Tamil Islamic Media

நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 3)

-                         கீழை ஜஹாங்கீர் அரூஸி-தம்மாம்.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஜியாரத்தை முடித்துவிட்டு தாமதிக்காமல் மஸ்ஜிதுந்நபவிக்கு எதிரில் உள்ள (ஜன்னத்துல் பகீஃ)சுவன வாசிகளின் அடக்கஸ்தலத்திற்கு சென்றேன்.முகமன் கூறி உள்ளே நுழைந்த நான்,அங்கே கண்ட காட்சிகள் என்னை வியப்பில் ஆழ்த்தியது.......

நான் உள்ளே நுழையும் போதே 7 ஜனாஸாக்களும் கொண்டு செல்லப்பட்டன.

ஒவ்வொரு ஜனாஸாக்களையும் நல்லடக்கம் செய்யும் பணி தீவிரமாக நடந்து கொண்டிருந்ததை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்த எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது,

காரணம் 7 ஜனாஸாக்களுமே வெளிநாட்டவர்கள்தான்.இதில் ஆச்சரியம் என்னவென்றால் நல்லடக்கப்பணியில் அதிகம் சிரத்தை எடுத்துக்கொண்டவர்கள் மதீனாவாசிகளே.

நல்லடக்கம் செய்யப்பட்ட பிறகு முத்தவா  என்ற மார்க்க அறிஞர் மரணத்தை பற்றியும் அதன் பிறகு நடக்கப்போகும் நிகழ்வுகளைப் பற்றியும் சில நிமிடம் உரை நிகழ்த்தினார்.

முடிவில் மரணத்தின் நினைவோடு வாழும் மனிதர்கள் மட்டுமே பாவச்செயல்களை விட்டும் விலகிக்கொள்ளும் வாய்ப்புண்டு என்றார்.

அதன் பிறகு ஒவ்வொரு மனிதரும் தனி தனியாக ஜியாரத் செய்து கொண்டிருந்தனர்.

நானும் வலது புறத்தில் அடக்கம் செய்யப்பட்டிருந்த சுவனமங்கை மாதர் திலகம் அன்னை பாத்திமா(ரலி)அவர்களையும்,உம்முஹாத்துல் முஃமினீன் அன்னை ஆயிஷா(ரலி)அவர்களின் கபுரையும் ஜியாரத் செய்துவிட்டு,

இடதுபுறத்திலிருந்த ஹழ்ரத் உதுமான்(ரலி)அவர்களையும் ஜியாரத் செய்துவிட்டு மற்ற முஃமினான,முஸ்லிமான அனைவரின் கபுருகளையும் ஜியாரத் செய்தேன்.

கடைசியாக எனது ஆன்மீக உஸ்தாது இராமநாதபுரம் மாவட்டம் பனைகுளத்தை சேர்ந்த மௌலானா அல்ஹாஜ் முபாரக் ஆலிம் அவர்களின் நினைவு வரவேஅவர்களுக்காக யாசீன் சூராவை ஓதி துஆ செய்தேன்.

காரணம் எனது ஆசான் அவர்களும் எம்பெருமானாரின் ஜியாரத்திற்காக வந்த இடத்தில் தான் வபாத்தானார்கள்.அவர்களின் விருப்பத்திற்கிணங்க மதீனாவிலேயே அவர்களும் நல்லடக்கம் செய்யபட்டார்கள்.

நான் ஊரில் வைத்து  எனது ஆசானை காணும் போதெல்லாம் அடிக்கடி அவர்கள் சொல்லும் வார்த்தை இதுதான்,

கண்மணி நாயகமே,மறுமையில் உங்களை காணவேண்டும்,மறுமையில் உங்களுடன் இருக்க வேண்டுமென்று தான் எல்லோரும் நினைப்பார்கள்.

ஆனால் நானோ இம்மையிலும் உங்களோடு இருக்க ஆசைப்படுகிறேன்.உங்களுடனேயே மறுமையிலும் எழுப்பப்பட வேண்டுமென ஆசைப்படுகிறேன் என்பார்கள்.

எம்பெருமானாரின் மீது அவர்கள் வைத்திருந்த காதல் தோற்றுப்போகவில்லை என்பதை ஜன்னத்துல் பகீஃ வரும் ஒவ்வொரு முறையும் உணர்ந்து கொள்ளமுடிகிறது.

யாரெல்லாம் பெருமானாரின் மீது நேசம் கொள்கிறார்களோ,அவர்களெல்லாம் பெருமானாராலும் நேசிக்கப்படுகிறார்கள் என்பதற்கு ஜன்னத்துல்பகிஃவில் அடக்கம் செய்யப்பட்டுள்ள ஒவ்வொரு ஜனாசாக்களுமே சாட்சியாகும்.

நான் மதீனாவில் தங்கிய மூன்று நாட்களும் ஒவ்வொரு வக்து தொழுகையும் முடிந்து ஜன்னத்துல் பகிஃ சென்று குறைந்தது 10 நிமிடங்களாவது ஜியாரத் செய்து விடுவேன்.

அந்த நேரத்தில் என் கண் முன்பாக 1435 ஆண்டுகளுக்கு முன்பு பெருமானாரும் அவர்களது தோழர்களும் வாழ்ந்த வாழ்க்கை பசுமையாய் வந்து நிற்கும்.

அதை மனதில் எண்ணி ரசிக்கும் போது என்னையே நான் மறந்து விடுவேன்.

பெருமானாரின் வீட்டிலிருந்து பார்த்தால் ஜன்னத்துல் பகிஃ தெரியும்.இப்போதும் அப்படியே இருக்கிறது.

நான் பெருமானாரின் வீட்டை சு






No articles in this category...