Tamil Islamic Media

ஆஸாத் விசாவா?உஷார்,உஷார்!

- கீழை ஜஹாங்கீர் அரூஸி-தம்மாம்


எனதருமை தமிழ் சொந்தங்களே,
 
நம்மில் எத்தனையோ பேர் வெளிநாடு சென்று கை நிறைய பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற கனவுகளோடு பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் யாரையாவது பிடித்து எப்படியாவது விசா வாங்கி வெளிநாட்டிற்கு வந்து விடுகிறோம்.
 
நம்மில் சிலர் முறையாக கம்பெனி விசாக்களிலும்,பலர் விசிட்விசா அல்லது FREE விசாக்களிலும் பல்வேறு நாடுகளுக்கும் வந்து விடுகிறோம்.
 
இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவெனில் கம்பெனி விசாவில் வருபவர்களுக்கு எவ்வித பிரச்சினைகளும் இல்லை.விசிட் விசா மற்றும் FREE  விசாவில் வருபவர்களுக்குத்தான் சிக்கல்கள் அதிகம்.
 
விசிட் விசாவில் வருபவர்கள் தொழிலாளர் விசா கிடைக்காமல் தலைமறைவாக ஒளிந்து கொண்டு வேலை செய்து பிழைப்பதும்,FREE விசாவில் வருபவர்கள் கிடைக்கும் வேலையை விசாவுக்கு சம்பந்தமில்லாத இடங்களில் செய்து பிழைப்பதும் தான் தற்போதைய சவூதிஅரேபியாவின் நிலை.
 
நம்மில் சிலர் நான் சொந்த விசாவில் தான் சவூதிக்கு வந்திருக்கேன் என சொல்வதுண்டு.அவர்களின் அறியாமையால் அப்படி சொல்வதை காலம் கடந்து அவர்கள் தெரிந்து கொள்வார்கள்.
 
அது சரி சொந்த விசா என்றால் என்ன?என நாம் விசாரித்தபோது நமக்கு தலையே சுற்றிவிட்டது.இதையா? இவர்கள் இவ்வளவு பெருமையாக சொன்னார்கள் என சொன்னவர்களை பார்த்து நம்மை பரிதாபப்பட வைக்கும்.அந்தளவுக்குFREE விசா ஆபத்தானது,
 
இப்போது விஷயத்திற்கு வருகிறேன்,சவூதிஅரேபியாவை சேர்ந்த ஒருவர் தனது வீட்டிற்கு ஓட்டுனர் விசா வேண்டுமென்றோ,அல்லது தனது கடை மற்றும் கம்பெனிகளுக்கு தொழிலாளர் விசா வேண்டுமென்றோ அரசாங்கத்திடம் முறையாக விண்ணப்பித்து சம்பந்தப்பட்ட விசாவை பெற்றுக்கொண்டு அதை இங்குள்ள சில புரோக்கர்கள் மூலம் இந்திய ரூபாய் மதிப்பில் ஒரு இலட்சத்திலிருந்து இரண்டு லட்சம் ரூபாய் வரை அந்த விசாவை வெளிநாட்டு மோகம் கொண்ட அப்பாவி மக்களிடம் விற்று விடுவார்கள்.
 
அது மாதிரி விசாவில் வருபவர்கள் எங்கே வேண்டுமானாலும் வேலை பார்க்கலாம் கை நிறைய சம்பாதிக்கலாம் என்ற ஆசை வலையில் சிக்கியவர்கள் வீட்டை விற்று நகைகளை விற்று ஒரு வழியா சவூதிக்கு வந்ததும் மெடிக்கல் செக்கப்புக்காக இந்திய ரூபாய் மதிப்பில் 3ஆயிரம்,இன்சூரன்ஸ் மற்றும் இகாமா எடுப்பதற்கு 30ஆயிரம் என மொத்தம் 33ஆயிரம் ரூபாய் செலவழிக்க வேண்டும். 
 
இந்த செலவுகள் அனைத்துமே அவரவர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும்.
 
இகாமா கிடைத்ததும் அவர்களே வேலையும் தேடிக்கொள்ள வேண்டும்.
 





No articles in this category...