சிந்திக்க தவறும் ஆண்களுக்கு மட்டும்
அப்பப்பா......விடிந்துவிட்டால் போதும்! ' எங்கோ, யாரோ யாருடனோ ஓடிப்போய்விட்டார்கள். அங்கே அவன் அவளோடு ஓடிவிட்டான்' அட அல்லாஹ்.... இப்படி ஓடி, ஓடியென ஓட்டத்திற்கே களைப்பு ஏற்படுவது போலாகிவிட்டது தற்கால சூழ்நிலை :( கண்ட, கேட்ட, கேள்விப்பட்டவைகளில் பல 'சரியான காரணங்கள்', பல 'காராணங்களுக்காகவே சரியாக்கபட்டவை'கள்! சரி நேடியாகவே விசயத்துக்கு வருவோம்.... முன்பெல்லாம் கன்னிப்பெண்கள் காதல் வலையில் வீழ்ந்துவிட்டதற்காக ஓடினார்கள். ஆனால் தற்போது திருமணமானவர்கள், குழந்தை பெற்றவர்கள் கூட ஓடிப்போவது வாடிக்கையாகி வருகிறதே??!! இதற்கு காரணங்கள்தான் என்ன?
சும்மா ஓடிப்போறா, ஓடிபோறான்னு குற்றம் சொல்லிகிட்டிருக்கோமே தவிர, அதுக்குக் காரணம் பற்றி யாரும் கண்டுக்குறதில்ல! கல்யாணமாகாத சின்னப் பொண்ணுன்னாகூட அறியாப் பருவம், இனக்கவர்ச்சின்னு சொல்லலாம். ஆனா கல்யாணமான பொண்ணும் போறாங்கன்னா ஏன் என யாரும் யோசிக்கிறதில்லையே ஏன்? உடல்சுகம் என்ற குறுகிய வட்டத்திற்குள்ளாகவே பிரச்சனையை பெண்பக்கம் திசைதிருப்பி ஆண்களின் தவறை அவர்களுக்கு கடைசிவரை உணர்த்தாமல் போய்விடுகிறோமே ஏன்?
என்ன காரணமாயிருக்கும்..?? இவ்வுலக இச்சையா? இனக்கவர்ச்சியின் தாகமா? இல்லை இல்லறத்தில் இனிமையில்லையா? இல்லை இல்லத்தில் மனக்கசப்பா? இல்லை கணவன் மனைவிக்குள் எவ்விதத்திலும் ஒத்துபோகவில்லையா? அல்லது அன்பின் பறிமாற்றங்கள் அணுவளவுமில்லையா? இதில் எது இல்லை? எதில் குறை? இல்லை எதில் பிழை???? கன்னியாய் ஒருபெண் படிதாண்டி சென்றாலே காலங்காலத்திற்கு ஒரு சொல்லாகிவிடும். அதேசமயம் சென்றவள் ஒன்று இனக்கவர்ச்சிக்காக சென்றிருக்கவேண்டும். அல்லது மனக்காதலுக்காக சென்றிருக்கவேண்டும். எதுவென்றபோதும் படிதாண்டுவது பாதகச்செயல் அவளுக்கு மட்டுமல்ல அவள் குடும்பதிற்கும் அவள் வாரிசுகளுக்கும் சேர்த்துதான். ஆனால் அதனினும் அநியாயச்செயல் கல்யாணம் முடிந்தும், குழந்தை பிறந்தும் ஒரு பெண் படிதாண்டுவது. சிந்திக்கத்தவறி, சிந்தனைகள் குழம்பி, சீரழிவிற்கு போகும் பெண்மக்களாய் மாறுவது ஏன்? அல்லது அவர்களை மாற்றுவது எது? என வினாக்களோடு புறப்பட்ட மனதுக்குள் விடைகளென்னும் வெளிச்சம் சிறு மின்னல் கீற்றாக தென்பட்டது. அவைகளிங்கே !
தவறுகள் ஆண்களிடமிருந்தே ஆரம்பமாகிறது :
தமது மனைவியரிடத்தில் அன்பாக நடங்கள்; அவளோடு உண்ணுங்கள்; பருகுங்கள்; அவளின் தேவையறிந்து நடந்துக்கொள்ளுங்கள் என்றெல்லாம் கட்டளையிடுகிறது இஸ்லாம். ஆனால் அதை சரிவர செய்கிறார்களா கணவர்மார்கள்??? மனைவியர்களுக்கு உணவு, உடை போன்றவற்றை மட்டும் கொடுத்துவிட்டு, மன நிறைவை கொடுக்காது தவறிவிடுகின்றனர். பொன்னும் பொருளும் மட்டும் ஒரு பெண்ணிற்கு போதுமென்றால் அது தன் தாய்வீட்டிலோ அல்லது தனது சம்பாத்தியத்திலோ பெற்றுக்கொள்ள முடியுமே? ஆனால் அதையும் தாண்டி பாசமென்ற ஒன்றும், காதலென்ற அதீத அன்பும் அனைத்துப் பெண்களுக்கும் தேவைப்படுமென்பதை எத்தனை கணவர்மார்கள் அறிந்து வைத்துள்ளார்கள்??? கணவன் மனைவியென்றால் என்ன? புரிந்துணர்ந்து, ஈருடல் ஓருயிராய் வாழ்வதுதானே? சரி அதுக்கும் ஓடி போவதற்கும் சம்பந்தம் என்ன என கேட்கலாம். மனைவியர்களைத் திருப்திப்படுத்த முடியாத ஆண்மைக் குறைவுள்ள கணவர்கள் தங்களின் பலவீனத்தை வெளிக்காட்டினால் தனக்கு கேவலமென்று மறைப்பதோடு மனைவின் தேவைகளை நிறைவேற்றத் தவறி, வீட்டிற்குள்ளே நடக்கும் சின்ன சின்ன பிரச்சனைக்கெல்லாம் குறைகளையும் குற்றங்களையும் மனைவி மீதே சுமத்தி அன்றாட வாழ்வையே அவதிக்குள
No articles in this category... |