Tamil Islamic Media

MTV முதல் மக்கா வரை - கிறிஸ்டியான பேக்கர்

இசையிலேயே எப்பொழுதும் மூழ்கிக் கொண்டிருந்த கிறிஸ்டியான பேக்கர் 1990 களில் ஐரோப்பாவின் நம்பர் ஒன் சேனலில் தொகுப்பாளராக இருந்தார். வெகு விரைவிலேயே நேயர்களின் விருப்பத்திற்கு உரியவராகவும் இருந்தார். 1965 டிசம்பர் 13ம் தேதி ஜெர்மனியின் ஹம்பர்கரில் பிறந்த கிரிஸ்டியானா, ஐரோப்பாவின் பிரசித்திப் பெற்ற MTV யின் தொகுப்பாளராக 1996 வரை பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார். ஒரு முறை கோல்டன் கேமரா அவார்டும் இரண்டு முறை கோல்டன் ஓல்ட் அவார்டும் பெற்றிருந்தார்.

1992-ல் அவருடைய வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட சம்பவம் ஏற்பட்டது. பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இம்ரான்கானுடன் லண்டனில் உரையாடும் சந்தர்ப்பம் அமைந்தது. அதன்பின் இம்ரான்கானின் விருந்தாளியாக பாகிஸ்தான் செல்ல நேர்ந்தது. பாகிஸ்தான் பயணம் கிறிஸ்டியானாவின் வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தியது. பாகிஸ்தான் மக்களின் குணமும்,பழக்கவழக்கமும்,மனிதநேயமும அவரை மிகவும் கவர்ந்தது. எனவே கிறிஸ்துவ மதத்தை விட்டு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். இஸ்லாமிய சூபிசம் அவருக்கு மிகவும் பிடித்தது. மனிதநேயமும்,அன்பும் சூபிசத்தின் மூலம் கிடைக்கிறது என்பது கிறிஸ்டியானாவின் கருத்து. இஸ்லாம் ஏற்றுக்கொண்டபின் 1995க்கு பின் தன் பிறந்த நாடான ஜெர்மனிக்கு சென்றாலும், அங்கிருந்தவர்களின் அணுகுமுறை பிடித்தமானதாக இருக்கவில்லை. .

நண்பர்களும், உறவுகளும் அதிருப்தியுடன் பார்க்க துவங்கியதுடன் அவர் பிரிட்டனுக்கு குடிபெயர்ந்தார். இப்பொழுது லண்டனில் வசிக்கிறார். மேற்கத்திய இசையின் மூலம் ஏராளமான பணமும் புகழும் கிடைத்தபோதும் ஏதோ ஒரு வெறுமை தன் மனதில் தோன்றுவதாக உணர்ந்தார். இந்த மன உளைச்சலும்,வெறுமையும் தான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பின்னரே விலகியது என்றும், 1995ல் வெளிப்படையாக இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்கு முன்னரேயே ‘’நான் ஒரு முஸ்லிம்’’ என்ற உள்ளுணர்வின் நிழலில் வாழ்க்கையின் பிரச்சனைகளிலிருந்து விடுதலை கிடைத்ததாக அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன் என்றும் அவர் சான்று பகர்கிறார்.

சமீபத்தில்,இஸ்லாத்தின் சிறப்புகளையும், இஸ்லாத்தைக் குறித்து மேற்கத்திய சமுதாயத்தில் நிலவிக் கொண்டிருக்கும் தவறான அபிப்பிராயங்களுக்கு பதிலலிக்கக்கூடிய வகையில் ‘’from mtv to mecca’’ [MTV முதல் மக்கா வரை ] என்ற புத்தகத்தை கிறிஸ்டியானா வெளியிட்டார். மேற்கத்திய சமூகத்தில் இந்த புத்தகத்திற்கு அதிக அங்கீகாரம் கிடைத்தது. பிரிட்டன் பார்லிமென்டின் கீழுள்ள all group parliment committy ஹாலில் 2012-sep 3ம் தேதி புத்தகத்தின் வெளியீட்டைப் பற்றிய சர்ச்சை நடந்தது. பிரிட்டனின் அறிவு ஜீவிகள் பங்கு கொண்ட செமினாரில் இஸ்லாம் சூடேறிய சர்ச்சைக்குட்பட்டது. இந்த புத்தகத்தின் அரபி, ஜெர்மன், இந்தோனேசியா, மலேஷியன் பதிப்புகள் உடன் வெளிவரும். தன்னுடைய வாழ்க்கையை இஸ்லாம் எவ்விதம் ஈர்த்தது என்பதைப் பற்றியே இந்த புத்தகம் கூறுகிறது. புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் ,அதன் உள்ளடக்கம், கருத்துக்கள் பற்றி தெளிவாக கூறினார்.


‘’சத்தியத்தைத் தேடும் ஒரு பெண்ணின் விடியலுக்கான பயணம்’’ என்று சிந்தனையாளர் தாரிக் ரமதான் இந்த புத்தகத்தை குறித்து சிறப்பித்தார். இஸ்லாம் மதத்தைப் பற்றியும் கலாச்சாரத்தைப் பற்றியும் கிறிஸ்டியானாவுக்கு அறிமுகப்படுத்த எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அவருடைய விருப்பம் பாடல்களிலும், உணவுகளிலும் மட்டுமல்ல பல விஷயங்களைக் கற்றுக்கொள்ளவும் இருந்தது என்பது அவரது சிறப்பியல்புகலாக இருந்தது. தொடர் முயற்சிகளின் பல






1 கேப்டன் ஜேக் குருவி (Captain Jack Sparrow)

துருக்கியர்கள் கொள்ளைக்காரர்கள், அற்பத் தொகைக்கு கொலையும் புரிவார்கள் என்று வில்லியம் நினைத்திருக்க, அவர்களோ பள்ளிவாசல்களில் குழுமி தொழுதுகொள்கிறார்கள். அந்த இடங்களோ தாம் ஆழ்ந்து சிந்தனையில் அமர்ந்து தம்மைத் தொலைக்கும் இடங்களாக உள்ளன - என்று எழுதியிருக்கிறார் வில்லியம்.

2 இத்ரீஸ் தவ்பிக் (Idris Towfiq) - கத்தோலிக்க பாதிரியாராக

சமீபத்தில் நான் பார்த்த நபர் "அஸ்ஸலாமு அலைக்கும்" என்ற அந்த ஒரு வார்த்தை தன்னை நோக்கி கூறப்பட, அதனால் ஈர்க்கப்பட்டு, பின்னர் தான் சந்தித்த முஸ்லிம் சிறுவர்களின் நன்னடத்தைகளால் இஸ்லாத்தை கற்றுக்கொண்டு, பின்னர் சிறு போராட்டத்திற்கு பின் இஸ்லாமை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டவர்.

3 இஸ்லாத்தை தழுவியது ஏன்? - யுவன் விளக்கம்

நான் இஸ்லாம் மதத்தை தழுவியதற்கு என் அம்மாவே காரணம் என்று இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

4 ராபர்ட் டெவிலாவும், சகோதரர். உஸ்தாத் நௌமன் அலி கானும்...

5 மீனாட்சி புர முஸ்லிம்களின் வாழ்க்கை இன்று எப்படி?

மீனாட்சிபுரம் 20 ஆண்டுகளுக்கு முன்பு ரஹ்மத் நகராக மாறியது நம் அனைவருக்கும் தெரியும். 1000க்கு மேற்பட்ட குடும்பங்கள் இஸ்லாத்தை தழுவி இந்தியாவையும் முழு உலகையும் திரும்பிப் பார்க்க வைத்தது. அந்த ரஹ்மத் நகரில் பிபிசியின் தமிழோசைப் பிரிவு ஒரு நேர்காணலை சமீபத்தில் நடத்தியது. இதனை தயாரித்தவர் த.ந.கோபாலன். இனி பிபிசி சொல்லும் செய்தியை பார்ப்போம்.

6 அமெரிக்க முன்னால் மாடல் அழகி ஸாரா பூக்கர் இஸ்லாத்தை ஏற்ற வரலாறு.