நீ கைகட்டிக் கொண்டிருந்தால், முன்னேற்றங்கள் கால் கட்டிக் கொண்டிருக்க நேரும்; நீ வெள்ளோட்டங்கள் கொண்டு விட்டால், வெற்றியெலாம் – உன் மீதே கண்ணோட்டங் கொண்டு விடும் ! துணிவு கொள் வருகையாளனுக்குத்தான் வரவேற்பு மாலையே அன்றி – பயந்து ஒதுங்குபவனுக்கன்று உயர மேடைகள் !
அண்ணல் நபிப் பெருமானின் வியர்வை, தலை முடி, நகங்களைக் கூட நபித் தோழர்கள் பாதுகாத்து வைத்திருந்தனர். அது குறித்து அடியேன் எழுதிய கவிதை ஒன்று ( கண்மணி நாயகம் - நூலில் இருந்து) நண்பர்களின் பார்வைக்காக!
அன்பு கொண்ட தெய்வமென்றும் ஆசிகூறி வாழ்த்தொலிக்கும் நமை மிகு நல்ல நகர் மக்கா- அதில் என்றுமென்றும் நின்றிலங்கும் ஏற்றம் கொண்டு வாழுகின்ற தேவனவன் ஆதிவீடு கஅபா!