Tamil Islamic Media

பெண் குழந்தை ஒரு பாக்கியம்

பெண் குழந்தை பிறப்பதை விரும்பாத ஒரு சமூகத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம். பெண் குழந்தை என்றாலே அது ஒரு பாரம்,குடும்ப தலைவருக்கு பொருளாதார சுமை என்று எண்ணுகிற மக்கள், அத்தகைய சிந்தனை இஸ்லாத்திற்கு வெளியில் நின்று கொண்டு தான் நமது உள்ளத்தில் ஏற்பட வேண்டுமே தவிர, ஒரு முஸ்லிமாக இருந்து கொண்டு இத்தகைய எண்ணமே நம் மனதில் எழக்கூடாது என்பதை உணர வேண்டும்.

 

இந்த உலகில் ஐம்பது வருடமோ அறுபது வருடமோ வாழ்ந்து விட்டு மரணிக்கும் நாம், இயன்ற வரை மறுமை வெற்றிக்காக பல காரியங்களை செய்கிறோம். தொழுகிறோம் நோன்பு நோற்கிறோம், ஏழைகளுக்கு உணவளிக்கிறோம் சகாத் வழங்குகிறோம், இன்னும் ஏராளமான நல்லறங்களை செய்கிறோம்.

இதை செய்வதன் மூலம் நாம் எதிர்பார்ப்பது ஒன்றே ஓன்று தான். அது மறுமையில் அல்லாஹ் நம்மை அன்பு பார்வை பார்க்க வேண்டும். அல்லாஹ் நம்மை நல்லவன் என்று அங்கீகரிக்க வேண்டும்.

இந்த எண்ணத்தில் ஒவ்வொரு நாளையும் கடத்தக்கூடிய நாம், அல்லாஹ்வும் அவன் தூதரும் எதையெல்லாம் செய்யுமாறு சொல்லியுள்ளார்களோ , அதை இயன்றவரை செய்யக்கூடியவர்களாகவும் எதை விட்டெல்லாம் தவிர்ந்து கொள்ள சொல்கிறார்களோ அதை எல்லாம் விட்டு தூரமாகி கொள்பவர்களாகவுமே தான் நாம் வாழ வேண்டும்.

 

இந்த உலகில் ஒரு சில நல்லமல்களை செய்து விட்டு மரணித்து விடும் நாம், நமது மரணத்திற்கு பிறகும் நமக்கு நன்மையை ஈட்டு தரக்கூடிய ஒன்றை இந்த உலகில் விட்டு செல்கிறோம் என்றால் அது நமது குழந்தைகள் !

  

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், ஒரு மனிதன் இறந்து விட்டால் மூன்று செயல்கள் தவிர மற்ற அனைத்துமே நின்று விடுகின்றன.

1. நிலையான தர்மம். 2. பிறருக்கு பயன்பெறும் வகையில் அவன் கற்றுக்கொடுத்த கல்வி. 3. அவனுக்காக பிரார்த்தனை செய்கிற நல்ல குழந்தைகள்.

முஸ்லிம் 3358

 

எந்த குழந்தையாக இருந்தாலும், அவர்களை நாம் அன்புடனும் ஒழுக்கத்துடனும் வளர்ப்போம் என்றால், நாம் மரணித்த பிறகும் நமக்காக அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து கொண்டே இருப்பார்கள்.

 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ், சொர்க்கத்தில் ஒரு அடியானின் தகுதியை உயர்த்துவான். யா அல்லாஹ், இது எனக்கு எப்படி கிடைத்தது? என்று அவன் கேட்கும் போது, உனக்காக உன் குழந்தை பாவ மன்னிப்பு கேட்டது அதனால் தான், என்று அல்லாஹ் விடையளிப்பான்.

அஹ்மத் 10202

 

அத்தகைய பாக்கியம் நமக்கு கிடைப்பதற்கு நாம் எந்த வகையிலாவது உழைக்க வேண்டுமா பாடுபட வேண்டுமா?? எதுவும் இல்லை, நமது குழந்தைகளை நல்ல முறையில் வளர்த்தாலே போதும்.  

 

குழந்தைகள் நமக்கு கிடைத்த பாக்கியமாக நாம் கருத வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறி இருக்கும் போது, பெண் குழந்தைகளை நாம் வெறுப்பது என்பது, நபியை விட்டு நாம் விலகி செல்கிறோம் என்பதையே காட்டும்.

 

 

இவ்வாறு தாங்கள் பெற்ற பெண் குழந்தைகளை கண்டு வெறுப்பு அடைகிற பெற்றோர்களை அல்லாஹ் கடுமையாக சாடுகிறான்.

 

எவர்கள் அறிவில்லாமல் மூடத்தனமாக தம் குழந்தைகளைக் கொலை செய்தார்களோ; இன்னும் தங்களுக்கு அல்லாஹ் உண்ண அனுமதித்திருந்ததை அல்லாஹ்வின் மீது பொய் கூறி (ஆகாதென்று) தடுத்துக் கொண்டார்களோ, அவர்கள் வழிகெட்டு விட்டனர், நேர்வழி பெற்றவர்களாக இல்லை.  (6:140)

 

என்று கண்டிக்கிற அல்லாஹ், இன்னொரு வசனத்தில்

அவர்களில் ஒருவனுக்கு பெண் குழந்தை பிறந்துள






No articles in this category...