Tamil Islamic Media

மக்தப் மதரஸா ... ஒரு அமைதிப் புரட்சி

தீனியாத் மக்தப் மதரஸா விசயமாக ஒரு பயானில் கேட்ட சம்பவம்..

மதராஸா பாடத்திட்டத்தின் ஒரு அங்கம், ஒவ்வொரு மாணவனும் தின தொழுகை பதிவேட்டில் ஐவேளை தொழுகை தொழுததாக வீட்டில் கையெழுத்து வாங்கி வரவேண்டும்.

ஒரு மாணவன் தொழுகை பதிவேட்டில் வீட்டில் தனது தாயாரிடம் கையெழுத்து பெறவில்லை.
சில நாட்களாக இதை கவனித்து வந்த உஸ்தாத் ஒரு நாள் கண்டிப்பாக கூறினார்.. நீ உனது  தாயாரிடம் கையெழுத்து பெற்றுத்தான் இனி மதரஸாவிற்கு வரவேண்டும்.

வீட்டிற்கு சென்ற மாணவன் தனது தாயாரிடம் இதைக் கூறிய மாணவன் அவரிடம் கையெழுத்து போடுமாறு கூறினான். இதனைக் கேட்ட அவனது தாயார் கூறினார். நான் எப்படியப்பா கையெழுத்து போடுவது. நானே தொழுவது இல்லையே.

மாணவன் கூறினான் இதற்கு ஒரே வழிதான் அம்மா.. நீங்களும் தொழ ஆரம்பியுங்கள். அதில் உள்ள உண்மையை உணர்ந்த அவனது தாயாரும் தொழுகையை ஆரம்பித்தார்..

மக்தப் மதரஸாவின் மூலம் ஆண்டவனின் மாபெரும் கிருபையினால் இந்த சமுதாயத்தில் ஒரு அமைதி புரட்சி ஆரம்பித்திருக்கின்றது. எங்களது ஊரில் (நெல்லை ஏர்வாடி) இதனை செயல் படுத்துவதற்கு எங்களை தேர்ந்தெடுத்த அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்.

உங்கள் ஊரிலும் இதை செயல் படுத்த முயற்ச்சி எடுங்கள் சகோதரர்களே. செயல் பட்டுக் கொண்டிருக்குமானால் அதற்கு உங்களால் ஆன உதவிகளை செய்யுங்கள்.

அல்லாஹ் அவனது தீனை நிலைப் படுத்தியே தீருவான். அதில் எந்த சந்தேகமுமில்லை.

ஆனால் கேள்வி அதில் நமது பங்கு என்ன?

வஸ்ஸலாம்

S. பீர் முஹம்மத்.
நெல்லை ஏர்வாடி.











No articles in this category...