சேக் அப்துல்லாஹ் ஆலிம் ஜமாலி
ஷெய்க் அப்துல்லாஹ் ஜமாலி அவர்கள் 1960 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 03ஆம் திகதி தமிழ் நாட்டில் தஞ்சை மாவட்டத்தில் மல்லிபட்டிணம் என்ற ஊரில் பிறந்தார்கள்.
இவர்கள் அல் குர்ஆனை மனனம் செய்த ஹாபிள் ஆவார்கள். கீழக்கரை அரூஸியா அரபிக்கல்லூரியிலும் காயல்பட்டணம் மஹ்லரா அரபிக் கல்லூரியிலும் மார்க்க கல்வி பயின்றுள்ளார்கள். 1984ம் ஆண்டு மௌலவி பட்டத்தையும் 1986ம் ஆண்டு பாஸில் பட்டத்தையும் சென்னை ஜமாலியா அரபிக்கல்லூரியில் பெற்றுக் கொண்டார்கள். சென்னை பல்கலைக்கழகத்தில் அப்ழலுல் உலமா மற்றும் அரபியில் M.A பட்டங்களை பெற்றுள்ளார்கள்.
இஸ்லாமிய சட்டம், கொள்கை, அறிவியல் மற்றும் சமூகம் சம்பந்தப்பட்ட பல்வேறு கட்டுரைகள், நூல்கள் எழுதியுள்ளார்கள். ஸுன்னத் வல் ஜமாஅத் பேரியக்கம் என்ற அமைப்பின் மாநில தலைவராக இருந்துக்கொண்டு மார்க்கம் மற்றும் சமூகம் சார்ந்த சேவைகளை செய்து வருகிறார்கள். சென்னை கைருல் பரிய்யா மகளிர் அரபிக்கல்லூரியின் முதல்வராக இருக்கிறார்கள்.
இவர்கள் மூன் டி.வியில் நேரடி கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்தி வருகிறார்கள். பல நாடுகளுக்கு சென்று தஃவா பணி செய்து வருகிறார்கள். இஸ்லாமிய சத்திய கொள்கையை பாதுகாத்து வருகிறார்கள்.
ஜஸாகல்லாஹு கைர்: கோவை பைஸல்
Source: http://www.mailofislam.com/tam_bio_-_shaykh_abdullah_jamali.html