Tamil Islamic Media

உலகத்திற்கே ஒளி விளக்கேற்றிய மதீனாவில், விளக்கேற்றியது எப்போது?

ஹிஜ்ரி 1325 இல் முதன் முதலாக மதீனத்துப் பூங்காக்குள் மின் விளக்குகள் வருகைத் தந்தது.வரவழைத்தது வேறு யாருமில்லை, உஸ்மானியா பேரரசின் கலீஃபா அப்துல் ஹமீது ஸானீ (ரஹ்)அவர்கள் தான்.

இதில் ருசிகர சம்பவம் எதுவென்றால்!!!!!!


மின் விளக்குகள் அறிமுகப்படுத்தப்பட்டப் போது தனது சாம்ராஜ்யத்தின் கோட்டையை மின் விளக்குகளால் அலங்கரிப்பதற்கு முன்னால் அகிலத்தின் அருட்கொடையின் கோட்டையை ஒளிப்பெறச்செய்வதல்லவா சிறப்பு.தனது கோட்டையில் இருள் சூழ்ந்தால் பரவாயில்லை ஆனால் அருள் சூழும் இடத்தில் இருள் சூழ்ந்தால் அருளாலன் கோபித்துக் கொள்வான்.எனவே கலீஃபா அவர்கள் முதலில் மதீனமா நகரை மின் விளக்குகளால் அலங்கரித்தார்.இந்த அழகிய நடைமுறையைப் பார்த்து வியந்த உலக முஸ்லிம்கள் கலீஃபா அவர்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளைச் செய்தார்கள்.குறிப்பாக இந்த விளக்கிற்கு தேவையான மின்னியற்றி (generator) அனுப்பி வைத்ததே இந்தியாவிலிருந்த நவாப் மன்னர் தான் என்பது மற்றுமொரு சுவாரஸ்யமான விஷயம்.


இப்பொழுது இந்த விளக்கின் வயது 112
------------
மௌலவி நியாசுதீன் புகாரி நத்வி.








No articles in this category...