அழகிய துஆ
ஹஜரத் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ரஸுலுல்லாஹி (ஸல்) அவர்கள் கிராமப்புறத்தைச் சேர்ந்த ஒருவரைக் கடந்து சென்றார்கள். அப்போது அவர் தொழுகையில்
''கண்களால் பார்க்கப்பட முடியாதவனே! எண்ணங்களால் எட்டப்பட முடியாதவனே! வர்ணிப்பவர்களால் வர்ணிக்கப்பட முடியாதவனே! காலத்தின் ஆபத்துகளுக்கு அஞ்சாதவனே! மலைகளின் கன எடைகளை, கடல்களின் கொள்ளவுகளை, மழைத்துளிகளின் எண்ணிக்கைகளை, மரங்களின் இலைகளின் எண்ணிக்கைகளை அறிந்தவனே! மேலும், இரவின் இருளில் மறைந்திருப்பவைகள் இன்னும் பகலின் ஒளியில் பிரகாசிப்பவைகளின் எண்ணிக்கைகளை அறிந்தவனே!
அவனை விட்டும் எந்த வானமும் மற்ற வானத்தை மறைத்துவிட முடியாது எந்தப் பூமியும் மற்ற பூமியை மறைத்துவிட முடியாது. எந்தக் கடலும் அதன் ஆழத்தில் இருப்பவற்றை மறைத்துவிட முடியாது. எந்த மலையும் அதன் உறுதியான பாறையினுள் இருப்பவற்றை மறைத்துவிட முடியாது.
என் வாழ் நாளின் கடைசிப் பகுதியை மிகச் சிறந்ததாக ஆக்கிவிடு! எனது கடைசி அமலை மிகச் சிறந்த அமலாக ஆக்கிவிடு! உன்னைச் சந்திக்கும் (மவ்த்தாகும்) நாளை சிறப்பான நாளாக ஆக்கிவிடு!'' என்று துஆச் செய்து கொண்டிருந்தார்.
அவர் தொழுது முடித்ததும் அவரைத் தம்மிடம் அழைத்து வர நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒருவரை நியமித்தார்கள். அவ்வாறே அவர் தொழுத பின் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சபைக்கு வந்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு தங்கச் சுரங்கத்திலிருந்து கொஞ்சம் தங்கம் அன்பளிப்பாக வந்திருந்தது, அதை அவருக்கு அன்பளிப்பாக வழங்கினார்கள்.
அவரிடம் நீர் எந்தக் கோத்திரத்தைச் சார்ந்தவர்?'' என்று வினவினார்கள். ''யாரஸுலுல்லாஹ் நான் பனூஆமிர் கோத்திரத்தைச் சார்ந்தவன்'' என்றார். ''நான் உமக்குத் தங்கத்தை பரிசளித்தது ஏன் என்று அறீவீரா?'' என்று ரஸுலுல்லாஹி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். ''யாரஸுலுல்லாஹ் தங்களுக்கும் எங்களுக்குமிடையே உறவு முறை இருப்பதானால் பரிசளித்தீர்கள்'' என்றார் அவர். ''உறவு முறைக்கான கடமையுண்டு. ஆயினும், உமக்கு நான் தங்கம் கொடுத்தது, நீர் மிகவும் அழகிய முறையில் அல்லாஹுத்தஆலாவை புகழ்ந்தீர் என்பதற்கே!'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கம் சொன்னார்கள்.
(நூல்: தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
விளக்கம்:- நபில் தொழுகையில், ஒவ்வொரு நிலையிலும், இவ்வாறான துஆக்கள் ஓதலாம்.
1 | ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பரிந்துரை அல்லாஹுதஆலாவுக்கு இணைவைக்காத நிலைவில் மரணித்தவருக்கு என்னுடைய பரிந்துரை உண்டு.'' என்று ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அருளியதாக ஹஜ்ரத் அவ்ஃப் இப்னு மாலிகுல் அஷ்ஜஇய்யீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். | |
2 | ஒற்றைச்செறுப்பு ஒரு முஸ்லிமுடைய வாழ்வில் ரோல் மாடலாக நபி (ஸல்) தவிர வேறு ஒரு மனிதர் நிச்சயமாக இருக்க முடியாது. அப்படி இருக்கவும் கூடாது, மற்ற யாரெல்லாம் உலகாதாய நோக்கத்திற்கு மற்றவர்களை ரோல் மாடலாக்கிக்கொள்கிறார்களோ அவர்கள் அந்தந்த துறையில் மட்டும் தான் சிறப்புற்றிருப்பார்கள் ஆனால், நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் ஆன்மிகத்திலிருந்து அறிவியல் வரையும் சரித்திரத்திலிருந்து சமையலறை வரை வழிகாட்டிய ஒரே தலைவர் நபியவர்கள். | |
3 | திரைகள் விலகட்டும் “முஃமின் உடைய நிலை ஆச்சிரியமானது. அவனுடைய எல்லா நிலைகளும் அவனுக்கு நன்மையே, இந்த நிலை முஃமினைத் தவிர வேறு யாருக்கும் இல்லை. அவனுக்கு சந்தோஷம் ஏற்பட்டால் அவன் நன்றி செலுத்துகிறான் அது நன்மையாகி விடுகிறது. துன்பம் ஏற்பட்டால் பொறுமை கொள்கிறான் அதுவும் அவனுக்கு நன்மையாகிவிடுகிறது" | |
4 | உம்மு ஸலமா (ரலி)யும் ஆறாதரணங்களின் அற்புத அன்பளிப்பும் உயிருக்குயிரான உயிரினும் மேலான சாதிகுல் அமீன் சத்தியத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் கூறியதாக அன்னை உம்மு ஸலமா அவர்கள் அறிவிக்கிறார்கள் எந்த ஒரு அடியானும் அவருக்கு ஒரு சோதனை ஏற்பட்டால் உடன் அவர் கூறட்டடும் இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன், பின்பு அல்லாஹும் ஆஜிர்னி பி(F) முசிபத்தி வஃக்லுப்லி ஹைரன் மின்ஹா என்று கூறட்டடும், அவ்வாறு கூறினால் அல்லாஹ் அந்த சோதனையிலிருந்து அவரைக்காப்பான் இன்னும் அவருக்கு சிறந்த பகரத்தை தருவான். (முஸ்லிம்) | |
5 | நன்மை தீமையும் அதன் அளவுகோலும் உயிருக்குயிரான உயிரினும் மேலான சத்தியத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் நான் கேட்டேன் நன்மை பற்றியும், பாவம் பற்றியும் எனக்கு சொல்லுங்கள் என்று, அதற்கு நபிபெருமான் அவர்கள் கூறினார்கள் : நன்மை என்றால் நற்குணம் ஆகும். பாவம் என்றால் ஒன்றை செய்ய உனது மனம் குறுகுறுப்பதும், மக்கள் அதை அறிவதை நீ வெறுப்பதும் ஆகும் என்று நபித்தோழர் நவாஸ் பின் சம்ஆன் அவர்கள் அறிவிக்கிறார்கள். | |
6 | வலிபோக்கும் ஆன்மீக வழிகள் | |
7 | முஜாஹிர்களும் மன்னிப்பும் | |
8 | நன்மை தீமையும் அதன் அளவுகோலும் | |
9 | தங்க ஓடை: மனிதனின் பேராசை | |
10 | பயணியே சற்று நில் | |
11 | அக்கம் பக்கம் / அண்டை வீட்டார் | |
12 | என் கண்ணாடி எங்கே? | |
13 | நன்மைக்கு வழிகாட்டினால் | |
14 | பொறாமைக்குரியோர் .... | |
15 | நபியின் மீது பிரியம் | |
16 | அல்லாஹ்வின் பிரதிநிதி குழுவினர் | |
17 | ஈமானின் கிளைகள் | |
18 | வளைகுடாவில் வசிப்பவரின் இந்தியப்பெருநாள் - மார்க்க சட்டம் | |
19 | நற்செயல் எது? | |
20 | பட்டாடை | |
21 | நாற்பது ஹதீஸ்கள் மனனம் செய்பவர்... | |
22 | பரிபூரணமான முஸ்லிம் | |
23 | பரிபூரண இறைநம்பிக்கை - ஈமான் | |
24 | சுவர்க்கத்தின் சாவி | |
25 | மக்களில் சிறந்தவர் | |
26 | மறுமை | |
27 | மறைவானவற்றை நம்புவது |