Tamil Islamic Media

மறுமை

ஹஜரத் அம்ரு (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஒரு முறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது பிரசங்கத்தில்,

'' கவனமாகக் கேட்டு கொள்ளுங்கள். உலகம் தற்காலிகமான வியாபாரப் பொருளாகும். (அதற்கு எவ்வித விலையும் மதிப்பும் கிடையாது) ஏனெனில், அதில் நல்லோர், தீயோர் அனைவருக்கும் பங்குண்டு. அனைவரும் அதிலிருந்து உண்கின்றனர். நிச்சயமாக மறுமையானது குறித்த நேரத்தில் வர இருக்கின்ற அந்தரங்கமான உண்மையாகும். அதில் சக்தி மிக்க அரசன் தீர்ப்பு வழங்குவான்.

கவனமாக கேட்டுக் கொள்ளுங்கள்! எல்லா நலவுகளும், அதன் அனைத்து வகைகளும் சொர்க்கத்தில் உள்ளன. சகலவித கெடுதிகளும், அதன் எல்லா வகைகளும் நரகத்தில் உள்ளன.

நன்றாக அறிந்து கொள்ளுங்கள். எதைச் செய்தாலும் அல்லாஹுத்தஆலாவை பயந்தவர்களாகச் செய்யுங்கள். நீங்கள் தத்தமது செயல்களுடன் அல்லஹுத்தஆலாவிடத்தில் கொண்டுவரப்படுவீர்கள்.

அணுவளவு நன்மையைச் செய்தவரும் அதைக் கண்டு கொள்வார். அணுவளவு தீமை செய்தவரும் அதைக் கண்டு கொள்வார்.'' என்று கூறினார்கள். (நூல்: முஸ்னத் ஷாபிஇய்யீ)

 

 

இன்னும் எவர் தங்கள் இறைவன் முன் (மறுமையில்) கொண்டு வரப்படுவது பற்றி பயப்படுகிறார்களோ அவர்களுக்கு (இவ்வேதத்தைக் கொண்டு) எச்சரிக்கை செய்யும் - (பாவத்திலிருந்து நீங்கி) அவர்கள் பயபக்தியுடையோராகும் பொருட்டு¢ அவனைத் தவிர அவர்களுக்குப் பாதுகாப்பளிப்பவரோ, பரிந்து பேசுபவரோ வேறு யாரும் இல்லை.  (குர்ஆன் 6:51)

இன்னும் அவர்களில் சிலர், 'ரப்பனா!(எங்கள் இறைவனே!) எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக¢ மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக¢ இன்னும் எங்களை(நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!'' எனக் கேட்போரும் அவர்களில் உண்டு. (குர்ஆன் 2:201)

இவ்வாறு, (இம்மை-மறுமை இரண்டிலும் நற்பேறுகளைக் கேட்கின்ற) அவர்களுக்குத்தான் அவர்கள் சம்பாதித்த நற்பாக்கியங்கள் உண்டு¢ தவிர, அல்லாஹ் கணக்கெடுப்பதில் மிகத் தீவிரமானவன். (குர்ஆன் 2:202)






1 06 நிதானமும் பொறுமையும்

நிச்சயமாக உன்னிடம் அல்லாஹ் நேசிக்கக்கூடிய இரண்டு குணங்கள் உள்ளன: அவை நிதானம் மற்றும் பொறுமை

2 05 மன அமைதியும் ஒரு அருட்கொடையே

இறைவனுக்கு அஞ்சி நடப்பவருக்கு செல்வம் இருப்பதில் தவறில்லை. ஆனால், இறைவனுக்கு அஞ்சி நடப்பவருக்கு செல்வத்தை விட ஆரோக்கியம் மேலானது. மேலும், மன அமைதி (திருப்தி) என்பது இறைவனின் அருட்கொடைகளில் ஒன்றாகும்.

3 04 குடும்பப் பணிகளில் நபிகளார்:

இந்த உலகம் ஏற்கனவே கடினமான மனங்களால் நிறைந்துள்ளது; எனவே, நாம் நம் குடும்பத்தினரிடம் மென்மையாகவும் அன்பாகவும் நடந்து கொள்வோம்

4 03 இறைவா! என்னை விட எனக்குப் பிரியமான ஒரு நண்பனை எனக்குத் தா.

மனிதர்கள் வண்ணத்துப்பூச்சிகளைப் போன்றவர்கள், சில நேரங்களில் அவர்கள் தங்கள் இறக்கைகளில் உள்ள அழகைத் தாங்களே காண்பதில்லை.

5 02. அவளுக்காக நான் இதை மறக்கவே மாட்டேன்

மனிதர்களுக்கு சில நேரங்களில் தங்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை விட, தாங்கள் மதிக்கப்படுகிறோம் அல்லது கவனிக்கப்படுகிறோம் என்ற உணர்வே அதிகமாகத் தேவைப்படுகிறது.

6 01 அவர்கள் என்னைத் துரத்திவிடுவார்களா?
7 ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பரிந்துரை
8 ஒற்றைச்செறுப்பு
9 திரைகள் விலகட்டும்
10 உம்மு ஸலமா (ரலி)யும் ஆறாதரணங்களின் அற்புத அன்பளிப்பும்
11 நன்மை தீமையும் அதன் அளவுகோலும்
12 வலிபோக்கும் ஆன்மீக வழிகள்
13 முஜாஹிர்களும் மன்னிப்பும்
14 நன்மை தீமையும் அதன் அளவுகோலும்
15 தங்க ஓடை: மனிதனின் பேராசை
16 பயணியே சற்று நில்
17 அக்கம் பக்கம் / அண்டை வீட்டார்
18 என் கண்ணாடி எங்கே?
19 நன்மைக்கு வழிகாட்டினால்
20 பொறாமைக்குரியோர் ....
21 நபியின் மீது பிரியம்
22 அல்லாஹ்வின் பிரதிநிதி குழுவினர்
23 ஈமானின் கிளைகள்
24 வளைகுடாவில் வசிப்பவரின் இந்தியப்பெருநாள் - மார்க்க சட்டம்
25 நற்செயல் எது?
26 பட்டாடை
27 நாற்பது ஹதீஸ்கள் மனனம் செய்பவர்...
28 பரிபூரணமான முஸ்லிம்
29 பரிபூரண இறைநம்பிக்கை - ஈமான்
30 சுவர்க்கத்தின் சாவி
31 மக்களில் சிறந்தவர்
32 மறைவானவற்றை நம்புவது
33 அழகிய துஆ