அஹ்மத் அப்துல் காதிர் ஆலிம் மஹ்லரி

அஹ்மத் அப்துல் காதிர் ஆலிம் மஹ்லரி<div style=மௌலவி அப்துல் காதர் மஹ்ழரி அவர்கள் 1959 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி தமிழ் நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் காயல்பட்டிணம் என்ற ஊரில் பிறந்தார்கள்.

இவர்கள் அல் ஹாபில், மௌலவி பட்டங்களை காயல்பட்டணத்தில் அமைந்துள்ள மஹ்லரா அரபிக் கல்லூரியில் பெற்றுக் கொண்டார்கள். இவர்கள் காயல்பட்டிணம் பெரிய குத்பா பள்ளியின் கதீபாகவும், காயல்பட்டிணத்தில் அமைந்துள்ள முஅஸ்கருர் ரஹ்மான் மகளிர் அரபிக் கல்லூரியில் பேராசிரியராகவும், ஸ்தாபகருமாக இருக்கிறார்கள்.

இவர்கள் நூற்றுக்கணக்கான ஆலிமாக்களை உருவாக்கி இஸ்லாத்திற்கு சிறந்த சேவையை செய்து வருகிறார்கள்.

இவர்கள் மூன் தொலைக்காட்சியில் இஸ்லாமிய சரித்திர நிகழ்சி நடத்துகின்றார்கள். பல நாடுகளுக்கு சென்று பயான்கள் மூலம் தஃவா பணி செய்து வருகிறார்கள்.

Source: http://www.mailofislam.com/tam_bio_-_shaykh_abdul_cader.html
lisinopril and citrus go lisinopril and citrus