Tamil Islamic Media

வெளிநாடுகளில் வேலை செய்யும் என் சகோதரர்களே!

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்    

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹ்

பாசத்திற்குரிய அயல்நாட்டில்  வாழும்  இஸ்லாமிய சகோதரர்களே உங்களில் ஒருவனாக அரபு நாடுகளில் ஒன்றான அரபு அமீரகத்தில் ஷார்ஜாஹ், துபை, ஃபுஜைராஹ் போன்ற நகரங்களில் பத்து ஆண்டு காலங்களை  கழித்தவன் என்ற அனுபவத்திலும் நம் சகோதரர்கள் மேல் உள்ள அக்கறையினாலும் ஒரு சில உண்மைகளையும் அதற்குரிய பரிகாரங்களையும்  உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.அனைவரும் அவசியம் படியுங்கள்.


சகோதரர்களே நாம் வாழும் இந்த வாழ்க்கை அல்லாஹ் கொடுத்த மிகப் பெரிய அருட்கொடை என்பதை நாம் அறிவோம்.இங்கே எதை விளையச் செய்கிறோமோ அதைத்தான் நாளை மறுமையில் அறுவடை செய்ய  இருக்கின்றோம்.இவ்வுலகம் மறுமையின் விளை நிலமாக இருக்கின்றது.


நல்ல அமல்களை அதிகமதிகம் செய்ய முடிகின்ற வயது வாலிப வயதுதான்.இந்த வாலிபப் பருவத்தை நாம் உலக விஷயங்களுக்காகவும்  உலக சம்பாத்தியத்திற்காகவும் செலவு செய்கின்ற அளவிற்கு மார்க்க விஷயங்களுக்காகவும் மறு உலகிற்காகவும் செலவு செய்வது மிகவும் அரிதாகி கொண்டே போகிறது. அதிலும் குறிப்பாக வெளிநாடுகளில் வேலை செய்யும் என் சகோதரர்களைப் பற்றியது தான் என் கவலையெல்லாம்.


நாம் இளமைப் பருவத்தில் தான் சம்பாத்தியம் செய்ய முடியும் எனவே இந்த வயதில் நாம் ஓடி ஓடி உழைக்க கடமைப் பட்டுள்ளோம்.அதே நேரம் ஹலாலான சம்பாத்தியமாக அது இருக்க வேண்டும்.இது விஷயத்தில் எவரிடமும் எதற்காகவும் விட்டுக் கொடுக்கும் பேச்சிற்கே இடமளிக்கக் கூடாது.மேலும் இவற்றிற்கிடையே நமக்குரிய ஐங்கால கடமைகளான தொழுகைகளையும் காலம் தவறாமல் நாம் நிறைவேற்றிட கடமைப்பட்டுள்ளோம். இரவு பகல் பாராது கடுமையாக உழைக்கும் பல சகோதரர்கள் வேலையை முடித்து விட்டு இரவு படுக்கைக்கு செல்லும் முன் அன்றைய பொழுதின் அனைத்து தொழுகைகளையும் தொழுதிருப்பார்களா? என்றால் அதற்கு பெரும்பாலும் பதில் இல்லை என்று தான் வரும்.இவ்வுலகின் உன்னத செயல்களான தொழுகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய இவ்வாலிப பருவத்தை நம் எதிரியான ஷைத்தானின் தூடுதளுக்கு துணையாக தியாகம் செய்து கொண்டிருக்கின்றோம். எப்படி இது சாத்தியம் என கேட்கிறீர்களா?


ஆம் இன்று துபை, மலேசியா போன்ற நாடுகளில் லாட்டரிகள் அதிகம் விற்பனையாகின்றது. துபை டூட்டி ஃப்ரீ கூப்பன்,மற்றும் மில்லினியர் கூப்பன்,என்று ஏராளமான பெயர்கள் அவைகளுக்கு உண்டு.மலேசியா போன்ற நாடுகளில் இந்த லாட்டரிகளை நம் முஸ்லிம்கள் அதிகம் விரும்பி  வாங்குவதாகவும் அதில் கிடைக்கும் பரிசுகளால் மனம் மகிழ்ந்து கொண்டாடுவதாகவும் கேள்விபடுகிறேன். இதெல்லாம் ஷைத்தானுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத்  தரக் கூடியவை. நம் மறுமை வாழ்க்கையை வருமையாக்கி நாளை நரகிற்குள் நம்மை இழுத்து செல்லும் தீய செயல்களாகும். இப்படி இன்னும் பல தீய காரியங்களால் நம் முஸ்லிம் சகோதரர்கள் ஷைத்தானின் தூடுதளுக்கு துணை போகின்றார்கள். அவற்றையெல்லாம் பட்டியல் போடுவதற்காக நான் இதை எழுத வில்லை.மாறாக இவற்றையெல்லாம் விட என் மனதை அதிகம் பாதித்தவை ஒன்றுள்ளது. அதை பகிர்ந்து அது தொடர்புடைய நபர்களுக்கு இந்த செய்தி சென்று சேர வேண்டும் என்பதற்காகத் தான் இதை எழுதுகிறேன்.


வாலிபப் பருவம் -  சோதனை


நாம் சுவனம் செல்வோமா? இல்லை நரகம் செல்வோமா? என்று தீர்மானிக்கும் காலங்களில் பெரும் பங்கு வகின்ற காலம் இந்த பருவ காலம் தான். இந்த பருவ காலத்தில் நம்மில் பல சகோதரர்கள் வழிமாறி சென்று விடுகின்றனர். அவர்களுக்கு சரியான வழிய






No articles in this category...