மௌலானா சாத்(தா.ப) அவர்களுக்காக ஜரோப்பாவிலுள்ள ஒருதாயியின் அன்பான செய்தி
பல்வேறு போலிக் குற்றச்சாட்டுக்களும், அவதூறுகளும் பரப்பப்படும் நிலையில் பொறுமையோடு அல்லாஹ்வை சார்ந்து வீற்றிருக்கும் மௌலானா சாத்(தா.ப) அவர்களுக்காக ஜரோப்பாவிலுள்ள ஒருதாயியின் அன்பான செய்தி....
(ஆங்கிலமூலமான ஆக்கம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது) 👇👇👇
ஹஜ்ரத்ஜி மௌலானா சாத் (தா.ப)- எங்கள் அமீர்- நீங்கள் தற்போதைய உலகில் வாழும் எங்களுக்கு அல்லாஹ் அளித்துள்ள ஒரு சொத்து...
இன்று உலகெங்கிலும் 100 மில்லியனுக்கும் அதிகமானோர் உங்களைச் சுற்றியுள்ள குற்றச்சாட்டுகளை பாதுகாக்க நிற்கிறார்கள்.
இத்தருணம், உங்கள் அந்தஸ்த்தை இப்போது இருப்பதை விட இன்னும் உயர்த்துவதற்காக மீண்டும் நீங்கள் அல்லாஹ்வால் சோதிக்கப்படுகிறீர்கள்.
முழு உலகமும் தீனைவிட்டு திசைதிருப்பப்பட்டு, தீனுக்கு மாற்றமானதை பேசும் சூழலில் குர்ஆன், சுன்னா மற்றும் சஹாபாக்களின் வாழ்வை மட்டுமே உறுதியாக பேசும் நபர் நீங்கள்.
ஆச்சரியமான விடயம், உங்களிடம் சமூக ஊடக சுயவிவரங்கள்(media profile) எதுவும் இல்லை. ஆனால், அல்லாஹ் உங்கள் பெயரையும் அந்தஸ்தையும் உலகின் நான்கு மூலைகளிலும் உயர்த்தியுள்ளான். வல்லாஹி இது நீங்கள் ஹக்கை பேசியதாலும், அன்பான ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மிகச்சிறிய சுன்னாவைக்கூட விட்டுக் கொடுக்காததும்தான்.
நம்பிக்கையற்ற மக்களுக்கு நீங்கள் நம்பிக்கை அளித்துள்ளீர்கள்.
உங்கள் பேச்சைக் கேட்பதன் மூலம், எங்கள் ஈமான் அதிகரித்தது... அல்லாஹ்வில் மீதுள்ள எங்கள் யகீன் மற்றும் தவக்குல் உயர்ந்தது...
இந்த உலகில் நாம் எங்கிருந்தாலும், தீனுக்கும் தீனுடைய முயற்சியும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை நீங்கள் எங்களுக்குக் கற்றுக் கொடுத்தீர்கள். உங்களின் பேச்சின் மூலம் எங்கள் நம்பிக்கைககள் துனியாவிலிருந்து படிப்படியாக விலகி அல்லாஹ்வினதும் அவனுடைய கட்டளையுடன் இணைக்கப்பட்டது...
மேலான தஹ்வத் தப்லீக் பணிக்கான உங்களது வழிகாட்டல்(உஸூல்) சஹாபாக்களின் காலத்திற்கு மிக நெருக்கமானது... இதுபோன்ற நெருக்கத்தை வேறு எந்த முயற்சியிலும் ஒருபோதும் கண்டதில்லை.
உங்கள் வார்த்தைகள் உங்கள் செயல்களில் பிரதிபலித்தன. நீங்கள் எல்லோரையும் சமமாகப் பார்த்தீர்கள். எல்லா நிறத்தவருக்கும் முன்னுரிமை கொடுத்தீர்கள்.
இனவெறி, பாகுபாடு, பழங்குடிவாதம் போன்ற ஏற்றத்தாழ்வுக்கு எதிராக உங்கள் பயானில் நீங்கள் தீவிரமாகப் பேசினீர்கள், நீங்கள் எங்கு சென்றாலும் இதை நிரூபித்தீர்கள். உம்மத்தின் உண்மையான அர்த்தம் ஒரு உடல் போன்றது என்பதை நாங்கள் புரிந்துகொண்டோம்.
உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான இஜ்திமாக்கள் நடத்தப்பட்டுள்ளன, நீங்கள் உங்கள் சொந்த பணத்துடன் எளிமையாக பயணம் செய்தீர்கள்.
ஏர் கண்டிஷனிங் (A/C) இல்லாத ரயிலில் 30-40 மணிநேர பயணம் செய்வதை நீங்கள் மகிழ்ச்சியுடன் தேர்வு செய்தீர்கள், இந்த முன்மாதிரி ஒரு தாயி எப்படி இருக்க வேண்டும் என்பதை உலகம் முழுவதற்குமான அழகிய வழிகாட்டலாகவே பார்க்கின்றோம்.
உங்களின் பேச்சைக் கேற்க மில்லியன் கணக்கானவர்கள் கலந்து கொள்கிறார்கள், அதன்மூலம் அவர்களின் ஈமான் மற்றும் அமல்களில் முன்னேற்றம் உண்டாகின்றது.
எத்தனையோ இறைத்தொடர்பின்றி இழந்த ஆத்மாக்களை நீங்கள் மீண்டும் ஆன்மீகரீதியாக அல்லாஹ்வுடன் இணைத்துள்ளீர்கள்.
அவுரங்காபாத் இஜ்திமாவில், கலந்து கொண்ட மக்களின் எண்ணிக்கை மில்லியன் கணக்கை தாண்டியபோது, ஹித்மத் சாதிகள் உங்களை உணவுக்காக அழைத்துச் செல்ல வந்தபோது, (சபையில்) மஜ்மாவில் உள்ள அனைவரும் சாப்பிடும் வரை நான் சாப்பிட மாட்டேன் என்று பதிலளித்தீர்கள். (மஜ்மாவிலோ 1 கோடியே 20 லட்சக்கணக்கான மக்கள் வீற்றிருந்தார்கள்)
ஐரோப்பாவில் இடம்பெற்ற இஜ்திமா ஒன்றில், உங்களுக்கான தஸ்தர்கானில் (விசேட சாப்பாட்டு விரிப்பில்) உணவு வைக்கப்பட்டபோது, "எல்லோரும் சாப்பிடும் இடத்திற்கு என்னை அழைத்துச் செல்லுங்கள், அனைவருக்கும் ஏற்பாடு செய்யப்பட்ட சாதாரண உணவை நானும் சாப்பிடுவேன்' என்று சொன்னீர்கள்.
அல்லாஹ்வின் உதவியால், தீனின் முயற்சிக்காக உங்கள் குடும்பம் (அபூபக்கர் ரழி அவர்களின் பரம்பரை) 1400 ஆண்டுகளுக்கு மேல் தியாகம் செய்து வருகின்றது... இன்றைய நவீன உலகில், நீங்கள் அல்லாஹ்வையும் அவனது தூதர் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் உறுதியாக பின்பற்றுபவர் என்பதில் சந்தேகமில்லை.
எனது பார்வையில், நீங்கள் சொல்வதை முழு உலகமும் புரிந்துகொள்ள உருது மொழியை அறிய வேண்டும் என விரும்புகிறேன்.
நீங்கள் இல்முக்கு ஒரு புதிய பரிமாணத்தை வழங்கியுள்ளீர்கள். இந்த உம்மத் ஸஹாபாக்களின் காலத்தில் இருந்த தீனுடைய நிலைக்குச் செல்ல வேண்டும் என்பது உங்கள் பாட்டனார் மௌலானா இல்யாஸ் ரஹிமஹுல்லாஹ்வின் கூற்று. உங்கள் பகல் மற்றும் இரவு முஜாஹிதாவுடைய ஒரு வாழ்வின் உருவகம்.
2019 இல் இடம்பெற்ற Trinidad இஜ்திமாவில் நான் உங்களைச் சந்தித்தது எனக்கு மகிழ்ச்சியை தருகின்றது, அதை பாக்கியமாக கருதுகின்றேன்.
நீங்கள் வருவதற்கு முன்னர் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தாலும் உங்களின் பணிவுத்தன்மையை, எளிமையான போக்கை கவனித்தேன்.
உங்களைச் சந்திக்க ஒரு இந்து சகோதரை அழைத்து வந்தேன். உங்கள் முகத்தில் ஒரு புன்னகையுடன் மிகவும் அழகாக, நீங்கள் அவருக்கு தஹ்வா செய்தீர்கள்.
நீங்கள் பேசிய சில வாக்கியங்கள் மட்டுமே... ஆனால், அவ்வார்த்தைகள் அவரின் உள்ளத்தில் தாக்கத்தை உண்டாக்கியதுடன் அதன் பிறகு உங்களின் 2 மணிநேர நீளமான பயானையும் செவிமடுத்ததோடு இறுதியாக. ஜமாஅத்துத் தொழுகையிலும் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்து முடித்தார்,
தற்போது, இஸ்லாத்தின் அழகு மற்றும் எளிமை பற்றி பேசுவதை அவரால் நிறுத்த முடியவில்லை.
அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிந்து, உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மத்தியில் உங்கள் அந்தஸ்தை உயர்த்தியுள்ளான்.
நீங்கள் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது எங்களுக்கு ஒரு கவலையை தருகின்றது. எனினும், நீங்கள் எப்பொழுதும் கூறுவீர்கள், நல்லமக்களும் சோதனைகள் மற்றும் நெருக்கடிகள் உள்ளாக்கப்படுவார்கள். நபிமார்கள் சோதிக்கப்பட்டார்கள், ஸஹாபாக்கள் சோதிக்கப்பட்டார்கள், ஸாலிஹீன்கள், நல்லடியார்கள் சோதிக்கப்பட்டார்கள்...
நம்பிக்கையிழந்த மக்களுக்கு நீங்கள் நம்பிக்கை அளித்துள்ளீர்கள், மேலும் அல்லாஹ் உங்கள் அந்தஸ்தை உயர்த்தி, ரசூல்லல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மற்றும் சஹாபாக்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி நடக்க அல்லாஹ் நமக்கு தவ்ஃபீக் செய்வானாக...
உம்மத்தின் மீது நீங்கள் வைத்திருக்கும் ஃபிக்ர், கவலை மற்றும் அக்கறைக்கும் உம்மத்தின் ஈடேற்றத்திற்காக நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் அல்லாஹ் உங்களுக்கு மிகுந்த வெகுமதி அளிக்கட்டுமாக... ஆமீன் யா ரப்பல் ஆலமீன்...
நேர்மையால் நீங்கள் நிரந்தரமாக பலரை இழக்கலாம். ஆனால், ஒருபோதும் உங்களது நிம்மதியை இழக்க மாட்டீர்கள். பொய்யுரைத்து பலபேரால் நீங்கள் பகட்டு இன்பம் பெறலாம். ஆனால், ஒருபோதும் உங்களால் நிம்மதியைப் பெறமுடியாது.
சோழ இளவரசி குந்தவை நாச்சியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை முனைவர் பட்டதுக்கான ஆய்வுத் தலைப்பாக எடுத்து மிக விசாலமாக ஆய்வுசெய்து அதை அதிகாரப்பூர்வ வரலாறாக பதிவாக்கிட வேண்டும்.