Tamil Islamic Media

ரியாளுஸ்ஸாலிஹீன்


ரியாளுஸ்ஸாலிஹீன்”ரியாளுஸ்ஸாலிஹீன்” என்ற இந்த புத்தகம், அபூ ஸக்கரியா யஹ்யா பின் ஷரஃப் அன் நவவி (ரஹ்) அவர்களின் உருவாக்கம். மிக பிரபலமான-அதாரப்பூர்வ ஹதீஸ் புத்தகங்களாகக் கருதப்படும்,புஹாரி, முஸ்லிம், திர்மிதி…என்பன போன்றவற்றிலிருந்து சேகரிக்கப்பட்ட ஹதீஸ்களில் தொகுப்புகளே இந்த புத்தகம்.

இமாம் நவவி(ரஹ்) அவர்கள் பல்வேறு தலைப்புகளில் பயனுள்ள பல நூல்களை எழுதியுள்ளார்கள். அவையாவும் மக்களின் வரவேற்பையும் நன்மதிப்பையும் பெற்றன. மார்க்க அறிஞர்கள் அந் நூல்களை பல கோணங்களில் ஆய்வு செய்தனர்., தாங்களும் பயன் பெற்றனர்., மக்களுக்கும் பயனளித்தனர்.

இமாம் நவவி அவர்களின் நூல்களில் மக்களின் அதிகப் பயன்பாட்டிற்குரிய, பாமரர் - பண்டிதர் அனைவரிடையேயும் அறிமுக மான நூல்தான் ரியாளுஸ் ஸாலிஹீன் மின் கலாமி ஸைய்யிதில் முர்ஸலீன்.அனைத்துத் தரப்பு மக்களிடையும் இத்தொகுப்பு அதிகஅளவு புகழ் பெற்றதற்குக் காரணம், இந்நூல்வாழ்க்கையின் எல்லாத் துறைகளுக்கும் வழிகாட்டக்கூடிய சீரான அறிவுரைகளைத் தனித் தனித் தலைப்புகள் அமைத்துச் சிறப்பாய் வழங்குகிறது என்பதுதான்.

இஸ்லாத்தின் நன்நெறிகளிலும் நற்குணங்களிலும் நல்லார்வத்தை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொருபாடத்திற்கும் குர்ஆன் வசனங்களை மணி மகுடமாகச் சூட்டி ஆர்வமூட்டுதல், அச்சறுத்துதல் எனும் இருஅம்சங்களைக் கொண்ட ஹதீஸ்களையும் அணிகலன்களாக அணிவித்துப் பார்ப்போரும் படிப்போரும் கேட்போரும் இன்புறும் வகையில் அறிவுக்கு அருசவை விருந்தொன்றை இந்நூல் படைத்துத் தருகிறது!.

புத்தகங்களை படிக்க, நேரமின்மையையும், சலிப்பையும் காரணம் காட்டி நபிகளாரின் பொன்னான மொழிகள் நம் உள்ளத்தை அடையாமல் இருப்பதை தவிர்க்க இவ்வகை ஒலி வடிவங்கள் உதவக்கூடும். இதனை வாகனங்களில் பயணிக்கும்போதும், கடைகளில் வேலைப்பார்க்கும்போதும், பெண்கள் வீட்டுவேலைகளைப்பார்க்கும்போதும், சமையலறையில் இருக்கும்போதுமாக, இப்படி பல நேரங்களிலும், வகைகளிகும் கேட்கலாம். மேலும் தங்கள் அலைபேசியில் சேமித்து வைத்து நண்பர்களுக்கு ப்ளூடூத் (Bluetooth) மூலமும் அனுப்பலாம். (நன்றி: http://www.tamilaudioislam.com/)