Tamil Islamic Media

தனக்குரியவருக்காக காத்திருக்கும் இரயில் ....



இந்த இரயிலுக்காகத் தான் முழு முஸ்லிம் உம்மத்தே காத்துக்கொண்டிருந்தது..........

அந்த இரயில் தான்.... உஸ்மானிய கலீஃபா அப்துல் ஹமீது ஸானீ (ரஹ்) அவர்களால் உருவாக்கப்பட்ட இரயில் .....
ஒட்டுமொத்த இஸ்லாமிய உலகத்தையும் இணைக்கும் வண்ணமாக அனைத்து இஸ்லாமிய நாடுகளிலிருந்தும் மக்கா வரைக்கும் சென்றடையும் ஒரு இரயில் பாதையை உருவாக்கினார்.

வரலாற்றில் அது ஹிஜாஸ் இரயில்பாதை என்று அறியப்படுகிறது .அனைத்து இஸ்லாமிய நாடுகளையும் இணைக்கும் வண்ணம் அமைக்கப்பட்டதால் அந்த இரயிலில் பயணிப்பவர் எகிப்திலிருந்து ஷாம், மக்கா, மதீனா, இஸ்தான்புல், அல்ஜீரியா இன்னும் ஏன் மேற்கு நாடுகளுக்கும் தனது பயணத்தைத் தொடர்ந்து மிக எளிமையாக தான் நினைக்கும் இஸ்லாமிய நாடுகளுக்கும் மேற்கு நாடுகளுக்கும் குறைந்த காலளவில் சென்றடையும் வண்ணம் ஏற்படுத்தப்பட்டது.

இன்றைக்கு இந்த திட்டம் தான் ஐரோப்பா நாடுகளில் மத்தியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

1900 இல் உஸ்மானிய்யா கலீஃபா அப்துல் ஹமீது ஸானீ (ரஹ்) அவர்களது காலத்தில் தான்
முழு முஸ்லிம் உம்மத்திற்கும் பயனுள்ள திட்டமான ஹிஜாஸ் ரயில் பாதை திட்டம் உருவாக்கப்பட்டது.

இந்த திட்டத்திற்கு என்பது மில்லியன் லீரா (துருக்கி பணம்) இன்னும் 5000 வேலையாட்கள் தேவை என மதீப்பீடுச் செய்யப்பட்டது.எனவே இந்த பிரம்மாண்ட திட்டத்திற்காக உதவிக்கரம் நீட்டுமாறு ஒட்டுமொத்த இஸ்லாமிய உம்மத்திற்கும் அழைப்பு விடுத்தார் சங்கைக்குரிய கலீஃபா அவர்கள்.

சீனா,எகிப்து, இந்தியா, ஷாம் இன்னும் உலகத்தின் எல்லா பகுதிகளிலிருந்தும்
முஸ்லிம்கள் தங்களால் இயன்றதை இந்த திட்டத்திற்காக அர்ப்பணித்தார்கள்.எண்ண முடியாதளவுக்கான கோடிக்கணக்கான பணம், தங்க கட்டிகள், வேலையாட்கள், என அனைத்தும் தயாரானது.

இறைவனது பேரருளால் 1908 ஆம் ஆண்டு நிறைவடைந்து. *மார்க்கத்தை நேசிக்கக் கூடிய, முஸ்லிம் உம்மத்தை விரும்பக் கூடிய ஒவ்வொரு முஸ்லிமின் பேராவல் செயல்வடிவம் பெற்றது.ஆம் உலத்தின் எந்தவொரு மூலையிலிருந்தும் ஹஜ்ஜுக்கு புறப்படும் ஹாஜி எல்லா வசதிகளுடன் ஐந்தே நாளில் மக்காவை அடையலாம்.

பிறகு 1915 இல் யூத நாய் லாரன்ஸ் அரபியும் அவனது கூட்டாளிகளும் அந்த இரயிலை உடைத்தார்கள்,இரயில் பதையையும் அழித்தார்கள் இதற்கு பிறகு இஸ்லாமிய கிலாஃபத்தையும் தகர்த்தார்கள் இஸ்லாமிய நாடுகளைப் பிரித்தார்கள்.அந்த நாடுகளுக்கு மத்தியில் எல்லைகளை அந்த துரோகிகளே நிர்ணயித்தார்கள்.

ஒற்றை உம்மத்தாக இருந்தப்போது முஸ்லிம்களது நாடுகளுக்கு மத்தியில் எல்லைகள் என்பதுமில்லை நுழைவு அனுமதி தேவையே இல்லை.

ஒரே உம்மத்தாக இருந்தப்போது அரபிகள்,அஜமிகள் என்ற வேறுபாடு கருப்பர்கள், வெள்ளையர்கள் என்ற பாகுபாடு எதுவும் கிடையாது.

இஸ்லாம் நம்மை இணைத்தக் காலத்தில் முஸ்லிமாகவே ஆண்டோம் முஸ்லிமாகவே எதிரிகளை எதிர்த்தோம் முஸ்லிமாகவே வாழ்ந்தோம் முஸ்லிமாகவே உயிர் துறந்தோம்.

தனக்குரியவரான கலீஃபாவிற்கு இரயில் மட்டும் காத்துக்கொண்டிருக்கவில்லை முஸ்லிம் உம்மத்தும் காத்துக்கொண்டு தான் இருக்கிறது.......


அரபியில்: முஹம்மது ஸாலிஹ்
தமிழில் மௌலவி நியாசுதீன் புகாரி நத்வி







Construction of the Hejaz Railroad. Ballasting the Rail Tracks. 1906. Photo credit: Library of Congress





Ottoman military conscripts building the roof of Mu‘azzam station, taken in 1908. Photo credit: The British Museum






No articles in this category...