கலீல் அஹமத் அ. கீரனூரி
பயான்கள் (37) |
கீரனூரி காயிதே ஷரீஅத்
மெளலானா, மெளலவி, அல்ஹாஜ்
கலீல் அஹ்மது மன்பஈ பாஜிலே தேவ்பந்த்
முதல்வர், தாருல் உலூம் யூசுமிய்யா,திண்டுக்கல்.
தலைவர், ஹைஅத்துஷ்ஷரீஅத்
கீரனூரி ஹஜ்ரத் 16.12.2010 அன்று முஹர்ரம் மாத நோன்பு வைத்த நிலையில் மாலை 5.30 மணிக்கு காலமானார். மறுநாள் காலை 11.30 மணிக்கு, அவரது சொந்த ஊரான பழனி கீரனூர் பெரிய பள்ளிவாசலில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களின் இரங்கல் செய்தி..
தமிழகத்து அமீருல் வாயிஜீனாக திகழ்ந்த மௌலானா கலீல் அஹ்மது கீரனூரி ஹஸரத் மரணம்நாடறிந்த மார்க்க அறிஞரும், அற்புதமான சொல்லாற்றல் மிக்கவரும், மிகப் பெரும் சேவையாற்றிய தப்லீக் அமீருமான மவ்லானா கலீல் அஹ்மது கீரனூரி ஹஸரத் முஹர்ரம் மாத நோன்பு வைத்த நிலையில் நேற்று மாலை 5.30 மணிக்கு காலமானார். அன்னாருக்கு வயது 68.
அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கை பற்றிய தெளிவான விளக்கங்களை மக்களுக்கு விளக்கியவர். இதற்காக ஹைய்யத்துஷ் ஷரீய்யா என்ற ஷரீஅத் பேரவையை நடத்தி வந்தார்.
இவருக்கு மனைவியும், 3 ஆண் மக்களும், இரு பெண் மக்களும் உள்ளனர். அன்னாரின் ஜனாஸா இன்று பகல் 11.30 மணிக்கு கீரனூரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
நல்லடக்க நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளி லிருந்து சங்கைக்குரிய உலமா பெருமக்களும், சமுதாயப் பிரமுகர்களும், ஜமாஅத்தினரும் கலந்து கொண்டனர்.
தமிழகத்து அமீருல் வாயிஜீன் மௌலானா கலீல் அஹமது கீரனூரி ஹஜ்ரத் அவர்களின் மரணச் செய்தி ஒவ்வொரு உள்ளத்தையும் குலுக்கி எடுக்கும் துக்கச் செய்தி யாகியுள்ளது.
தப்லீக் இயக்கத்தின் முன்னணித் தலைவர்களில் ஒருவராகவும், சன்மார்க்க விளக்கம் தருவதில் முன்மாதிரி யான அறிஞராகவும், சிக்கலான மார்க்க விஷயங்களைக் கூடப் பாமரரும் புரிந்திடும் வகையில் விவரித்துக் கூறுவதில் வல்லவராகவும் திகழ்ந்தவர் கீரனூரி ஹஜ்ரத் அவர்கள்.
சன்மார்க்கக் கோட்டையாகிய லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரியில் தஃஸீல் ஆகி, மௌலவி ஆலிம் பட்டயம பெற்று 1960களில் கல்லூரிகளில் பேராசிரியர் பொறுப்பேற்றுப் பணியாற்றியுள்ளார். ஈரோடு தாவூதியா அரபி கல்லூரியிலும், திருச்சி ஜாமிஆ அன்வாருல் உலூம் கல்லூரியிலும் பிரபல்யமான ஆசானாகத் திகழ்ந்தார். பின்னர் திண்டுக்கல் யூசுஃப்பியா அரபி கல்லூரி நாஜிராகப் பொறுப்பேற்று இன்று வரை தொடர்ந்து பணிபுரிந்து வந்தார்.
தமிழகத்தில் மீலாது விழாக்களிலும், ஷரீஅத் மாநாடு களிலும், கல்லூரி விழாக்களிலும் தப்லீக் இஜ்திமாகளிலும் கீரனூரி ஹஜ்ரத் உரை என்றால், அதனைக் கேட்கும் கூட்டம் தனியே தெரியும். இதயங்களை ஈர்க்கும் இனிய சொல்லரசாக விளங்கினார். ஹஜ்ரத் அவர்களின் சொற் பொழிவுகள் பல்லாயிரக்கணக்கில் கேசட்டுகளாக உலகம் முழுவதும் பரவியுள்ளன. தப்லீக் ஜமாஅத்தின் பணிகளை உலகில் உள்ள பல்வேறு நாடுகளைச் சார்ந்த தப்லீக் ஊழியர்களுடன் இணைந்து அவர் மேற்கொண்டுள்ளார். தப்லீக் இயக்கம் தமிழகத்தில் 1952-ல் பரவத் தொடங்கியது. மாலிக் மௌலானா அவர்களின் பெருந் தொண்டும், ஆன்மீக வழிகாட்டுதலும் பல்லாயிரம் பேரை தப்லீக் இயக்கத்தின்பால் ஈர்த்தது. ஆரம்ப காலத்தில் ரஹ்மதுல்லாஹ் மௌலானா, உமர்பாலன்பூரி மௌலானா வரும் குட்டிக் கதைகள் கூறி, இஸ்லாமிய தத்துவங் களை பாமரரும் புரியும் வண்ணம் பேசுவதில் நிகரற்றவர்கள். அவர்களின் பாணியில் தமிழில் உரையாற்றும் பேராற்றல் கீரனூரிக்கு இருந்தது. அன்றாட வாழ்க்கை நிகழ்ச்சிகளை உதாரணமாக்கிப் பேசி, எல்லோரையும் கவர்ந்திழுக்கும் அரிய குணம் அவருக