Tamil Islamic Media

வெள்ளைப் பூக்களின் … பயணம் !

‘பொற்கிழி’ கவிஞர் தமிழ்மாமணி மு. ஹிதாயத்துல்லா இளையான்குடி

 

ஹஜ்ஜுக்குச் செல்வோரும்

உம்ராவுக்குச் செல்வோரும்

அல்லாஹ்வின் விருந்தினர்கள் என்று

அபூஹுரைரா (ரலி) அவர்கள்

அறிவித்துள்ளார்கள் !

 

 

அதன்படி,

புனித ஹஜ்ஜுக்குப் புறப்படும்

வெள்ளைப் பூக்களே !

எதுவும் எனதில்லை

எல்லாமே உனது என்றே

எல்லாம் துறந்து

ஏகனே கதியென்று செல்லும்

இறைக் காதலர்களே …!

 

 

உங்கள் தாகம் புரிகிறது

பாலைவனமே ……..

தாகமாய் படுத்திருக்க அந்தப்

பாலைவனச் சீமைக்கா……

உங்கள் பயணம் என்று……

கேட்கலாம் போல் தோன்றுகிறது !

 

 

அது

பாலைவனமல்ல

தீன்பூத்த சோலைவனம் !

 

 

 

ஓரிறைத் தத்துவத்தை – அந்த

வானத்திற்கும்

வகுப்பெடுத்துக் கொண்டிருக்கும்

சங்கையான கஃபா

மக்க நகரத்தின் மணிமகுடம் !

 

 

இந்தச் சீமையில் தான்

வல்ல அல்லாஹ் – தன் இறுதித்

தூதுவரை ….

நபியாகத் தேர்ந்தெடுத்தான் !

உம்மி நபியானவரை…

உலகமே … படிக்க வைத்தான்

 

 

கலிமாவைத் தினமும்

நாம் ஓத…...

அவர்கள் நாமத்தை

இனிப்பாய் அதில்

இணைத்து வைத்தான் !

 

 

அன்று……

அன்னை ஹாஜரா …

பாறைகளுக்கிடையில்

நீரைத்தேடி…

தாகத்தோடு… அலைய…….

குழந்தை இஸ்மாயிலின்

குதிகால் உதைப்பினிலே

தெறித்ததே… ஒரு நீரூற்று !

அது சாதாரண ஊற்றல்ல,

ஜம் ஜம் நீரூற்று !

அன்று முதல் … இன்று வரை

அதன் ஊற்றுக் கண்…

திறந்தபடியே ….

தாகம் தீர்த்து வருகிறது !

இப்போது தான் புரிகிறது !

உலகத்தின் தாகம் தீர்ப்பதே

அந்தப்

பாலைவனச் சீமையென்று !

இதையெல்லாம் ….

கண்ணாரக்கண்டுவரப்

போகின்றீர்கள் !

 

 

சென்று வாருங்கள் !

உங்களின் ஹஜ்

வல்ல அல்லாஹ்வால்

ஒப்புக் கொள்ளப்பட்ட

ஹஜ்ஜாக அமைய…..

துஆச் செய்கிறோம் !

தோழமையோடு !

அல்லாஹு அக்பர் !






1 இருக்கு ஆனால் இல்லை...!

காற்று வெறும் காற்றுதான்! கண்ணுக்குத் தெரிவதில்லை! கைகளுக்கும் கட்டுப்படுவதில்லை!

2 ஓடிவா! ஓய்வறியாது ஓடிவா !

நடுவண் அரசே! நாசகாரக் கூட்டமே! நானிலமே நகைக்குது நல்லறமெலாம் கரையுது! நாடிது ஆளவா? நாங்களென்ன மாளவா?

3 பொறுத்தது போதும் பொங்கியெழு ..! பொது சிவில் சட்டம்

ஷரீஅத்தைக் காக்க சதிகாரர்த் தோற்க சகோதர உணர்வில் சங்கமித்து உழைப்போம்

4 திரும‌றை வ‌ந்த‌ தேன்மாத‌ம் வ‌ருகிற‌து

ஈமானில் நாமெல்லாம் எத்தனை மார்க்கென்று தீர்மான‌ம் செய்ய திருநோன்பு வ‌ருகிறது

5 செவி கொடு ; சிறகுகள் கொடு !

பூக்களுக்குள் பூக்களாகப் பூக்கும் நான் சில வேளை புயலாகவும் ஆகிவிடுகின்றேன். முரண்களோடு சமரசம் செய்துகொள்ள முடிவதில்லை என்னால்.

6 அழுவதற்கான நேரம் கடந்து விட்டது.!!
7 அழுவதற்கான நேரம் கடந்து விட்டது.!!
8 மரணம்.. ஒரு விடியல்..
9 சொந்த மண்ணில் சொந்தங்களோடு.....
10 வேதம் தந்த மாதம்
11 இது எந்த ஊரு நியாயமுங்க ..........?
12 சொந்தமாகட்டும் சொர்க்கம் !
13 விரக்திக்கு விடைகொடு!
14 வெயிலும் தங்கும் விந்தை நிழல் !
15 பெருமானே பெருந்தலைவர்
16 பாலஸ்தீனப் பாலகர்களின் அழுகை !!!!!
17 கண்மணி நாயகமே வாழி! - அத்தாவுல்லா
18 கஅபா - அத்தாவுல்லா
19 போக மாட்டார்கள் புதியவர்களிடம் ........