Tamil Islamic Media

வைரங்கள் நாங்கள்! - பொது சிவில் சட்டம் பற்றி ஓர் இஸ்லாமிய பெண்


பொது சிவில் சட்டம் பற்றிய ஆய்வுக் கட்டுரை:

ஆக்கம்: உம்மு நுமைரா M.A., M.Phil., (P.hD.)


Kayalpatnam. com
எழுத்து மேடை பகுதி

கடந்த சில நாட்களாக “முஸ்லிம் பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்போம்” என்றும், “முஸ்லிம் பெண்கள் சீரழிவதை நம்மால் சகித்துக்கொள்ள முடியாது” என்றும் பிரதம மந்திரி முதல் முக்கிய அமைச்சர்கள் வரை ஆபத்பாந்தவன்களாக அவதாரமெடுத்து அறிக்கை அரசியல் நடத்திக் கொண்டிருகிறார்கள். ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுததாம்... பதினான்கு நூறாண்டுகளுக்கு முன்பே முழுமையாகப் பாதுகாக்கப்பட்ட முஸ்லிம் பெண்களின் உரிமைகளை, புதிதாக என்ன செய்து பாதுகாக்கப் போகிறார்களோ தெரியவில்லை...!

இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் பெண் குழந்தைகளை நெல் மணியும், கள்ளிப்பாலும் கொண்டு வரவேற்கும் கல்நெஞ்சக் கிராமங்கள் இந்தியாவின் மூலை முடுக்குகளில் எல்லாம் இன்னமும் இருக்கின்றனவே...? அதனை முற்றிலுமாக ஒழிக்க என்ன செய்தோம்...?

வருடத்திற்கு சராசரியாக ஒரு மில்லியன் பெண் கருக்கள் வயிற்றுக்குள்ளேயே அழிக்கப்படுகிறதாம் .... இன்னும் சில வருடங்களில் இந்த எண்ணிக்கை ஐந்து மில்லியன்களையும் தாண்டும் என்று புள்ளி விபரங்கள் எச்சரிக்கின்றனவே...? இதற்காக நீங்கள் எடுத்த நடவடிக்கைகள் என்ன...?

கடந்த மூன்று தலைமுறைகளில் தோராயமாக ஐம்பது மில்லியன் பெண்கள் இந்திய மக்கள்தொகையிலிருந்து பெண்கள் என்ற காரணத்திற்காகவே அழித்தொழிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று கணக்கெடுப்புக்கள் நெஞ்சில் நெருப்பை அள்ளிக் கொட்டுகின்றனவே...? அவற்றையெல்லாம் உங்கள் அறிக்கைகளில் என்றாவது கண்டு கொண்டதுண்டா....?

இஸ்லாம் பெண்களுக்கு வழங்கும் பாதுகாப்பை உங்கள் சட்டங்களாலும், ஆட்சியாலும் நிச்சயம் வழங்கிட முடியாது... காரணம் உங்கள் சட்டங்கள் ஏட்டில் ஏற்றப்பட்டவை... இஸ்லாமிய இறைச்சட்டங்களோ எங்கள் இதயங்களில் ஊட்டப்பட்டவை...

பெண் குழந்தைகளின் பிறப்பை நற்செய்தி என்றும்... பெண் குழந்தைகளை நல்ல முறையில் வளர்த்து, கல்வி தந்து, திருமணமும் செய்து வைப்பவர்கள் - சுவர்க்கத்தில் நபிகளாரோடு இணைந்து இருப்பார்கள் என்பதாக வாக்களிக்கப்பட்டும்..., இழிவென்று கருதியோ, வறுமைக்குப் பயந்தோ பெண் குழந்தைகளைக் கொல்பவனைக் கடுமையாக எச்சரித்தும், இஸ்லாம் 1438 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களின் பாதுகாப்பை அழுத்தமாக உறுதி செய்துவிட்டது.

“பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்.
எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி”

என்று பதினெட்டாம் நூற்றாண்டு பாரதி பெண் கல்வியை வலியுறுத்தினான்.

“கல்வியில்லாத பெண்கள் களர் நிலம், அந்நிலத்தில் புற்கள் முளைக்கலாமே தவிர நல்ல புதல்வர்கள் விளைதல் இல்லை.”

என்று பத்தொன்பதாம் நுற்றாண்டு பாரதிதாசன் தன் பங்கிற்கு பாடிவைத்தான்.

ஆனால் பதினான்கு நுற்றாண்டுகளுக்கு முன்பே ஆண்களுக்குச் சமமாய் பெண்களும் அறிவிலோங்கி இவ்வையகம் தழைத்திட பெண்களுக்கு கல்வியில் சம உரிமை தந்தது மட்டுமல்ல... கல்வியைக் கட்டாயக் கடமையாகவும் ஆக்கியது இஸ்லாம் என்பதற்கு வரலாற்றுச் சான்றுகள் எங்களிடம் ஏராளமாய் உண்டு... இருந்தாலும் தமிழகத்தின் தென்கோடியில் இருக்கும் காயலில் இருந்து வருடந்தோறும் வெளியாகும் பெண் மருத்துவர்களும், பொறியியலாளர்களும், பட்டதாரிகளும்,பெண் சன்மார்க்க அறிஞர்களும், உங்கள் கண் முன்னால் இருக்கும் சாட்சிகள்... கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருண்டுவிட்டது என்று ஒப்பாரி வைப்பவர்கள் கவனிக்கவும்.

“வற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக்கொடுக்கும் வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம்” என்று இன்னமும் பெண்ணுரிமைகளை மீட்டெடுக்கும் நிலையில்தான் நீங்கள் இருக்கிறீர்கள். இன்னும் எத்தனை பெரியார்கள் வந்தாலும், உங்கள் அடக்குமுறைகளும், ஆணவக் கொலைகளும் அடங்கப் போவதில்லை! ஆனால்... வற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக் கொடுக்கும் வழமையை அன்றே தள்ளி மிதித்து... பெண்ணின் அனுமதியின்றி நடத்தப்படும் திருமனங்களை ரத்து செய்யவும் அனுமதி வழங்கி... பெண்ணின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தது இஸ்லாம்... அகன்ற மனதோடு அகக்கண்ணைத் திறந்து அணுகிப்பாருங்கள்! இஸ்லாமில் ‘உள்ள நிலை – உண்மை நிலை’ உங்களுக்குப் புரியும்.

கண்ணாடி பாட்டில்களைப் போன்று பெண்களைக் கையாள வேண்டும்... சற்றே கவனம் பிசகினாலும் நீங்கள் கைசேதப்பட வேண்டும் என எங்களை கவனமாய்ப் பாதுகாக்கிறது இஸ்லாம்... “உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடத்தில் சிறந்தவரே..” என்று ஆண்களுக்கு நன்னடத்தைச் சான்றிதழ் வழங்கும் நீதிபதிகளாக பெண்களை முன்னிறுத்திய இஸ்லாம் நபிகளாரின் சொற்களால் மட்டுமல்ல.. “நான் எனது மனைவியிடத்தில் சிறந்தவனாக உள்ளேன்” என அவர்களது வாழ்க்கையாலும் அதனை நிரூபித்தது...

பெண்களைப் பேய்களுக்குச் சமமாகவும், ஷைத்தானின் அங்கமாகவும், உயிருள்ள ஜடமாகவும், போகப்பொருளாகவும், பெண்களுக்கென்று சுதந்திரமான சிந்தனைகள் இருக்கக் கூடாது, என்றுமாக நினைத்தவர்களும், நடந்தவர்களும்தான் இன்று வேதம் ஒதும் சாத்தான்களாய் “இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்தி வைத்துள்ளது...” என்று ஏ......ங்குகிறார்கள்.

ஆமாம்! இஸ்லாம் எங்களை அடிமைப்படுத்தித்தான் வைத்துள்ளது என்பதைப் பெருமையோடு ஒப்புக்கொள்கிறோம்.. எங்கள் தந்தைகளின் அன்புக்கும், கணவரின் அன்புக்கும், சகோதரர்களின் அன்புக்கும் என்றுமே நாங்கள் அடிமைகள்தான்! அதனால்தான் தங்களது இறுதி மூச்சின்போதும், “பெண்களிடம் நல்ல முறையில் நடந்துகொள்ளுங்கள்...! பெண்களிடம் நல்ல முறையில் நடந்துகொள்ளுங்கள்...!! பெண்களிடம் நல்ல முறையில் நடந்துகொள்ளுங்கள்...!!!” என்று ஆண்களிடம் திரும்பத் திரும்ப அறிவுரைத்து எங்கள் பாதுகாப்பை உறுதி செய்தார்கள் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்.

இஸ்லாம் பெண்களுக்குப் பல சிறப்புரிமைகளைத் தந்துள்ளது. கீழ்த்திசை கம்யூனிஸ்ட் நாடுகளிலும், மேற்றிசை முதலாளித்துவ நாடுகளிலும், இன்னபிற ஜனநாயக நாடுகளிலும் பெண்களின் நிலைகளை நாம் ஆராய்ந்து நோக்கினால், அது அத்தனை மகிழ்ச்சிகரமானதாக இல்லை. உரிமைகளைப் பெற்றுவிட்டோம் என்ற பெயரில், கடுமையாக உழைத்து ஆணுக்கிணையாக சம்பாதிப்பதைத்தான் சாதனையாகப் பேசுகிறார்கள்... அந்தோ பரிதாபம்!

ஆனால் இஸ்லாமோ அலைந்து.. திரிந்து.. நைந்து.. அடிபட்டு.. மிதிபட்டு.. பொருளீட்டுவது ஆணின் கடைமை என்றே கட்டாயமாக்கியது... பெண்டு பிள்ளைகளை வீட்டில் உட்காரவைத்து சோறூட்டுமாறு கட்டளையிடுகிறது.

வேலைக்குச் சென்று சம்பாதிக்கும் பெண்கள்தான் வேண்டும் என்று திருமணச் சந்தையிலே அவளது உழைப்பை உறிஞ்சி, மனைவியின் காசில் E.M.I. கட்டி, காரும் வீடுமாய் வாழக் கனவு காணும் அட்டைப் பூச்சிகளெல்லாம் பெண்ணுரிமைக் காவலர்களா...? அல்லது திருமணத்திற்குப் பின்னால் வேலைக்குப் போக வேண்டாம். எங்களது பெண்டு பிள்ளைகள் மீது ஒரு தூசு படியவும் அனுமதிக்க மாட்டோம் என்று தங்கத் தட்டில் தாங்கத் தயாராக இருக்கும் இஸ்லாமிய நீதி பெண்ணுரிமை பாதுகாக்கிறதா..??

பெண்களாகிய நாங்கள் இஸ்லாமில் பெற்றிருக்கும் உரிமைகள் போராட்டங்களாலும், தியாகங்களாலும் கிடைத்ததல்ல! இறைக் கட்டளையின் பேரில் இலகுவாக எங்கள் கரங்களில் தூக்கித் தரப்பட்டவை அவை.

இன்று ‘முத்தலாக்... முத்தலாக்... முத்தலாக்...’ என்று முச்சந்தியில் நின்று மூக்கு சிந்துபவர்கள்.. ‘குலா’ என்னும் உரிமையை இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ளதைப் பற்றி அறிவார்களா? ஆண்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று ஆங்காங்கே சலசலப்பு ஏற்படுமளவுக்கு முஸ்லிம் பெண்கள் இன்று இவ்வுரிமையை முழுமையாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்களே...? அதெல்லாம் இவர்களது காமாலைக் கண்களுக்குத் தெரியவில்லையா?

பெண்களை கணவன்கள் தலாக் விடாமலும், அதே நேரத்தில் அவர்களோடு வாழாமலும் இருந்து வஞ்சிப்பதை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது. கட்டிய மனைவியையே கண்டுகொள்ளாமல் வாழ்நாள் முழுவதும் வஞ்சிக்கும் இவர்கள், இன்று எங்களுக்காக முதலைக் கண்ணீர் வடிப்பது வேடிக்கையாகத்தான் இருக்கிறது. உங்கள் பெண்களுக்கும் சேர்த்து நாங்கள்தான் குரல் கொடுக்க வேண்டியுள்ளது போங்கள்!

பெண்களை அடித்துத் துன்புறுத்துவதையும், அவர்கள் தவறுகளே செய்திருந்தாலும் நான்கு பேருக்குத் தெரிவது போல் பொது இடங்களில் வைத்து அவர்களைக் கண்டிப்பதையும், திட்டுவதையும், கடுமையாகக் கண்டித்துள்ள இஸ்லாம், அதனை வாழ்வியல் நெறிமுறையாகவே கணவர்களுக்குக் கட்டாயமாக்கியுள்ளது. அறிவுரைகள் சொல்லும் சித்தாத்தங்களை நாம் அறிவோம். வாழ்வியல் நெறிமுறையாகவும், மார்க்கமாகவும் ஆக்கிய இஸ்லாமை முழுமையாகப் படியுங்கள். இஸ்லாமியச் சட்டங்களிலிருந்து இந்தியச் சட்டங்களை உருவாக்கக் கூட முன்வருவீர்கள்.

“வாடாத பூப்போன்ற மங்கை நல்லாள்
மணவாளன் இறந்தால் பின் மணத்தல் தீதோ
பாடாத தேனீக்கள் உலவாத் தென்றல்
பசியாத நல்வயிறும் பார்த்ததுண்டோ...”

என்று பாரதிதாசன் பாடியதைப் போல கணவனை இழந்தப் பெண்களை கைம்பெண்கள் எனக் கூறி பூவழித்து, பொட்டழித்து, மறுமணம் கூடாது என்று கூறி, மங்கள காரியங்களிலிருந்து இன்றும் ஒதுக்கி வைக்கிறீர்களே...?

ஒன்றைத் தெரிந்துகொள்ளுங்கள்...! நபிகள் நாயகம் {ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்} அவர்கள் மணமுடித்த பெண்களுள், ஆயிஷாவைத் தவிர மற்ற அனைவருமே கைம்பெண்கள்தான்... கணவனை இழந்த பெண்கள் அவர்களது இத்தா காலத்திற்குப் பின்னால் மறுமணம் செய்யும் உரிமை உண்டு என்று வார்த்தைகளால் மட்டுமல்ல! முஸ்லிம் பெண்களின் வாழ்க்கையிலும் இன்று பரவலாகப் பயன்படுத்தப்படுவதை நீங்கள் அறிந்ததேயில்லையா...?

ஆண்களை போலவே பெண்களுக்கும் கருத்துச் சுதந்திரம் இஸ்லாமில் நிறையவே உண்டு. பெண்களின் கருத்துக்களை அவள் பெண் என்பதற்காக இஸ்லாம் ஒருபோதும் புறந்தள்ளியதேயில்லை. ஆட்சியாளர்களையே எதிர்த்து வாதிட்ட பெண்களும், சிக்கலான பிரச்சனைகளில் ஆலோசனை வழங்கக் கூடிய பெண்களும் என, எண்ணற்ற உதாரணங்களை நாம் வரலாற்றில் காண முடிகிறது. அதனை வலியுறுத்தும் திருக்குர்ஆன் வசனங்களை {58:1-4,60:10-12 ஆகிய எண்களில்} நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

பொதுவாழ்விலும், சமூகச் சேவைகளிலும் ஈடுபடுவதில் இஸ்லாம் பெண்களுக்குத் தடை விதிக்கவில்லை என்பது பலரின் புருவத்தை உயர்த்தக்கூடும். நெருக்கடி காலங்களின்போதும், போர்க்களங்களிலும், காயமுற்றவர்களுக்கு மருத்துவ உதவி செய்தல், நீர் புகட்டுதல், உணவு வழங்குதல், தேவைப்பட்டால் எதிரிகளை எதிர்த்துக் களமாடுதல் எனப் பெரும்பணியாற்றிய பெண்களின் வரலாற்று உதாரணங்களைக் கொண்டவர்கள் நாங்கள்... இரும்புத்திரை கொண்டு இஸ்லாம் எங்களை அடக்கவுமில்லை...பயனற்றவர்கள் நாங்கள் எனப் புறக்கணிக்கப்படவுமில்லை.

வரதட்சணைக் கொடுமைகளுக்கு எதிராக சாட்டையைச் சுழற்ற முடியாதவர்கள் திருமணத்தின்போது மஹரை நிர்ணயித்துக் கேட்டுப் பெறும் முஸ்லிம் பெண்களின் உரிமைகளைப் பற்றி வாய் திறந்திருப்பார்களா...? மஹர் இஸ்லாமியப் பெண்களின் உரிமையில் ஒரு மணிமகுடம். ஒரு பொற்குவியலையே மஹராகப் பெற்றாலும் அதிலிருந்து ஒரு துரும்பும் கேட்கவோ, எடுக்கவோ கணவனுக்கு உரிமை இல்லை என்பது அவள் பெற்ற உரிமையையைப் பாதுகாக்கும் வேலி.

பெற்றோர் மற்றும் உறவினர்களின் சொத்துகளில் உரிமை... வீட்டுச்செலவுக்கு கணவன் பணம் தரவில்லையெனில் அவரது சட்டைப்பையில் இருந்து தேவையான அளவு எடுத்துக்கொளும் உரிமை...என அனைத்து வகையிலும் பெண்களுக்குப் பொருளாதாரப் பாதுகாப்பை இஸ்லாம் உறுதி செய்துள்ளது. இஸ்லாம் எனும் நந்தவனத்தில் பாதுகாப்பாக நாங்கள் இளைப்பாறுகிறோம்... “நந்தவனத்தில் நரிகளுக்கு என்ன வேலை?” என்பது எங்கள் நாகரிகமான கேள்வி.
ஆடைச் சுதந்திரம் என்ற பெயரிலே அரைகுறை ஆடைகளோடு பெண்களை இரசிக்கக் காத்திருக்கும் வல்லூறுகள்தான் - இஸ்லாம் எங்களை முக்காடிட்டு மறைக்கிறது என்று முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள்... முக்காடு எங்கள் உடலுக்கும், முகத்திற்கும்தானே தவிர மூளைக்கல்ல... என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.

மேலை நாடுகளில் வருடத்திற்கு சராசரியாக ஐம்பதாயிரம் நபர்கள் இஸ்லாமைத் தழுவுகின்றனராம்! அவர்களுள் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள்தானாம்!! அந்தப் பெண்களிடம் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகம் நடத்திய ஓர் ஆய்வில்... அவர்கள் இஸ்லாமைத் தழுவியதற்கான காரணம் பற்றிக் கேட்கப்பட்டபோது, “நாங்கள் விரும்பும், எங்களுக்குத் தேவையான பாதுகாப்பை இஸ்லாம்தான் எங்களுக்கு வழங்குகிறது.” என்று பதிலளித்துள்ளார்கள். அந்த பதில் இந்தியப் பெண்களிடமிருந்தும் ஒலிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.

முஸ்லிம் பெயர் தாங்கிப் பெண்களைத் தூண்டி விட்டு, சந்திலே சிந்து பாடலாம் என்றும், பற்ற வைத்துவிட்டு எரியும் தணலிலே குளிர் காயலாம் என்றும் இலவு காத்த கிளியாக உளவு வேலை பார்த்துக் காத்திருக்கும் உங்கள் தந்திரம் எங்களிடம் பலிக்காது.

நாங்கள் வைரங்கள்... விலைமதிக்க முடியாதவர்கள் என்று பொத்திப் பாதுகாக்கப்பட்ட வைரங்கள்...! அதே நேரத்தில் உங்கள் சித்து வேலைகளை முளையிலேயே அறுத்தெறியும் உறுதி மிக்க வைரங்கள்... இறைமறையும், நபிமொழியும் என்ற இரு கூர்முனைகளால் பட்டை தீட்டப்பட்ட வைரங்கள்... வைரத்தை வைரத்தால் மட்டுமே அறுக்க முடியும்... உங்களுடைய சித்தாத்தங்களும், சட்டங்களும் வைரங்கள் அல்ல... கூழாங்கற்கள்.... அவற்றைக் கொண்டு குளத்தில் கல்லெறிந்து சிறு சிறு சலசலப்புகளைத்தான் ஏற்படுத்த முடியுமேயன்றி பேரழிவு உருவாக்க ஒரு யுகமானாலும் உங்களால் முடியாது. காரணம், எங்கள் இதயங்களில் நிறைந்திருப்பது மனிதச் சட்டங்கள் அல்ல... இறைச்சட்டங்கள்... அந்த இறைச்சட்டங்கள் எங்கள் இதயத்தில் இருக்கும் வரை உங்களது அடுத்த அஸ்திரம் பிரம்மாஸ்திரமாய் இருந்தாலும் ஒரு அணுவையும் கூட எங்களிடம் இருந்து நீங்கள் பெயர்த்தெடுக்க முடியாது.

நன்றி : Kayalpatnam.com






1 ஒரு ஆறுதல் வார்த்தை, ஒருவரின் மறுமை வாழ்வையே மாற்றக்கூடும்.

எவரையும் குறைத்து மதிப்பிடாதீர்கள். நீங்கள் காட்டும் ஒரு சிறு கருணை அல்லது சொல்லும் ஒரு ஆறுதல் வார்த்தை, ஒருவரின் மறுமை வாழ்வையே மாற்றக்கூடும்.

2 ரமலானை வரவேற்கும் துஆ

நோன்பும் இரவுத் தொழுகையும் நிறைவேற்றும் சக்தியை எங்களுக்கு அருள்வாயாக. இம்மாதத்தை எங்கள் உள்ளங்களைத் தூய்மைப்படுத்தும் மாதமாகவும், தவறான எண்ணங்களை அழிக்கும் மாதமாகவும் ஆக்குவாயாக.

3 ரமலான் நோன்பின் 10 முக்கிய நோக்கங்கள்

அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பிக்கிறேன். நாம் அனைவரும் இந்த உலகிற்கு அனுப்பப்பட்டதன் நோக்கம் அல்லாஹ்வை வணங்குவதற்காக மட்டுமே. இந்த வழிபாடுகளில் மிக உயர்ந்தது, அல்லாஹ் சட்டமாக்கிய கடமைகளை நிறைவேற்றுவதாகும். நோன்பு என்பது ஒரு தனித்துவமான வணக்கம். ஏனெனில், இது 'ஒன்றைச் செய்வதால்' கிடைக்கும் நன்மையல்ல, மாறாக அல்லாஹ்வுக்காக 'சிலவற்றைத் தவிர்ப்பதால்' (உணவு, நீர், இச்சை) கிடைக்கும் நன்மையாகும்.

4 அவர்களும் சதித் திட்டங்களை தீட்டினார்கள். அல்லாஹ்வும் திட்டங்களை தீட்டினான் - 2 அற்புத உதாரணங்கள்

அல்குர்ஆன் கூறும் இரண்டு சரிதைகள். இரண்டுமே பேரற்புதம். 1. யூசுஃப் (அலை). 2. மூஸா (அலை). இரண்டு சரிதைகளுக்கும் இடையிலான அற்புதமான ஒப்பீட்டை அல்குர்ஆன் அழகாகச் சொல்லித் தருகிறது.

5 அல்லாஹ் நம்மை நேசிக்கிறானா இல்லையா என்பதை நாம் எப்படி நிர்ணயிப்பது?

பிறகு நான் கருதினேன்: "நான் இன்னும் ஏமாற்றத்தைத் தவிர்ப்பதற்குத் தேடலை நிறுத்திவிட்டு, என் நற்காரியங்களைப் பார்த்தேன், அவைகளில் பெரும்பாலும் சோம்பல், பொடுபோக்கு, குறைபாடுகள் மற்றும் பாவங்கள் கலந்திருப்பதைக் கண்டேன்.

6 எல்லா பிரச்சனைக்கும் தீர்வு - நடமாடும் குர்ஆனாக நாம் மாறவேண்டும் -
7 காசா! ஒரு துன்பம் மகிழ்ச்சியானது
8 தடுமாறாத குதிரை இல்லை. சறுக்காத பாதம் இல்லை.
9 ︎நேர்மை என்பது...
10 செய்யும் உதவிகளுக்காக, மனிதர்களின் பாராட்டை எதிர்பார்க்க வேண்டாம்
11 போட்டோ: பாலஸ்தீன குழந்தைகள் மீது இஸ்ரேலின் போர்
12 பாலஸ்தீனத்தின் பெருமை
13 திருச்சி சகோதரர்களின் கவனத்திற்கு: சோழ இளவரசி குந்தவை நாச்சியார்
14 இஸ்லாமிய வங்கி இயலின் தந்தை மறைந்தார்!
15 உணரப் படாத தீமை சினிமா
16 நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - முன்னாள் கன்னியாஸ்திரி!
17 ஆறுதல் சொல்லச் சென்றோர் ஆறுதல் பெற்றுத் திரும்பிய அதிசயம்!
18 விரக்தி விஷத்தை விட கொடியது
19 பொறுத்தோம்! ஆனால் பொறுக்கமாட்டோம் யா ரஸூலுல்லாஹ்!
20 வாழ்க்கைக்கான பாடம் பாடப்புத்தகத்தில் அல்ல; போதிப்பவர்களின் வாழ்க்கையில் இருக்கிறது.
21 நரக மாளிகை - தாய் மண்ணின் மீது பற்று கொண்ட ஒவ்வொரு இந்தியனும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்!
22 இங்கிலாந்தில் தப்லீக் ஜமாத் அனுபவங்கள்
23 அந்தப் பெண்களாக நாம்...
24 தன்னிகரற்ற தமிழகத்து உலமாபெருமக்கள் வரிசையில்
25 2021 ல் தமிழகம் இழந்த ஆலிம்கள்:
26 இமாம் அபுல் ஹஸன் நத்வி ரஹிமஹுல்லாஹ்
27 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்ட 10 துஆக்கள்,
28 நோன்பும் மனக்கட்டுப்பாடும்
29 இவ்வளவு முரண்பாடுகளுடன் இறைவனிடம் கையேந்த வெக்கமாயில்ல!?
30 ஐரோப்பாவின் பிரபல்யமான அறிவுத் திருட்டுகள்.....
31 திருமணப் பதிவேடு எழுதுவதில் அக்கறையின்மை......!
32 நீ வரைந்த பாதை வழியே வாழ்க்கை ஓடுவதில்லை
33 முதியோர் பராமரிப்பு – இஸ்லாமிய கண்ணோட்டம்
34 இளையான்குடியில் உருது மக்கள்
35 கொண்டாடப்பட வேண்டிய ஆளுமைகள் : ஈரோடு மீ. கிபாயத்துல்லாஹ் பாகவி
36 மரணம் நோக்கி...
37 ஸிமம் தஃப்தரி (ZIMEM DEFTERI) - ஏழைகளின் கடனையடைத்தல்
38 மௌலானா சாத்(தா.ப) அவர்களுக்காக ஜரோப்பாவிலுள்ள ஒருதாயியின் அன்பான செய்தி
39 பேசாமல் இரு, கதவை அல்லாஹ் எப்படித் திறக்கிறான் என்று பார்
40 (புத்தாண்டு) கொண்டாட்டங்களை விட மனித உயிர்கள் அற்பமானவையா..?
41 அதுவென்ன சுன்னத் வல் ஜமாஅத்?
42 இறந்த பின் வாழ சந்தர்ப்பம்.
43 இங்கிலாந்து மசூதி வீடியோ சொல்லும் உண்மைகள்!
44 பாரதியும் இஸ்லாமும் - மாலன்
45 பயணியின் வாழ்க்கை - பேரா. ஹஸனீ
46 கண்ணாடி வாழ்கை - பேரா. ஹஸனீ
47 ஆடை அவிழ்ப்பு அழகாகுமா......
48 நபிகளாரும் காட்சிப்படுத்துதலும் (Visualization)
49 அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 02
50 அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 01
51 பெண்களிடம் மாற்றம் வேண்டும்
52 எம் சமூகம் இந்த உலகை ஆளும்
53 தவிர்ப்போம் நாற்காலி தொழுகைகளை...
54 வாய்ப்புகளை நழுவ விடாதீர்கள்!
55 பிரான்சால் நாடுகடத்தப் பட்டு பின்னர் பாராட்டப்பட்ட போராளி
56 மனம் திறந்த மடல் - மனம் திருந்திய தொண்டன்
57 ரமளானில் சமூக நலனுக்காக நாம் செய்ய வேண்டிய துஆ
58 புனித மிஃராஜ் இரவு அமல்கள்!
59 புனிதமான ரஜப் மாதத்தின் மிஃராஜ் இரவின் சிறப்புகள்
60 மனைவிக்காக துஆ செய்வதும் ஒரு சுன்னத்!
61 மனித உடம்பின் 99 இரகசியங்கள் !
62 தஹஜ்ஜூத் தொழுகையின் சிறப்பு
63 ஒவ்வொரு முஸ்லீமும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை
64 எது வணக்கம்..?
65 விஞ்ஞானிகளுக்கெல்லாம்- விஞ்ஞானி.... அல்ஹாசன்விஞ்ஞானி!
66 அன்பு மனைவிகளுக்கு ! அருமையான உபதேசங்கள்!!
67 தமிழ்க் கலாச்சாரத்தை ஆதரிப்போம்.இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பாதுகாப்போம்.
68 இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்)
69 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 5)
70 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 4)
71 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 3)
72 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 2)
73 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 1)
74 தாயாருக்கு மருந்து வாங்க பணமில்லை ஆனாலும் வேண்டாம் இந்த நான்கு கோடி - ஜுனைத் ஜம்சேத்
75 மீலாது விழா கொண்டாடுவது கூடுமா?
76 இஸ்லாத்தில் பெண்களின் சிறப்பு:
77 நாட்டங்கள் நிறைவேற ஸலாத்துன் நாரிய்யா ஓதுவோம்
78 அறிவமுதூட்டிய எங்கள் ஆன்மீக ஆசான் கமாலுத்தீன் ஹள்ரத் கிப்லா அவர்கள்......பற்றிய ஒர் மலரும் நினைவு
79 ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!
80 மனைவியை_நேசிங்கள்..
81 தாயுடன் வாழும் வாய்ப்புப் பெற்றவர்களே!
82 அம்மா! அம்மா!
83 அந்த_ஏழைப்_பெண்ணின்_ஜகாத்‬!
84 இந்திய சுதந்திர போராட்ட நாயகர்கள்
85 செருப்புத் தொழிலாளியின் ஹஜ் பயணம்
86 இமாம்களும் மத்கபுகளும்.
87 பெற்றோர்க்கு மரியாதை செய்யுங்கள்.
88 சொர்க்கத்தில் முதலில் நுழையும் ஏழைப் பெண்மணி..!
89 பராஅத் இரவின் சிறப்புகள்
90 வாப்பா!
91 ஆண்ட்ராய்டு போனும் அண்ணலாரின் உம்மத்தும்!
92 கிராமமோ... நகரமோ... அவர்களை கண்காணித்த​படி இருப்பதே பாதுகாப்பது
93 கருத்துக்குக் கருத்தால் பதிலளிப்போம்!
94 என் கேள்விக்கு இறைவனின் பதில்!
95 அரிய பண்புகளைக் கொண்ட அல்கமா (ரலி)வின் குழு
96 இதிலென்ன வெட்கம்?
97 தாய் மடி தேடும் குழந்தைகள்: (வல்லூரின் கரங்களில் நாம்)
98 பழையன கழிதலும் புதியன புகுதலும்
99 நொண்டிக் குதிரைக்குச் சறுக்கியதே சாக்கு !
100 கற்பில் கவனம் தேவை
101 வம்புக்கு இழுப்பதில் என்ன சுகம் இவர்களுக்கு?
102 புக்கூரும் (காலை நேரமும்) இறையருளும்
103 இஸ்திஃகாராவின் சிறப்பு
104 தஜ்ஜால் பற்றிய முன்னறிவிப்பும் பாதுகாப்பிற்கான வழிமுறையும்.
105 இஸ்லாத்தின் பார்வையில் கோபம்!!!
106 உங்களையும் தாக்கலாம் இந்த நோய்!
107 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-3/3)
108 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-2/3)
109 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-1/3)
110 ஏழு குணங்களை தவிர்ந்து கொள்ளுங்கள்! நிம்மதி பெறுங்கள்!
111 கணவன் மனைவி – அற்புதமான விஷயங்கள்.
112 வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ்
113 எச்சரிக்கை: இப்போதாவது விழித்துக்கொள்வோம்.
114 இறுக்கமும் இரக்கமும்
115 இஷா தொழுகையும் இரவு உணவும்
116 கழிவறைகளில் கிப்லா முன்னோக்கப்பட கூடாது
117 மனிதன் உயிர்வாழ இன்றியமையாதது
118 தினமணி தலையங்கம்: 'இறைவா, எங்கே போகிறோம்?'
119 இறைவணக்கமும் இயலாமையும் (சேரில் அமர்ந்து தொழலாமா?)
120 மரணம் நம் கண்களை தழுவட்டுமே
121 முஸ்லிம் சமூகத்தின் வீட்டுமொழியாக வேண்டிய மொழி அறபு மொழி
122 பெயர்களை நினைவில் வைப்போம்
123 ஊடகங்கள் பரப்பிவரும் முன்ஜென்மபித்தலாட்டம்
124 இறை பிரியத்தோடு உலகில் தலைநிமிர்ந்து வாழ
125 ஹிஜ்ரீ பிறந்த வரலாறு
126 மனிதனுக்கான சுவனத்தை பரிந்துரைக்கும் இரண்டு விடயம்
127 சீனாவில் இஸ்லாம் அறிமுகம்
128 ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் 2/2)
129 முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள் !...
130 ஒரு 2.5 கதை
131 ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் ½)
132 இம்ரானா விவகாரம் மீடியாக்கள் நடத்திய மானபங்கம்
133 உலகத்தில் யாருமே ஏழை இல்லை
134 பராஅத் இரவு –நாம் பெற வேண்டிய படிப்பினைகள்பகைமையை முடிவுக்கு கொண்டு வருவோம்
135 வ.உ.சி க்கு 10 லட்சம் ரூபாய்க்கு கப்பல் வாங்கி கொடுத்த பக்கீர் முஹம்மதுவை தெரியுமா?
136 நம் துஆக்கள் ஏன் கபூலாவதில்லை?
137 நபிமொழியை மெய்ப்பித்தது இன்றைய விஞ்ஞானம்!!!
138 குறைகளை மறைத்தல்
139 உலகத்தூதர் கூறிய உண்மை சகோதரத்துவம்!
140 நல்ல பெண்மணி
141 பிஸ்மில்லாஹ் சொல்லியாச்சா...? பாரம்பரியமும் நாகரீகமும்
142 💥 யார் அந்த மாமனிதர்..?
143 ஈர்ப்பை விதைப்போம்!
144 ஒரே ஒரு கேள்வி 10 விதமான அற்புதமான பதில்கள்
145 யார் இந்த துலுக்கன்?
146 ஷஹீத் இமாம் ஹஸனுல் பன்னாவின் 10 அறிவுரைகள்
147 இவ்வுலகிலும் மறு உலகிலும் தன்னிறைவு தரக்கூடிய விஷயங்கள்
148 முஸ்லிம் உலகம் இஸ்லாத்தை தொலைத்து விட்டதா ?
149 உலமாக்களின் தகுதி… அந்தக் காலம் எப்போது வரும்
150 நிம்மதி - சிறுகதை
151 வாழும் இறைநேசர்களிடம் வாழ்த்துப் பெறுவோம் !
152    ஓ...மானிடனே,என்னை தெரிகிறதா?
153 சுலைஹாவின் தவறை உணர்த்திய கணவனின் கடிதம்!
154 நபி வழி வெற்றிக்கு வழி இஸ்லாத்தில் தெரிந்து கொள்ளவேண்டியவை.
155  வாழ்க்கை வாழ்வதற்கே !
156 உம்மதினரின் மீது பெருமானாரின் அளவு கடந்த அன்பு
157 விற்கப்படும் மார்க்கம்
158 அழகிய ஐம்பெருங் குணங்கள் !
159 தன்னம்பிக்கை கொள்ளுங்கள் !
160 பார்வைகள் பலவிதம் !
161 நேர மேலாண்மை / திட்டமிடல்
162 பள்ளிக்கு அருகில் வாழ்வோம்
163 எச்சரிக்கை: தொலைக்காட்சியில் போட்டி என்ற பெயரில் மோசடி
164 அந்நியப் பெண்ணுடன் ஆண் - அந்நிய ஆணுடன் பெண் கைகுலுக்கலாமா?
165 தந்தைகளே! கவனியுங்கள்
166 வரலாறு புகட்டும் பாடம்
167 அல்குர்ஆன் என்னும் மதுரம்
168 முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன?
169 ஊருக்குள் விடாதீர்..விளம்பரமல்ல விபரீதம்!!
170 கஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்!
171 நாம் தான் முயல வேண்டும்.
172 குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள்!
173 காசாகும் குடும்ப அந்தரங்கங்கள். எச்சரிக்கை!!
174 கற்பா? கல்லூரியா?
175 கசாப்புத் தொழில் சிறந்தது....
176 சுவர்க்கத்தை பரிசாக பெற்றுத் தரும் நற்கிரியைகள்
177 நான் ஏன் முஸ்லிம் ஆனேன் ?
178 ரகசிய கேமராக்கள்: பெண்களே எச்சரிக்கை!
179 இருளை நோக்கிச்செல்லும் வெளிச்சமுள்ள சமுதாயம்! தீர்வு என்ன? எப்படி செயல்படுத்துவது?
180 செல்வந்தர் மகனுக்கு கூறிய மரண சாசனம். (சிறுகதை)
181 மேற்கத்திய கலாச்சாரம் TO இஸ்லாம்- முஸ்லிம் பெண்ணியவாதியின் பயணம்
182 என் ஹிஜாப் என் உரிமை!!!
183 சபைகளில் கண்ணியம் தவறும் கணவர்கள்
184 முகமாகும் பெண்கள்!!
185 நற்குணமே இஸ்லாத்தின் அடையாளமாகும்!
186 இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்
187 உங்கள் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது?!
188 அன்புச் செல்வங்களுக்கு....(நமக்கும்) - கேள்வி பதில்கள்
189 செல்போன்கள்... ஜாக்கிரதை!
190 இணையதளத்தில் கனவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்
191 வெற்றியடைய 10 சுலபமான வழிகள் !
192 ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கைப் பயணம்!
193 மிஸ்டு காலா... பெண்களே எச்சரிக்கை!
194 ஈமானே-உன் விலையென்ன?
195 இஸ்லாமியரும்-எதிர் நீச்சலும்
196 நாளை நமதா? - ஏ.பி. முஹம்மது அலி ஐ.பி.எஸ். (ஓய்வு)
197 அமைதியாக இருந்தால் அமைதி வருமா ?
198 அமர்ந்தது போதும் எழுந்து வாருங்கள் பயணிப்போம்
199 பயங்கரவாதிகள் எல்லாம் முஸ்லிம்களா?
200 ஒளிரட்டும் பண்மைமிகு மீலாது விழாக்கள் ! ஒழியட்டும் வன்மையிலிருந்து மீளாத விழாக்கள் !!
201 கட்டாய மத மாற்றத்திற்கு இஸ்லாத்தில் இடமில்லை
202 மக்தப் மதரஸா ... ஒரு அமைதிப் புரட்சி
203 யுக முடிவின் இறுதிக்கட்டமா நெருங்கிவிட்டது?
204 "ஜம் ஜம்” தண்ணீர் தோன்றிய வரலாறு
205 மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் :
206 ஹிஜ்ரீ பிறந்த தியாகங்களின் வரலாறு !
207 தாமிரபரணியை உறிஞ்ச வரும் 'பெப்சி' நிறுவன ஆலை
208 பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்க்க பெற்றோர்களுக்கு சில அழகிய வழி முறைகள்:
209 அறிவைத் தேடுவோம்!
210 தமிழ் மண்ணில் வேர் கொள்ள முடியவில்லை!
211 ஒரு மகன் தன் அப்பாவைப்பற்றி என்ன நினைக்கிறான்?
212 பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? ஏதிர்த்தாரா?
213 இந்திய முஸ்லிம்களின் முதல் எதிரி அல் காய்தா:
214 பிள்ளையாரப்பா பெரியப்பா,புத்திமதியை சொல்லப்பா
215 அவ்வளவு ஈமானா? அல்லாஹ்வின் மேல் அவ்வளவு நம்பிக்கையா?
216 என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்!
217 சமூக நலத்திற்கு உகந்த சட்டம் எது?
218 “வேர்கள்” வரலாறு!
219 கருத்து வேறுபாடு சம்பந்தமாக சட்டங்கள்
220 என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்!
221 கலீல் அஹ்மத் கீரனூரி (ரஹ்) அவர்களின் அல்அஃப்லாக் வல்அவ்காத் நூல் அறிமுகம்
222 மனிதனின் தேவை ! – மன அமைதி
223 யா அல்லாஹ் ரஜப் ஷஃபான் மாதங்களில் எங்களுக்கு அருள் புரிவாயாக. இன்னும் ரமளானை அடையச் செய்வாயாக
224 அண்ணல் நபிகளாரின் பொன் மொழிகள்-மெளனம் கொள்ளுங்கள்.
225 அல்லாஹ் அறிவுறுத்தும் அமுதமொழிகள்
226 பிரார்த்தனைகள் ஏன் ஏற்கப்படவில்லை?
227 மஸ்ஜித் (பள்ளிவாசல்)
228 பேச்சு,மெளனம்
229 ஜனாஸா - மைய்யத்
230 கிலாஃஃபா மறைவு: இந்தியா தடுமாறியது.. எகிப்து கவலையுற்றது
231 ஹஜ் யாத்திரை - சில சிந்தனைகள் !!!
232 ஜெனரல் எர்வின் ரோமல் கண்ட காலித் இப்னு வலீத் (ரலி )
233 முஸ்லிம்களை ஏன் பயங்கரவாதிகளாக சித்தரிக்க முற்படுகிறார்கள்?
234 வெளிநாடுகளில் வேலை செய்யும் என் சகோதரர்களே!
235 அரிஸ்டாட்டில் முதல் நியூட்டன் வரை
236 இறை நேசர்கள்- தொடரும் விளக்கம்
237 வலிமார்கள் என்பவர்கள் யார்?
238 காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் ஸாஹிப் அவர்களின் பதில் சொல்லும் பாங்கு
239 அமைதியாக இருந்தால் அமைதி வருமா ?
240 மனித குல விரோதி
241 எனது பெயர் ஜனாஸா!
242 பாபரா ராமர் கோயிலை இடித்திருப்பார்???
243 கடன் கொடுப்போரும் வாங்குவோரும் நடந்து கொள்ள வேண்டிய முறை
244 மோடியை விட்டு 2002 ஏன் விலகாது?
245 இஸ்லாம் வாள் முனையில் பரப்பப்பட்டதா?
246 வதைக்கும் விவாகரத்து வழக்குகள்
247 ஹிந்து - குறித்து இஸ்லாம்!
248 தமிழரும் இசுலாமியரும்
249 குர்ஆன் மக்தப் - காலத்தின் தேவை!
250 இஸ்லாம் மிருக வதையை தூண்டுகின்றதா?
251 மில்லர் கண்ட குர்ஆனின் அதிசயங்கள்
252 முஹம்மது(ஸல்) எனக்கு நடுநிலையானவர்
253 முஸ்லிமல்லாதவர்களுக்கு ஒரு கடிதம்
254 அயோத்தி ராமன் அழுகிறான் -கவிஞர் வைரமுத்து
255 துருக்கி மன்னரின் விலை 10 பொற்காசுகளே!
256 கற்பனைகளும் இஸ்லாமும்
257 வணங்கி மகிழ்கிறோம் - ஆச்சிரியம் ஆனால் உண்மை.
258 சுத்தம் பேணுவோம்,நுரையீரலை காப்போம்!
259 நபிகள் நாயகத்தை வசைபாடிப் படம் எடுத்தவர்....
260 மது ஒரு பெரும் பாவம்
261 மகாத்மா காந்தி, பெரியார் சந்திப்பு
262 பெற்றோர்களைப் பேணுவோம்!
263 யார் இவர்? பேச்சாளர்..போர் வீரர்..இராணுவ தலைவர்..
264 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-3)
265 உடல் உறுப்புகளை தானம் செய்வதுபற்றி இஸ்லாம்
266 தவ்பா என்னும் பாவமன்னிப்பின் சிறப்புகள்!
267 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-2)
268 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-1)
269 இதயத்தை கவனமா பாத்துக்கங்க!
270 இமாம்களை கண்ணியம் செய்வோம்!
271 உமர் (ரலி) அவர்களுக்கு நண்பர்கள் எழுதிய கடிதம்.
272 மறுமை வாழ்வை நேசிப்போம்!
273 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 8 - முடிவு)
274 சொல்லின் செல்வர் எம்.எம். பீர் முஹம்மது சாகிப்
275 சுதேசி சிந்தனைகள்.......
276 உள்ளத்தை தூய்மை படுத்துவோம்!
277 கல்வி நல்லோர்களின் சொத்து!
278 மனிதர்களுக்கு மீன்கள் சொல்லும் பாடம்!
279 வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 1)
280 வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 2)
281 பாராளுமன்ற தேர்தலும் முஸ்லிம்களின் நிலைபாடும்!
282 தொடர்பூடக ஒழுக்கவியல்: அல்குர்ஆனின் வழிகாட்டல்
283 உண்ணுவதிலும்,குடிப்பதிலும் தூய்மையை பேணுவோம்!
284 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 7)
285 செயற்கைக் கருத்தரிப்பும் வாடகைத் தாயும்!
286 அறிவைத் தேடுவோம்!
287 ஆக்காதீர் ஆசனங்களாக
288 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 5, 6)
289 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 3)
290 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 4)
291 மோதினார் அப்பாவின் கதை அல்ல நிஜம்
292 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 1)
293 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 2)
294 ஸுபுஹ் தொழுகையும் நாமும் ???
295 ஆஸாத் விசாவா?உஷார்,உஷார்!
296 அதிகாலை நேரமும் சுபுஹுத் தொழுகையும்
297 தன்பக்கமா? தன்னிகரற்ற கொள்கையின் பக்கமா?
298 சமுதாய தலைவர்களே சிந்தியுங்கள்!
299 படிப்பினையூட்டும் ஒரு நிகழ்வு!
300 உபதேசம் என்பது உலமாக்களின் தனி உடைமையா?
301 பெண் குழந்தை ஒரு பாக்கியம்
302 நான் ஒருத்தனிடம் ஏமாந்தேன் நீ என்னிடம் ஏமாறு என்பதே மல்டி லெவல் மார்கெட்டிங் - AMWAY Products
303 டாக்டர் ஜாகீர் ஹுசைன் – கல்வியுடன் சுகாதாரத்தையும், ஒழுக்கத்தையும் கற்றுத்தந்தவர்
304 வெப்கேமிரா...எச்சரிக்கை...!
305 மனமகிழ் குடும்பம்:நல்லதோர் குடும்பத்தலைவி!
306 மனமகிழ் குடும்பம்: நல்லதோர் குடும்பத் தலைவன்
307 விசுவரூபம் ஒரு விளக்கம்
308 விஸ்வரூபமும் முஸ்லீம்களும்.
309 மதுவை ஒழிப்போம்,மாதுவை காப்போம்!
310 வாழ்க்கைக்காக ஒரு மரணம்
311 கண்ணாடிகள் கவனம்
312 360 மூட்டுக்கள் (எலும்பு இணைப்புக்கள்) Bone Joints..! ( 7-ம் நூற்றாண்டு முன்னறிவிப்பு )
313 ஷைத்தானின் விரோதிகளும், நண்பர்களும்
314 ஹஜ்ரத் அலி (ரலி) அவர்களின் அறிவுரைகள்
315 துஆக்கள் ஏன் ஒப்புக்கொள்ளப் படுவதில்லை?
316 சிந்திக்க தவறும் ஆண்களுக்கு மட்டும்
317 கருத்து வேறுபாடுகள்.
318 நபியவர்கள் எங்கள் உயிருக்கு மேல்
319 ஹிஜாபுக்குப்பின் கண்ட வாழ்க்கை
320 யூத கிருத்துவ வக்கிரப்படமும் விமர்சனங்களை வென்ற விண்புகழ் வேந்தரும்
321 தஜ்ஜால் Vs டெலிவிஷன்
322 ஓ! என் இளைய சமுதாயமே!
323 இதயத்தை பாதுகாக்க யோசனைகள்!
324 வீண் செலவு வேண்டாமே