ஹதீஸ் புத்தகங்களாகக் கருதப்படும்,புஹாரி, முஸ்லிம், திர்மிதி…என்பன போன்றவற்றிலிருந்து சேகரிக்கப்பட்ட ஹதீஸ்களில் தொகுப்புகளே இந்த புத்தகம். Size
5,554
Duration
7:53
Downloaded
411
Listened
221
1. ரியாளுஸ்ஸாலிஹீன்: பாடம் 01: நிய்யத் Posted Date
0-0-2013
பாடம்-1 < நிய்யத் - எண்ணமும் அதன் தூய்மையும். < ஹதீஸ்கள் 1 முதல் 14 வரை. Size
12,016
Duration
17:04
Downloaded
857
Listened
235
2. ரியாளுஸ்ஸாலிஹீன்: பாடம்-02: தெளபா Posted Date
0-0-2013
பாடம்-2 < தெளபா - பாவமீட்சி தேடல். < ஹதீஸ்கள் 13 முதல் 24 வரை. Size
12,016
Duration
17:04
Downloaded
1629
Listened
211
3. ரியாளுஸ்ஸாலிஹீன்: பாடம்-03: பொறுமை Posted Date
0-0-2013
நம்பிக்கையாளர்களே! நீங்கள் பொறுமையைக் கடைப்பிடியுங்கள். ஒருவருக்கொருவர் சகித்துக் கொள்ளுங்கள். (எதிரியை எதிர்க்க) எந்நேரமும் தயாராக இருங்கள். அல்லாஹ்வுக்குப் பயந்து (நடந்து) கொள்ளுங்கள். நீங்கள் (இம்மையிலும் மறுமையிலும்) வெற்றியடைவீர்கள். (3:200) Size
28,741
Duration
40:51
Downloaded
407
Listened
158
4. ரியாளுஸ்ஸாலிஹீன்: பாடம்-04: உண்மை Posted Date
0-0-2013
நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்கு பயந்துகொள்ளுங்கள் மேலும், (சொல்லிலும் செயலிலும்) உண்மையாளர்களுடன் இருங்கள். (9:119) Size
5,758
Duration
08:10
Downloaded
534
Listened
89
5. ரியாளுஸ்ஸாலிஹீன்: பாடம்-05: இறைவனின் கண்காணிப்பு Posted Date
0-0-2013
(மனிதர்களின்) கண்கள் செய்யும் சூதுகளையும், உள்ளங்களில் மறைந்து இருப்பவைகளையும் இறைவன் நன்கறிவான். (40:19) Size
9,182
Duration
13:02
Downloaded
314
Listened
82
6. ரியாளுஸ்ஸாலிஹீன்: பாடம்-06: இறையச்சம் Posted Date
0-0-2013
நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்பட வேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் இறந்துவிட வேண்டாம். (3:102) Size
3,603
Duration
05:06
Downloaded
294
Listened
104
7. ரியாளுஸ்ஸாலிஹீன்: பாடம்-07: மனஉறுதி Posted Date
0-0-2013
நம்பிக்கையாளர்கள் (எதிரியின்) ராணுவத்தைக் கண்ட பொழுது '(இதுதான்) அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நமக்கு வாக்களித்தது. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உண்மை யையே கூறினார்கள்' என்று சொன்னார்கள். தவிர (இவை அனைத்தும்) அவர்களுடைய நம்பிக்கையையும் வழிபாட்டையும் அன்றி வேறொன்றையும் அவர்களுக்கு அதிகப்படுத்தி விடவில்லை. (33:22) Size
13,008
Duration
18:29
Downloaded
463
Listened
183
8. ரியாளுஸ்ஸாலிஹீன்: பாடம்: 08-10: ஹதீஸ்: 85-94 Posted Date
0-0-2013
Size
8,752
Duration
12:26
Downloaded
650
Listened
154
9. ரியாளுஸ்ஸாலிஹீன்: பாடம்: 11-15: ஹதீஸ்: 95-155 Posted Date
0-0-2013
Size
45,590
Duration
01:04:49
Downloaded
305
Listened
97
10. ரியாளுஸ்ஸாலிஹீன்: பாடம்: 16-20: ஹதீஸ்: 156-180 Posted Date
0-0-2013
Size
26,155
Duration
37:11
Downloaded
440
Listened
104
11. ரியாளுஸ்ஸாலிஹீன்: பாடம்: 21-25: ஹதீஸ்: 177-202 Posted Date
0-0-2013
Size
26,640
Duration
37:52
Downloaded
339
Listened
240
12. ரியாளுஸ்ஸாலிஹீன்: பாடம்: 26-30: ஹதீஸ்: 203-247 Posted Date
0-0-2013
பாடம் 26: அநீதம் புரிதல் கூடாது, அநீதமாக வந்த பொருட்களை திருப்பித் தருதல்
பாடம் 27: முஸ்லீம்களை கண்ணியப்படுத்துதல், அவர்களின் உரிமைகளை வழங்குதல் அவர்களின் மீது கருணை, இரக்கம் காட்டுதல் பற்றி
பாடம் 28: முஸ்லீம்களின் குறைகளை மறைத்தல், தேவையின்றி அதை வெளிப்படுத்த தடை செய்தல்
பாடம் 29: முஸ்லீம்களின் தேவைகளை நிறைவேற்றுதல் பற்றி
பாடம் 30: பரிந்துரை செய்தல் பற்றி
Size
30,412
Duration
43:14
Downloaded
275
Listened
111
13. ரியாளுஸ்ஸாலிஹீன்: பாடம்: 31-35: ஹதீஸ்: 248-288 Posted Date
0-0-2013
பாடம் 31: மக்களிடையே இணக்கம், ஒற்றுமை ஏற்படுத்துதல்.
பாடம் 32: பலவீனமான மற்றும் ஏழை, எளிய முஸ்லீம்களின் சிறப்பு.
பாடம் 33: அநாதைகள், பெண்கள், பலவீனர், ஏழைகள் ஆகியோரிடம் நல்ல விதமாக நடந்துகொள்ளுதல்.
பாடம் 34: பெண்களின் நலம் நாடுதல்.
பாடம் 35: மனைவியிடம் கணவனின் உரிமைகள்.
Size
33,175
Duration
47:10
Downloaded
299
Listened
87
14. ரியாளுஸ்ஸாலிஹீன்: பாடம்: 36-40: ஹதீஸ்: 289-335 Posted Date
0-0-2013
பாடம் 36: தன்னுடைய குடும்பத்தாருக்காக செலவு செய்தல்.
பாடம் 37: தான் விரும்பிய தரமான பொருட்களை செலவு செய்தல்.
பாடம் 38: தன் மனைவி, மக்கள், தன் பொருப்பின் கீழ் உள்ளவர்கள் ஆகியவரை இறைவனுக்கு கட்டுப்பட ஏவுதலும், மாறு செய்வதை தடுத்தலும், ஒழுக்கம் பேண வைத்தலும், தீமைகளை விட்டும் தடுத்தலும்.
பாடம் 39: பக்கத்து வீட்டாரின் உரிமைகளும் அவர்களின் நலம் நாடுதலும்.
பாடம் 40: பெற்றோர் நலம் பேணல், உற்றார்களை ஆதரித்தல்.
Size
33,378
Duration
47:27
Downloaded
314
Listened
117
15. ரியாளுஸ்ஸாலிஹீன்: பாடம்: 41-45: ஹதீஸ்: 336-374 Posted Date
0-0-2013
பாடம் 41: பெற்றோரை நோவினை செய்வதும் உறவினரை வெறுப்பதும் கூடாது.
பாடம் 42: தாய் தந்தை உறவினர்களின் நண்பர்கள் மனைவியரின் தோழியர் மற்ற மதிப்பிரிக்குறியவர்களுக்கு நன்மை செய்தல்.
பாடம் 43: நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் குடும்பத்தாரை கண்ணியப்படுத்துவது மற்றும் அவர்களின் சிறப்புகள் பற்றி.
பாடம் 44: அறிஞர்கள் பெரியவர்கள் மதிப்பு மிக்கவர்களை கண்ணியப் படுத்துதல் மற்றவர்களை விட அவர்களை முன்னிலைப் படுத்துதல் அவர்களின் உயர்வை தகுதியை எடுத்துக் கூறுதல்.
பாடம் 45: நல்லோர்களை சந்தித்தல் அவர்களுடன் இருத்தல், அவர்களுடன் பழகுதல், அவர்களை பிரியபடுதல், அவர்களை சந்திக்க விரும்புதல், அவர்களிடம் பிரார்த்தனை செய்யக் கோருதல், சிறப்புமிகு இடங்களுக்கு பயணம் மேற்கொள்ளுதல்.
Size
34,179
Duration
48:35
Downloaded
560
Listened
136
16. ரியாளுஸ்ஸாலிஹீன்: பாடம்: 46-50: ஹதீஸ்: 375-411 Posted Date
0-0-2013
பாடம் 46: அல்லாஹ்விற்காக நேசிப்பது, அதில் ஆர்வப்படுவதன் சிறப்பு மற்றும் தான் விரும்புவோருக்கு தான் விரும்புவதை எடுத்துக் கூறுவது பதில் அளிப்பது.
பாடம் 47: அல்லாஹ் தன் அடியானை நேசிப்பதின் அடையாளாங்கள், அதற்கான பண்புகளை பேணத் தூண்டுதல் அதை அடைய முயற்சித்தல்.
பாடம் 48: நல்லோர்கள், பலவீனர்கள், ஏழைகள் ஆகியோரை துன்புறுத்துவதை எச்சரித்தல்.
பாடம் 49: வெளிநிலைகளை கவனித்து மக்களிடம் இறை சட்டங்களை நிலை நாட்டுதல்.
பாடம் 50: அல்லாஹ்வை பயப்படுதல்.
Size
34,270
Duration
48:43
Downloaded
505
Listened
246
17. ரியாளுஸ்ஸாலிஹீன்: பாடம்: 51-55: ஹதீஸ்: 412-490 Posted Date
0-0-2013
பாடம் 51: அல்லாஹ்வின் மீது ஆதரவு வைத்தல்
பாடம் 52: அல்லாஹ்விடம் ஆதரவு வைப்பதின் சிறப்பு.
பாடம் 53: அச்சத்திற்கும் ஆதரவிற்கும் மத்தியில் ஒன்று சேர்த்தல்.
பாடம் 54: அல்லாஹ்வின் அச்சத்தால் அழுவதன் சிறப்பு.
பாடம் 55: உலகப் பற்றின்மையின் சிறப்பு. உலகச் சுகங்களை குறைத்துக் கொள்ள ஆர்வமூட்டுதல். ஏழ்மையின் சிறப்பு
Size
67,601
Duration
01:36:07
Downloaded
348
Listened
95
18. ரியாளுஸ்ஸாலிஹீன்: பாடம்: 56-60: ஹதீஸ்: 491-562 Posted Date
0-0-2013
பாடம் 56: பசி, எளிமையான வாழ்வு, மற்றும் உணவு, பானம், ஆடை, மனதிற்கு பிடித்தமானவற்றில் குறைவானதை போதுமானதாக்கி கொள்ளுதல் மற்றும் மனோஇச்சையை தவிர்த்தல் ஆகியவற்றின் சிறப்பு.
பாடம் 57: போதுமாக்குதல், பேணுதலுடன் இருத்தல் வாழ்க்கையிலும் செலவு செய்வதிலும் நடுநிலையை கடைபிடித்தல். நிர்பந்தம் ஏதுமின்றி யாசகம் கேட்பதின் விளைவு
பாடம் 58: கேட்காமலும் எதிர்பார்க்காமலும் கிடைத்ததை எடுத்துக்கொள்ள அனுமதியுண்டு.
பாடம் 59: உழைத்து உண்ணுதல், யாசகம் கேட்காதிருத்தல்.
பாடம் 60: கொடையளித்தல், அல்லாஹ்வை பயந்து நல்ல வழிகளில் செலவு செய்தல்.
Size
61,976
Duration
01:28:08
Downloaded
328
Listened
106
19. ரியாளுஸ்ஸாலிஹீன்: பாடம்: 61-65: ஹதீஸ்: 563-580 Posted Date
0-0-2013
பாடம் 61:கஞ்சத்தனம் கூடாது.
பாடம் 62:அர்ப்பணம் செய்தல், துயர் போக்குதல்.
பாடம் 63:மறுமைக்குரிய செயல்களில் ஆசைக் கொள்ளுதல், பரக்கத்தான பொருளை அதிகம் தருதல்.
பாடம் 64: நேர்மையான வழியில் சம்பாதித்து, கட்டளையிடப்பட்ட சரியான வழியில் செலவு செய்கின்ற நன்றியுள்ள பணக்காரரின் சிறப்பு.
பாடம் 65:மரணத்தை நினைவுகூறல், மேலெண்ணங்களை குறைத்தல்.
Size
22,644
Duration
32:11
Downloaded
255
Listened
121
20. ரியாளுஸ்ஸாலிஹீன்: பாடம்: 66-70: ஹதீஸ்: 581-601 Posted Date
0-0-2013
மண்ணறைகளை ஜியாரத் செய்வது ஆண்களுக்கு விரும்பத்தக்கதாகும். ஜியாரத் செய்பவர் கூறவேண்டியவை.
துன்பத்தின் காரணமாக மரணத்தை விரும்புவது கூடாது. மார்க்கத்தில் குழப்பம் ஏற்படுவதை அஞ்சினால் விரும்புவது குற்றமில்லை.
பேணுதலாக இருத்தல் சந்தேகங்களை கைவிடுதல்
குழப்பமான காலத்தில் தனித்திருப்பது.
Size
14,891
Duration
21:09
Downloaded
248
Listened
118
21. ரியாளுஸ்ஸாலிஹீன்: பாடம்: 71-75: ஹதீஸ்: 602-647 Posted Date
0-0-2013
பாடம் 71: பணிவாக இருப்பது, இறைவிசுவாசிகளிடன் கனிவாக இருப்பது.
பாடம் 72: பெருமை கொள்வது கூடாது.
பாடம் 73: நற்குணம்.
பாடம் 74: பொறுமையாக இருப்பது, அவசரப்படாமல் இருப்பது, மென்மையாக இருப்பது.
பாடம் 75: மன்னித்தல், அறிவிலிகளை புறக்கணித்தல்.
Size
40,770
Duration
43:29
Downloaded
251
Listened
120
22. ரியாளுஸ்ஸாலிஹீன்: பாடம்: 76-80: ஹதீஸ்: 648-673 Posted Date
0-0-2013
பாடம் 76: வேதனையை சகித்துக்கொள்ளல்.
பாடம் 77: மார்க்கத்தின் கண்ணியம் தகர்க்கப்படும் போது கோபம் கொள்ளுதல். அல்லாஹ்வின் மார்க்கத்திற்காக உதவி புரிதல்.
பாடம் 78: மக்களிடம் மென்மையாக நடப்பது, அவர்களுக்கு நன்மை செய்வது, அவர்களிடம் அன்பு காட்டுவது எனவும், மக்களுக்கு மோசடி செய்வது, அவர்களிடம் கடுமையாக நடப்பது, அவர்களின் நல்லவைகளை வீணாக்குவது கூடாது எனவும், அவர்களையும் அவர்களின் தேவைகளையும் விட்டும் புறக்கணிக்கக் கூடாது எனவும் ஆட்சியாளர்களுக்கு அறிவித்தல்.
Size
26,531
Duration
28:17
Downloaded
234
Listened
135
23. 23. ரியாளுஸ்ஸாலிஹீன்: பாடம்: 81-83: ஹதீஸ்: 674-680 Posted Date
0-0-2013
பாடம் 81: அதிகாரத்தை கேட்டுப் பெறுதல் கூடாது, அதிகாரத்தை விட்டு விட விருப்பமளித்தல்.
பாடம் 82: அரசர், நீதிபதி, மற்றும் அதிகார பொறுப்பில் உள்ளவர்கள், நல்ல அமைச்சரை அதாவது ஆலோசகர்களை தேர்ந்தெடுத்துக் கொள்ள தூண்டுதல்.
பாடம் 83: தலைமைப் பதவி, நீதிபதி பதவி, மற்றும் அதிகார பதவிகளை கேட்போர், ஆசைப்படுவோரை நியமனம் செய்யாதிருத்தல்.
Size
6,978
Duration
07:25
Downloaded
203
Listened
78
24. 24. ரியாளுஸ்ஸாலிஹீன்: பாடம்: 84-90 ஹதீஸ்: 681-698 Posted Date
0-0-2013
பாடம் 84: வெட்கப் படுதலின் சிறப்பு, அதைக் கடைப்பிடிக்க தூண்டுதல்.
பாடம் 85: ரகசியம் பேணல்.
பாடம் 86: ஒப்பந்தத்தையும் வாக்குறுதியையும் முழுமையாக நிறைவேற்றுதல்.
பாடம் 87: வழமையாக செய்து வரும் நல்லவற்றை தொடர்ந்து செய்து வருதல்.
பாடம் 88: சந்திக்கும் போது நல்லவிதமாக பேசுவதும் முகமலர்ச்சியுடன் இருப்பதும் விரும்பத்தக்கதாகும்.
பாடம் 89: பேசுவதை விளக்கமாக கூறுவதும் அதை விளங்குவதற்கு திரும்ப திரும்ப கூறுவதும் விரும்பத்தக்கதாகும்.
பாடம் 90: தன் அருகில் இருப்பவருடன் நல்ல பேச்சைக் கேட்டல், அறிஞர் நல்லுபதேசம் செய்வோர் தம் அவையில் அமர்ந்திருப்போரை அமைதியாக இருக்கும்படி கூறுதல்.
Size
19,259
Duration
20:31
Downloaded
196
Listened
93
25. 25. ரியாளுஸ்ஸாலிஹீன்: பாடம்: 91-95 ஹதீஸ்: 699-711 Posted Date
0-0-2013
பாடம் 91: உபதேசம் செய்தல் அதில் நடுநிலையோடு இருத்தல்.
பாடம் 92: கண்ணியம் பேணல், அமைதியாக இருத்தல்.
பாடம் 93: தொழுதிட, கல்விகற்றிட, மற்றும் வணக்கம் புரிந்திட வருவோர் அமைதியாக கண்ணியமாக வருதல்.
பாடம் 94: விருந்தினரை கண்ணியப்படுத்துதல்.
பாடம் 95: வாழ்த்துக் கூறுவதும் நல்லது கூறுவதும் விரும்பத்தக்கது.
Size
25,409
Duration
27:05
Downloaded
267
Listened
105
26. 26. ரியாளுஸ்ஸாலிஹீன்: பாடம்: 96-99 ஹதீஸ்: 712-727 Posted Date
0-0-2013
பாடம் 96: பயணம் செய்வோரை வழியனுப்புதல், அவருக்கு உபதேசம் செய்தல், அவருக்கு துஆ செய்தல், அவரிடம் துஆ செய்ய கோருதல்.
பாடம் 97: நன்மையை தேடல், ஆலோசனை செய்தல்.
பாடம் 98: பெருநாள் தொழ செல்லுதல், நோயாளியை நலம் விசாரித்தல், ஹஜ் போர், ஜனாசா தொழுகை ஆகியவற்றில் கலந்து கொள்ளுதல்.
பாடம் 99: மதிப்பான காரியத்தில் வலது புறத்திற்கே முன்னுரிமை.
Size
17,917
Duration
19:06
Downloaded
309
Listened
218
27. 27. ரியாளுஸ்ஸாலிஹீன்: பாடம்: 100-105 ஹதீஸ்: 728-742 Posted Date
0-0-2013
பாடம் 100: உண்ணும் போது ஆரம்பத்தில் பிஸ்மில்லாஹ் கூறுவது கடைசியில் அல்ஹம்துலில்லாஹ் கூறுவது
பாடம் 101: உண்வை குறை கூற கூடாது. அதை புகழ்வதே விரும்பத்தக்கதாகும்.
பாடம் 102: விருந்துக்கு வந்த நோன்பாளி கூற வேண்டடியவை.
பாடம் 103: விருந்துக்கு அழைக்கப்பட்டவருடன் வேரொருவர் அழைப்பின்றி பின் தொடர்ந்து வந்தால் விருந்து தருபவருடன் கூற வேண்டியவை
பாடம் 104: தன் அருகில் உள்ள பகுதியிலிருந்து சாப்பிடுதல் மற்றும் ஒழுங்கீனமாக சாப்பிடுபவருக்கு உபதேசம் செய்தல்.
பாடம் 105: கூட்டாக சாப்பிடும் போது பேரீத்தம் பழம் மற்றும் இதர உணவுகளை வ்பிற தோழர்கள் அனுமதியின்றி இரண்டிரண்டாக எடுத்து சாப்பிடுவது கூடாது.
Size
12,666
Duration
13:30
Downloaded
223
Listened
94
28. 27. ரியாளுஸ்ஸாலிஹீன்: பாடம்: 106-110 ஹதீஸ்: 743-756 Posted Date
0-0-2013
பாடம் 106: சாப்பிட்டும் வயிறு நிரம்பாத நிலையில் உள்ளவர் கூற வேண்டியவை, செய்யவேண்டியவை.
பாடம் 107: தட்டின் ஓர பகுதியிலிருந்து உண்ணுதல், நடுவில் இருந்து உண்ணாமல் இருத்தல்.
பாடம் 109: மூன்று விரல்களில் சாப்பிடுவது, விரல்களை சூப்புவது ஆகுமானது. அதை சூப்புமுன் துடைப்பது கூடாது. தட்டை வழித்துண்பது ஆகுமானது, கீழே விழுந்த உணவை எடுத்து அதை சாப்பிடுவது, சூப்பிய பின் முழங்கை மற்றும் பாதம் போன்றவற்றில் விரலை துடைப்பது கூடும்.
பாடம் 110: அதிகமானவர் உண்பது.
Size
9,398
Duration
10:01
Downloaded
227
Listened
96
29. 29. ரியாளுஸ்ஸாலிஹீன்: பாடம்: 111-116 ஹதீஸ்: 757-778 Posted Date
0-0-2013
பாடம் 111: பருகுவதின் ஒழுங்கு, பருகுபவர் பாத்திரத்திர்கு வெளியே மூன்று முறை மூச்சு விடலாம்.
பாடம் 112: பாத்திரத்தில் வாய் வைத்து அருந்துதல்.
பாடம் 113: பானத்தில் ஊதுவது.
பாடம் 114: நின்று அருந்துவது கூடும். ஆனால் உட்கார்ந்து அருந்துவதே சிறந்தது.
பாடம் 115: ஒரு கூட்டத்தாருக்கு தண்ணீர் கொடுப்பவர் கடைசியாக அருந்துவது சிறந்தது.
பாடம் 116: தங்கம் வெள்ளி அல்லாத தூய்மையான பாத்திரங்களில் அருந்துவது கூடும். ஆறு மற்றும் தண்ணீர் குட்டைகளில் பாத்திரம் கை துணையின்றி வாயால் உறிஞ்சி அருந்துவது கூடும். உண்ண குடிக்க சுத்தம் செய்ய மற்றும் இதர செயல்களுக்கு தங்கம் வெள்ளி பாத்திரங்களை பயன் படுத்துவது கூடாது. ஆடைகளைப் பற்றிய அத்தியாயம்.
Size
13,567
Duration
14:28
Downloaded
315
Listened
218
30. 30. ரியாளுஸ்ஸாலிஹீன்: பாடம்: 117-120 ஹதீஸ்: 779-802 Posted Date
0-0-2014
பாடம் 117: வெள்ளை ஆடை அணிவது விரும்பத்தக்கது. சிகப்பு, பச்சை, மஞ்சள், கருப்பு நிற ஆடைகள் கூடும். பருத்தி, கம்பளி போன்ற பட்டல்லாத ஆடைகள் அணிவது கூடும்.
பாடம் 118: சட்டை அணிவது விரும்பத்தக்கது.
பாடம் 119: சட்டை அதன் நீளம், முன்கை, வேட்டி, தலைப்பாகை அதன் ஓரம் ஆகியவற்றின் அளவு. பெருமைக்காக ஆடைகளை தொங்க விடுவது கூடாது. பெருமையின்றி தொங்கவிடுவதும் வெறுக்கத்தக்கதாகும்.
பாடம் 120: பணிவு கருதி உயர்ந்த ஆடைகளை விட்டு விடுதல்.
Size
19,981
Duration
21:18
Downloaded
150
Listened
53
31. 31. ரியாளுஸ்ஸாலிஹீன்: பாடம்: 121-126 ஹதீஸ்: 803-813 Posted Date
0-0-2014
பாடம் 121: நடுத்தர ஆடைகளை அணிவது விரும்பத்தக்கது.
பாடம் 122: ஆண்கள் பட்டாடை அணிவதும், அதில் அமர்வதும், சாய்ந்திருப்பதும் கூடாது. பெண்கள் அதை அணிவது கூடும்.
பாடம் 123: சொறிபிடித்தவர் பட்டாடை அணிவது கூடும்.
பாடம் 124: புலித்தோலை விரிப்பதும் அதன் மீது உட்கார்ந்து பயணம் செய்வதும் கூடாது.
பாடம் 125: புதிய ஆடை, புதிய செருப்பு அணிபவர் கூற வேண்டியது.
பாடம் 126: ஆடை அணியும் போது முதலில் வலது பக்கம் அணிவது விரும்பத்தக்கதாகும். இந்த பாடத்தின் நோக்கம் பற்றிய ஹதீஸ்கள் முந்திவிட்டன.
Size
6,764
Duration
07:12
Downloaded
159
Listened
80
32. 32. ரியாளுஸ்ஸாலிஹீன்: பாடம்: 127-130 ஹதீஸ்: 814-844 Posted Date
0-0-2014
பாடம் 127: தூக்கத்தின் ஒழுங்குகள்.
பாடம் 128: மல்லார்ந்து படுப்பதும், மறைவு பகுதி வெளியாகாது என்றிருந்த்தால் கால் மேல் கால் போட்டு படுப்பதும் கூடும்.
பாடம் 129: சபை மற்றும் சபையில் இருப்போரின் ஒழுங்குகள்.
பாடம் 130: கனவு சம்பந்தப்பட்டவை.
Size
20,690
Duration
22:03
Downloaded
165
Listened
86
33. 33. ரியாளுஸ்ஸாலிஹீன்: பாடம்: 131-143 ஹதீஸ்: 845-893 Posted Date
0-0-2014
பாடம் 131: ஸலாம் கூறுவதன் சிறப்பும் அதனை பரப்புவதின் அவசியமும்.
பாடம் 132: ஸலாம் கூறும் முறை.
பாடம் 133: ஸலாம் கூறுவதன் ஒழுக்க முறைகள்.
பாடம் 134: அடிக்கடி சந்திப்பவர் மற்றும் மரம் போன்றவை குறுக்கிட்டபின் மீண்டும் சந்திப்பவருக்கும் ஸலாம் கூறுவது ஆகுமானதாகும்.
பாடம் 135: தன் வீட்டில் நுழைந்தாலும் ஸலாம் கூறுவது விரும்பதக்கதாகும்.
பாடம் 136: சிறுவர்களுக்கு ஸலாம் கூறுதல்.
பாடம் 137: மனைவிக்கும் திருமணம் செய்ய தடை செய்யப்பட்டுள்ள உறவு பெண்களுக்கும் குழப்ப நிலை ஏற்படும் என பயப்படாத நிலையில் அந்நிய பெண்களுக்கும் ஓர் ஆண் ஸலாம் கூறுவது மற்றும் இதே நிபந்தனைகளுடன் அந்த பெண்களும் ஆண்களுக்கு ஸலாம் கூறுவது.
பாடம் 138: இறைமறுப்பாளனுக்கு ஸலாம் கூறுவது தடை செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு பதில் கூறும் முறை. முஸ்லீம்களும் இறை மறுப்பாளர்களும் இணைந்திருக்கும் சபையினருக்கு ஸலாம் கூறுவது விரும்பத்தக்கது.
பாடம் 139: சபையைவிட்டு எழுந்து செல்லும்பொழுது ஸலாம் கூறுவது விரும்பத்தக்கதாகும்.
பாடம் 140: வீட்டில் நுழைய அனுமதி கோருவதின் ஒழுங்குகள்.
பாடம் 141: அனுமதி கோரும் மனிதரை....
பாடம் 142: தும்மியவர் அல்ஹம்துலில்லாஹ் ..
பாடம் 143: சந்திக்கும் போது கைகுழுக்குவது, ...
Size
37,150
Duration
39:36
Downloaded
229
Listened
140
34. 34. ரியாளுஸ்ஸாலிஹீன்: பாடம்: 144-165 ஹதீஸ்: 894-955 Posted Date
0-0-2014
பாடம் 144: நோயாளியை நலம் விசாரித்தல். Size
56,046
Duration
59:46
Downloaded
176
Listened
65
35. 35. ரியாளுஸ்ஸாலிஹீன்: பாடம்: 166-179 ஹதீஸ்: 956-990 Posted Date
0-0-2014
பாடம் 166: வியாழக்கிழமை பயணம் செல்வதும் முற்பகலில் புறப்படுவதும் விரும்ப்பத்தக்கதாகும். Size
29,847
Duration
31:49
Downloaded
161
Listened
66
36. 36. ரியாளுஸ்ஸாலிஹீன்: பாடம்: 180-190 ஹதீஸ்: 991-1063 Posted Date
0-0-2014
பாடம் 180: குர்ஆனை ஓதுவதின் சிறப்பு Size
53,494
Duration
57:03
Downloaded
302
Listened
93
37. 37. ரியாளுஸ்ஸாலிஹீன்: பாடம்: 191-200 ஹதீஸ்: 1064-1121 Posted Date
0-0-2014
பாடம் 191: ஜமாத் கூட்டுதொழுகையின் சிறப்பு Size
53,494
Duration
26:18
Downloaded
295
Listened
143
38. 38. ரியாளுஸ்ஸாலிஹீன்: பாடம்: 201-210 ஹதீஸ்: 1122-1158 Posted Date
0-0-2014
பாடம் 201: மக்ரிபிற்கு முன் பின் சுன்னத் தொழுகை Size
24,674
Duration
26:18
Downloaded
238
Listened
72
39. 39. ரியாளுஸ்ஸாலிஹீன்: பாடம்: 211-220 ஹதீஸ்: 1159-1228 Posted Date
0-0-2014
பாடம் 211: ஓர் அருட்கொடை கிடைக்கும் போதும் சோதனையிலிருந்து காப்பாற்றப்படும் போதும் நன்றிக்குறிய ஸஜ்தா செய்வது விரும்பத் தக்கது. Size
56,092
Duration
59:49
Downloaded
174
Listened
80
40. 40. ரியாளுஸ்ஸாலிஹீன்: பாடம்: 221-231 ஹதீஸ்: 1229-1267 Posted Date
0-0-2014
பாடம் 221: ஸஹர் செய்வதின் சிறப்பு, அதை சுப்ஹு நேரம் ஏற்படாத வரை பிற்படுத்துவது Size
24,140
Duration
25:44
Downloaded
238
Listened
135
41. 41. ரியாளுஸ்ஸாலிஹீன்: பாடம்: 232-233 ஹதீஸ்: 1268-1284 Posted Date
0-0-2014
பாடம் 232: ரமளானில் இஃதிகாஃப்
பாடம் 233: ஹஜ் கடைமைகளும் அதன் சிறப்புகளும்.
Size
10,954
Duration
11:40
Downloaded
177
Listened
61
42. 42. ரியாளுஸ்ஸாலிஹீன்: பாடம்: 234 ஹதீஸ்: 1285-1352 Posted Date
0-0-2014
பாடம் 234: ஜிஹாதின் சிறப்பு Size
53,678
Duration
57:14
Downloaded
189
Listened
49
43. 43. ரியாளுஸ்ஸாலிஹீன்: பாடம்: 235-240 Hadith: 1285-1375 Posted Date
0-0-2014
பாடம் 235: நற்கூலியை பெறுவதில் தியாகளின் தகுதியைப் பெற்பவர். இவர்கள் போரில் கொல்லப்படவில்லையென்றாலும் கூட குளிப்பாட்டி தொழ வைக்கப்படுபவர்.
பாடம் 236: அடிமைக்கு உரிமை விடுவதின் சிறப்பு.
பாடம் 237: அடிமைக்ளுக்கு உபகாரம் செய்வதின் சிறப்பு.
பாடம் 238: அல்லாஹ்வின் கடைமை மற்றும் தன் எஜமானின் கடைமைகளை நிறைவேற்றும் அடிமையின் சிறப்பு.
பாடம் 239: குழப்பம் நிறைந்த காலத்தில் வணக்கம் புரிவதின் சிறப்பு.
பாடம் 240: விற்பது வாங்குவது கொடுக்கல் வாங்கலில் மென்மையாக நடப்பதின் சிறப்பு. கடனை நிறைவேற்றுவது, கடனை அடைக்க கோருவது அளவையிலும் நிறுத்தலிலும் கூடுதலாக வழங்குவது. இதில் குறைவு செய்யாதிருப்பது. வசதியுள்ளவர் வசதியில்லாதவர்களுக்கு அவகாசம் அளிப்பது, அவரது கடனை மன்னிப்பது.
Size
19,054
Duration
20:18
Downloaded
183
Listened
53
44. 44. ரியாளுஸ்ஸாலிஹீன்: பாடம்: 241 ஹதீஸ்: 1376-1392 Posted Date
0-0-2014
பாடம் 241: கல்வியின் சிறப்பு. Size
11,757
Duration
12:31
Downloaded
164
Listened
60
45. 45. ரியாளுஸ்ஸாலிஹீன்: பாடம்: 242 ஹதீஸ்: 1393-1396 Posted Date
0-0-2014
பாடம் 242: அல்லாஹ்வை புகழ்தல் அவனுக்கு நன்றி கூறுவதன் சிறப்பு. Size
12,262
Duration
13:04
Downloaded
233
Listened
178
46. 46. ரியாளுஸ்ஸாலிஹீன்: பாடம்: 244 ஹதீஸ்: 1408-1464 Posted Date
0-0-2014
பாடம் 244: திக்ரின் சிறப்பு, அதற்காக ஆர்வமூட்டுதல் Size
33,968
Duration
36:13
Downloaded
142
Listened
43
47. 47. ரியாளுஸ்ஸாலிஹீன்: பாடம்: 245-249 ஹதீஸ்: 1444_1464 Posted Date
0-0-2014
பாடம் 245: நின்றவாரும் உட்கார்ந்தவாரும், படுத்தவாரும், ஒழு இல்லாதவாரும், குளிப்பு கடைமையானவாரும், மாதவிடாயுள்ள பெண்ணும் அல்லாஹ்வை நினைவு கூறுதல்.
பாடம் 246: தூங்கும்போதும் தூக்கத்திலிருந்து எழும்போதும் கூறவேண்டியவை.
பாடம் 247: திக்ர் சபையின் சிறப்பு தொடர்ந்து அதில் கலந்துகொள்வதின் சிறப்பு, காரணமின்றி அதில் கலந்துகொள்ளாதிருப்பது கூடாது.
பாடம் 248: காலையிலும் மாலையிலும் அல்லாஹ்வை நினைவுகூறுவது.
பாடம் 249: தூங்கும்போது கூறவேண்டியவை.
Size
29,215
Duration
31:09
Downloaded
385
Listened
61
48. 48. ரியாளுஸ்ஸாலிஹீன்: பாடம்: 250-253 ஹதீஸ்: 1465-1510 Posted Date
0-0-2014
பாடம் 250: பிரார்த்தனையின் சிறப்பு.
பாடம் 251: முன்னே இல்லாதவருக்கும் துஆ செய்வதின் சிறப்பு.
பாடம் 252: துஆவின் சட்டங்கள்.
பாடம் 253: இறைநேச செல்வர்களின் அதிசய நிகழ்வும் அவர்களின் சிறப்பும்.
Size
56,793
Duration
01:00:34
Downloaded
229
Listened
66
49. 49. ரியாளுஸ்ஸாலிஹீன்: பாடம்: 254-264 ஹதீஸ்: 1511-1558 Posted Date
0-0-2014
பாடம் 254: புறம்பேசுதல் கூடாது. நாவைப் பேணுதல்.
பாடம் 255: புறம் பேசுவதை கேட்பது கூடாது. புறம் பேசுவதை கேட்பவர் அதை பேசியவரிடம் மறுப்புத் தெரிவிப்பது அவசியம். அதற்கு இயலாவிட்டால் அல்லது ஏற்கப்படாவிட்டால் இயலுமாயின் அந்த இடத்தைவிட்டு வெளியேறுவது.
பாடம் 256: புறம்பேசிட அனுமதி.
பாடம் 257: கோள் சொல்வது கூடாது.
பாடம் 258: மக்களின் தேவையற்ற பேச்சை தலைவரிடம் கூறுவது கூடாது.
பாடம் 259: இருமுகமுடைய அதாவது நயவஞ்சகனுக்கு ஏற்படும் இழிவு.
பாடம் 260: பொய் பேசுவது கூடாது.
பாடம் 262: ஒரு பேச்சைக் கேட்டு அதை உறுதிப்படுத்துதல்.
பாடம் 263: பொய் சாட்சி கூறுவது கடுமையாக தடுக்கப்பட்டதாகும்.
பாடம் 264: மனிதனையும் கால் நடைகளையும் சபிப்பது கூடாது.
Size
54,827
Duration
58:28
Downloaded
207
Listened
76
50. 50. ரியாளுஸ்ஸாலிஹீன்: பாடம்: 265-284 ஹதீஸ்: 1559-1611 Posted Date
0-0-2014
பாடம் 265: பெயர் குறிப்பிடாமல் குற்றமிழைப்போரை சபிப்பது கூடும்.
Size
51,467
Duration
54:53
Downloaded
190
Listened
72
51. 51. ரியாளுஸ்ஸாலிஹீன்: பாடம்: 285-300 ஹதீஸ்: 1612-1654 Posted Date
0-0-2014
பாடம் 285: அன்பளிப்பை திரும்பப் பெறுவதோ, ஜகாத்தாக தருமமாக, குற்றத்தின் பரிகார தொகையாக கொடுத்ததை திரும்ப விலைக்குப் பெறுவதோ கூடாது. இவற்றை அன்பளிப்பாகவோ அல்லது விலைக்கு வாங்கியோ வைத்திருப்பவரிடம் இருந்து அதை விலைக்கு வாங்குவது குற்றமில்லை. Size
37,989
Duration
40:31
Downloaded
208
Listened
113
52. 52. ரியாளுஸ்ஸாலிஹீன்: பாடம்: 301-320 ஹதீஸ்: 1655-1724 Posted Date
0-0-2014
பாடம் 301: நன்மையற்ற சொல், செயலை சிரமத்துடன் செய்வது கூடாது.
பாடம் 302: இறந்தவருக்காக ஒப்பாரி வைப்பது, கன்னத்தில் அறைந்துகொள்வது, சட்டையை கிழித்துக் கொள்வது, முடியை பிடுங்குவது, தலையை சிரைப்பது, நாசமாகட்டும் போன்ற வார்த்தைகளால் பிரார்த்திப்பது கூடாது.
பாடம் 303: குறி சொல்பவர், நட்சத்திர கணக்கு பார்த்து சொல்பவர், மணலில் கோடு போட்டு குறி சொல்பவர், பொடி கற்கலாலும், தொலி கோதுமையாலும் அது போன்றவற்றாலும் அடித்து குறி செல்பவர்களிடம் செல்வது கூடாது.
பாடம் 304: சகுனம் பார்த்தல் கூடாது.
பாடம் 305: சுவர், கல், ஆடை, பானம், தலையணை மற்றும் இது போன்றவற்றில் உயிருள்ளவற்றின் உருவம் வரைவது கூடாது.
பாடம் 306: வேட்டைக்காக அல்லது கால்நடைகளை பாதுகாக்க அல்லது விவசாய பாதுகாப்பிற்காக அன்றி நாய் வளர்ப்பது கூடாது.
Size
46,700
Duration
49:48
Downloaded
184
Listened
69
53. 53. ரியாளுஸ்ஸாலிஹீன்: பாடம்: 321-350 ஹதீஸ்: 1725-1770 Posted Date
0-0-2014
பாடம் 321: பாவியை, மார்க்கத்தில் புதிய செயலை செய்பவரை தலைவர் வார்த்தையால் அழைப்பது கூடாது.
பாடம் 322: காய்ச்சலை திட்டுவது வெறுக்கத்தக்கதாகும்.
பாடம் 323: காற்றை ஏசுவது கூடாது. காற்று வீசும் போது கூறவேண்டியவை.
பாடம் 324: சேவலை திட்டுவது வெறுக்கத்தக்கது.
Size
31,936
Duration
34:03
Downloaded
168
Listened
68
54. 54. ரியாளுஸ்ஸாலிஹீன்: பாடம்: 351-369 ஹதீஸ்: 1771-1807 Posted Date
0-0-2014
பாடம் 351:மக்கள் நடக்கும் பாதை அவர்கள் ஓய்வெடுக்க நிழல் தரும் மரம்.
பாடம் 352: தேங்கி கிடக்கும் தண்ணீரில் சிறுநீர் கழித்தல் கூடாது.
பாடம் 353: தன் குழந்தைகளுக்கு அன்பளிப்பு வழங்குவதில் சிலரை விட சிலரை முக்கியமாக்குவது வெறுக்கத்தக்கது.
Size
41,083
Duration
43:48
Downloaded
225
Listened
101
55. 55. ரியாளுஸ்ஸாலிஹீன்: பாடம்: 370 ஹதீஸ்: 1808-1868 Posted Date
0-0-2014
பாடம் 370: தஜ்ஜால் பற்றிய ஹதீஸ்கள், மறுமை நாளின் அடையாளங்கள், மற்றும் இதர செய்திகள் Size
80,974
Duration
01:26:21
Downloaded
247
Listened
120
56. 56. ரியாளுஸ்ஸாலிஹீன்: பாடம்: 371-372 ஹதீஸ்: 1869-1896 Posted Date
0-0-2014
பாடம் 371: பாவ மன்னிப்பு கோருவதும் அதன் சிறப்பும்
பாடம் 372: சுவர்க்கத்தில் இறை நம்பிக்கையாளர்களுக்காக அல்லாஹ் தயார் செய்து வைத்துள்ளவைப் பற்றிய விளக்கம்
Size
31,605
Duration
33:42
Downloaded
423
Listened
292