பேச்சு,மெளனம்
- அறிவுள்ள மினிதர்கள் மெளனமாகவே இருப்பர்.
- மெளனமானது சொற்களிலும் மிகவும் வன்மையானது.
- நாவுதான் மனிதனிடமுள்ள மிகச்சிறந்த அங்கமாகும்.
- ஒரு மனிதனின் பேச்சானது அவன் எத்தகைய மனம் பெற்றுள்ளான் என்பதைக் காட்டிவிடும்.
- நாவு விஷயத்தில் அவசரம் வேண்டாம். சொற்கள் வெள்ளியென்றால், மெளனம் பொன்னாகும்.
- அறிந்தவையனைத்தையும் சொல்ல வேண்டுமென்பதில்லை.
- அறிவு விரியும்போது பேச்சு சுருங்குகிறது.
- காக்கப்படா நாவு பெருந்தீங்கு புரிந்து விடலாம்.
- நா காப்பது ஒரு மனிதனின் இயல்பில் மிகச் சிறந்ததாகும்.
- நீண்ட சிறைத் தண்டனைக்குரியது உலகில் நாவைத் தவிர்த்து வேறு எதுவுமில்லை.
- கூற வேண்டாததைக் கூறும் ஒருவன், கேட்க விரும்பாததைக் கேட்க வேண்டி வரும்.
- அதிகம் பேசுபவன் குறைவாய்ச் செயல் புரிவான்.
No articles in this category... |