Tamil Islamic Media

நாற்பது ஹதீஸ்கள் மனனம் செய்பவர்...

 

அபூதர்தா அவர்கள் அறிவிக்கிறார்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்: யார் எனது உம்மத்தில் தீனுடைய விசயத்தில் உள்ள நாற்பது ஹதீஸ்கள் மனனம் செய்வாறோ, அவரை அல்லாஹ் மார்க்க ஞானமுடையவராக எழுப்புவான். நான் அந்த மனிதனுக்கு கியாமத் நாளில் பரிந்துரைப்பவனாகவும், சாட்சியாளனாகவும் இருப்பேன்.






1 ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பரிந்துரை

அல்லாஹுதஆலாவுக்கு இணைவைக்காத நிலைவில் மரணித்தவருக்கு என்னுடைய பரிந்துரை உண்டு.'' என்று ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அருளியதாக ஹஜ்ரத் அவ்ஃப் இப்னு மாலிகுல் அஷ்ஜஇய்யீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

2 ஒற்றைச்செறுப்பு

ஒரு முஸ்லிமுடைய வாழ்வில் ரோல் மாடலாக நபி (ஸல்) தவிர வேறு ஒரு மனிதர் நிச்சயமாக இருக்க முடியாது. அப்படி இருக்கவும் கூடாது, மற்ற யாரெல்லாம் உலகாதாய நோக்கத்திற்கு மற்றவர்களை ரோல் மாடலாக்கிக்கொள்கிறார்களோ அவர்கள் அந்தந்த துறையில் மட்டும் தான் சிறப்புற்றிருப்பார்கள் ஆனால், நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் ஆன்மிகத்திலிருந்து அறிவியல் வரையும் சரித்திரத்திலிருந்து சமையலறை வரை வழிகாட்டிய ஒரே தலைவர் நபியவர்கள்.

3 திரைகள் விலகட்டும்

“முஃமின் உடைய நிலை ஆச்சிரியமானது. அவனுடைய எல்லா நிலைகளும் அவனுக்கு நன்மையே, இந்த நிலை முஃமினைத் தவிர வேறு யாருக்கும் இல்லை. அவனுக்கு சந்தோஷம் ஏற்பட்டால் அவன் நன்றி செலுத்துகிறான் அது நன்மையாகி விடுகிறது. துன்பம் ஏற்பட்டால் பொறுமை கொள்கிறான் அதுவும் அவனுக்கு நன்மையாகிவிடுகிறது"

4 உம்மு ஸலமா (ரலி)யும் ஆறாதரணங்களின் அற்புத அன்பளிப்பும்

உயிருக்குயிரான உயிரினும் மேலான சாதிகுல் அமீன் சத்தியத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் கூறியதாக அன்னை உம்மு ஸலமா அவர்கள் அறிவிக்கிறார்கள் எந்த ஒரு அடியானும் அவருக்கு ஒரு சோதனை ஏற்பட்டால் உடன் அவர் கூறட்டடும் இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன், பின்பு அல்லாஹும் ஆஜிர்னி பி(F) முசிபத்தி வஃக்லுப்லி ஹைரன் மின்ஹா என்று கூறட்டடும், அவ்வாறு கூறினால் அல்லாஹ் அந்த சோதனையிலிருந்து அவரைக்காப்பான் இன்னும் அவருக்கு சிறந்த பகரத்தை தருவான். (முஸ்லிம்)

5 நன்மை தீமையும் அதன் அளவுகோலும்

உயிருக்குயிரான உயிரினும் மேலான சத்தியத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் நான் கேட்டேன் நன்மை பற்றியும், பாவம் பற்றியும் எனக்கு சொல்லுங்கள் என்று, அதற்கு நபிபெருமான் அவர்கள் கூறினார்கள் : நன்மை என்றால் நற்குணம் ஆகும். பாவம் என்றால் ஒன்றை செய்ய உனது மனம் குறுகுறுப்பதும், மக்கள் அதை அறிவதை நீ வெறுப்பதும் ஆகும் என்று நபித்தோழர் நவாஸ் பின் சம்ஆன் அவர்கள் அறிவிக்கிறார்கள்.

6 வலிபோக்கும் ஆன்மீக வழிகள்
7 முஜாஹிர்களும் மன்னிப்பும்
8 நன்மை தீமையும் அதன் அளவுகோலும்
9 தங்க ஓடை: மனிதனின் பேராசை
10 பயணியே சற்று நில்
11 அக்கம் பக்கம் / அண்டை வீட்டார்
12 என் கண்ணாடி எங்கே?
13 நன்மைக்கு வழிகாட்டினால்
14 பொறாமைக்குரியோர் ....
15 நபியின் மீது பிரியம்
16 அல்லாஹ்வின் பிரதிநிதி குழுவினர்
17 ஈமானின் கிளைகள்
18 வளைகுடாவில் வசிப்பவரின் இந்தியப்பெருநாள் - மார்க்க சட்டம்
19 நற்செயல் எது?
20 பட்டாடை
21 பரிபூரணமான முஸ்லிம்
22 பரிபூரண இறைநம்பிக்கை - ஈமான்
23 சுவர்க்கத்தின் சாவி
24 மக்களில் சிறந்தவர்
25 மறுமை
26 மறைவானவற்றை நம்புவது
27 அழகிய துஆ