Tamil Islamic Media

அவ்வளவு ஈமானா? அல்லாஹ்வின் மேல் அவ்வளவு நம்பிக்கையா?

தேனி மாவட்டம், தேவாரம் என்ற ஊரில் "ரஹ்மத் பெண்கள் நல மத்ரஸா & எத்தீம்கானா (பதிவு செய்யப்பட்ட அறக்கடளை.)" இயங்குவதாகவும், அதை "இஸ்லாத்தில் இணைந்த ஒர் பெண்" நடத்துவதாகவும் சுமார் 50 பெண்கள் 

அங்கு தங்கி படிப்பதாகவும் அவர்கள் சாப்பிட உணவு இருந்தால் சாப்பிடுவார்களாம், இல்லாவிட்டால் "அல்லாஹ் தருவான்" என மறுநாள் நோம்பு வைத்துக்கொள்வார்களாம் என்று கேள்விப்பட்டு "படைத்த அல்லாஹ்வின் மேல் இவ்வளவு நம்பிக்கையா" என ஆச்சரியம் அடைந்தேன்.

அந்தப்பகுதியிலிருக்கும் நண்பர் ஒருவர், நீண்ட நாட்களாக அழைத்துக் கொண்டிருந்ததாலும், அவரைப் போய்ப் பார்த்து விட்டு, அப்படியே ரஹ்மத் பெண்கள் நல மத்ரஸா & எத்தீம்கானாவையும் பார்த்துவிட்டு வரலாமே என்றும் போயிருந்தேன்.

நான் கேள்விப்பட்டது அவ்வளவும் உண்மை. அவர்களின் நிலைமை, இருப்பிடம் ஆகியவற்றை பார்த்ததும் என் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது. அடுத்தடுத்த 3 பழைய வாடகை கட்டிடங்களில் தங்கி இருக்கிறார்கள். சுற்றிலும் சாக்கடை ஓடுகிறது. சமையலறை மிகவும் சிறிய இடம். அதில் சமைத்து எடுத்து போய் பறிமாறனும்.

நான் அங்கிருக்கம்போதே 7 வயதுக்குட்பட்ட 3 பெண்பிள்ளைகள் காய்ச்சல், சளி என்று டாக்டரிடம் போய்விட்டு கைகளில் மருந்து மாத்திரைகளுடன் வந்ததை பார்த்தேன்.

அந்த "ரஹ்மத் பெண்கள் நல மத்ரஸா & எத்தீம்கானாவை" நடத்துவது 27 வருடங்களுக்கு முன் இஸ்லாத்தில் இணைந்த ஒர் பெண். திருமணம் செய்துகொள்ளவில்லை. வயது சுமார் 50க்கு மேல். எத்தீம் பெண்களுக்காக வாழ்க்கையை தியாகம் செய்து கொண்டிருக்கிறார்.

45 மாணவிகள் உள்ளனர்.
1. M.Com. முடித்துவிட்டு, இன்ஷா அல்லாஹ் M.Phil. ஒரு பெண் படிக்க இருக்கிறார்.
2. M.Sc., IInd year இன்ஷா அல்லாஹ் ஒரு பெண் படிக்க இருக்கிறார்.
3. B.Sc., IT அங்கு வேலை செய்யு பெண்ணின் மகன் உத்தமபாளையத்தில் படிக்கிறார்.
4. B.E. Engineering ஒரு பையன் செங்கல்பட்டில் படிக்கிறார்.
5. B.A. English Literature முடித்துவிட்டு, இன்ஷா அல்லாஹ் M.A. English Literature ஒரு பெண் படிக்க இருக்கிறார்.
6. B.Sc. Microbiology முடித்துவிட்டு, இன்ஷா அல்லாஹ் Nursing ஒரு பெண் படிக்க இருக்கிறார்.
7. +2 முடித்துவிட்டு இன்ஷா அல்லாஹ் Nursing ஒரு பெண் படிக்க இருக்கிறார்.
8. கீழக்கரையில் பாலிடெக்னிக்கில் இரண்டாவது வருடம் ஒரு பையன் படிக்கிறார்.
9. June 21, 2014 அன்று அவர்களுடன் பேசியபோது, அவர்கள் பொறுப்பில் வளர்ந்த பையன், தற்பொழுது B.Tech
படித்து முடித்துவிட்டு வந்துள்ளார். அவருக்கு வேலை தேவை.

4 பேர் இவ்வருடம் +2 போகிறார்கள்.
10 வயதுக்கு உட்பட்ட 15 பெண் பிள்ளைகள் உள்ளார்கள்.
சமீபத்தில் 3 வயது பெண் குழந்தை ஒன்று வந்து சேர்நதுள்ளதாக சொன்னார்கள்.

ஒன்றிலிருந்து 10ஆவதுக்குள் படிக்கும் பெண் பிள்ளைகள் 10 பேர் உள்ளார்கள்.

10ஆம் வகுப்பிலிருந்து கல்லூரிவரை படிக்கும் பெண் பிள்ளைகள் 10 பேர் உள்ளார்கள்.

5ஆவதுக்குள் படிக்கும் பெண் பிள்ளைகளின் யூனிஃபார்மை துவைத்து அய(ர்)ன் செய்துதான் அணிந்து வரணும் எனபதால், துவைத்து அய(ர்)ன் செய்ய ஒரு உடைக்கு ருபாய் 4 கொடுக்கிறார்கள். (வெளியில் ரூபாய் 10).

பழைய மாணவர்கள் சிறு வயதிலிருந்து உள்ளவர்கள் 3 அல்லது 4 பேர்தான். அவர்கள் காலேஜ் ஹாஸ்டலில் தங்கி படிக்கிறார்கள். புதிதாக சிறுவர்களை சேர்ப்பதில்லை. பெண்பிள்ளைகள் மட்டும்தான்.

அல்லாஹ் உதவியால் கிட்டத்தட்ட 2 கிரவுன்ட் நிலம் அதே ஊரில் (மூணாறு மலைக்கு எதிரில்) வாங்கி உள்ளார்கள். இன்ஷா அல்லாஹ் அதில் கட்டிடம் கட்டணும் என்றார்கள். அந்த இடத்தையும் போய்ப்பார்த்தோம். அங்கு கட்டிடம் கட்டுவதற்கு அல்லாஹ் உதவியால் நம் சகோதர சகோதரிகளின் அன்பளிப்புகளும் பங்களிப்புகள






No articles in this category...