Tamil Islamic Media

மில்லர் கண்ட குர்ஆனின் அதிசயங்கள்

 கனடா நாட்டைச் சேர்ந்த கிறித்துவப் பிரச்சார பீரங்கி டாக்டர் மில்லர். பைபிளைக் கரைத்துக் குடித்தவர்.அதே நேரத்தில் கணக்குப் பிரியர். இதனால் எதையும் தர்க்கரீதியாக அணுகுவதையே விரும்புவார். இவர் ஒருநாள் திருக்குர்ஆனை வாசிக்கநினைத்தார். அவரது எண்ணமெல்லாம், குர்ஆனில் தவறுகளைக் கண்டுபிடிக்க வேண்டுடும். முஸ்லிம்களைக் கிறித்துவ மதத்திற்கு அழைக்கஇத்தவறுகள் நமக்கு உதவும் என்பதுதான். பதினான்கு நூற்றாண்டுகளாக ஓதப்பட்டுவரும் ஒரு பழைய நூலில் என்ன இருந்து விடப் போகிறது?பாலைவனம் பற்றியும் அது போன்ற செய்திகள் பற்றியுமே அது பேசும் என்பதே அந்தக் கணக்கரின் கணக்காக இருந்தது. ஆனால், என்ன வியப்பு!உலகத்தில் வேற எந்த நூலிலும காணக்கிடைக்காத அற்புதத் தகவல்களைக் குர்ஆனில் கண்ட மில்லர், திகைப்பின் உச்சிக்கே சென்றுவிட்டார்.நபி(ஸல்) அவர்களின் துணைவியார் கதீஜா (ரலி) அவர்களின் இறப்பு, அல்லது நபிகளாரின் புதல்வியர், புதல்வர்கள் ஆகியோர் மறைவு போன்றசோகச் செய்திகள் குர்ஆனில் இருக்கக்கூடும் என எதிர்பார்த்திருந்தவருக்கு ஏமாற்றமே விடையானது.                      

 

நபியின் குடும்பத்தார் குறித்த தகவல்கள்இல்லாதது மட்டுமல்ல. குர்ஆனில் ஒரு முழு அத்தியாயமே அன்னை மர்யம் (அலை) அவர்களின் பெயரால் இடம்பெற்றிருந்தது மில்லரைத்திகைப்பில் ஆழ்த்தியது. அன்னை மர்யம் குறித்து கிறித்துவ நூல்களிலோ பைபிளிலோ கூறப்படாத அருமை பெருமைகள் இந்த அத்தியாயத்தில்சிறப்பாகக் கூறப்பட்டிருப்பதை மனிதர் கண்டார். ஆயிஷாவின் பெயரிலோ ஃபாத்திமாவின் பெயரிலோ ஓர் அத்தியாயம் கூட இடம்பெறாததையும்அவர் உணர்ந்தார்.
 


நபி ஈசா (அலை) அவர்களைப் பற்றி குர்ஆனில் 25 இடங்களில் பெயரோடு குறிப்பிடப்பட்டிருந்த அதே வேளையில், நபிமுஹம்மத் (ஸல்) அவர்களின் பெயர் ஐந்தே ஐந்து இடங்களில் மட்டுமே கூறப்படிருந்தது. மில்லரின் வியப்பைக் கூட்டியது. “குர்ஆனைச் சற்றுஆழமாகப் படிக்கத் தொடங்கினார். ஏதேனும் குறைகள் கிடைக்காமலா போய்விடும்! ஆனால், திருக்குர்னில் ஒரு வசனம் அவரைத் தூக்கி வாரிப்போட்டது. “இந்தக் குர்ஆனை அவர்கள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டாமா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருப்பின், இதில் அதிகமானமுரண்பாடுகளை அவர்கள் நிச்சயம் கண்டிருப்பார்கள்” (4:82) என அந்த வசனம் அறைகூவல் விடுக்கிறது. இத்திருவசனம் குறித்து ஜாரி மில்லர்கூறுகிறார்: “இன்றைய அறிவியல் அடிப்படைகளில் ஒன்று என்னவென்றால், சிந்தனைகளில் தவறு இருக்கும். தவறு இல்லை என்பதுநரூபிக்கப்படும்வரை. குர்ஆனோ, தன்னில் தவறுகளைக் கண்டுபிடியுங்கள் என முஸ்லிம்களுக்கும் முஸ்லிமல்லாதோருக்கும் சவால்விடுக்கிறது. அவர்களால் தான் அது முடியவில்லை. உலகில் எந்தப படைப்பாளனுக்கும், ஒரு புத்தகத்தை எழுதிவிட்டு, அதில் தவறுகளே இல்லைஎன்று அறைகூவல் விடுக்கும் துணிவு இருந்ததில்லை. குர்ஆனோ இதற்கு நேர்மாறாக, தன்னில் தவறுகளே கிடையாது. இருந்தால் காட்டுங்கள்பார்க்கலாம் என்று சொல்வதுடன், காட்ட முடியாது என்று பறைசாற்றவும் செய்கிறது.

 


டாக்டர் மில்லரை நீண்ட நேரம் சிந்திக்கவைத்த மற்றொருவசனம்: “இறைமறுப்பாளர்கள் சிந்திக்க வேண்டாமா? வானங்களும் பூமியும் ஒன்றாக இணைந்திருந்தன. நாம்தான் அவற்றை வெடித்துச்சிதறவைத்தோம். உயிருள்ள ஒவ்வொன்றையும் நீரால் உருவாக்கினோம். அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா?” (21:30} 1973ஆம் ஆண்டுநோபல் பரிசு பெற்றுத் தந்த அறிவியல் ஆய்வே இந்தப் பொருள்தான். “பெருவெடிப்பு” (Big Bang) எனும் பிரபஞ்சக் கோட்பாடுதான்






No articles in this category...