Tamil Islamic Media

மீலாது விழா கொண்டாடுவது கூடுமா?


உலக முஸ்லிம்களின் மார்க்க தீர்ப்பு தலைமையகமான எகிப்து அல் அஸ்ஹர் பல்கலைக்கழக. தாருல் ஃபத்வா பிரிவின் விரிவான ஃபத்வா
.


(தமிழில்: மௌலவி அபுல் ஹஸன் ஆலிம் ஃபாஸி M.A.,)
.


கேள்வி.
நமது (எகிப்து) பேச்சாளர்களில் சிலர் மீலாது விழா, மீலாது ஊர்வலம், திக்ரு ஹல்கா போன்றவை ஙைரு மஷ்ரூஃ (அல்லாஹ் – ரசூல் இது பற்றி கூறாதவை ) என்று வாதிடுகின்றனர். இது குறித்த மார்க்கத் தீர்ப்பு என்ன?
.
பதில்:
நமது நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்கள் பிறந்ததை கொண்டாடுவதை அமல்களில் சிறப்பானதாகவும், வணக்கங்களில் மேன்மையானதாகவும் தான் கருதப்படும்.
.
ஏனெனில், அது நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்களின் மீதான பிரியம் அவர்களின் பிறப்பினால் உருவான சந்தோஷம் என்றே கூறப்படும்.
.


நிச்சயமாக அது ஈமானின் அடிப்டைகளில் ஒன்றாகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் கூறினார்கள். “ உங்களில் ஒருவர் அவரது தந்தை, குழந்தை மற்றும் எல்லோரையும் விட நான் அவரிடம் பிரியமானவராக ஆகும் வரை உண்மை முஃமின் ஆக முடியாது.” (நூல் – முஸ்லிம்)
.
நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களின் பிறப்பை விழாவாக கொண்டாடுவது என்பதில் அது மஷ்ரூஃ ( அல்லாஹ் – ரசூல் இது பற்றி கூறியது ) ஆக இருக்க வேண்டும் என்பதில்லை.
.
ஏனெனில், அண்ணலாரின் பிறப்பு அகிலத்தார்களின் மீது அல்லாஹ் புரிந்த மாபெரும் அருளாகும். அருளுக்கு நன்றி செலுத்துவது புகழுக்குரிய செயல். அதனை செய்பவர் பழிக்கப்பட மாட்டார். மாறாக புகழப்படுவார். நன்றி செலுத்தியவராக கருதப்படுவார்.
.

 

இது விஷயத்தில் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களின் வழிகாட்டல் நமக்கு இருக்கவே செய்கின்றது. அவர்கள் தமது பிறந்த நாளில் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தியுள்ளார்கள்.
.
பின்வரும் ஸஹீஹான நபிமொழி இதற்கு ஆதாரம். திங்கட்கிழமை அவர்கள் நோன்பு நோற்றார்கள். அதற்கு இவ்வாறு காரணம் சொன்னார்கள். அந்நாளில் தான் நான் பிறந்தேன். (நூல்: முஸ்லிம்)
.
தாம் அந்நாளில் பிறந்ததற்காக அன்று நோன்பு பிடித்து இறைவனின் அருளுக்கு நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் நன்றி செலுத்தினார்கள் எனில், அவர்களின் பிறப்புக்கு முஸ்லிம் உம்மத் நன்றி செலுத்திட நிச்சயம் தகுதியானவர்களே..
.


முஸ்லிம்கள் அனுசரிக்கும் மீலாது விழாக்களின் நோக்கம் திக்ரு செய்தல், அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களை புகழ்ந்து கவிதை படித்தல், அன்னாரின் வாழ்க்கை வரலாற்றை பயான் செய்தல், அல்லாஹ்வுக்காக ஏழை, எளிய மக்களுக்கு ஸதகாவாக உணவளித்தல் போன்றவையே.
.


அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களின் மீதான பிரியம், அவர்கள் இவ்வுலகிற்கு வந்த நாளினால் கிடைக்கும் சந்தோஷம் ஆகியவற்றை வெளிப்படுத்திடவே இந்நற்பணிகள் செய்யப்படுகின்றன.
.
நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்களின் பிறந்த நாளில் இனிப்பு வழங்குவது ஆகுமான காரியமே. அதனை கூடாது என்று தடுத்திடவோ அல்லது அந்நேரமல்லாத நேரத்தில் மட்டும் இனிப்பு ஹலால் என்று கூறிடவோ ஆதாரம் ஏதுமில்லை.
.
இன்னும் சொல்வதெனில், இதனை உறவினர்களுக்கு கொடுத்தனுப்பும் பொழுது உறவுகள் மலரும், குடும்பத்தார்கள் மகிழ்ச்சியடைவர் எனில் அதனை முஸ்தஹப்பு என்றே கூறலாம். ஸாலிஹான நோக்கமே அதற்கு காரணம்.
.
இதனை ஹராம் என்பதும், தடுப்பதும் ‘தனத்துஃ’ என்று நபிமொழிகளில் கூறப்படும் மார்க்கத்தில் வரம்பு மீறி செயல்படும் பழக்கம். இதனை நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
.


மீலாது விழாவை முன்னிட்டு சில இடங்களில் மீலாது ஊர்வலம் நடத்தப்படுகிறது. பேரணியில் மார்க்க சம்மந்தப்பட்ட வாசகங்கள் பொறிக்கப்பட்ட கொடியும் ஏந்திச் செல்லப்படுகிறது. நபி புகழ்பாடும் பைத்துகள், உலக வாழ்க்கையின் மீதான பற்றின்மையை விளக்கும் கவிதைகள் அவற்றில் பாடப்படுகின்றன.
.
அதன் மூலம் மார்க்கத்தின் முக்கிய பணிகளுக்கு பாதிப்பு இல்லை. அத்துடன் மார்க்கம் தடுத்த ஆண் – பெண் இரண்டறக் கலந்தும் அங்கு இல்லையெனில், அதனை செய்வதில் எந்த குற்றமும் இல்லை.
.


அவ்வாறே மீலாது ஊர்வலங்களில் தப் அடித்து மகிழ்வதிலும் குற்றமில்லை தான். ஏனெனில் திருமணங்களில் தப் அடித்திட அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் அனுமதித்துள்ளார்கள்.
.
“ திருமணத்தை பிரபலபடுத்துங்கள். அதனை பள்ளிவாசலில் நடத்துங்கள். திருமணத்தில் தப் அடியுங்கள்.” (நூல் : திர்மிதி)
.
அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களின் பிறப்பை தப் அடித்து கொண்டாடி மகிழ்வது திருமணத்தை விட ஏற்றமானதே. எனினும் ஒழுக்கம், கண்ணியம் இவற்றை பேண வேண்டும்.






No articles in this category...