நிம்மதி - சிறுகதை

“அண்ணே ! நீங்க உக்காருங்க… மதுரை நம்பர் பேசுங்க” அபுல் அந்த நபரிடம் ரிஸீவரைக் கொடுத்தான்.

“தம்பி ! உங்க அம்மாவ அறைக்குள்ளே போயி போனை எடுக்கச் சொல்லு. பினாங்குக்கு கனக்‌ஷன் கொடுக்கப் போறேன்.”
“தம்பி ! நம்மல கவனிச்சிருப்பா !” அவசரப்பட்டாள் ஒரு பெண்மணி.

அபுலைச் சூழ்ந்திருந்த கூட்டத்தைப் பார்த்துவிட்டு அடுத்த எஸ்.டி.டி கெளண்டருக்குச் செல்லப் புறப்பட்ட டிப்டாப்பான ஒருவரை “பிரதர் – பிளீஸ் கம் இன், ஜஸ்ட் டென் மினிட்ஸ். திஸ் இஸ் பிஸி ஹவர்ஸ். பிளீஸ் கம் இன்” என்று அழைத்து உட்கார வைத்தான்.
எஸ்.டி.டி கெளண்ட்டர் தெருவுக்கு பக்கத்துல வந்துவிட்டது இப்போது அரைநாள் வரை கூட காத்திருந்து பொறுமையுடன் பேசித் திரும்பியவர்கள், இப்போது அரைமணி நேரம் காத்திருப்பதற்கே பொறுமை இழக்கிறார்கள்.

அபுல் ஒரு வேலையில்லாப் பட்டதாரி. அத்தா மெளத்துக்குப்பின் குடும்பத்தைச் சுமக்கும் பொறுப்பு. அவன் பெற்றிருந்த பி.எஸ்.ஸி பட்டம் வேலைக்கு உதவவில்லை. அம்மா தோது செய்து தந்த பணத்தை விசா ஏஜெண்டிடம் கொடுத்து விட்டு, டென்ஷனோடு காத்திருந்து கடைசியில் ஏமாறுவதைவிட அல்லது ஏதோ ஒரு கட்டுமானத் தொழிலாளியாய் அரபு மண்ணில் அவதிப்படுவதை விட, அல்லாஹ்வின் மீது பாரத்தைப் போட்டுவிட்டு தன்னுடன் படித்த எட்வினின் சித்தப்பாவுடைய உதவியால் இந்த கெளண்ட்டரை ஆரம்பித்தான். அஞ்சல் அலுவலகத்தில் ஆபீஸரான அவர், எஸ்.டி.ஓ.டி யான தனது அண்ணனிடம் சிபாரிசு செய்து இதற்கேற்பாடு செய்து கொடுத்தார்.

காலத்தால் செய்த உதவி. ரத்த உறவுக்காரர்களிடம் கூட கமிஷன் பேசும் இந்தக் காலத்தில் ஒரு பைசா கூட பெற்றுக் கொள்ளாமல் மனிதாபிமானப் பரிமாறலைக் காட்டினார் அந்த நல்லவர்.

அபுல் குடும்பத்தை இப்போது நிலை நிறுத்திவிட்டான். தங்கை கரை சேர்ந்து விட்டாள். பழைய வீட்டை ஓரளவு பழுது பார்த்து வசதிப்படுத்தி விட்டான்.

இயன்ற வரை கெளண்ட்டரை அழகுபடுத்தி விரிவு படுத்திவிட்டான். அவனது கடமை உணர்வு, பழக்க முறை பல நூறு வாடிக்கையாளர்களை அவனிடம் கொண்டு வருகிறது. பக்கத்துக் கிராமங்களில் எஸ்.டி.டி வசதியில்லாதவர்களுக்கு, வெளிநாடுகளிலிருந்து வரும் செய்திகளைக் குறித்து வைத்திருந்து சொல்லி உதவி அனைவரிடமும் நல்ல பெயர்.

ப்ளஸ் டூ படித்துவிட்டு படிக்க மறுத்து ஊர் சுற்றித் திரிந்த தம்பி அனஸுக்குக் கூட பயிற்சி கொடுத்து ஆளாக்கி விட்ட நிம்மதி.
சிரமமில்லாமல் குடும்ப நகர்ச்சி. உள்நாடு – வெளிநாடு என்று பிரித்து உள்ள இரண்டு தொலைபேசித் தொடர்புகளையும் இணைத்து படு சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தான் அபுல்.

திடீரென கண்ணாடிக் கதவை படாரெனத் திறந்து கொண்டு அந்தக் கூட்டம் நுழைந்தது. தொடர் வாடிக்கை என்ற அளவில் மிக நல்ல பார்ட்டி. ஆனால் இங்கிதம் தெரியாமல் வளவளவென்று பேசக் கூடியவர்கள். ஆள் மாற்றி ஆள் குறைந்தது அரை மணிநேரமாவது பேசி விடுவார்கள். காத்திருப்பவர்கள் பொறுமையை இழந்து தவிப்பார்கள்.

“தம்பி மருமகனைக் கூப்பிடுங்க…” என்று படபடத்தார் அந்தக் கூட்டத்தின் தலைவர், பக்கத்து கிராமம். கோலலம்பூர் மளிகை கடை ஒன்றில் பணிபுரியும் அவரது மருமகன் ரபீக்கின் நம்பர் அபுலுக்கு மனப்பாடம்.

“கொஞ்சம் உக்காருங்கத்தா. முன்னாடி வந்தவுங்க ரெம்ப நேரம் காத்துக்கிட்டிருக்காங்க. பத்து நிமிஷத்துல புடிச்சுத்தாரேன் உட்காருங்க! நீங்கள்லாம் உள்ள போங்கம்மா” என்றான் அபுல். உடன் வந்த பெண்கள் அசைவதாயில்லை. “ரொம்ப அவசரம் தம்பி ! சொணங்க முடியாது சீக்கிரம்” அவர் படபடத்தார்.

“ஒரு நிமிஷம்த்தா ! கொஞ்சம் பொறுங்க.”
“நாங்க வேணுன்டா அடுத்த எடத்துக்குப் போகவா?” அவர் தனது வழக்கமான பயமுறுத்தலை பிரயோகித்தார். “போங்களேன்” என்று சொல்ல வாய் முணுமுணுத்தது. ஆனால் தொழிலை நிலைப்படுத்தும் கடமை உணர்வு தடுத்தது. கிராமப்புறத்து ஆசாமி. இங்கிதம் தெரியாதவர். சொல்லில் புரிய வைப்பது சிரமம். நாம் தான் நெளிவு சுளிவாக நடந்து கொள்ள வேண்டும்.

“என்னத்தா இப்படி பேசுறீங்க? இன்னக்கி நேத்துப் பழக்கமா? கொஞ்சம் பொறுங்க இந்தா வந்துட்டேன். உங்கள் மாதிரி பெரியவுங்கள நம்பித்தானே நாங்க தொழில் செய்யுறோம்.” அபுல் அவரை வார்த்தைகளால் அமைதிப்படுத்தினான்.

காத்திருந்த ஒரு சிலர் அபுலின் தர்மசங்கடத்தைப் புரிந்து கொண்டு, “சரி, சரி ! அவரப் பேசச் சொல்லுங்க” என்று பெரிய மனதுடன் வழி விட்டனர். திமுதிமுவென்று அந்தக் கூட்டம் கண்ணாடிப் பெட்டிக்குள் நுழைந்தது. முதலில் அந்த நபர் உரத்த குரலில் மருமகனிடம் பேசினார்.

“அத்தா ! ஒங்க அம்மாக்காரி புள்ளய ஆடுமாட்ட அடிச்சமாதிரி அடிச்சுப் போட்டுட்டா ! டாக்டர் கிட்ட கொண்டு போய்க் காண்பிச்சோம். இரண்டு நாள் ஆஸ்பத்திரியில் இருக்கனும்கறார். மாசா மாசம் நீங்க பணம் அனுப்புற கொழுப்பு அவளுக்கு. அவள அடக்கி வையுங்க. உங்க மொகத்துகாக இன்னிக்கி உட்டுட்டோம். இல்லேண்டா நாரு நாராப் பிச்சிருப்போம்.” அவர் தன் மருமகன் நேரில் நிற்பது போல நினைத்துக் கொண்டு கத்தினார்.

உட்கார்ந்திருந்த அனைவரும் அந்த நாகரீகமற்ற கூச்சலை முகம் சுருக்கி வேடிக்கை பார்த்தனர்.
அபுல் அதிர்ந்தான். காரணம் அவர் அடிபட்டு ஆஸ்பத்திரியில் இருப்பதாகச் சொன்ன அவரது மகள் கொழுக்கட்டைபோல் அங்கே நின்று கொண்டிருந்தாள். முகத்தில் வினையமான புன்னகை.

“போனை இங்க கொடுங்க” என்று கையில் வாங்கிக் கொண்ட அந்தப் பெரியவரின் மனைவி, “அத்தா! இதுக்கு மேல் எம்புள்ளைய நான் அந்த ராட்சசிகிட்ட உடவே மாட்டேன். எங்க வூட்லேயே புள்ள இருந்துட்டுப் போகட்டும். நீங்க பணத்தை எங்களுக்கே அனுப்பிடுங்க. அந்த கெழட்டுச் சிறுக்கிய காயப்போடுங்க, அப்பத்தேன் அவளுக்குப் புத்தி வரும்.

அவர் மாற்றி அவள், அவள் மாற்றி இவர் மருமகனை ஒரு ஒழுங்கு செய்து விட்டு போனை வைத்தார்கள். ஆயிரத்து எண்ணூறு ரூபாயை அலட்டலில்லாமல் தூக்கிப் போட்டார்கள். சர்வ அலட்சியமாக அங்கிருந்து சென்றார்கள்.
பாவம், அந்த மருமகன்.

குடும்பத்தைப் பிரிந்து ஓய்வு ஒழிச்சலின்றி வெளிநாட்டில் கஷ்டப்படும் போது, இங்கிருந்து அடிக்கடி இப்படி திராவக வீச்சுகள். அவனது மன அமைதிக்கு வெடி வைக்கும் குண்டுகள்.

இந்தக் கூட்டம் கடந்த சில மாதங்களாக அடிக்கடி வந்து இப்படி அந்தப் பையனின் தாயைப் பற்றி குற்றப்பத்திரிக்கை வாசிக்கிறது. அவர்களுடைய உரையாடலிலிருந்து மருமகனை அவனது தாயிடமிருந்து நிரந்தரமாக அபகரித்துக் கொண்டுவிடும் முஸ்தீபுகளை புரிந்து கொள்ள முடிகிறது.

அபுல் அதை மறந்துவிட்டு அடுத்த அலுவலில் முனைந்தான். ஒரு அரைமணிநேரம் கழித்து கதவைத் திறந்து கொண்டு ஒரு வயதான பெண்மணி விதவைத் தோற்றம். நெற்றியில் கைகளில் காயங்கள் அழுத முகக்குறி.

“என்னம்மா?” என்றான்.
கூட்டமும் கொஞ்சம் குறைந்திருந்தது.
அந்தப் பெண் தயங்கித் தயங்கிப் பேசினாள். “மேலக்காட்டுச் சனங்க வந்து போன் பண்ணாகலா தம்பி?”
“யாரு அந்த மீசக்காரரா?” என்றான் அபுல்
“ஆமா தம்பி ! – என்ன பேசுனாங்க? எம்மகன் என்ன சொன்னான்?” படபடத்தாள் அவள்.
அபுல் தர்ம சங்கடத்தில் நெளிந்தான்.

அவர்கள் பேசும்போதே தவறு செய்வது புரிந்ததுதான். இல்லாததையும், பொல்லாததையும் இட்டுக் கட்டிச் சொல்லி குழப்பம் விளைவிக்கிறார்கள் என்பதையும் உணர்ந்து கொள்ள முடிந்ததுதான். இருந்தாலும், அவன் அந்த ரகசியத்தை இவளிடம் சொல்ல முடியாது. சொல்லக் கூடாது. அது தொழில் ரகசியத்தை வெளியாக்கிய பாவம்.

பாவம் இந்தப் பெண்மணி ! மருமகளிடம் சரியான அடி வாங்கியிருக்கிறாள். அடித்துப்போட்டு விட்டு வந்து, தான் அடிவாங்கி ஆஸ்பத்திரியில் இருப்பதாக பொய்யுரைத்திருக்கிறாள் மருமகள்.

நியாயம் புரிகிறது. என்றாலும் தொழில் தர்மம்?
ஒரு நிரந்தரமான வாடிக்கையாளருக்கு துரோகம் செய்து விட முடியுமா? செய்யலாமா?
“அம்மா ! அவங்க என்ன பேசுணாங்கண்டு நான் கவனிக்கல. நீங்களும் போன் பண்ணி உங்க மகன் கிட்ட பேசுங்க” என்றான் சுருக்கமாக.
“அவன் போன் நம்பர் தெரியாது தம்பி”
“எனக்குத் தெரியும், போட்டுத் தரட்டா?”
“எவ்வளவு செலவு ஆகும் தம்பி ! அவள் பரிதாபமாகக் கேட்டாள்.
“பேசுறதுக்கு தக்கன காசு வரும்மா, சுருக்கமாக பேசுனா நானூறு, ஐநூறு வரும்.”
“நானூறு ஐநூறா !?” அவள் வியப்பில் வாய் பிளந்தாள்.

அவளுக்கு இதிலெல்லாம் அனுபவமில்லை என்பது நன்றாகவே தெரிந்தது. அவள் மீது அனுதாபமும் அதிகரித்தது.
“ஏன் கைல காசு இல்லியா? வேணுண்டா பேசிட்டுப் போங்க. நாளக்கி வந்து கொடுங்க” உதவ முன் வந்தான் அபுல்.


“இல்லே தம்பி ! மாசாமாசம் அவன் அனுப்புறதே ஐநூறுதான். அதையும் போனுக்குச் செலவழிச்சுட்டா மாசமுழுக்க எதவச்சு ஓட்டுறது?” அவள் ஏமாற்றத்தோடு திரும்பி நடக்க ஆரம்பித்தாள்.

அபுலுக்கு வயிற்றைப் பிசைந்தது. அவளது முகத்தோற்றம். ஒரு மகனைப் பெற்று வளர்த்து ஆளாக்கி, கணவனையும் இழந்து நிற்கும் அனாதரவான இந்த நிலையில், மருமகள்காரி இந்த அளவு கொடுமை செய்கிறாள். பெற்றவளுக்கு மாதம் ஐநூறு ரூபாய் அனுப்புவதைக் கூட பொறுத்துக் கொள்ள முடியாத வக்ர மனசு. தனக்கும் கூட ஒரு நிலை இப்படி வரலாம் என்ற பய மில்லை, இறையச்ச மில்லை.

அபுலுக்கு மனசு கனத்தது. அந்தத் தாயின் சோகம் திரும்பத் திரும்ப நெஞ்சில் நிழலாடியது.
நம்பரைச் சுழற்றினான்.
“மேலக்காட்டு ரபீக்கக் கூப்பிடுங்க” என்றான்.

“பிரதர் ! நான் எஸ்.டி.டி கெளவுண்டர்ஸ் இருந்து பேசறேன். கொஞ்ச முன்னாடி உங்க மாமனார், மாமியார் வந்து போன் பண்ணினாங்க. இப்பத்தேன் உங்க அம்மா வந்துட்டுப் போனாங்க. பிரதர் உங்க அம்மாவைப் பாக்கயில பரிதாபமா இருக்குது. போன் பண்ணக் கூட காசு இல்லே. உடல் முழுக்க காயம். ஆனா உங்க ஒய்ஃபுக்கு எந்த அடியும் பட்டதா தெரியல. கொழுக்கட்ட மாதிரி நின்னுக்கிட்டு தன்னோட அம்மாவும், அத்தாவும் பேசுறத வேடிக்கை பார்த்தாங்க. அவசரப்பட்டு உங்க அம்மா மேல கோபப்பட்டுறாதீங்க பிரதர். உங்க மாமாவால எனக்கு ரொம்ப வருமானம். நம்மகிட்ட வந்துதான் எப்போதும் ஐ.எஸ்.டி பேசுவாங்க. இருந்தாலும் எம்மனசு கேக்கல பிரதர். உங்க அம்மாவப் பார்த்தா ரொம்ப பரிதாபமா இருக்கு பிரதர்.” அவன் படபடவென்று சொல்லிவிட்டு போனைத் துண்டித்தான்.

அந்த மகனின் பதில் என்னவாக இருக்குமென்று கேட்கும் ஆர்வம் கூட அவனிடம் இல்லை. அவனது இந்தச் செய்கையால் ஏற்படப்போகும் விளைவுகள் எதுவாக இருந்தாலும் அதை எதிர்கொள்ளும் மனநிலையில் அவன் இருந்தான். மனதில் அலாதியான நிம்மதி படர்ந்திருந்ததை அவன் உணர்ந்தான்.

( நர்கிஸ் – ஜுன் 2015 )






1 கொண்டாடப்பட வேண்டிய ஆளுமைகள் : ஈரோடு மீ. கிபாயத்துல்லாஹ் பாகவி

கொண்டாடப்பட வேண்டிய ஆளுமைகள் Unsung Heroes-தொடர்-1 -காஞ்சி அப்துல் ரவூப் பாகவி- முதல் ஆளுமை .... ஈரோடு மீ. கிபாயத்துல்லாஹ் பாகவி

2 மரணம் நோக்கி...

மரணம் இறைவன் பால் எம்மை திசைதிருப்பி விடுகிறது. பாவங்களை விட்டும் தூரமாக்கிவிடுகிறது. உலகம் நிலையற்றது என்பதை மரணம் தான் நினைவூட்டிவிடுகிறது.

3 ஸிமம் தஃப்தரி (ZIMEM DEFTERI) - ஏழைகளின் கடனையடைத்தல்

உதுமானிய கிலாஃபத்தின் உன்னதமான ஆட்சியின்பொழுது, துருக்கிய வியாபாரிகள் தங்கள் கடைகளில் தங்களுடைய வாடிக்கையாளர்கள் செலுத்தவேண்டிய பணத்தை (கடனை) ஒரு கணக்குப் புத்தகத்தில் எழுதி வைத்திருப்பார்கள். அந்தக் கணக்குப் புத்தகத்தின் பெயர்தான் ஸிமம் தஃப்தரி.

4 மௌலானா சாத்(தா.ப) அவர்களுக்காக ஜரோப்பாவிலுள்ள ஒருதாயியின் அன்பான செய்தி

ஆச்சரியமான விடயம், உங்களிடம் சமூக ஊடக சுயவிவரங்கள்(media profile) எதுவும் இல்லை. ஆனால், அல்லாஹ் உங்கள் பெயரையும் அந்தஸ்தையும் உலகின் நான்கு மூலைகளிலும் உயர்த்தியுள்ளான்.

5 பேசாமல் இரு, கதவை அல்லாஹ் எப்படித் திறக்கிறான் என்று பார்

வளைந்து போன உன் காரியங்கள் நேராகும்; உன் வலிகள் விரைவில் குணமாகும்.

6 (புத்தாண்டு) கொண்டாட்டங்களை விட மனித உயிர்கள் அற்பமானவையா..?
7 அதுவென்ன சுன்னத் வல் ஜமாஅத்?
8 இறந்த பின் வாழ சந்தர்ப்பம்.
9 இங்கிலாந்து மசூதி வீடியோ சொல்லும் உண்மைகள்!
10 பாரதியும் இஸ்லாமும் - மாலன்
11 பயணியின் வாழ்க்கை - பேரா. ஹஸனீ
12 கண்ணாடி வாழ்கை - பேரா. ஹஸனீ
13 ஆடை அவிழ்ப்பு அழகாகுமா......
14 நபிகளாரும் காட்சிப்படுத்துதலும் (Visualization)
15 அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 02
16 அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 01
17 பெண்களிடம் மாற்றம் வேண்டும்
18 எம் சமூகம் இந்த உலகை ஆளும்
19 தவிர்ப்போம் நாற்காலி தொழுகைகளை...
20 வாய்ப்புகளை நழுவ விடாதீர்கள்!
21 பிரான்சால் நாடுகடத்தப் பட்டு பின்னர் பாராட்டப்பட்ட போராளி
22 மனம் திறந்த மடல் - மனம் திருந்திய தொண்டன்
23 ரமளானில் சமூக நலனுக்காக நாம் செய்ய வேண்டிய துஆ
24 புனித மிஃராஜ் இரவு அமல்கள்!
25 புனிதமான ரஜப் மாதத்தின் மிஃராஜ் இரவின் சிறப்புகள்
26 மனைவிக்காக துஆ செய்வதும் ஒரு சுன்னத்!
27 மனித உடம்பின் 99 இரகசியங்கள் !
28 தஹஜ்ஜூத் தொழுகையின் சிறப்பு
29 ஒவ்வொரு முஸ்லீமும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை
30 எது வணக்கம்..?
31 விஞ்ஞானிகளுக்கெல்லாம்- விஞ்ஞானி.... அல்ஹாசன்விஞ்ஞானி!
32 அன்பு மனைவிகளுக்கு ! அருமையான உபதேசங்கள்!!
33 தமிழ்க் கலாச்சாரத்தை ஆதரிப்போம்.இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பாதுகாப்போம்.
34 இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்)
35 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 5)
36 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 4)
37 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 3)
38 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 2)
39 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 1)
40 தாயாருக்கு மருந்து வாங்க பணமில்லை ஆனாலும் வேண்டாம் இந்த நான்கு கோடி - ஜுனைத் ஜம்சேத்
41 மீலாது விழா கொண்டாடுவது கூடுமா?
42 இஸ்லாத்தில் பெண்களின் சிறப்பு:
43 நாட்டங்கள் நிறைவேற ஸலாத்துன் நாரிய்யா ஓதுவோம்
44 வைரங்கள் நாங்கள்! - பொது சிவில் சட்டம் பற்றி ஓர் இஸ்லாமிய பெண்
45 அறிவமுதூட்டிய எங்கள் ஆன்மீக ஆசான் கமாலுத்தீன் ஹள்ரத் கிப்லா அவர்கள்......பற்றிய ஒர் மலரும் நினைவு
46 ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!
47 மனைவியை_நேசிங்கள்..
48 தாயுடன் வாழும் வாய்ப்புப் பெற்றவர்களே!
49 அம்மா! அம்மா!
50 அந்த_ஏழைப்_பெண்ணின்_ஜகாத்‬!
51 இந்திய சுதந்திர போராட்ட நாயகர்கள்
52 செருப்புத் தொழிலாளியின் ஹஜ் பயணம்
53 இமாம்களும் மத்கபுகளும்.
54 பெற்றோர்க்கு மரியாதை செய்யுங்கள்.
55 சொர்க்கத்தில் முதலில் நுழையும் ஏழைப் பெண்மணி..!
56 பராஅத் இரவின் சிறப்புகள்
57 வாப்பா!
58 ஆண்ட்ராய்டு போனும் அண்ணலாரின் உம்மத்தும்!
59 கிராமமோ... நகரமோ... அவர்களை கண்காணித்த​படி இருப்பதே பாதுகாப்பது
60 கருத்துக்குக் கருத்தால் பதிலளிப்போம்!
61 என் கேள்விக்கு இறைவனின் பதில்!
62 அரிய பண்புகளைக் கொண்ட அல்கமா (ரலி)வின் குழு
63 இதிலென்ன வெட்கம்?
64 தாய் மடி தேடும் குழந்தைகள்: (வல்லூரின் கரங்களில் நாம்)
65 பழையன கழிதலும் புதியன புகுதலும்
66 நொண்டிக் குதிரைக்குச் சறுக்கியதே சாக்கு !
67 கற்பில் கவனம் தேவை
68 வம்புக்கு இழுப்பதில் என்ன சுகம் இவர்களுக்கு?
69 புக்கூரும் (காலை நேரமும்) இறையருளும்
70 இஸ்திஃகாராவின் சிறப்பு
71 தஜ்ஜால் பற்றிய முன்னறிவிப்பும் பாதுகாப்பிற்கான வழிமுறையும்.
72 இஸ்லாத்தின் பார்வையில் கோபம்!!!
73 உங்களையும் தாக்கலாம் இந்த நோய்!
74 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-3/3)
75 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-2/3)
76 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-1/3)
77 ஏழு குணங்களை தவிர்ந்து கொள்ளுங்கள்! நிம்மதி பெறுங்கள்!
78 கணவன் மனைவி – அற்புதமான விஷயங்கள்.
79 வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ்
80 எச்சரிக்கை: இப்போதாவது விழித்துக்கொள்வோம்.
81 இறுக்கமும் இரக்கமும்
82 இஷா தொழுகையும் இரவு உணவும்
83 கழிவறைகளில் கிப்லா முன்னோக்கப்பட கூடாது
84 மனிதன் உயிர்வாழ இன்றியமையாதது
85 தினமணி தலையங்கம்: 'இறைவா, எங்கே போகிறோம்?'
86 இறைவணக்கமும் இயலாமையும் (சேரில் அமர்ந்து தொழலாமா?)
87 மரணம் நம் கண்களை தழுவட்டுமே
88 முஸ்லிம் சமூகத்தின் வீட்டுமொழியாக வேண்டிய மொழி அறபு மொழி
89 பெயர்களை நினைவில் வைப்போம்
90 ஊடகங்கள் பரப்பிவரும் முன்ஜென்மபித்தலாட்டம்
91 இறை பிரியத்தோடு உலகில் தலைநிமிர்ந்து வாழ
92 ஹிஜ்ரீ பிறந்த வரலாறு
93 மனிதனுக்கான சுவனத்தை பரிந்துரைக்கும் இரண்டு விடயம்
94 சீனாவில் இஸ்லாம் அறிமுகம்
95 ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் 2/2)
96 முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள் !...
97 ஒரு 2.5 கதை
98 ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் ½)
99 இம்ரானா விவகாரம் மீடியாக்கள் நடத்திய மானபங்கம்
100 உலகத்தில் யாருமே ஏழை இல்லை
101 பராஅத் இரவு –நாம் பெற வேண்டிய படிப்பினைகள்பகைமையை முடிவுக்கு கொண்டு வருவோம்
102 வ.உ.சி க்கு 10 லட்சம் ரூபாய்க்கு கப்பல் வாங்கி கொடுத்த பக்கீர் முஹம்மதுவை தெரியுமா?
103 நம் துஆக்கள் ஏன் கபூலாவதில்லை?
104 நபிமொழியை மெய்ப்பித்தது இன்றைய விஞ்ஞானம்!!!
105 குறைகளை மறைத்தல்
106 உலகத்தூதர் கூறிய உண்மை சகோதரத்துவம்!
107 நல்ல பெண்மணி
108 பிஸ்மில்லாஹ் சொல்லியாச்சா...? பாரம்பரியமும் நாகரீகமும்
109 💥 யார் அந்த மாமனிதர்..?
110 ஈர்ப்பை விதைப்போம்!
111 ஒரே ஒரு கேள்வி 10 விதமான அற்புதமான பதில்கள்
112 யார் இந்த துலுக்கன்?
113 ஷஹீத் இமாம் ஹஸனுல் பன்னாவின் 10 அறிவுரைகள்
114 இவ்வுலகிலும் மறு உலகிலும் தன்னிறைவு தரக்கூடிய விஷயங்கள்
115 முஸ்லிம் உலகம் இஸ்லாத்தை தொலைத்து விட்டதா ?
116 உலமாக்களின் தகுதி… அந்தக் காலம் எப்போது வரும்
117 வாழும் இறைநேசர்களிடம் வாழ்த்துப் பெறுவோம் !
118    ஓ...மானிடனே,என்னை தெரிகிறதா?
119 சுலைஹாவின் தவறை உணர்த்திய கணவனின் கடிதம்!
120 நபி வழி வெற்றிக்கு வழி இஸ்லாத்தில் தெரிந்து கொள்ளவேண்டியவை.
121  வாழ்க்கை வாழ்வதற்கே !
122 உம்மதினரின் மீது பெருமானாரின் அளவு கடந்த அன்பு
123 விற்கப்படும் மார்க்கம்
124 அழகிய ஐம்பெருங் குணங்கள் !
125 தன்னம்பிக்கை கொள்ளுங்கள் !
126 பார்வைகள் பலவிதம் !
127 நேர மேலாண்மை / திட்டமிடல்
128 பள்ளிக்கு அருகில் வாழ்வோம்
129 எச்சரிக்கை: தொலைக்காட்சியில் போட்டி என்ற பெயரில் மோசடி
130 அந்நியப் பெண்ணுடன் ஆண் - அந்நிய ஆணுடன் பெண் கைகுலுக்கலாமா?
131 தந்தைகளே! கவனியுங்கள்
132 வரலாறு புகட்டும் பாடம்
133 அல்குர்ஆன் என்னும் மதுரம்
134 முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன?
135 ஊருக்குள் விடாதீர்..விளம்பரமல்ல விபரீதம்!!
136 கஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்!
137 நாம் தான் முயல வேண்டும்.
138 உணரப் படாத தீமை சினிமா
139 குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள்!
140 காசாகும் குடும்ப அந்தரங்கங்கள். எச்சரிக்கை!!
141 கற்பா? கல்லூரியா?
142 நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - முன்னாள் கன்னியாஸ்திரி!
143 கசாப்புத் தொழில் சிறந்தது....
144 சுவர்க்கத்தை பரிசாக பெற்றுத் தரும் நற்கிரியைகள்
145 நான் ஏன் முஸ்லிம் ஆனேன் ?
146 ரகசிய கேமராக்கள்: பெண்களே எச்சரிக்கை!
147 இருளை நோக்கிச்செல்லும் வெளிச்சமுள்ள சமுதாயம்! தீர்வு என்ன? எப்படி செயல்படுத்துவது?
148 செல்வந்தர் மகனுக்கு கூறிய மரண சாசனம். (சிறுகதை)
149 மேற்கத்திய கலாச்சாரம் TO இஸ்லாம்- முஸ்லிம் பெண்ணியவாதியின் பயணம்
150 என் ஹிஜாப் என் உரிமை!!!
151 சபைகளில் கண்ணியம் தவறும் கணவர்கள்
152 முகமாகும் பெண்கள்!!
153 நற்குணமே இஸ்லாத்தின் அடையாளமாகும்!
154 இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்
155 உங்கள் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது?!
156 அன்புச் செல்வங்களுக்கு....(நமக்கும்) - கேள்வி பதில்கள்
157 செல்போன்கள்... ஜாக்கிரதை!
158 இணையதளத்தில் கனவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்
159 வெற்றியடைய 10 சுலபமான வழிகள் !
160 ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கைப் பயணம்!
161 மிஸ்டு காலா... பெண்களே எச்சரிக்கை!
162 ஈமானே-உன் விலையென்ன?
163 இஸ்லாமியரும்-எதிர் நீச்சலும்
164 நாளை நமதா? - ஏ.பி. முஹம்மது அலி ஐ.பி.எஸ். (ஓய்வு)
165 அமைதியாக இருந்தால் அமைதி வருமா ?
166 அமர்ந்தது போதும் எழுந்து வாருங்கள் பயணிப்போம்
167 பயங்கரவாதிகள் எல்லாம் முஸ்லிம்களா?
168 ஒளிரட்டும் பண்மைமிகு மீலாது விழாக்கள் ! ஒழியட்டும் வன்மையிலிருந்து மீளாத விழாக்கள் !!
169 கட்டாய மத மாற்றத்திற்கு இஸ்லாத்தில் இடமில்லை
170 மக்தப் மதரஸா ... ஒரு அமைதிப் புரட்சி
171 யுக முடிவின் இறுதிக்கட்டமா நெருங்கிவிட்டது?
172 "ஜம் ஜம்” தண்ணீர் தோன்றிய வரலாறு
173 மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் :
174 ஹிஜ்ரீ பிறந்த தியாகங்களின் வரலாறு !
175 தாமிரபரணியை உறிஞ்ச வரும் 'பெப்சி' நிறுவன ஆலை
176 பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்க்க பெற்றோர்களுக்கு சில அழகிய வழி முறைகள்:
177 அறிவைத் தேடுவோம்!
178 தமிழ் மண்ணில் வேர் கொள்ள முடியவில்லை!
179 ஒரு மகன் தன் அப்பாவைப்பற்றி என்ன நினைக்கிறான்?
180 பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? ஏதிர்த்தாரா?
181 இந்திய முஸ்லிம்களின் முதல் எதிரி அல் காய்தா:
182 பிள்ளையாரப்பா பெரியப்பா,புத்திமதியை சொல்லப்பா
183 அவ்வளவு ஈமானா? அல்லாஹ்வின் மேல் அவ்வளவு நம்பிக்கையா?
184 என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்!
185 சமூக நலத்திற்கு உகந்த சட்டம் எது?
186 “வேர்கள்” வரலாறு!
187 கருத்து வேறுபாடு சம்பந்தமாக சட்டங்கள்
188 என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்!
189 கலீல் அஹ்மத் கீரனூரி (ரஹ்) அவர்களின் அல்அஃப்லாக் வல்அவ்காத் நூல் அறிமுகம்
190 மனிதனின் தேவை ! – மன அமைதி
191 யா அல்லாஹ் ரஜப் ஷஃபான் மாதங்களில் எங்களுக்கு அருள் புரிவாயாக. இன்னும் ரமளானை அடையச் செய்வாயாக
192 அண்ணல் நபிகளாரின் பொன் மொழிகள்-மெளனம் கொள்ளுங்கள்.
193 அல்லாஹ் அறிவுறுத்தும் அமுதமொழிகள்
194 பிரார்த்தனைகள் ஏன் ஏற்கப்படவில்லை?
195 மஸ்ஜித் (பள்ளிவாசல்)
196 பேச்சு,மெளனம்
197 ஜனாஸா - மைய்யத்
198 கிலாஃஃபா மறைவு: இந்தியா தடுமாறியது.. எகிப்து கவலையுற்றது
199 ஹஜ் யாத்திரை - சில சிந்தனைகள் !!!
200 ஜெனரல் எர்வின் ரோமல் கண்ட காலித் இப்னு வலீத் (ரலி )
201 முஸ்லிம்களை ஏன் பயங்கரவாதிகளாக சித்தரிக்க முற்படுகிறார்கள்?
202 வெளிநாடுகளில் வேலை செய்யும் என் சகோதரர்களே!
203 அரிஸ்டாட்டில் முதல் நியூட்டன் வரை
204 இறை நேசர்கள்- தொடரும் விளக்கம்
205 வலிமார்கள் என்பவர்கள் யார்?
206 காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் ஸாஹிப் அவர்களின் பதில் சொல்லும் பாங்கு
207 அமைதியாக இருந்தால் அமைதி வருமா ?
208 மனித குல விரோதி
209 எனது பெயர் ஜனாஸா!
210 பாபரா ராமர் கோயிலை இடித்திருப்பார்???
211 கடன் கொடுப்போரும் வாங்குவோரும் நடந்து கொள்ள வேண்டிய முறை
212 மோடியை விட்டு 2002 ஏன் விலகாது?
213 இஸ்லாம் வாள் முனையில் பரப்பப்பட்டதா?
214 வதைக்கும் விவாகரத்து வழக்குகள்
215 ஹிந்து - குறித்து இஸ்லாம்!
216 தமிழரும் இசுலாமியரும்
217 குர்ஆன் மக்தப் - காலத்தின் தேவை!
218 இஸ்லாம் மிருக வதையை தூண்டுகின்றதா?
219 மில்லர் கண்ட குர்ஆனின் அதிசயங்கள்
220 முஹம்மது(ஸல்) எனக்கு நடுநிலையானவர்
221 முஸ்லிமல்லாதவர்களுக்கு ஒரு கடிதம்
222 அயோத்தி ராமன் அழுகிறான் -கவிஞர் வைரமுத்து
223 துருக்கி மன்னரின் விலை 10 பொற்காசுகளே!
224 கற்பனைகளும் இஸ்லாமும்
225 வணங்கி மகிழ்கிறோம் - ஆச்சிரியம் ஆனால் உண்மை.
226 சுத்தம் பேணுவோம்,நுரையீரலை காப்போம்!
227 நபிகள் நாயகத்தை வசைபாடிப் படம் எடுத்தவர்....
228 மது ஒரு பெரும் பாவம்
229 மகாத்மா காந்தி, பெரியார் சந்திப்பு
230 பெற்றோர்களைப் பேணுவோம்!
231 யார் இவர்? பேச்சாளர்..போர் வீரர்..இராணுவ தலைவர்..
232 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-3)
233 உடல் உறுப்புகளை தானம் செய்வதுபற்றி இஸ்லாம்
234 தவ்பா என்னும் பாவமன்னிப்பின் சிறப்புகள்!
235 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-2)
236 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-1)
237 இதயத்தை கவனமா பாத்துக்கங்க!
238 இமாம்களை கண்ணியம் செய்வோம்!
239 உமர் (ரலி) அவர்களுக்கு நண்பர்கள் எழுதிய கடிதம்.
240 மறுமை வாழ்வை நேசிப்போம்!
241 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 8 - முடிவு)
242 சொல்லின் செல்வர் எம்.எம். பீர் முஹம்மது சாகிப்
243 சுதேசி சிந்தனைகள்.......
244 உள்ளத்தை தூய்மை படுத்துவோம்!
245 கல்வி நல்லோர்களின் சொத்து!
246 மனிதர்களுக்கு மீன்கள் சொல்லும் பாடம்!
247 வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 1)
248 வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 2)
249 பாராளுமன்ற தேர்தலும் முஸ்லிம்களின் நிலைபாடும்!
250 தொடர்பூடக ஒழுக்கவியல்: அல்குர்ஆனின் வழிகாட்டல்
251 உண்ணுவதிலும்,குடிப்பதிலும் தூய்மையை பேணுவோம்!
252 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 7)
253 செயற்கைக் கருத்தரிப்பும் வாடகைத் தாயும்!
254 அறிவைத் தேடுவோம்!
255 ஆக்காதீர் ஆசனங்களாக
256 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 5, 6)
257 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 3)
258 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 4)
259 மோதினார் அப்பாவின் கதை அல்ல நிஜம்
260 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 1)
261 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 2)
262 ஸுபுஹ் தொழுகையும் நாமும் ???
263 ஆஸாத் விசாவா?உஷார்,உஷார்!
264 அதிகாலை நேரமும் சுபுஹுத் தொழுகையும்
265 தன்பக்கமா? தன்னிகரற்ற கொள்கையின் பக்கமா?
266 சமுதாய தலைவர்களே சிந்தியுங்கள்!
267 படிப்பினையூட்டும் ஒரு நிகழ்வு!
268 உபதேசம் என்பது உலமாக்களின் தனி உடைமையா?
269 பெண் குழந்தை ஒரு பாக்கியம்
270 டாக்டர் ஜாகீர் ஹுசைன் – கல்வியுடன் சுகாதாரத்தையும், ஒழுக்கத்தையும் கற்றுத்தந்தவர்
271 வெப்கேமிரா...எச்சரிக்கை...!
272 நான் ஒருத்தனிடம் ஏமாந்தேன் நீ என்னிடம் ஏமாறு என்பதே மல்டி லெவல் மார்கெட்டிங் - AMWAY Products
273 மனமகிழ் குடும்பம்:நல்லதோர் குடும்பத்தலைவி!
274 மனமகிழ் குடும்பம்: நல்லதோர் குடும்பத் தலைவன்
275 விசுவரூபம் ஒரு விளக்கம்
276 விஸ்வரூபமும் முஸ்லீம்களும்.
277 மதுவை ஒழிப்போம்,மாதுவை காப்போம்!
278 வாழ்க்கைக்காக ஒரு மரணம்
279 கண்ணாடிகள் கவனம்
280 360 மூட்டுக்கள் (எலும்பு இணைப்புக்கள்) Bone Joints..! ( 7-ம் நூற்றாண்டு முன்னறிவிப்பு )
281 ஷைத்தானின் விரோதிகளும், நண்பர்களும்
282 ஹஜ்ரத் அலி (ரலி) அவர்களின் அறிவுரைகள்
283 துஆக்கள் ஏன் ஒப்புக்கொள்ளப் படுவதில்லை?
284 சிந்திக்க தவறும் ஆண்களுக்கு மட்டும்
285 கருத்து வேறுபாடுகள்.
286 நபியவர்கள் எங்கள் உயிருக்கு மேல்
287 ஹிஜாபுக்குப்பின் கண்ட வாழ்க்கை
288 யூத கிருத்துவ வக்கிரப்படமும் விமர்சனங்களை வென்ற விண்புகழ் வேந்தரும்
289 பொறுத்தோம்! ஆனால் பொறுக்கமாட்டோம் யா ரஸூலுல்லாஹ்!
290 தஜ்ஜால் Vs டெலிவிஷன்
291 ஓ! என் இளைய சமுதாயமே!
292 இதயத்தை பாதுகாக்க யோசனைகள்!
293 வீண் செலவு வேண்டாமே