Tamil Islamic Media

இலங்கையில் முஸ்லிம்கள் - அன்றும் இன்றும்

இலங்கையில் முஸ்லிம்கள் - அன்றும் இன்றும்   தமிழில்: கான் பாகவி  

 

இலங்கைத் தீவில் ஆரம்பக் காலத்திலேயே இஸ்லாம் அறிமுகமாகிவிட்டது. நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ஒரு நபித்தோழர் சிலோன் வருகைதந்தார் என்றும் பிறகு அங்கிருந்து சீனா சென்றார் என்றும் இலங்கை முஸ்லிம்கள் சொல்லிக்கொள்வதுண்டு. பின்னர் அவர், கலீஃபா உஸ்மான் (ரலி) அவர்களது காலத்தில் அரேபிய தீபகற்பம் சென்றார் என்று கூறுவர்.

 

அடுத்து அரபியர் வருகை தொடர்ந்தது. அங்கேயே திருமணமும் செய்துகொண்டனர். இஸ்லாம் பரவியது; முஸ்லிம்களின் எண்ணிக்கை கூடியது. ஆக, தங்களின் மரபுமூலம் அரபுகள்தான் என்று இலங்கை முஸ்லிம்கள் பெருமிதம் கொள்கின்றனர்.  

இலங்கைக்கு அரபியர் வந்ததற்குக் காரணம் இரண்டு. 1. வணிகம். இலங்கையில் உற்பத்தியாகும் மிளகு, நறுமணப் பொருட்கள் வாங்கிச் சென்றனர். 2. முற்காலத்திலிருந்தே முஸ்லிம்களிடம் ஒரு கருத்து நிலவிவருகிறது. ஆதி மனிதர் ஆதம் (அலை) அவர்கள் சிலோனில்தான் இறங்கினார்கள் என்பதுதான் அந்த நம்பிக்கை. ‘ஆதம் மலை’ இலங்கையில் உண்டு. இன்றுவரை மக்கள் அதைக் காண வருகிறார்கள். அவ்வாறு அரபியரும் வந்திருக்கலாம்.  


பிறகு இந்தியா, மலாயா, ஜாவா, இந்தோனேஷியா ஆகிய பகுதிகளிலிருந்து முஸ்லிம்கள் இலங்கை வந்து குடியேறினர். ஆக, இலங்கை முஸ்லிம்கள் என்போர் இவர்கள் எல்லாரும் சேர்ந்தவர்களே. இதனால்தான், இலங்கை முஸ்லிம்கள் பல மரபுவழியைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.  

 

மக்கட்தொகை  

 இலங்கையில் 2012ஆம் ஆண்டு நடந்த அதிகாரபூர்வ மக்கட் தொகைக் கணக்கெடுப்பு கூறுகிறது:  

 

கிழக்கு மாகாணம்

  இலங்கையின் மொத்த மக்கட்தொகை 2 கோடியே 2 லட்சத்து 63 ஆயிரத்து 723. இவர்களில் பௌத்தர்கள், இந்துக்கள், முஸ்லிம்கள், கிறித்தவர்கள் ஆகியோர் அடங்குவர். இருப்பினும் பௌத்தர்களே பெரும்பான்மை மக்களாவர். அவர்கள் 1,42,22,844பேர் உள்ளனர். இது மொத்த மக்கட்தொகையில் 70.2 விழுக்காடு ஆகும்.  

 

அடுத்து இந்துக்கள் 25,54,606பேர். இது 12.6 விழுக்காடு. முஸ்லிம்களைப் பொறுத்தவரை 19,67,227 பேர்; சுமார் 2 மில்லியன். இது மொத்த எண்ணிக்கையில் 9.7 விழுக்காடு. இலங்கை முஸ்லிம்களில் 40 சதவீதம் பேர் கிழக்கு மாகாணத்தில் வசிக்கின்றனர். ஏனையோர் நாட்டில் பரவலாக வாழ்கின்றனர்.  

 

கல்வி நிலை  

 

இலங்கை முஸ்லிம்களின் கல்வி நிலையைப் பார்த்தால், முன்பெல்லாம் பள்ளிவாசல்களில் உள்ள ஆரம்ப மதரசாக்களில் (மக்தப்களில்)தான் கல்வி கற்றுவந்தனர். அரசு பள்ளிகளுக்கு அருகிலும் மதரசாக்கள் உருவாக்கப்பட்டிருந்தன. அந்நிய காலனியாதிக்கக் காலத்தில், முஸ்லிம்களுக்கென தனியான அரசு பள்ளிகள் நடந்துவந்தன.  

 

தற்போது முஸ்லிம்கள் வாழும் ஊர்களில் 780 அரசாங்கப் பள்ளிகள் முஸ்லிம்களுக்காக நடந்துவருகின்றன. இவற்றில் 3 லட்சம் மாணவ மாணவியர் பயில்கின்றனர்; 14 ஆயிரம் முஸ்லிம் ஆசிரிய, ஆசிரியைகள் கல்வி போதிக்கின்றனர்; போதனை மொழி தமிழ்.  

 

இதன்றி, 55 ஆயிரம் முஸ்லிம் மாணவ, மாணவியர் பௌத்தர்கள் பள்ளிகளில் சிங்கள மொழியில் கல்வி கற்றுவருகின்றனர். மொத்த முஸ்லிம் மாணவர்களில் இவர்கள் 17 விழுக்காடு. இவர்களுக்குச் சில பிரச்சினைகளும் உண்டு.  

 

எடுத்துக்காட்டாக, சிங்களப் பள்ளிகள் சிலவற்றில் படிக்கும் முஸ்லிம் மாணவர்களால் வெள்ளிக்கிழமைகளில் ஜுமுஆ தொழ முடிவதில்லை. முஸ்லிம் மாணவிகள் தலையை மறைப்பதற்கோ பர்தா அணிவதற்கோ தடை உள்ளது. சில நேரங்களில், பள்ளி வளாகத்தில் நடக்கும் புத்த மத வ






No articles in this category...