Tamil Islamic Media

பொறாமைக்குரியோர் ....

இப்னு மஸ்வூத் அவர்கள் அறிவிக்கிறார்கள் '' இரண்டு பேரின் மீதே தவிர பொறாமைக் கொள்ளக்கூடாது, 1. ஒருவருக்கு இறைவன் செல்வத்தை கொடுத்தான் அதை சத்திய வழியில் செலவழிக்க வாய்ப்பளிக்கப்பட்டார் 2. இன்னொரு மனிதன் அல்லாஹ் அவனுக்கு ஞானத்தை வழங்கி அவன் அதைக்கொண்டு தீர்ப்பு வழங்குகிறான் இன்னும் அதை கற்றுக் கொடுக்கிறார் என்று உயிருக்குயிரான உயிரினும் மேலான சத்தியத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்

இந்த ஹதீஸுக்கு விளக்கம் அளிக்கும் போது '' பொறாமையை என்பது இரு வகைப்படும் ''

1. வெறுக்கத்தக்கது இன்னும் தடுக்கப்பட்டது அது ஒருவருக்கு இறைவனால் வழங்கப்பட்ட நிஃமத்தை( மார்க்க சம்மந்தப்பட்டதாக இருந்தாலும் / உலக சம்மந்தப்பட்டதாக இருந்தாலும் ) பார்த்து பொறாமை கொண்டு அது அவரை விட்டு நீங்கிவிட வேண்டும் என்று ஆசை படுவது (அது தனக்கு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை), அல்லது அது அவரைவிட்டு நீங்குவதற்குரிய பணிகளை மேற்கொள்வது. முதலில் இது வெறுக்கத்தக்கது இன்னும் இது அநீதமாகும். இதன் போனற செயல்கள் மூலமாகத்தான் ஒருவரின் நன்மைகள் அழிக்கப்படும் எவவாறு விறகை நெருப்பு அழிக்குமோ அது போன்று என்று கூறப்பட்டுள்ளது.

2. அடுத்து, இன்னொரு மனிதனுக்கு கொடுக்கப்பட்ட நிஃமத் நீங்க நினைக்காது அதை போன்று தனக்கும் கிடைக்கவேண்டும் என்று எண்ணுவதில் இரு நிலை உண்டு 1. விரும்பத்தக்கது 2. விரும்பத்தகாதது
1. விரும்பத்தக்கது: ஒருவர் தனக்கு இறைவனால் வழங்கப்பட்ட பொருளையும், ஞானத்தையும் இறை பொருத்ததிற்கு செலவு செய்வதைப்பார்த்து தனக்கும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கவேண்டுமே அப்படி கிடைத்தால் தானும் அப்படி செலவு செய்வேன் என்று எண்ணுவது.இன்னும் அது போன்று ஒரு வாய்ப்பு அவருக்கு வந்து அது போன்று அவர் செயல் பட்டால் அது சாலச்சிறந்தது.இப்படிப்பட்ட நல்ல எண்ணங்களை வளர்க்கவேண்டும் என்று இந்த ஹதீஸில் தூண்டப்பட்டுள்ளது. அவரின் எண்ணம் உண்மையானதாக இருந்தால் இறைவனின் அருளால் அந்த எண்ணத்தின் அளவு கண்டிப்பாக அவருக்கு கூலி உண்டு.

2. விரும்பத்தகாதது: உலகாதாயங்கள் கொடுக்கப்பட்ட ஒருவரை பார்த்து தனக்கும் இப்படி கிடைக்கவேண்டுமே அப்படி கிடைத்தால் தானும் அது போன்று ஆடம்பரமாக வாழலாமே என்று பெறாமைக்கொள்வது.'' அந்தோ எங்களுக்கும் காரூனுக்கு கொடுக்கப்பட்டது போன்று கொடுக்கப்பட்டிருக்கவேண்டுமே'' என்று குர் ஆன் இந்த எண்ணம் கொண்டவர்களைக் குறித்தே பேசுகிறது.

- ஹஸனீ






No articles in this category...