வலிமார்கள் என்பவர்கள் யார்?
எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே!! ஸலவாத் எனும் கருணையும், ஸலாம் எனும் ஈடேற்றமும் அகிலதிற்கு அருட்கொடையாக அனுப்பப்பட்ட ஈருலகத் தலைவர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தவர்கள், தோழர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக!!
எல்லாம் வல்ல அல்லாஹுதஆலா இந்த உலகத்தை படைத்து, அதில் கோடிக்கணக்கான ஜீவராசிகளை படைத்து, அந்த அத்தனை ஜீவராசிகளிலும் மனிதனை ஒரு உயர்ந்த, கண்ணியம் வாய்ந்த படைப்பாக படைத்தான். இந்த மனிதர்களிலேயே அதி கண்ணியம் வாய்ந்த மனிதராக எங்கள் உயிரிலும் மேலான கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்களை படைத்தான். அன்னவர்களுக்கு பின் மனிதர்களில் சிறந்த படைப்பாக ஏனைய ரசூல்மார்களை படைத்தான். இந்த ரசூல்மார்களுக்கு பின் மனிதர்களில் கண்ணியம் வாய்ந்த படைப்பாக ஏனைய நபிமார்களை படைத்தான். நபிமார்களுக்கு பின் மனிதர்களில் கண்ணியம் வாய்ந்த படைப்பாக ஸஹாபாக்கள் இருக்கிறார்கள். ஸஹாபாக்களுக்கு பின் மனிதர்களில் கண்ணியம் வாய்ந்த படைப்பாக தாபியீன்களும், தபஅத்தாபியீன்களும் இருக்கிறார்கள். இவர்களுக்கு பின் மனிதர்களில் கண்ணியம் வாய்ந்த படைப்பு அதற்கு பின்னால் வந்த அனைத்து இஸ்லாமிய இறைநேசர்களும், இமாம்களும் ஆவார்கள். இவர்களுக்கு பின் மனிதர்களில் கண்ணியம் வாய்ந்த படைப்பு ஏனைய ஸாலிஹான முஸ்லிம்களாவார்கள்.
அப்படியென்றால் வலிமார்கள் என்றால் யார்? இவர்களுக்கு இஸ்லாத்திலுள்ள அந்தஸ்தும், கண்ணியமும் என்ன? இவற்றை நாங்கள் ஒவ்வொருவரும் கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும். இன்ஷா அல்லாஹ் அவர்களை பற்றி நாம் தெரிந்துக் கொள்வோம்.
அல்லாஹ்வின் கட்டளையும், கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்களின் ஸுன்னத்துகளையும் ஒன்று விடாமல் பின்பற்றி, இஸ்லாம் என்னும் மார்க்கத்தில் முறையாக நடந்து ஷரீஅத், தரீகத், ஹகீகத் என்ற மன்ஸில்களை அதாவது படித்தரங்களை கடந்து இறுதியில் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை பெற்றுக்கொண்டவர்களே அல்லாஹ்வின் அவ்லியாக்கள், வலிமார்கள் எனப்படுவார்கள்.
அவ்லியாக்கள் என்றால் அல்லாஹ்வின் நேசர்கள் என்று பொருள். அதாவது அல்லாஹ்வின் விருப்பத்துக்கு உரியவர்கள். அல்லாஹ்வால் நேசிக்கப்படுபவர்கள் என்று அர்த்தமாகும். வலி என்றால் ஒரு இறைநேசரை குறிக்கும். வலிமார்கள் என்றால் ஒன்றுக்கு மேற்பட்ட பல இறைநேசர்களை குறிக்கும் நாம் வலிமார்கள் என்று கூறினால் அதில் ஸஹாபாக்கள், தாபியீன்கள், தபஅத்தாபியீன்கள், இமாம்கள் ஏனைய அவ்லியாக்கள் அனைவரும் அடங்குவார்கள். என்றாலும் பொதுவாக மக்கள் பேசும்பொழுது, ஸஹாபாக்களை அவர்களது சிறப்பான அந்தஸ்தை கூறியே, அதாவது ஸஹாபாக்கள் என்று கூறியே அழைக்கிறார்கள். ஏனைய தாபியீன்கள், தபஅத்தாபியீன்கள், இமாம்கள், இஸ்லாமிய பெரியார்கள் இவர்களைத்தான் பொதுவாக அவ்லியாக்கள் என்று கூறுகிறார்கள்.
ஏனென்றால் உலகத்திலுள்ள எல்லா அவ்லியாக்களை விடவும் அதி கண்ணியமும், சிறப்பும், அந்தஸ்தும் மிக்கவர்கல்தான் ஸஹாபாக்கள். எனவே நாம் எந்த ஒரு அவ்லியாவையும் ஸஹாபாக்களை விட சிறந்தவர்கள் என்று கூறக்கூடாது. அப்படி நினைத்தும் பார்க்கக்கூடாது. அதேபோல் உலகத்திலுள்ள எந்தவொரு அவ்லியாவையும் எங்களோடு ஒப்பிட்டுப்பார்த்து எங்களைப்போன்ற சாதாரண மனிதர்கள்தான் என்று கூறக்கூடாது. இன்னும் அப்படி நினைத்தும் பார்க்கக்கூடாது. இதுதான் எங்களுடைய ஸுன்னத் - வல் - ஜமாஅத்துடைய அகீதா.
ஏனென்றால் அல்லாஹுதஆலா எங்களைவிட வலிமார்களுக்கு பல அந்தஸ்துகளை வழங்கி சிறப்பாக்கி வைத்திருக்கிறான்
No articles in this category... |