கழிவறைகளில் கிப்லா முன்னோக்கப்பட கூடாது
உயிருக்குயிரான உயிரினும் மேலான நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக நபித்தோழர் அபூ அய்யூப் அன்சாரி அவர்கள் அறிவிக்கிறார்கள்: உங்களில் ஒருவர் மலம், ஜலம் கழிக்கச்சென்றால் கிப்லாவை முன்னோக்கியோ அல்லது அதை முதுகுக்கு பின்னால் ஆக்கியோ அமரவேண்டாம்.
இந்த ஹதீஸில் நபிகள் பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் கிப்லாவிற்கு செலுத்தவேண்டிய கண்ணியத்தை கூறுகிறார்கள். பொதுவாக கழிப்பறைக்கு செல்லும் போது ஒரு இஸ்லாமியன் கடைப்பிடிக்கவேண்டிய நிலைமைகளில் ஒன்று அவன் கிப்லாவை முன்னோக்கியோ அல்லது பின்னோக்கியோ அமரக்கூடாது.
எப்படி நாம் தொழுகைக்காக கிப்லாவான இறையாலயத்தை முன்னோக்குகிறோம். எப்பகுதியை தொழுகைக்கு உரிய பகுதியாக ஆக்குகிறோமோ அதற்கு ஒரு கண்ணியம் உண்டு என்ற அடிப்படையில் இவ்வாறு ஏவப்பட்டுள்ளது. ஆரம்ப காலங்களிலும், இன்றும் நம் நாட்டில் வீடுகள் கட்டும் போது இது போன்ற விஷயங்களில கவனத்தில் கொள்ளப்படுகின்றன.
ஆனால், வெளிநாடுகள் சிலவற்றில் இவை போன்ற நிலைகள் கவனிக்கப்படாமல் கட்டப்படும் இடங்களில் ஒரு முஸ்லிம் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும். அபூ அய்யூப் என்ற நபித்தோழர் அறிவிக்கிறார்கள், ” சில இடஙகளில் கழிவறைகள் கிப்லாவை முன்னோக்கிய நிலையில் கட்டப்படிருந்தது, ஆனால் நாங்கள் சிறிது திரும்பி அதில் அமர்வோம், இன்னும் இந்நிலைகாக அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்போம்.
இது போன்ற ஹதீஸ்களை நாம் வாழ்நாளில் முழுமையாக பின்பற்றி வாழும் தெளபீக்கை அல்லாஹ் தருவானாக. ஆமீன்
- ஹஸனீ
No articles in this category... |