தேசவிடுதலைக்கு ஆயுதப்புரட்சியே தீர்வு

இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் (மறைக்கப்பட்ட) அரும்பெரும்பங்கு..!

"தேசவிடுதலைக்கு ஆயுதப்புரட்சியே தீர்வு"

ஆயுதப்புரட்சி ஒன்றுதான் இந்திய மண்ணில் விடுதலையை வரவு வைக்க ஒரே வழி என்ற முடிவுடன் உத்திரப்பிரதேசத்தில் வலுவான ஓர் இளைஞர் அமைப்பு உருவானது; சுதந்திரநாத் சனயால், போகேஷ்பாபு, ராம் பிரசாத் பிஸ்மில் போன்ற, இவ்விளைஞர் அமைப்பின் துவக்க கர்த்தாக்களில் ஒருவர் ஷாஜஹான்பூரைச் சார்ந்த அஸ்பாகுல்கான் என்ற இளைஞர் ஆவார்.

ஆங்கிலேயருக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடும் வலுவான இளைஞர் அமைப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்ட அவ்விளைஞர்களுக்கு, ஆயுதங்கள் வாங்கப் பணவசதி தேவைப்பட்டது. அதற்காக அரசாங்க கஜானாக்களைச் சூறையாடத் திட்டம் வகுக்கப்பட்டது.

1925 ஆகஸ்ட் 26 - இல் உத்திரப்பிதேசத்தில் சஹான்பூரிலிருந்து லகனோவிற்கு அரசாங்க கஜானாப் பணம் ரயில் மூலம் கொண்டு செல்லப்படும் தகவல் இவர்களுக்குக் கிடைக்கிறது. கஹோரி கிராமத்தில் அந்த ரயிலைத் தடுத்து நிறுத்தி கஜானாப் பணத்தைச் சூறையாட அஸ்பாகுல்கான், ராம் பிரசாத் பிஸ்மில், சந்திரசேகர ஆஸாத், ரோஷன்சிங், ராஜேந்திர லால் ஆகியோர் தலைமையில் ஓர் இளைஞர் குழு புறப்படுகிறது.

கஹோரியில் ரயில் தடுத்து நிறுத்தப்பட்டு கஜானாப் பணம் சூறையாடப்படுகிறது. இதன் விளைவாகப் பெரிய அளவிலான கைது நடவடிக்கையில் ஆங்கில அரசு இறங்குகிறது. தெஹ்லீ என்னும் இடத்தில் அஸ்பாகுல்லாகான் கைது செய்யப்பட்டார்.
லாகூரில் 18 மாதங்கள் நடைபெற்ற விசாரணையில், இவர் ஆப்கானிஸ்தானுக்குத் தப்பி ஓட முயன்றவர், கஹோரிகொள்ளையில் ஈடுபட்டவர் போன்ற ஐந்து குற்றங்களை அஸ்பாகுல்கான் மீது சுமத்தி, தூக்குத்தணடனை வழங்கியது நீதிமன்றம்.

சில நாளே ஜீவித்திருப்பேன். என் தேசத்தின் ஒரு பிடிமண்ணை என் கஃபன் ஆடை (சவத்துணிக்குள்)க்குள் வைத்து என்னை அடக்கம் செய்யுங்கள்!.

- என்ற பொருள் பொதிந்த கவிதையை எழுதி வைத்தவராக,
லெப்பைக்க என்ற ஹஜ் பயணிகளின் தாரகமந்திரத்தைச் சப்தமாக முழங்கியவராக,
குர்ஆனின் உரையைக் கையில் ஏந்தியவராக....

26-09-1926- இல் தூக்கு கயிற்றில் தன்னை மாய்த்துக் கொண்ட மாவீரன் அஸ்பாகுல்கான்.

இந்திய விடுதலைப் போராட்ட இயக்கத்தின் (ஆயுதப் புரட்சி) முன்னோடி ஆவார்.

- (ஏ.என். முஹம்மது யூசுப், இந்திய விடுதலை போராட்ட வீரர்கள், பக்கம்.223-224.)






1 இமாம் அபுல் ஹஸன் நத்வி ரஹிமஹுல்லாஹ்

அரபு நாடுகளில் கல்வியை பயிலாத இவர்கள் அரபுலக அறிஞர்களுக்கு மிகப்பெரிய ஆசானாக ஆனார்கள், பாலஸ்தீன பைத்துல் மக்திஸ் இமாம் அப்துஸ் ஸமத், உலகப் புகழ்பெற்ற அறிஞர் யூசுப் அல் கர்ளாவி போன்ற சமகால அறிஞர்களுக்கு ஆன்மீக ஆசானாக கருதப்படுபவர்கள்.

2 இதுவல்லவா நபி நேசம்!!!!!!!

இதுவல்லவா நபி நேசம்!!!!!!! ஹஸன் அல் இக்திர்லி.யார் இவர்? நமது கர்ஜனைகளில் மட்டும் வெளிப்படும் நபி நேசம் அவர்களது கற்பனைகளில் கூட வெளிப்பட்டது.

3 தனக்குரியவருக்காக காத்திருக்கும் இரயில் ....

இந்த இரயிலுக்காகத் தான் முழு முஸ்லிம் உம்மத்தே காத்துக்கொண்டிருந்தது..........

4 உலகத்திற்கே ஒளி விளக்கேற்றிய மதீனாவில், விளக்கேற்றியது எப்போது?

ஹிஜ்ரி 1325 இல் முதன் முதலாக மதீனத்துப் பூங்காக்குள் மின் விளக்குகள் வருகைத் தந்தது.வரவழைத்தது வேறு யாருமில்லை, உஸ்மானியா பேரரசின் கலீஃபா அப்துல் ஹமீது ஸானீ (ரஹ்)அவர்கள் தான்.

5 உஸ்மானியா பேரரசு கடைவீதியின் தொங்கும் கூடைகள்

அதாவது எல்லா கடைகளிலும் கூடைகள் தொங்கவிடப்பட்டிருக்கும்.ஒரு செல்வந்தர் அந்த கடைக்கு வந்து தனக்கு தேவையான நான்கு ரொட்டிகளுக்கு பணம் செலுத்தாமல் எட்டு ரொட்டிக்களுக்கான பணத்தை கொடுக்கிறார்.

6 நான் குதுப்மினார் பேசுகிறேன்-1
7 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 12
8 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 11
9 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -1
10 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -2
11 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -3
12 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -4
13 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -5
14 சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 6
15 கையிலே ஒரு துணிப்பை, எளிய நடை, எளிய உடை உத்தமபாளையம் எஸ்.எஸ். ஹஜரத்
16 இஸ்லாம் வென்றெடுத்த ஷாம்
17 தமிழகத்தில் ஆட்சி செய்த முதல் முஸ்லிம் மன்னர்
18 சாரதா பீடம் சொல்லும் திப்புவின் மதநல்லிணக்கம்
19 சூஃபிக்களும் புனித போர்களும்
20 யார் தேச விரோதி?
21 இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும் - தமிழரும்.
22 ஸயீத் இப்னு ஆமிர் سعيد ابن عامر (ரலி)
23 விடுதலைப்போரில் வீரமங்கையர்
24 பூரண சுதந்திரம் கேட்ட முதல் இந்தியன்
25 இஸ்லாம் இந்தியாவுக்கு அந்நிய மதமா?
26 நாகூர் - ஒரு வரலாற்றுப் பார்வை
27 அந்த இரண்டணா ......
28 இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள்
29 கோரிப்பாளையம் தர்கா கல்வெட்டுகள்
30 சமயப் பொறை பேசும் சரித்திரச் சான்றுகள்
31 தமிழ் முஸ்லிம்களின் இடப்பெயர்ச்சி வரைபடம்
32 விடுதலை போரில் நெல்லை மாவட்ட முஸ்லிம்கள்
33 தமிழகத்தில் முஸ்லீம்கள் வரலாறு
34 மாவீரன் திப்புசுல்தான்:இந்திய விடுதலைப் போரின் உயிர்நாடி
35 சுதந்திரத்திற்காக சிறுவன் கைர் முகம்மது
36 இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும் - தமிழரும்.
37 தமிழகத்தில் முஸ்லீம்கள்
38 இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன?
39 இந்திய விடுதலைப் போரும் முஸ்லீம்களும்
40 இந்திய சுதந்திரப் போரில் முஸ்லிம்களின் பங்கு
41 பாடலியில் ஒரு புலி
42 ஒரு மனிதன் ஒரு பட்டாளம் - மௌலவி செய்யது அஹ்மதுல்லாஹ் ஷாஹ்.
43 முதல் சுதந்திரப் பிரகடனம்
44 மவுலானா எனும் மகத்தான இந்தியர்
45 காலித் பின் வலீத் (ரலி)
46 தமிழ் முஸ்லிம்களின் வரலாற்று பொக்கிஷம். ஒரு ஆவணக் குறும்படம்
47 இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
48 முதல் வாள்!
49 கஜினி முகம்மது மற்றும் முகம்மது துக்ளக் (தவறான ணோட்டங்கள்)
50 இலங்கையில் முஸ்லிம்கள் - அன்றும் இன்றும்
51 மாவீரன் மருத நாயகம் கான் சாஹிப்
52 சீனாவில் விதைத்த விதை - ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி)
53 திருநெல்வேலி வரலாறு...!