Tamil Islamic Media

வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 1)

உங்களுக்குப் பிரியமான பொருளிலிருந்து நீங்கள் செலவு செய்யாத வரையில் நிச்சயமாக நீங்கள் நன்மையடைய மாட்டீர்கள்.(அல்குர்ஆன்-3:92) தவறான சிந்தனைகளை கைவிடுங்கள்,ஏனெனில் தவறான சிந்தனைகளே மிகப்பெரிய பொய்மைக்கு வழிவகுக்கும்.(நபிமொழி)நூல்:புகாரி முக நக நட்பது நட்பன்று, நெஞ்சத்து அக நக நட்பது நட்பு.(திருக்குறள்) தொடங்கி பாதியில் விட்டுவிடுவதை விடத்தொடங்காதிருப்பது மேலானது.(பழமொழி) பொய் சொல்லிப் பரிசு பெறுவதை விட உண்மையை சொல்லி துன்பப்படுவது மேலானது.(பழமொழி) அறிவை விட தைரியத்தினால்தான் பெரிய காரியங்கள் சாதிக்கப்படுகின்றன.(பழமொழி) கடனில் மிச்சமோ,நெருப்பில் மிச்சமோ,பகைவனில் மிச்சமோ விட்டு வைக்காதே!அது மறுபடியும் கிளம்பி உன்னை அழிக்க முற்படும்.(பழமொழி) அருளைத் தேடுமுன் அன்பைத்தேடு,ஆஸ்தியைத்தேடுமுன் அறிவைத்தேடு.(பழமொழி) பல இடத்தில் பலதொழில் செய்வதைவிட ஒரே இடத்தில் ஒரே தொழிலில் உன் கவனத்தை செலுத்தினால் அதிக பலனடைவாய்.(பழமொழி) சின்ன செலவானாலும் யோசித்து,கவனித்து,எண்ணி,கணக்கிட்டு செலவு செய்யுங்கள்.ஏனென்றால்,சிறிய ஓட்டையே பெரிய கப்பலை மூழ்கடித்து விடும்.(பழமொழி) உலகத்தில் பிறந்தவர்கள் யாரும் உபயோகமற்றவர்கள் என்பது கிடையாது,ஒவ்வொருவரும் ஒரு வகையில் திறமையுள்ளவர்களாகவே இருப்பார்கள்.(ராஜ்) ஆட்சியாளர்களின் உண்மையான பாதுகாப்பு,மக்களின் அன்பே தவிர மெய்காவல் படையல்ல.(கீழை அரூஸி) - கீழை ஜஹாங்கீர் அரூஸி-தம்மாம்






No articles in this category...