Tamil Islamic Media

யூத கிருத்துவ வக்கிரப்படமும் விமர்சனங்களை வென்ற விண்புகழ் வேந்தரும்

                                           கோவை மௌலானா அப்துல் அஜீஸ் பாஜில் பாகவி

செப்டம்பர் 11 நிகழ்வின் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கடந்த பல ஆண்டுகளாக அமெரிக்காவில் முஸ்லிம் விரோத கருத்துக்களும் இஸ்லாம் முஹம்மது நபி (ஸல்) அவர்களை இழிவு படுத்தும் செய்திகளும் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு  அமெரிக்கா நாட்டின் கலிபோனியா மகானத்தை சேர்ந்த சாம் பாசைல் என்பவப்  நபிகள் நாயகத்தை மிகவும் இழிவு படுத்தி திரைப்படம் தயாரித்துஅதன் 14 நிமிட முன்னோட்ட காட்சிகளை கடந்த ஜுலை மாதம் Youtube ல் வெளியிட்டுள்ளான். இவன் ஒரு யூதன்.

மிக மிக மோசமான திரைப்படம் அது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிக கீழ்த்தரமானவராக சித்தரிக்கப் பட்டிருக்கிறார். முஸ்லிம்களின் நாவினால் அந்த வார்த்தைகளை சொல்ல முடியாது.  எந்த அளவிலும் நிலையிலும் மன்னிக்க முடியாத குற்றச் செயலாக இந்த திரைப்படம் அப்பட்டமாக பெருமானாரை கேவல்ப்படுத்துகிறது.  இத்திரைப்படத்தை தயாரித்தவ்னுக்கு மட்டுமல்ல. இத்திரைப்படத்தில் நடித்த ஒவ்வொருவருக்கும் கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும்.  .படத்தைப் பார்க்க்கிற எந்த முஸ்லிமும் கொதித்துப் போவார். இதற்கு முன்னாள் வேறு யாரும் இந்த அளவு கேவலாமாக சித்தரித்திருக்கிற மாட்டார்கள் என்று கூறும் அளவுக்கு இப்படம் பெருமானரை கேவல்ப்படுத்துகிறது. முஸ்லிம்கள் தங்களது கண்டனத்தை கடுமையாக வெளிப்படுத்தியும் கூட யூ டூப் இப்படத்தை அகற்ற வில்லை. அது தொடர்ந்து முஸ்லிம்களிடையே ஆத்திரத்தையும் கோபத்தையும் பெருகச் செய்துள்ளது. அமெரிக்க அரசு தொடர்ந்து மத உணர்வுகளை புண்படுத்தி வருகிற பாதிரியார்  டெர்ரி ஜோன்ஸ் உட்பட எவரையும் கண்டிப்பதோ கைது செய்வதோ இல்லை. மாறாக கண்டு கொள்ளாமல் இருந்து விடுகிறது.உலகம் முழுவதிலிருந்து ம் இதற்கு எதிரான கணடனக்குரல்கள் எழுப்ப பப்பட்டு வருகின்றன.

 

துவேஷம் என்னும் கருமேகக் கூட்டத்தை விலக்கி விட்டு உண்மையென்னும் கதிரவன் ஒளிபரப்பும் நன்னாள் ஒன்று வரலாம். அப்போது மேல் நாட்டு ஆசிரியர்கள், 'முஹம்மது ஒரு சரித்திர நாயகர்' என்று கூறுவதோடு இப்போது நிறுத்திக்கொள்கிறார்களே, அப்படியின்றி, அதற்கப்பால் சென்று அவர்களுடைய வாழ்க்கையை அணுகி ஆராய்ந்து மனிதத்துவத்தின் வரலாறு என்ற பொன்னேடுகளில் நபிகள் நாயகம் அவர்களுக்குரிய இடத்தை அளிப்பார்கள்.  என்றார்  இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்தில்  புகழ்பெற்ற நூலாசிரியரான  - எஸ். எச். லீடர்  (-S.H. Leeder - Modern Sons of the Pharaohs)

எகிப்தில் நடை பெற்ற கண்ட ஆர்ப்பாட்டம் பெரும் போராட்டமாக மாறியது. எகிப்து நாட்டினர் அயிரக்கணக்கானோர் அமெரிக்க தூரகத்தை (11-9-2012) முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.  அமெரிக்க கொடிகளை கிழித்து போராட்ட காரர்கள் குற்றவாளிகளை கைது செய்யுமாறும் அந்த திரைப்படத்தை நீக்குமாறும் கோஷங்களை எழுப்பினர். ஹிலாரி கிளிண்டன் நேற்று ஏகிப்தில் முஸ்லிம்கள் நடத்திய  போராட்டத்தை கண்டித்துள்ளார். போராட்டம்  லிபியாவில் பரவியது. அங்குள்ள அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்ட மக்கள் கோபத்தில் தாக்கியதில் தூதரக ஊழியர் ஒருவர் பலியானார். அங்கிருந்து தப்பித்து பாதுகாப்பான இட்த்துக்கு சென்று கொண்டிருந்து லிபியாவிற்கான அமெரிக்க தூதர் ராக்கெட் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். அவருடன் தூதரக ஊழியர்கள் மூவரும் கொல்லப்பட்டுள்ளனர். இறந்து போன தனது நாட






No articles in this category...