முஹம்மது அபுதாஹிர்
பயான்கள் (37) |
கேள்வி பதில்கள் (11) |
குறு வீடியோ (Flash) (2) |
சொல்முரசு
மெளலானா மெளலவி அல்ஹாஜ் அப்ஜலுல் உலமா
M. முஹம்மது அபுதாஹிர் (பாகவி)
பாஜில் தேவ்பந்த் பேராசிரியர்
நூருல் இஸ்லாம் அரபிக்கல்லூரி
சேலம் - 6
(பாகவி)பாஜில் தேவ்பந்த் பேராசிரியர்நூருல் இஸ்லாம் அரபிக்கல்லூரிசேலம் - 6
துபாய் இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் (ஈமான்) அமைப்பின் சார்பில் வருடந்தோறும் மீலாதுப் பெருவிழா வெகு சிறப்புற கொண்டாடப்பட்டு வருகிறது. அதனையொட்டி சர்வ சமயத்தரும் பங்குபெறும் பேச்சுப் போட்டியும் நடைபெற்று வருகிறது. இத்தகைய நிகழ்வுகளில் பங்கேற்க வருடந்தோறும் ஒரு மார்க்க அறிஞரை தமிழகத்தில் இருந்து அழைத்து கௌரவித்து வருகிறது துபாய் ஈமான் அமைப்பு.இவ்வாண்டு சிறப்பு அழைப்பாளராக வருகை புரிந்தவர் சேலம் அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மௌலவி எம். முஹம்மது அபுதாஹிர் பாகவி தேவ்பந்தி அவர்கள்.ரபியுல் அவ்வல் 1 முதல் 12 வரை துபாய் கோட்டைப்பள்ளியில் சுன்னத் வல் ஜமாஅத் பேரவையின் தினசரி சொற்பொழிவு நிகழ்ச்சி, துபாய் ஈமான் அமைப்பு, அபுதாபி அய்மான் சங்கம், மதுக்கூர் சுன்னத் வல் ஜமாஅத் பேரவை உள்ளிட்ட அமைப்புகள் ஏற்பாடு செய்த மீலாது விழா, அஸ்கான் டி பிளாக்கில் வாராந்திர சொற்பொழிவு உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளிலும் பங்கேற்று மக்களின் மனங்கவர்ந்த பேச்சாளராக வலம் வந்தவர் மௌலவி எம். முஹம்மது அபுதாஹிர் ஆலிம். அனைத்து நிகழ்வுகளில் பங்கேற்ற பின்னர் தாயகப் பயணத்திற்கு தயாராக இருந்த அவரை இனிய திசைகள் இதழுக்காக நேர்காணல் செய்தோம். இதோ அதிலிருந்து சில முக்கிய குறிப்புகள் :
கேள்வி : அஸ்ஸலாமு அலைக்கும்பதில் : வ அலைக்கும் ஸலாம்
கேள்வி : தங்களைப் பற்றி ?
பதில் : திண்டுக்கல் முஹம்மதியாபுரத்தில் 23 ஏப்ரல் 1973 ஆம் ஆண்டு முஹ்ம்மது ஹனீபா – ஹைருன்னிஸா தம்பதியருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். மூத்த சகோதர்ர் முஹம்மது ஆரிபுதீன் கோவையில் பொறியாளராகப் பணிபுரிகிறார்.
கேள்வி : கல்வி மற்றும் பணி குறித்து … ?
பதில் : 1985 ஆம் ஆண்டு முதல் 1992 வரை திண்டுக்கல் யூசுபிய்யா அரபிக்கல்லூரியிலும், 1992 – 93 ஆம் ஆண்டு வேலூர் பாகியத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரியிலும், 1994 ஆம் ஆண்டு தேவ்பந்த் அரபிக் கல்லூரியிலும் மார்க்கக் கல்வி பயின்றேன். அதனைத் தொடர்ந்து 1995 முதல் சேலம் நூருல் இஸ்லாம் அரபிக் கல்லூரியில் ஆசிரியப் பணி தொடர்கிறது.
கேள்வி : சமுதாயப் பணி குறித்து ?
பதில் : ஜமாஅத்துல் உலமா சபையின் சேலம் மாநகர் செயலாளராகவும், தமிழ் மாநில இமாம்கள் பேரவையின் கௌரவ ஆலோசகராகவும் இருந்து வருகிறேன். இமாம்கள் பேரவையின் சார்பில் சேலத்தில் மாநில அளவிலான கருத்தரங்கினை 21.03.2010 அன்று நடத்தினோம்.
கேள்வி : பேச்சாற்றல் கலையினை வளர்த்துக் கொண்ட விதம் குறித்து ?
பதில் : வாரந்தோறும் வியாழன் மாலையில் நடைபெறும் மாணவர் மன்ற நிகழ்வில் பங்கேற்று மாணவர்களது பேச்சாற்றல் திறனை வளர்க்க அவர்களுக்கு பயிற்சியளிப்பதோடு அல்லாமல் அதன் மூலம் தனது பேச்சாற்றலையும் வளர்த்துக் கொள்ள உதவிகரமாய் அமைந்திருந்தது. மேலும் ஜும்ஆ பயான்களும் இக்கலைக்கு உறுதுணையாய் இருந்த்து.இதற்கு அரபிக் கல்லூரியின் முத்தவல்லி அப்துல் பாரி மற்றும் முதல்வர் அப்துல் மாலிக் ஆகியோர் மிகவும் தூண்டுதலாக இருந்ததை என்னால் மறக்க இயலாது.
கேள்வி : மார்க்க சொற்பொழிவுகள் மூலம் தங்களது அனுபவம் …. ?
பதில் : மார்க்க சொற்பொழிவுகளின் காரணமாக அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் பலருக்கு ஹிதாயத் எனும் நேர்வழி கிடைக்க காரணமாயிருந்தது.இந்தச் சொற்பொழிவுகள் நம்மை நாமே திருத்திக் கொள்ள உதவுக்