இப்புனித மிக்க ரமலானில் இறைவன் நமக்காக உலகத்தின் நிலையயே மாற்றிவிட்டான், இது
வானம், பூமியின் வசந்த காலமாக இருக்கிறது. எல்லாம் நமக்காக
தயார்படுத்தபட்டுவிட்டன ஆனால் நாம் அதற்க்கு தயாராகிவிட்டோமா!!!
நோன்புக்கும் மனக்கட்டுப்பாட்டுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அது இச்சைகளை கட்டுக்குள் வைத்திருப்பதற்கான அற்புதமான வழிமுறை. கிட்டத்தட்ட எல்லா மதங்களும் நோன்பை ஏதேனும் ஒரு வகையில் வலியுறுத்துகின்றன. திருக்குர்ஆனும் உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டதுபோன்றே உங்கள் மீதும் கடமையாக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறது.
எந்த பொருளில் ஜகாத் கொடுக்கவேண்டும்?
எவ்வளவு கொடுக்கவேண்டும்?எவ்வாறு கணக்கிட வேண்டு?யாருக்கு கொடுக்கவேண்டும்?யாருக்கு கொடுக்ககூடாது?என்ற தகவல்களை நம்மில் உள்ள அனைவர்களும் விளங்குவதற்காக இந்த சிறு முயற்சி.
நினைத்து பார்த்தேன்..அந்த சோமாலி சகோதரன் கேட்ட கேள்வி நெஞ்சில் சம்மட்டியாய் தாக்கியது.. "சஹரும் இஃப்தாரும் இல்லாத எங்களின் நோன்பு இறைவனால் ஏற்றுக் கொள்ளப் படுமா?" என்றானே..அதை நினைத்தேன் அது தான் அந்த அழுகை..
பிறை பார்த்தல் என்ன செய்ய வேண்டும் ? நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பிறை பார்த்தவுடன் என்ன செய்யவேண்டும் என்று அழகிய வழிமுறையை கண்பித்துள்ளார்கள்..
உலகம் முழுவதும் மனித சமுதாயத்திடம் குறிப்பாக இஸ்லாமிய சமுதாயத்திடம் சுபிட்சமும், மகிழ்ச்சியும் செழிப்பும் மலர வேண்டும் என்றால் குர்ஆன் அருளப்பட்ட இந்த ரமளான் மாதத்தில் குர்ஆனுடனான நம் தொடர்பை வலுப்படுத்த வேண்டும். சடங்கு நூலாக திரு குர்ஆனைப் பயன்படுத்துவதை விட்டு விட்டு நம் வாழ்வின் அஸ்தி வாரமாக குர்ஆனை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
ரமளான் மாதம் வருவதற்கு முன்பே அண்ணல் நபிகளார் (ஸல்) அவர்கள் நபித்தோழர்களுக்கு இந்த மாதத்தின் சிறப்பையும் மகத்துவத்தையும் எடுத்துரைப்பார்கள். அதன் அருள் வளங்களின் செல்வக் குவியல்களில் தத்தமது பங்குகளை முழுமையாக ஈட்டிக்கொள்வதற்காக கடுமையாக பயிற்சி செய்யுமாறும் நல்ல அமல்களில் ஈடுபடுமாறும் அறிவுரை வழங்கினார்கள் என்றால் அம்மாதம் எவ்வளவு சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் என்பதை இந்த ஹதீஸின் மூலம் விளங்க முடிகிறது.
இப்புனித மிக்க ரமலானில் இறைவன் நமக்காக உலகத்தின் நிலையயே மாற்றிவிட்டான், இது வானம், பூமியின் வசந்த காலமாக இருக்கிறது. எல்லாம் நமக்காக தயார்படுத்தபட்டுவிட்டன ஆனால் நாம் அதற்கு தயாராகிவிட்டோமா!!! நாம் என்ன செய்ய வேண்டும், இதோ சில வழி முறைகள்: