Tamil Islamic Media

கருத்து வேறுபாடுகள்.

மார்க் சட்டங்கள் விசயத்தில் இமாம்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படக் காரணம் என்ன என்ற  கேள்வி சிலர்களுக்கு வருகிறது. இதற்கான பதில் சற்று அக்கறையோடு கவனிக்கத் தகுந்தது. அக்கறையும் கவனமும் ஏன் தேவைப் படுகிறது என்றால் திடீரென முளைத்த அக்கறையில் ஒரு பாஸ்ட் புட் கலாச்சாரத் தின் வேகத்தோடு பலரும் இந்தக் கேள்வியை அனுகியதனால் தான் புள்ளை புடிக்கிறவர்களுக்கு அது வசதியாகிவிட்டது. அந்த விபத்து தொடரக்கூடாது என்றால் கொஞ்சம் நிதானம் அவசியம். நாம் ஒரு சூர அல்பகராவை ஒரு மணி நேரத்தில் ஓதி முடித்து விடுகிறோம். உமர் (ரலி) அவர்களோ நான் பகரா அத்தியாயத்தை பயில் ஏழு ஆண்டுகள் பிடித்தது என்கிறார்கள். இந்த நிதானம் மார்க்கத்தை சரியாகப் புரிந்து கொள்வதற்கு மிக அவசியமாக தேவை. 

 இமாம்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேற்பாட்டை சரியாக புரிந்து கொள்ளாவிட்டால்  இஸ்லாத்தின் அழகையும் இஸ்லாமினுடைய மூலங்களின் அமைப்பையும் அறிந்து கொள்ள முடியாது. பிறகு குயுக்திக் காரர்களின் வலையில் விழ வேண்டியதாகிவிடும். இமாம்களுக்கிடையே எற்பட்ட கருத்து வேறுபடுகள் குறித்து அவசரப்பட்டு மாற்றுக் கருத்துக் கொண்ட இளைஞர்கள் பலரும் அக்கருத்து வேறுபாடுகளை விமர்ச்சிக்கும் அளவு தங்களது தகுதியை வளர்த்துக் கொண்டபிறகு தான் அவ்வாறு விமர்சித்தார்களா என்பதை யோசித்துப் பார்த்தால் அவர்கள எப்படி குருடர்களாகவ்ம் செவிடர்களாகவும் தங்களது தவறான வழிகாட்டியிடம் விழுந்து விட்டார்கள் என்ற உண்மை புரியும்  

 இமாம்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட இரண்டு பிரதான காரணங்கள் உண்டு  ஒன்று   இஸ்லாமிய சமயத்தின் மூலங்களான குரான் மற்றும் ஹதீஸின் அமைப்பு. இரண்டாவது   மனிதர்களிடம் இயற்கையாக உள்ள சிந்தனை வேறுபாடு. மூலங்களின் அமைப்பும் சிந்தனை வேறுபாடும்  திருக்குரானோ ஹதீஸோ சட்டங்களை பட்டியலிட்டு பேசுகிற வெறும் சட்ட நூற்கல் அல்ல. அதைத் தாண்டி மனிதர்களை நெறிப்படுத்துகிற விரிந்த நோக்கங்களை கொண்டவை. எனவே சில சட்டங்களை அறுதியிட்டு உறுதியாக தௌவுபடுத்திய போதும்   பல சட்டங்களை கோடிட்டுக் காட்டி மனிதர்களது சிந்தனைத் திறனுக்குவழி கொடுத்துச் சென்றன.

 மனிதர்களுக்கான ஒரு வழிகாட்டு நூல் இப்படித்தான் இருக்க முடியும். ஒரு முதலாளி அறிவுமிக்க தன்னுடைய பணியாளரிடம் சென்னைக்குப் போய் இந்த வேலையை முடித்து விட்டுவா என்று சொல்லி யனுப்புகிற போது தேவையான தகவல்களை மட்டுமே கூறுவார். இங்கிருந்து ரலிலைப் பிடி இந்த மாதிரி உட்காரு இன்ன இடத்தில் இறங்கு  இன்னதைச் சாப்பிடு இப்படித் தேடு என்றெல்லாம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்க மாட்டார். அப்படிச் சொல்லிக் கொடுத்தால் பணியாளர் கொஞ்சம் பழுதானவர் என்றாகிவிடும். என்வே அறிவுமிக்க மனிதர்களுக்கு வழிகாட்ட வந்த திருக்குரானும் நபிமொழிகளும் சிந்தித்து தீர்வு காண்பதற்கேற்ற வகையில் அமைந்திருக்கின்றன. அபப்டிச் சிந்திக்கிற போது நேர்மையாளர்களிடம் அது கருத்து வேறு பாட்டை உண்டு பண்ணினால் அக்கருத்து வேறுபாடு அவர்களின் நேர்மை அறிவுத்திறன் இறையச்சத்தின் அடிப்படையில் ஏற்றுக் கொள்ளத் தகுந்ததே!

ஒரு கடையின் கதவு பாதி இறக்கிவிடப் பட்டிருந்தது. அதைப் பார்க்கிற இருவர் இரண்டுவிதமாக சொல்ல வாய்ப்பு உண்டு.  ஒரு நபர் கதவு பாதி மூடியிருக்கிறது என்பார். இன்னொருவர் கதவு பாதி திறந்திருக்கிறது என்பார். இவிவிரண்டு வார்த்தைகளுக்குமிடையே வார்த்தை வித்தியாசம் மட்டும் இல்லை. சிந்தனை வித்தியாசமும் இருக்கிறது  முதலாமவர் சிந்தனையில் இருந






No articles in this category...