மக்களில் சிறந்தவர்
கண்மனி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: உங்களில் சிறந்தவர் குர்ஆனை தானும் கற்று இன்னும் பிறக்கும் அதை கற்றுக்கொடுப்பவர் ஆவார்.
( உலகில் இறைவன் பார்வையில் சிறந்தவர் குர்ஆனை கற்பவர் இன்னும் கற்பிப்பவர். கண்மனி நாயகம் யாரை சிறந்தவர்கள் என்று வர்ணித்தார்களோ அவர்கள் நாம் பார்வையில் எப்படி இருக்கிறார்கள் என்று ஒரு கணம் சிந்திதுப்பார்க்கவேண்டும். நாம் அவர்களோடு நடந்துகொள்கிற விதத்தை ஒரு முறை மீள் ஆய்வு செய்யவேண்டும்.
இன்று இந்த சமுதாயத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை போல் பார்க்கப்படுகிறவர்களாக இந்த மனிதர்கள் (குர் ஆனை கற்பவர் & கற்பிப்பவர் )ஆகிவிட்டார்கள். சகோதரர்களே ! குர்ஆனை விளங்குகிற, அதை ஆய்வுசெய்கிற நிலையை இறைவன் சில பேருக்குத்தான் தருகிறான் அனைவருக்கும் தருவது இல்லை. இதை சொன்னால் ஒரு சாரார் கொடி பிடிக்க ஆரம்பித்து விடுவார்கள், ஏன் எங்களுக்கு மூளை இல்லையா? எங்களுக்கு குர்ஆன் விளங்காதா? அரபி படித்தால் தான் குர் ஆன் விளங்குமா? குர்ஆன் அல்லாஹ்வின் வேதம் பொதுவாயிற்றே என்று வேதாந்தம் பேச ஆரம்பிக்கிற கூட்டமும் உண்டு. கண்மனி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறினார்கள்: யாருக்கு அல்லாஹ் நலவை நாடுகிறானோ அவருக்கு மார்க்கத்தின் விளக்கத்தை தருகிறான்.