Tamil Islamic Media

நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 7)

இவ்வளவு சிறப்பிற்குரிய மதீனத்து மக்களை பற்றிய சிந்தனையுடன் மஸ்ஜிதுல் குபாவின் தலைவாசலில் வந்து நின்று வீதியை நோக்கினேன்...... ஹர்ரா என்னுமிடத்திலிருந்து அழைத்து வரப்பட்ட நபிகள்(ஸல்)அவர்கள் தற்போதைய மஸ்ஜிதுல்குபா அருகில் நெருங்கிய போது குபா பகுதி முழுவதும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. சஹீஹுல் புகாரியில் நான் படித்த ஹதீஸ்களை இப்போது மஸ்ஜிதுல்குபாவிலிருந்து எண்ணிப்பார்க்கிறேன்.என்னையே மறந்து நின்றேன்...... அஸர் தொழுகைக்கான பாங்கு சொல்லப்பட்டதும் தான்,என் நினைவு திரும்பியது. மீண்டும் ஒளு செய்துவிட்டு மஸ்ஜிதுல் குபாவில் விடுபட்டிருந்த மற்ற சில இடங்களிலும் அஸருக்கான முன் சுன்னத் தொழுகைகளை நிறைவேற்றினேன். பிறகு அஸர் தொழுகையை ஜமாத்துடன் தொழுதுவிட்டு சில நிமிடங்கள் பள்ளியில் மௌனமாய் அமர்ந்திருந்தேன். இப்போதைய பள்ளியின் உட்புறத்தோற்றத்தை சுற்றும் முற்றும் பார்த்தேன்,கம்பீரமான மிம்பர் மேடை ஒருபக்கம்,வண்ண விளக்குகளாலும் அற்புதமான அலங்கார வேலைப்பாடுகளாலும்,ரம்மியமாய் காட்சி தருகிறது. எம்பெருமானாரின் வருகைக்கு முன்பு இந்த இடம் எப்படி இருந்ததோ?தெரியவில்லை,இப்போது 1425 ஆண்டுகளுக்கு முன்னோக்கிய குபா என்னும் இடத்தை பற்றியும் தற்போதைய மஸ்ஜிதுல்குபா உருவான விதம் குறித்தும் எனது சிந்தனை இஸ்லாமிய வரலாற்றிற்குள் வட்டமடிக்க ஆரம்பித்தன, உர்வா இப்னு ஜுபைர் கூறுகிறார்: நபி (ஸல்) அவர்களை வரவேற்றபோது அவர்கள் மக்களுடன் வலது புறமாக சென்று அம்ர் இப்னு அவ்ஃப் கிளையாருடன் தங்கினார்கள்.அது ரபீவுல் அவ்வல் மாதத்தின் முதல் திங்கட்கிழமையாகும். நபி (ஸல்) அமைதியாக அமர்ந்து கொள்ளவே அபூபக்கர் (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் நின்று கொண்டார்கள். அன்சாரிகளில் நபி (ஸல்) அவர்களைப் பார்த்திராதவர்கள் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து ஸலாம் கூறுவதற்காக வந்தபோது அபூபக்கர்(ரலி)அவர்களை நபியென நினைத்து அவருக்கு ஸலாம் கூறிக் கொண்டிருந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் மீது வெயில் படவே அபூபக்கர்(ரழி)அவர்கள் தன்னுடைய போர்வையால் நபி (ஸல்) அவர்களுக்கு நிழல் தந்தார்கள். அப்போதுதான் நபி (ஸல்) யார்? என்பதை மக்கள் விளங்கிக் கொண்டார்கள். (ஸஹீஹுல் புகாரி) மதீனாவில் எங்கு பார்த்தாலும் நபி (ஸல்) அவர்களை வரவேற்க மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அதுபோன்ற ஒரு நாளை வரலாற்றில் மதீனா கண்டதில்லை. நபி (ஸல்) குபாவில் குல்ஸும் இப்னு ஹத்ம்’ என்பவர் வீட்டில் தங்கியிருந்தார்கள். சிலர் ஸஅது இப்னு கைஸமா வீட்டில் தங்கியிருந்தார்கள் என்றும் கூறுகின்றனர். ஆனால், முந்திய கூற்றே வலுவானதாகும்.(ஸஹீஹுல் புகாரி) நபி (ஸல்)அவர்கள் குபாவில் திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நான்கு நாட்கள் தங்கியிருந்தார்கள்.அப்போது குபாவில் ஒரு பள்ளியை நிர்மாணித்து அதில் தொழ வைத்தார்கள்.(இப்னு ஹிஷாம்) குபாவில் கட்டப்பட்ட பள்ளிதான் நபித்துவத்திற்கு பிறகு இறையச்சத்துடன் கட்டப்பட்ட முதல் பள்ளியாகும். ஐந்தாவது நாள், அதாவது வெள்ளிக்கிழமை அன்று அல்லாஹ்வின் உத்தரவு வரவே அங்கிருந்து மதீனாவை நோக்கி புறப்பட்டார்கள். நபி (ஸல்) அவர்களின் வாகனத்தில் அவர்களுக்குப் பின்னால் அபூபக்கர் (ரழி) அமர்ந்திருந்தார்கள். நபி (ஸல்)அவர்கள் தான் மதீனா வரும் செய்தியை தனது தாய்மாமன்மார்களுக்கு, அதாவது, நஜ்ஜார் கிளையினருக்கு சொல்லி அனுப்பினார்கள். அவர்கள் நபி (ஸல்) அவர்களை வரவேற்பதற்காக வாட்களை அணிந்து வந்தனர். அவர்கள் சூழ்ந்து செல்ல, நபி (ஸல்)அவர்கள் மதீனா






No articles in this category...