Tamil Islamic Media

கட்டுரைகள்

1. சிங்களவனுகள் தமிழர்களுக்கு செய்த அநியாயத்தை விட புலிகள் முஸ்லீம்களுக்கு செய்த அநியாயம் படு மோசமானது
  கடந்தகால கசப்புணர்வுகளை சுட்டிக் காட்டி பகைமையையும் , காழ்ப்புணர்ச்சியையும் வளர்ப்பதோ தூண்டுவதோ என் நோக்கம் அல்ல,ஒரு சில முஸ்லீம்கள் தவறிழைத்தார்கள் என்பதற்காக முழு முஸ்லிம்களையும் வெளியேற்றி இனச்சுத்திகரிப்பு செய்த செயலை யாரும் என்றும் நியாயப்படுத்தக் கூடாது என்பதற்காகத்தான் இப்பதிவு . Read 1310 Times
 
2. மான்சா மூசா: வரலாற்றின் பணக்கார `தங்க’ அரசனின் கதை!
  மூசாவின் செல்வத்தைப் பற்றிய தற்கால கணக்குகள் நினைத்துப் பாரக்க முடியாத ஒன்று. அவர் எவ்வளவு பெரிய பணக்காரர், சக்தி வாய்ந்தவர் என்பதை புரிந்து கொள்வது சாத்தியமற்றது என்கிறார்கள் நவீன வரலாற்றறிஞர்கள். Read 2035 Times
 
3. சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-46: ஸெங்கியின் மறுவெற்றி
  அவற்றுள் பிரசித்தி பெற்ற ஒன்று லதாக்கியா படையெடுப்பு. மூவாயிரம் குதிரைப் படை வீரர்களுடன் சென்று சவார் நிகழ்த்திய திடீர்த் தாக்குதலில் பரங்கியர்கள் நிலைகுலைந்தனர். முஸ்லிம் படையினருக்குப் பெரும் வெற்றி! ஏழாயிரம் கைதிகள், ஆயிரக்கணக்கில் கால்நடைகள் கைப்பற்றப்பட்டு முஸ்லிம் படை மகிழ்ச்சியில் திளைக்க, பரங்கியர்களோ திகைத்து உடைந்து விட்டார்கள். துயரம் சூழ்ந்து அவர்கள் துக்கத்தில் மூழ்கிவிட, முஸ்லிம் பகுதிகளெங்கும் இவ்வெற்றி தலைப்புச் செய்தியாகி, மக்கள் மத்தியில் பேராரவாரம் எழுந்தது. Read 2688 Times
 
4. சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-44: ஸெங்கியின் மறுதொடக்கம்
  கலீஃபாவின் கூட்டணிப் படைக்கு எதிராகப் போரிட்டு, காயமடைந்து வந்த இமாதுத்தீன் ஸெங்கியையும் மற்றவர்களையும் பரோபகார உள்ளத்துடன் வரவேற்றார் நஜ்முத்தீன் ஐயூப். அவர்களது காயங்களுக்கு மருந்திட்டு, தேவையான உதவிகள் செய்து, படகுகளையும் அளித்து இமாதுத்தீன் மோஸூலுக்குத் திரும்பிச் செல்லப் பேருதவி புரிந்தார். Read 9382 Times
 
5. சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-45: இமாதுத்தீன் ஸெங்கியின் முதல் வெற்றி
  ஹும்ஸை யார் வசம் ஒப்படைக்கலாம் என்று யோசித்த மஹ்மூதுக்கு எளிய தீர்வு கிடைத்தது – சென்ற அத்தியாயத்தின் இறுதியில் நமக்கு அறிமுகமான முயீனுத்தீன் உனுர். டமாஸ்கஸ் நகர் ஸெங்கியிடம் வீழாமல் தற்காத்துத் தந்த அவரைவிடச் சிறப்பாக வேறு யார் ஹும்ஸை ஸெங்கியிடமிருந்து காப்பாற்றிவிட முடியும்? Read 2949 Times
 
6. சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-43: இரண்டாம் பால்ட்வினின் மறைவு
  அச்சமயம் அப்பாதையில் சென்று கொண்டிருந்த பரங்கியரின் சேனாதிபதி ஒருவன் அவர் கண்ணில் பட்டுவிட்டான். அவன் தன்னோடு கொண்டு சென்றுகொண்டிருந்த வெள்ளை நிறப் போர்க் குதிரையும் அதன் தோற்றமும் அவரது கவனத்தைக் கவர்ந்தன. ‘ஏதோ சரியில்லையே?’ என்றது அவரது உள்ளுணர்வு. Read 32767 Times
 
7. சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-42: பூரித் வம்சாவளி
  அஸாஸியர்கள் டமாஸ்கஸ் நகரைத் தங்கள் கைப்பிடிக்குள் வைத்திருந்ததை அம்மக்கள் தீவிரமாக வெறுத்து வந்தனர். அவர்களுக்குள் உலை கொதித்துக்கொண்டிருந்தது. Read 32767 Times
 
8. சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-41: இமாதுத்தீன் ஸெங்கியின் அறிமுகம்
  அல்லாஹ் அலெப்போவின் ஆளுநராக இமாதுத்தீன் ஸெங்கியை ஆக்கி முஸ்லிம்களுக்கு அருள் புரியாமல் இருந்திருந்தால், பரங்கியர்கள் சிரியா முழுவதையும் கபளீகரம் செய்திருப்பார்கள் என்று எழுதியுள்ளார் வரலாற்று ஆசிரியர் இப்னுல் அதீர். Read 2670 Times
 
9. சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-40: ஆக் சன்க்கூர் அல் புர்ஸுகீ
  அனைத்தையும் பார்த்துக் கொதித்து, வயிறு எரிந்த போதும் காழீ இப்னில் ஃகஷ்ஷாப் தலைமையில் தற்காத்து எதிர்த்து நின்றது அலெப்போ. அது மட்டும் இன்றி, முஸ்லிம் உளவாளிகள் சிலர் எதிரிகளின் கூடாரங்களுக்குள் ஊடுருவி, சிலரைக் கொல்வதும் சிலரைச் சிறைப் பிடித்து நகருக்குள் இழுத்து வருவதும்கூட நிகழ்ந்தன. Read 2713 Times
 
10. சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-39: பலக் இப்னு பஹ்ராம் இப்னு அர்துக்
  நீண்ட பல மாதங்கள் சிறையில் வாடிய இரண்டாம் பால்ட்வின், ஜெருசலம் சென்று புத்துணர்ச்சி பெற்றுக்கொண்டு, அடுத்த சில மாதங்களில் நன்றிக்கடன் செலுத்த அலெப்போ திரும்பி வந்தார். Read 2798 Times
 
11. சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-38: டெம்ப்ளர்கள், ஹாஸ்பிடலர்கள்
  ஹி. 516/கி.பி.1122. இல்காஸியின் ஆரோக்கியம் குன்றத் தொடங்கியது; மோசமடைந்தது. மரணமடைந்தார் இல்காஸி. அவரது மரணம் முஸ்லிம்களுக்கு இழப்பு என்பதையும் தாண்டிப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. என்ன பாதிப்பு? வாரிசுச் சண்டை. Read 2586 Times
 
12. சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-37: காழீயின் களப்பணி
  பாக்தாதிலிருந்து பெரிதாய் ஏதும் உதவி வந்துவிடப் போவதில்லை என்ற நம்பிக்கையில் அசட்டையாக இருந்த ரித்வான், மவ்தூதின் தலைமையிலான படை வரப்போகிறது என்று தெரியவந்ததும்தான் சுதாரித்தார். தமது சுயரூபத்தை வெளிப்படுத்தும் காரியத்தில் இறங்கினார். மவ்தூதின் முகத்தில் அறைவதுபோல் அலெப்போவின் வாயில்களை இழுத்தறைந்து மூடினார். காழீ இப்னில் ஃகஷ்ஷாபும் அவருடைய ஆதரவாளர்களும் சிறை வைக்கப்பட்டனர். Read 2594 Times
 
13. சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-35: ராஜா பால்ட்வினின் முடிவு
  எப்பாடுபட்டாவது சிரியாவை ஸெல்ஜுக் சுல்தானின் ஆக்கிரமிப்பிலிருந்து காப்பாற்றிவிட வேண்டும் என்று முடிவுகட்டிய துக்தெஜின் முதலில் இல்காஸியைத் தம் கட்சிக்கு அழைத்தார். மோஸுலின் ஜெகர்மிஷ் உருவாக்கிய கூட்டணிப் படையில் மர்தின் பகுதியின் இல்காஸி அல்-அர்துகி என்பவர் இணைந்தார் Read 2555 Times
 
14. சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-36: குருதிக் களம்
  இது ஒரு முக்கியமான திருப்புமுனை. அதுநாள் வரை முஸ்லிம் ஆட்சியாளர்கள் மத்தியில் திகிலை ஏற்படுத்தி, பெரும் சக்தியாகத் தோற்றமளித்திருந்த சிலுவைப் படையிடம், அவர்கள் ஒன்றிணையாமல் தடுக்க நிபந்தனை விதிக்கும் அளவிற்கு முஸ்லிம் ஆட்சியாளர்களின் கை ஓங்க ஆரம்பித்தது, சந்தேகமேயின்றிப் பெரும் திருப்பம். Read 2458 Times
 
15. சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-35: ராஜா பால்ட்வினின் முடிவு
  அதையடுத்து அந்நூற்றாண்டு முழுவதும் பெரும்பாலும் அந்த அடிப்படையிலேயே அவர்கள் தங்களது இராணுவ நடவடிக்கைகளை அமைத்துக்கொண்டார்கள். பெரும் திரளாக முஸ்லிம் படை வருகிறது என்றதும் உடனே பரங்கியர்கள் ஒன்றிணைவார்கள்; தற்காப்புக்கு உகந்த ஓரிடத்தைத் தேர்ந்தெடுப்பார்கள்; அங்கு அவர்களது ஒருங்கிணைந்த படை திரண்டு நிற்கும். அடுத்து, முஸ்லிம் படை எந்த இலக்கைக் குறிவைத்து வருகிறதோ அங்கு பரங்கியர்களின் காவல் படையின் கண்காணிப்பு அதிகரிக்கும். Read 10073 Times
 
16. சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-31: கிலிஜ் அர்ஸலானின் முடிவு
  பிரிந்து கிடக்கும் முஸ்லிம் தலைவர்களின் கூட்டணியும் ஒருங்கிணைந்த கூட்டணிப் படையும் சிலுவைப் படையினரை எதிர்க்க அவசியம் என்பது அவருக்குத் தெரிந்திருந்தது. அதனால் முதல் கட்டமாக, உதிரியாகப் பல பகுதிகளில் ஆண்டுகொண்டிருந்த ஆட்சியாளர்களைத் தொடர்பு கொண்டார் ஜெகெர்மிஷ். அவர்களுள் அலெப்போவிலிருந்த ரித்வான், மர்தின் பகுதியின் இல்காஸி அல்-அர்துகி, சின்ஜாரின் ஆட்சியாளர் அல்பி திமுர்தஷ், பாரசீகத்திலிருந்து அல்-அஸ்பஹத் ஆகியோர் முக்கியமானவர்கள். Read 32767 Times
 
17. சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-30: பாலிக் யுத்தம் (ஹர்ரான்)
  கட்டவிழ்த்து விட்டால் சிலுவைப் படைத் தலைவர் முஷ்டியை முறுக்குவாரே என்று முஸ்லிம்களுக்குத் தெரியாதா? வசமாக மாட்டிக்கொண்டு கைதாகிச் சிறையில் இருந்தவரை அவர்கள் ஏன் கொல்லவில்லை? பணயத் தொகைக்கு ஆசைப்பட்டு விடுவித்து, தங்களுக்கு எதிராய் அவர் களமிறங்க ஏன் மீண்டும் வாய்ப்பு அளித்தார்கள் என்றெல்லாம் நமக்குக் கேள்விகள் எழலாம், வியப்பு மேலிடலாம். ஆனால், ஒற்றை வார்த்தையில் பதில் சொல்ல இயலாத இத்தகு செயல்கள், பிழைகள், திகைப்புகள் வரலாறு நெடுக நிறைந்துள்ளன. அவலம் என்னவெனில் வரலாற்றுப் பிழைகளிலிருந்து நாம் பாடம் படிக்க மறுப்பதுதான். Read 3526 Times
 
18. சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-34: சென்னாப்ரா யுத்தம்
  பெருக்கெடுத்துப் பீய்ச்சிய இரத்தத்துடன் துவண்டு விழுந்த மவ்தூத், துக்தெஜினின் இல்லத்திற்குத் தூக்கிச் செல்லப்பட்டார். அன்றைய நாள் நோன்பு நோற்றிருந்தார் அவர்.அவரிடம் நோன்பை முறித்துவிடும்படி துக்தெஜின் கூற. ‘நோன்பு நோற்ற நிலையில் நான் அல்லாஹ்வைச் சந்திக்க விரும்புகிறேன்’ என்று மறுத்துவிட்டார் மவ்தூத். அதே நிலையில் தளபதி மவ்தூத் பின் அத்-தூந்தகீன் மரணமடைந்தார். Read 3668 Times
 
19. சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-33: மவ்தூத் பின் அத்-தூந்தகீன்
  ரித்வானின் நடவடிக்கைகளால் அலெப்போவில் வசித்த முஸ்லிம் குடிமக்களும் மார்க்க அறிஞர்களும் மிகவும் நொந்து போனார்கள். சிரியாவிலுள்ள பகுதிகளை முஸ்லிம்கள் சிலுவைப் படையினரிடம் இழந்து கொண்டிருக்கின்றனர். ரித்வானோ அவர்களை எதிர்க்கத் திராணியின்றி இந்தளவிற்குக் கீழிறங்கி அடிபணிந்துவிட்டார். நமக்கு கலீஃபாதான் உதவி செய்ய வேண்டும், பாக்தாதின் கதவைத் தட்டுவோம் என்று அலெப்போவிலிருந்து ஒரு தூதுக் குழு கிளம்பி பாக்தாத் வந்து சேர்ந்தது. Read 3617 Times
 
20. சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-32: சிலுவைப் படையும் பைஸாந்தியமும்
  கி.பி. 1108ஆம் ஆண்டு மவ்தூத் பின் அத்-தூந்தகீன் மோஸுலுக்கு வருகிறார் என்பதை அறிந்ததும் தப்பித்து ஓடிய ஜவாலி, முன்னேற்பாடாகச் சிறையில் இருந்த பால்வின் IIஐயும் தம்முடன் கூட்டிக் கொண்டுதான் ஓடினார். சிலுவைப் படையுடன் கூட்டணி அமைப்பதற்கு அவரை முக்கியத் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்துவோம் என்ற முன் யோசனை. Read 3636 Times
 
21. சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-29: மெர்ஸிஃபான், ஹெராக்லியா யுத்தங்கள்
  முதலாம் சிலுவைப் படையுடன் மோதிய முதல் முஸ்லிம் மன்னர் ரோம ஸல்தனத்தின் சுல்தான் கிலிஜ் அர்ஸலான். அதை முந்தைய அத்தியாயங்களில் நாம் கடந்து வந்திருக்கின்றோம். அவர் அப்பொழுது பரங்கியர்களுடன் நிகழ்த்திய போர்கள் மூன்று. முதலாம் சிலுவைப் போர்ப் படைக்கு முன்னோட்டமாய் வந்த ‘மக்களின் சிலுவைப்போர்’ என்ற பெருங்கூட்டத்தைத் தோற்கடித்து விரட்டியடித்தது முதலாவது. அடுத்தது நைஸியா போர், மூன்றாவது டொரிலியம் போர். Read 11508 Times
 
22. சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-28: ஜிஹாது ஒலியும் சிலுவைப் படையும்
  சிரியாவில் அலீ இப்னு தாஹிர் அஸ்-ஸுலைமி என்றொரு மார்க்க அறிஞர் வாழ்ந்து வந்தார். முஸ்லிம் உலகை ஈசலாய்ச் சூழ்ந்த சிலுவைப் படை, புனித நகரைக் கைப்பற்றி, இப்பொழுது சிரியா உட்பட முஸ்லிம்களின் நிலப் பகுதியை ஆக்கிரமிக்கத் திட்டங்களும் வியூகங்களும் வகுக்கின்றது, பேராபத்துச் சூழ்ந்துள்ளது என்பதை உணர்ந்து விரைந்து செயல்பட ஆரம்பித்த மார்க்கப் போராளி அவர். ஜிஹாது வேட்கையை மீளெழுச்சியுற வைக்கக் களமிறங்கிய மார்க்க அறிஞர்களுள் முதலாமவர் அவர். Read 3787 Times
 
23. சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-27: மெலிடீன் போர்
  இவற்றுடன் சேர்த்து நாம் இதுவரை சந்தித்த சிலுவை யுத்த தலைவர்களின் பெயர்களையும் அவர்களுக்கு இடையேயான உறவு முறையையும் இங்குச் சுருக்கமாக மீண்டும் நினைவு படுத்திக்கொள்வோம். ஏனெனில் இனி அவர்களுக்குள் நடைபெறப்போகும் அரசியல் நகர்வுகள், பிணக்குகள், ஆகியவற்றைப் புரிந்துகொள்ள அவை அவசியமாகின்றன. Read 3637 Times
 
24. சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-26: மெய்ச் சிலுவை
  ஃபாத்திமீக்கள் தோல்வியுற்றதும் அச்சத்தில் மூழ்கிய அஸ்கலான் நகரம் பரங்கியர்களிடம் சரணடைந்து விடுவோம் என்றுதான் தயாரானது. ஆனால் உங்களின் தலைவர் ரேமாண்டிடம்தான் நாங்கள் அதற்கான பேச்சுவார்த்தையை நடத்துவோம் என்றார்கள். Read 8352 Times
 
25. சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-25: ஜெருஸல வீழ்ச்சியும் குருதி ஆறும்
  அன்றைய படுகொலைகளின் கொடூரம் எந்தளவு இருந்ததென்றால், ‘பீய்ச்சிப் பாய்ந்த சூடான இரத்தங்களின் ஆவியைக் கொலை செய்துகொண்டிருந்த சிலுவைப் படையைச் சேர்ந்தவனால்கூடத் தாங்க முடியவில்லை’ என்று பரங்கியன் ஒருவன் விவரித்துள்ளான். Read 3939 Times
 
26. சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-24: ஜெருஸலப் போர்
  மும்முரமான இந்த ஏற்பாடுகளுக்கு இடையே இரு தரப்பும் தத்தம் எதிர்தரப்பை முரட்டுத்தனமாகச் சீண்டுவதும் அவர்களது மனவுறுதியைக் குலைக்கும் செயல்களில் ஈடுபடுவதும் என்று அந்தக் களேபரங்களும் தீவிரமாக நடைபெற்றன. Read 4008 Times
 
27. சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-23 ஜெருஸல முற்றுகை
  அர்ஸுஃப் (Arsuf) நகரின் அருகே வந்ததும் கரையோரப் பாதையிலேயே வந்துகொண்டிருந்த படை உள்நோக்கித் திரும்பியது. ஜெருஸலம் நகரத்திற்குச் செல்லும் சாலையில் கடைசியில் உள்ள ரம்லாவை அணுகியதும் அதுவரை விறுவிறுவென்று முன்னேறி வந்திருந்த படை அங்குதான் சற்றுத் தாமதித்தது. அங்கு, தங்களுக்கு எதிர்ப்பு இருக்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், ரம்லாவில் இருந்த கோட்டையும் ஃபாத்திமீக்களால் கைவிடப்பட்டு இருந்ததால், அங்கும் அவர்களுக்கு எந்த எதிர்ப்பும் இல்லை. Read 3831 Times
 
28. சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-22: மண்ணாசையில் விழுந்த மண்
  பிரச்சினை முற்றுவதையும் உச்சத்தை எட்டுவதையும் உணர்ந்தார் பீட்டர். சாமர்த்தியம் என்று நினைத்துக்கொண்டு அடுத்து ஒரு காரியம் புரிந்தார். “எனது நேர்மையையும் நாணயத்தையும் நிரூபிப்பேன். தீ புகுவேன். வெளிவருவேன். தீ என்னைத் தீண்டாது. உடம்பில் புண் என்று எதுவும் ஏற்படாது. அது உங்களுக்கு அறிவிக்கும் என் வாக்குச் சுத்தத்தை. அப்பொழுது அறிந்துகொள்வீர்கள்” என்று அறிவித்துவிட்டு நான்கு நாள் விரதம் இருந்தார். Read 3822 Times
 
29. வீழ்ந்தெழுவோம் : பொருளாதார நெருக்கடியை எப்படி சமாளித்தார்கள் - அழகிய முன்னுதாரனம். (தொடர்-45)
  பொருளாதார நெருக்கடியில் இருந்த தங்களது எகிப்து நாடு எவ்வாறு இத்தகைய செல்வ செழிப்பான நாடாக உருமாறியது என்று மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். Read 3567 Times
 
30. தர்ம கற்கள் - அழகிய தர்மம்
  துருக்கி நாட்டில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களான கடைவீதி, பள்ளிவாசல், மருத்துவமனை ஆகிய இடங்களில் ஒரு குறிப்பிட்ட வடிவிலான இரண்டு மீட்டர் உயரத்தைக் கொண்ட மார்பில் கல்லை காண இயலும்,அதன் தலை பகுதியில் குழி இருக்கும்.அதில் இது ஸதகா தாஸி (ஈகை கல்) என்று எழுதப்பட்டிருக்கும் Read 3630 Times
 
31. சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-20: அந்தாக்கியாவின் இரண்டாம் முற்றுகை
  ஜுன் 1098. அந்தாக்கியாவின் வடக்கே சில மைல்கள் தொலைவில், தமது படையின் முக்கியமான பகுதியை கெர்போகா பாடியிறக்கினார். நகரின் உச்சியில் இருந்த கோட்டையை முஸ்லிம்கள் தக்க வைத்திருந்தார்கள் அல்லவா, அவர்களுடன் தொடர்பு கொண்டார். கோட்டையைச் சுற்றி முஸ்லிம் படை வீரர்கள் குவிக்கப்பட்டனர். Read 3842 Times
 
32. சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-21: புனித ஈட்டி
  சிலுவைப் படையைச் சேர்ந்த பீட்டர் பார்த்தோலொமெவ் (Peter Bartholomew) என்பவர் தலைமையில் சிறு கூட்டமொன்று தோண்ட ஆரம்பித்தது. கடப்பாரை, மண்வெட்டி என்று கிடைத்த ஆயுதங்களை எடுத்துக்கொண்டு, வியர்க்க விறுவிறுக்கத் தரையைத் தோண்டி, பள்ளம் பறித்துக்கொண்டிருந்தார்கள். Read 3723 Times
 
33. சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 19: அந்தாக்கியாவின் வீழ்ச்சி!
  நகரின் ஒவ்வொரு தெருவிலும் சடலக் குவியில்கள். நடப்பதற்கே இடமில்லாமல் அவற்றின்மேல்தான் நாங்கள் நடக்கும்படி இருந்தது. எழுந்த பிண நாற்றத்தைச் சகித்துக் கொள்ள யாராலும் முடியவில்லை’ என்று சிலுவைப் படையினருள் ஒருவன் அந்நிகழ்வை விவரித்த தகவல் வரலாற்றில் பதிவாகியுள்ளது. Read 3675 Times
 
34. சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 18: அந்தாக்கியா
  அந்தாக்கியா என்பது பழம்பெருமை மிக்க நகரம். கிழக்கத்திய தேசத்தின் மாபெரும் நகரங்களுள் ஒன்று. கி.மு. 300ஆம் ஆண்டு அலெக்ஸாண்டரின் தளபதிகளுள் ஒருவரான அண்டியோகஸ் உருவாக்கிய நகரம் Read 3542 Times
 
35. திருநெல்வேலி வரலாறு...!
  திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலி நகரை தலைமையகமாக கொண்டு இயங்குகிறது. இந்தியாவின் பழமையான நகரங்களில் இதுவும் ஒன்றாகும். 3000 ஆண்டு பழமையான இந்த நகரம் தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. Read 16131 Times
 
36. மாவீரன் திப்புசுல்தான்:இந்திய விடுதலைப் போரின் உயிர்நாடி
  1799 ஆம் மே மாதம் நான்காம் தேதி சாதாரண சிப்பாய் போல் ஆங்கிலேய அந்நிய படைக்கெதிராக களமிறங்கி தனது உடலில் கடைசி மூச்சு நிற்கும் வரை உறுதியுடன் போராடி உயிர் தியாகியானார் மாவீரன் திப்பு. Read 18439 Times
 
37. அந்த இரண்டணா ......
  சற்றுப் பொறுங்கள்! என்று கூறிவிட்டுத் தம் சட்டைப் பைக்குள் கையை விட்டு ஏதேனும் இருக்கிறதா? என்று துழாவினார் பாதுஷா. ஆம்! இரண்டு அணா நாணயம் ஒன்று அதில் கிடந்தது. அதை எடுத்துத் தம் ஆசானிடம் கொடுத்து வழி அனுப்பினார்... Read 15558 Times
 
38. சீனாவில் விதைத்த விதை - ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி)
 

குறிப்பாக உலகம் முழுவதும் இஸ்லாமிய மார்க்கத்தை கொண்டு சேர்க்க வேண்டும் என்ற வேட்கையில் ஆபத்தான பயணங்களை மேற்கொண்டு சாதனை செய்துள்ளனர். நீண்ட நெடிய அந்தப் பட்டியலில் நாம் வாழும் இந்திய மண்ணிற்கும் கிழக்காசிய நாடுகளுக்கும் இஸ்லாம் வேரூன்ற காரணமாக இருந்த ஹஸ்ரத் ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி) அவர்களின் சாதனைகளைக் காண்போம்.

Read 15459 Times
 
39. சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 17
  டொரிலியம் அருகே இரு பள்ளத்தாக்குகள் சந்திக்கும் இடத்தில் பரந்த நிலம் இருந்தது. அங்கு பொஹிமாண்ட், ராபர்ட் தலைமையிலான சிலுவைப் படையின் முதல் அணி வந்து சேர்ந்தது. ஜுலை 1ஆம் நாள். அதிகாலை நேரம். அவர்கள் சற்றும் எதிர்பாராத வகையில், கிலிஜ் அர்ஸலானின் படை குதிரைகளில் புயல்போல் வந்து, சுழல் காற்றைப் போல் சிலுவைப் படையைச் சூழ்ந்தது. Read 3813 Times
 
40. சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 16
  நகரின் தெற்கு, கிழக்கு, வடக்கு – முப்புறத்தையும் சுற்றி அமைந்திருந்த வலுவான அரணைச் சிலுவைப் படையினர் சுற்றிவளைத்து முற்றுகை இட்டுவிட்டாலும் அவர்களுக்குப் பெரும் தலைவலி அளித்த விஷயம் ஒன்று இருந்தது. Read 4038 Times
 
41. சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 15
  சிலுவைப்படை கைப்பற்றும் அனைத்தும் பைஸாந்தியர்கள் வசம் வந்தாக வேண்டும். இந்த நிபந்தனைக்குக் கட்டுப்பட்டு காட்ஃப்ரெ சத்தியப் பிரமாணம் அளிக்கவேண்டும் என்று வற்புறுத்தப்பட்டது. வேறு வழியின்றி, குத்தகைதாரர் நில உரிமையாளருக்கு அளிப்பதைப்போன்ற சத்தியப் பிரமாணம் அளித்தார் காட்ஃப்ரெ. சிலுவைப் போரை வழிநடத்தும் உரிமையை அலக்ஸியஸுக்கு அளிக்கும் விசுவாசப் பிரமாணம் உருவானது. ஆனால் பதிலுக்கு அலக்ஸியஸ் காட்ஃப்ரெவுக்குத் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் ஆலோசனையையும் அளிக்க வேண்டும் என்று ஒப்பந்தமானது. Read 3867 Times
 
42. சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 14
  அந்த அரசியல் வினோதங்களைப் பார்க்கத்தான் போகிறோம். அதற்குமுன், திரண்டெழுந்த சிலுவைப் படையினருக்குத் தலைமை ஏற்ற ஐவரை நாம் அறிமுகப்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது. முதலாம் சிலுவை யுத்தத்தில் அவர்கள் வெகு முக்கிய பாத்திரங்கள். Read 3730 Times
 
43. சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 13
  அதற்குள் ஜெர்மனியில் பல்வேறு பரிவாரங்கள் திரண்டிருந்தன. அவர்களும் இவர்களும் ஒன்று சேர்ந்து, படையாக உருமாறி, அதற்கு ‘மக்களின் சிலுவைப் போர்’ என்ற பெயர் ஏற்பட்டுவிட்டது. போர் வெறி அவர்களை உந்தித்தள்ள, கி.பி. 1096ஆம் ஆண்டின் இளவேனிற் காலத்தில், அந்தக் கூட்டம் ஜெருசலத்தை நோக்கிக் கிளம்பிவிட்டது. Read 3646 Times
 
44. சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 12
  கடந்த பதினோரு அத்தியாயங்களில் ஏகப்பட்ட நிகழ்வுகளையும் எக்கச்சக்கத் தகவல்களையும் மூச்சு முட்டக் கடந்து, இப்பொழுதுதான் முதலாம் சிலுவை யுத்தத்தை நெருங்கியிருக்கின்றோம். Read 7960 Times
 
45. ஔரங்கசீப் அவர் அழித்ததைவிட அதிக கோவில்களைக் கட்டினார்
  சரித்திராசிரியர் ரிச்சர்ட் ஈடன் காட்டியுள்ளபடி, இந்தியாவில் உள்ள முஸ்லீம் ஆட்சியாளர்களின் கோவில்களின் அழிவு மிகவும் அரிதாக இருந்தது, அது நடந்தபோதும் கூட, இது ஒரு அரசியல் செயல் அன்றி அது ஒரு மதபோக்கு அல்ல. Read 12424 Times
 
46. இமாம் அபுல் ஹஸன் நத்வி ரஹிமஹுல்லாஹ்
  அரபு நாடுகளில் கல்வியை பயிலாத இவர்கள் அரபுலக அறிஞர்களுக்கு மிகப்பெரிய ஆசானாக ஆனார்கள், பாலஸ்தீன பைத்துல் மக்திஸ் இமாம் அப்துஸ் ஸமத், உலகப் புகழ்பெற்ற அறிஞர் யூசுப் அல் கர்ளாவி போன்ற சமகால அறிஞர்களுக்கு ஆன்மீக ஆசானாக கருதப்படுபவர்கள். Read 5772 Times
 
47. இதுவல்லவா நபி நேசம்!!!!!!!
  இதுவல்லவா நபி நேசம்!!!!!!! ஹஸன் அல் இக்திர்லி.யார் இவர்? நமது கர்ஜனைகளில் மட்டும் வெளிப்படும் நபி நேசம் அவர்களது கற்பனைகளில் கூட வெளிப்பட்டது. Read 6130 Times
 
48. தனக்குரியவருக்காக காத்திருக்கும் இரயில் ....
  இந்த இரயிலுக்காகத் தான் முழு முஸ்லிம் உம்மத்தே காத்துக்கொண்டிருந்தது.......... Read 5999 Times
 
49. உலகத்திற்கே ஒளி விளக்கேற்றிய மதீனாவில், விளக்கேற்றியது எப்போது?
  ஹிஜ்ரி 1325 இல் முதன் முதலாக மதீனத்துப் பூங்காக்குள் மின் விளக்குகள் வருகைத் தந்தது.வரவழைத்தது வேறு யாருமில்லை, உஸ்மானியா பேரரசின் கலீஃபா அப்துல் ஹமீது ஸானீ (ரஹ்)அவர்கள் தான். Read 5737 Times
 
50. உஸ்மானியா பேரரசு கடைவீதியின் தொங்கும் கூடைகள்
  அதாவது எல்லா கடைகளிலும் கூடைகள் தொங்கவிடப்பட்டிருக்கும்.ஒரு செல்வந்தர் அந்த கடைக்கு வந்து தனக்கு தேவையான நான்கு ரொட்டிகளுக்கு பணம் செலுத்தாமல் எட்டு ரொட்டிக்களுக்கான பணத்தை கொடுக்கிறார். Read 5964 Times
 
51. நான் குதுப்மினார் பேசுகிறேன்-1
  சுமார் எழுநூறு ஆண்டுகள் இங்கு தான் நான் அயராமல் நிற்கிறேன். இந்த இடத்தை விட்டு ஒரு அங்குலம் கூட இதுவரை நான் நகர்ந்தது இல்லை. என் இரு கண்களை ஒரு வினாடி கூட நான் மூடியதும் இல்லை. காலத்தின் ஓட்டம், அதிகாரத்தின் மாற்றம் என அனைத்தையும் கவனித்து கொண்டுதான் இருக்கிறேன். Read 6101 Times
 
52. சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 11
  தன் கூட்டத்திலிருந்து ஆளைத் தேர்ந்தெடுத்துப் பணியை ஒப்படைப்பான். தனியாளாகவோ ஓரிருவராகவோ நாலைந்து பேர் கொண்ட சிறு குழுவாகவோ அவர்கள் கிளம்புவார்கள். கத்தி, வாள், குறுவாள் என்று ஏதேனும் ஓர் ஆயுதம் ஏந்திக்கொள்வார்கள். குறி வைத்தவரைத் தொழில் நேர்த்தியுடன் கனக் கச்சிதமாகத் தாக்கி அவரின் கதையை முடித்துவிடுவார்கள். Read 6950 Times
 
53. சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -1
  ஸலாஹுத்தீன் ஐயூபி மன்னராய் உருவான காலத்திலிருந்தே ஜெருசலம்தான் அவரது இலட்சியமாய் இருந்தது. நெடுக நடைபெற்ற ஒவ்வொரு போருக்கும் அரசியல் நகர்வுகளுக்கும் சண்டைக்கும் சமாதானத்திற்கும் அந் நகரின் விடுதலைதான் அடிநாதமாய்த் திகழ்ந்தது. Read 9140 Times
 
54. சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -2
  டிக்ரித் நகரின் கோட்டையில் இருந்த காவல் அதிகாரிகள் அதைக் கவனித்துவிட்டார்கள். டைக்ரிஸ் ஆற்றை ஒட்டிக் குதிரைகளின் படையொன்று காற்றில் புழுதியைப் பரப்பி வேகவேகமாக வந்து கொண்டிருந்தது. Read 9332 Times
 
55. சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -3
  நஜ்முத்தீன் ஐயூபியும் ஷிர்குவும் குடும்ப சமேதராய் மோஸூல் நகரை வந்தடைந்து, மூச்சு விட்டு, ஆசுவாசமடைந்து, ஊருடன் ஐக்கியமாகி, ஓராண்டு ஆகியிருக்கும். சகோதரர்கள் இருவரையும் தம்முடன் இணைத்துக்கொண்டு, “கிளம்புங்கள். செல்வோம் களத்திற்கு” என்று இமாதுத்தீன் ஸெங்கி டமாஸ்கஸ் (திமிஷ்க்) நகரைக் கைப்பற்றப் படையெடுத்தார். Read 9861 Times
 
56. சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -4
  ஸெல்ஜுக்கியர்களுக்கும் பைஸாந்தியர்களுக்கும் இடையே உருவான ஒப்பந்தத்தின் அடிப்படையில் போர் ஓய்ந்து இரண்டு ஆண்டுகள் சமாதானமாகக் கழிந்தன. Read 9567 Times
 
57. சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -5
  பைஸாந்தியச் சக்ரவர்த்தி ஏழாம் மைக்கேலின் கோரிக்கைக்கு, போப் கிரிகோரியினால் படையை அனுப்பி வைக்க முடியாமல் போனதல்லவா? அதன் பிறகு, இரு தரப்பிலும் மாற்றங்கள் நிகழ்ந்திருந்தன. Read 9919 Times
 
58. சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 6
  கி.பி. 1095ஆம் ஆண்டு. நவம்பர் மாத இறுதியில் ஒருநாள், காலை நேரம். பிரான்ஸ் நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள க்ளெர்மாண்ட் நகரத் திடலொன்றில் மக்கள் குழுமியிருந்தனர். Read 16345 Times
 
59. கையிலே ஒரு துணிப்பை, எளிய நடை, எளிய உடை உத்தமபாளையம் எஸ்.எஸ். ஹஜரத்
  எளிய தோற்றம், வலிய கருத்துகள், போட்டி, பொறாமை, சூதுவாது இவற்றின் பொருள் தெரியா குழந்தை உள்ளம். அச்சாணி என்று புலவர்கள் வர்ணிப்பார்களே, அவ்விலக்கியங்களுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர். Read 8515 Times
 
60. இஸ்லாம் வென்றெடுத்த ஷாம்
  கவர்னருக்கு வேறு வழி தெரியவில்லை. மறுநாள் காலை முஸ்லிம்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தூது விட்டார். தூதுவர் ஸஈதிடம் வந்தவுடன் சாஷ்டாங்கம் செய்து வணங்க முற்பட்டார். ஆனால் முஸ்லிம்கள் அதனைத் தடுத்து விட்டனர். Read 8086 Times
 
61. தமிழகத்தில் ஆட்சி செய்த முதல் முஸ்லிம் மன்னர்
  பிரான்சிஸ் டே(Francis Day), ரௌலண்சன்(Rowlandson), ஸ்டுராக் (Stu-rrpck) போன்ற ஐரோப்பிய வரலாற்றாசிரியர்கள் கருத்துப்படி இஸ்லாம் தமிழ் மண்ணில் கி.பி. ஏழாம் நூற்றாண்டின் இறுதிக்குள்ளாகவே தழைக்கத் தொடங்கி விட்டது. Read 10029 Times
 
62. சாரதா பீடம் சொல்லும் திப்புவின் மதநல்லிணக்கம்
  திப்பு சுல்தான் இந்துக்களுக்கு எதிரானவர் என்றும், அவர் இந்துக்களை கொன்றார், மதமாற்றம் செய்தார், இந்து பெண்கள் மீது பாலியல் கொடுமைகளை ஏவினார் என்று பல கதைகளை சொல்லிவரும் இவர்கள் கூறும் கூற்றுக்களுக்கு ஏதும் வரலாற்று சான்று இருக்கிறதா என்றால், இவர்கள் ஆதாரமாகக் காட்டுவதெல்லாம் செவிவழிக் கதைகள் மட்டுமே. Read 13602 Times
 
63. சூஃபிக்களும் புனித போர்களும்
  பத்தொன்பதாம் நூற்றாண்டில் முஸ்லிம் வரலாறு அதிமுக்கியமான ஒரு கட்டத்தை அடைந்திருந்தது. எகிப்து மீதான நெப்போலியனின் படையெடுப்போடு துவங்கிய மேற்கத்தேய காலனித்துவம், பெரும்பாலான முஸ்லிம் நாடுகளை தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தது. அந்த நாடுகளில் இருந்த முஸ்லிம்களின் அரசியல் தலைமைத்துவம் இப்புதிய சவாலை எதிர்கொள்வதற்கு திராணி பெற்றதாக இல்லை. Read 9018 Times
 
64. யார் தேச விரோதி?
  காந்தி யுத்த பிரகடனம் செய்துவிட்டார். சத்தியத்திற்கும் அசத்தியத்திற்குமான போர் துவங்கிவிட்டது. அது இந்தியர்களின் இதயத்தில் புது உற்சாகத்தை ஏற்படுத்திவிட்டது. Read 10184 Times
 
65. இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும் - தமிழரும்.
 

சேரமான் பெருமாள் பாஸ்கர ரவிவர்மா ( Cheraman Perumal )என்பவர் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்ற முதல் இந்தியரும்,தமிழரும் ஆவார். இவரது ஆணைப்படியே முதல் இந்திய மசூதி கேரள மாநிலம் கொடுங்கலூரில் கட்டப்பட்டது. சேரமான் பெருமாள் ஜும்மா மசூதி என்று அழைக்கப்படும் இந்த மசூதியே உலகின் இரண்டாவது ஜுமா மசூதி ஆகும்.

Read 19238 Times
 
66. ஸயீத் இப்னு ஆமிர் سعيد ابن عامر (ரலி)
 

ஆமாம். அல்லாஹ்வின் மேல் ஆணையாக, பல நாட்கள் அவரது வீட்டு அடுக்களை நெருப்பின்றி இருப்பது எங்களுக்குத் தெரியும் என்று அவர்கள் நிச்சயப்படுத்தினர்.

உமர் அழுதார்! மாநிலம் ஆளும் கவர்னர் ஏழையா? தடுக்க இயலாமல் உமர் அழுதார்!.

Read 16398 Times
 
67. விடுதலைப்போரில் வீரமங்கையர்
  ஆங்கிலேயர்களைக் கூண்டோடு அழித்துவிடவேண்டும் என்று ஆண்டவனைத் தொழும்படி முஸ்லிம் தாய்மார்கள் குழந்தைகளிடம் கூறியதை நான் நேரில் கேட்டேன்.- டில்லி மன்னர் மீது நடந்த வழக்கு சாட்சியத்தின் போது ஆங்கில மாது ஆல்ட்வெல் கூறியது. (* வீரசாவர்க்கர்,எரிமலை,பக்கம்.61) Read 14458 Times
 
68. பூரண சுதந்திரம் கேட்ட முதல் இந்தியன்
  1929 ஆம் ஆண்டு டிசம்பர் 29 - இல் லாகூரில் கூடிய காங்கிரஸ் மாநாட்டில்தான் இந்தியவுக்கு பூரண சுதந்திரம் வேண்டும் (Complete Independence India,as its goal) என்ற தீர்மானம் முன் வைக்கப்பட்டது. ஆனால் அதற்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்பே பூரண சுதந்திரமே எங்கள் பிறப்புரிமை என்ற கோசத்தை வைத்தவர் ஓர் இஸ்லாமிய மார்க்க அறிஞர் ஆவார். Read 14383 Times
 
69. இஸ்லாம் இந்தியாவுக்கு அந்நிய மதமா?
  உண்மையான வரலாற்றை ஆதாரங்களோடு ஆராய்ந்து பார்ப்போமானால், இன்று முஸ்லிம்களை அந்நியர் எனச் சொல்லும் பலரும் ஏதோ ஒரு காலத்தில் எங்கிருந்தோ இங்கே வந்து குடியேறியவர்கள்தான் என்பது தெள்ளத்தெளிவாக விளங்கும். Read 12113 Times
 
70. நாகூர் - ஒரு வரலாற்றுப் பார்வை
  ...தமிழக முஸ்லிம்களின் கடல் வாணிப வரலாற்றிலும், இஸ்லாம் வளர்த்த இன்பத்தமிழ் இலக்கிய வரலாற்றிலும் கூட நாகூர் சிறப்பான இடம் வகிக்கிறது. இவை குறித்த சில வரலாற்றுச் செய்திகளை இங்கு காண்போம். Read 15683 Times
 
71. இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள்
  நன்றி கொல்வதை வாழ்க்கை வழியாகக் கொண்டவர்கள் மட்டுமே, இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்களின் பங்கை மறைப்பார்கள் அல்லது மறுப்பார்கள். தேசப் பிரிவினை;க்கு முஸ்லிம்களே காரணம் என்றொரு பொய்யைக்கட்டவிழ்த்து விட்டார்கள் சில பாசிஸ்டுகள். இவர்கள இந்தப் பொய்யை இடைவிடாமல் பரப்பினார்கள். இதை ஒரு பெரும் பகுதி மக்கள் நம்பவும் செய்தார்கள். Read 16264 Times
 
72. கோரிப்பாளையம் தர்கா கல்வெட்டுகள்
  மதுரை மாநகரில் வைகையாற்றின் வடகரைப்பகுதியில் அமைந்துள்ளது கோரிப்பாளையம். இப்பகுதியில் பழமையான பள்ளிவாசல் ஒன்றும், தர்கா ஒன்றும் ஒரே வளாகத்தில் உள்ளன. Read 18692 Times
 
73. சமயப் பொறை பேசும் சரித்திரச் சான்றுகள்
  இன்றைய இந்தியாவில் இந்து இஸ்லாம் மக்களிடையே நல்லிணக்கமும், நேசமும் வலுப்பெற வேண்டும் என்ற கருத்து ஓங்கி ஒலிக்கிறது. இவ்விரு பிரிவினரும் எப்போதுமே மோதிக்கொண்டவர்களாக இல்லை. மாறாக ஒருவரையொருவர் புரிந்து கொண்டு இரு திறத்தாரின் நம்பிக்கைகளுக்கும் மதிப்பளித்து வாழ்ந்தனர் என்பதற்குக் குறிப்பாகத் தமிழகத்தில் பல வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. Read 16279 Times
 
74. தமிழ் முஸ்லிம்களின் இடப்பெயர்ச்சி வரைபடம்
  முஸ்லிம் இனம் குறித்த இந்தப் புள்ளி விவரங்களோ தகவல்களோ மட்டும் போதாது. இனம் பற்றிய தகவல்கள் புவியியல் சார்ந்ததாக இருக்க வேண்டும். Ethno எனப்படும் இனம் குறித்த ஆய்வையும் Geography எனப்படும் நிலவியல் பற்றிய இயலையும் ஒன்று சேர்ந்து Ethnogeography எனப்படும் நிலவியல் பற்றிய இயலையும் ஒன்று சேர்த்து Ehnogeography எனப்படும் சமூகஅறிவியல் துறை வாயிலாகத் தமிழ் முஸ்லிம்களின் Cartographyயைத் தயாரிப்பதே நமது நோக்கம். Read 16984 Times
 
75. விடுதலை போரில் நெல்லை மாவட்ட முஸ்லிம்கள்
  இந்தியா எங்கள் தாய்நாடு இஸ்லாம் எங்கள் வழிபாடு தமிழே எங்கள் மொழியாகும் தன்மானம் எங்கள் உயிராகும். Read 16843 Times
 
76. தமிழகத்தில் முஸ்லீம்கள் வரலாறு
  அகிலத்திற்கோர் அருட்கொடையாகத் தோன்றிய அண்ணல் நபி (ஸல்) அவர்கள் போதித்த சத்திய சன்மார்க்க இஸ்லாம் அரபு நாட்டில் மட்டுமின்றிக் கடல் வழியாகவும் தரை மார்க்கமாகவும் அகில உலகெங்கிலும் குறிப்பாக தென்கிழக்கு மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் வேகமாக வளர்ந்தோங்கி வேரூன்றத் துவங்கியது. Read 22400 Times
 
77. சுதந்திரத்திற்காக சிறுவன் கைர் முகம்மது
  தேச விடுதலைக்கு 25 ஆண்டுகளுக்கு முன் 1922 இல் சிந்து மாகாணம் மட்லி நகரில் ஒரு சிறுவன் ஆங்கிலேயருக்கு எதிராக புரட்சியைத் தூண்டும் விதத்தில் ஆவேசமாக மக்கள் மத்தியில் பேசுகிறான். விடுதலை உணர்வை; தூண்டும் அந்த மழலைக் குரல் ஒலிக்கும் இடமெல்லாம் மக்கள் திரளாகக் கூடினர். துகவல் ஆங்கிலேயருக்கு செல்கிறது. அந்த 11 வயதுச் சிறுவனைக் கைது செய்து (இன்று பாகிஸ்தானில் உள்ள) ஹைதராபாத் நகர நீதிமன்றத்தில் நிறுத்துகின்றனர். Read 14672 Times
 
78. இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும் - தமிழரும்.
  சேரமான் பெருமாள் பாஸ்கர ரவிவர்மா ( Cheraman Perumal )என்பவர் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்ற முதல் இந்தியரும்,தமிழரும் ஆவார். இவரது ஆணைப்படியே முதல் இந்திய மசூதி கேரள மாநிலம் கொடுங்கலூரில் கட்டப்பட்டது. சேரமான் பெருமாள் ஜும்மா மசூதி என்று அழைக்கப்படும் இந்த மசூதியே உலகின் இரண்டாவது ஜுமா மசூதி ஆகும். Read 15825 Times
 
79. தமிழகத்தில் முஸ்லீம்கள்
  அரேபிய தாயகத்தில் வேரூன்றியிருந்த மடமைகளை மாய்த்து மாபெரும் மறுமலர்ச்சியை உருவாக்கிய இனியமார்க்கம் இஸ்லாம், கி.பி. ஏழாம் நூற்றாண்டில்தான் நம் தமிழகத்தில் தம் பொற்பாதங்களை மெல்லப் பதிக்கத் துவங்கியது. Read 14978 Times
 
80. இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன?
  இந்திய விடுதலைப்போர் என்பது ஒரு வீர காவியம். இந்தப் போரில் எண்ணற்றவர்கள் சிறை சென்றனர். இலட்சக்கணக்கானோர் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனர். இத்தியாக வேள்வியில் ஈடுபட்டவர்களில் முஸ்லிம்களின் பங்கு மகத்தானது. Read 19374 Times
 
81. இந்திய விடுதலைப் போரும் முஸ்லீம்களும்
  ஐரோப்பியர்களின் இந்திய வருகைக்கு முன்பாக, இந்தியாவை ஆண்டவர்கள் முகலாய முஸ்லிம் மன்னர்கள். ஒளரங்கசீப் அவர்கள் தான் அகண்ட பாரதத்தை உருவாக்கி யவர். இன்றைய ஆப்கான், பாகிஸ் தான், பங்களாதேஷ் மற்றும் இன்றைய இந்தியாவில் காஷ்மீர் முதல் மதுரை வரையிலும் அவர் ஆட்சி நடந்தது. Read 21446 Times
 
82. இந்திய சுதந்திரப் போரில் முஸ்லிம்களின் பங்கு
  இந்தியாவில் 60 வது சுதந்திரத்தைக் கொண்டாடுகின்ற இவ்வேளையில் இந்திய சுதந்திரத்திற்கு தனது சதவிகிதத்தையும் மிஞ்சும் விதத்தில் உயிர்களையும், உடமைகளையும் தியாகம் செய்த இஸ்லாமிய சமுதாயத்தின் தியாகத்தை மறந்திருந்தாலும் மன்னித்திருக்கலாம்... ஆனால் பாவிகள் திட்டமிட்டே அல்லவா மறைத்திருக்கிறார்கள்! Read 23257 Times
 
83. பாடலியில் ஒரு புலி
  நீங்கள் இப்போது என்னைத் தூக்கிலிடலாம். என் போன்ற பலரையும் தூக்கிலிடலாம். ஆனால் எங்களுடைய லட்சியத்தை நீங்கள் ஒரு காலத்திலும் தூக்கிலிட முடியாது. நான் இறந்தால் எனது ரத்தத்தில் இருந்து ஆயிரக்கணக்கான புரட்சியாளர்கள் உதித்து உங்கள் சாம்ராஜயத்தையே அழித்து விடுவார்களென்பது நிச்சயம்! என்று தன் தேசத்தின் எதிர்கால விடியல் கனவைத் தன் இறுதி மூச்சில் வெளிப்படுத்தியவாறு தூக்கு கயிறை முத்தமிடுகிறார். Read 12192 Times
 
84. தேசவிடுதலைக்கு ஆயுதப்புரட்சியே தீர்வு
  26-09-1926- இல் தூக்கு கயிற்றில் தன்னை மாய்த்துக் கொண்ட மாவீரன் அஸ்பாகுல்கான். இந்திய விடுதலைப் போராட்ட இயக்கத்தின் (ஆயுதப் புரட்சி) முன்னோடி ஆவார். Read 11626 Times
 
85. ஒரு மனிதன் ஒரு பட்டாளம் - மௌலவி செய்யது அஹ்மதுல்லாஹ் ஷாஹ்.
  மௌலவி செய்யது அஹ்மதுல்லா ஷாஹ்வின் தீரத்தைப் பற்றி ஜெனரல் தாமஸ் என்ற ஆங்கில அதிகாரி, இந்திய சுதந்திரத்திற்காகப் புரட்சி செய்தவருள் இவரைவிட மேலான வீரர் எவருமில்லை. என்கிறார். Read 11954 Times
 
86. முதல் சுதந்திரப் பிரகடனம்
  இந்த மண்ணில் சுதந்திரத்திற்காய் சிந்தப்பட்ட முதல் ரத்தம் - முதல் போராட்ட உத்வேகம் - முதல் மக்கள் இயக்கம் - முதல் சுதந்திரப் பிரகடனம் என பல முதல்களுக்குச் சொந்தக்காரர்களாக, அம்முதல்களுக்கு மட்டுமே சொந்தம் உடையவர்களாக இஸ்லாமிய பரம்பரை உள்ளது. Read 11664 Times
 
87. மவுலானா எனும் மகத்தான இந்தியர்
  நவீன இந்தியாவின் சிற்பிகளில் ஒருவரான மவுலானாவைப் பற்றிய நினைவுகூரல் Read 12074 Times
 
88. காலித் பின் வலீத் (ரலி)
  இஸ்லாமிய வரலாற்றில் காலித் பின் வலீத் (ரழி) ஒரு தனிச்சிறப்பிடம் உண்டு. உயரமான மலை போன்ற உறுதியான தோற்றம், மற்றும் பரந்த மார்புகள், குறிப்பிட்டுச் சொல்லும் தகுதிகளான கழுகு போன்ற கூர்ந்த பார்வை, தொலை நோக்குச் சிந்தனைத் திறன், சிறந்த அறிவாற்றல், நல்ல நினைவாற்றல் மற்றும் உயர்ந்த சிந்தனைகள், உறுதியான கொள்கைப் பிடிப்பு ஆகிய குணநலன்களை ஒருங்கே பெற்றவர் தான் காலித் பின் வலீத் (ரழி). இஸ்லாமிய போர் வரலாற்றில் இவருக்கென தனி இடம் உண்டு. இவருக்கு நிகரான குதிரை ஏற்ற வீரரும், வாள் வீச்சு மற்றும் பல்வேறு ஆயுதங்களைப் பிரயோகிக்கும் திறமை படைத்தவர்கள் கிடையாது என்று சொல்லும் அளவுக்கு வீரத்தின் விளைநிலமாகத் திகழ்ந்தார். Read 15879 Times
 
89. தமிழ் முஸ்லிம்களின் வரலாற்று பொக்கிஷம். ஒரு ஆவணக் குறும்படம்
  ' யாதும் ' இயக்குனர் அன்வரின் உழைப்பில் வெளிவந்திருக்கும் தமிழ் முஸ்லிம்களின் வரலாற்று பொக்கிஷம். அதை ஒரு ஆவணக் குறும்படமாக தமிழ் முஸ்லிம்களுக்கு தந்திருக்கும் அன்வரின் பணியை பாராட்ட வார்த்தைகள் போதாது. Read 14127 Times
 
90. இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  Read 13720 Times
 
91. முதல் வாள்!
  Read 13186 Times
 
92. கஜினி முகம்மது மற்றும் முகம்மது துக்ளக் (தவறான ணோட்டங்கள்)
  Read 13267 Times
 
93. இலங்கையில் முஸ்லிம்கள் - அன்றும் இன்றும்
 

நீண்ட காலமாக முஸ்லிம்களும் பௌத்தர்களும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு இணக்கமாகவே வாழ்ந்துவந்தனர். அண்மைக் காலமாக அங்கு சில தீவிரவாத அமைப்புகள் தலைதூக்கிப் பிரச்சினை செய்துவருகின்றன. இந்த அமைப்புகளுக்கு புத்த பிக்குகளே தலைமை தாங்குகின்றனர். 

Read 14952 Times
 
94. மாவீரன் மருத நாயகம் கான் சாஹிப்
 

இந்தியாவில் சுதந்திற்கு போராடிய முஸ்லிம் போராளிகள் பலர் இருகின்றனர்.அதிகமான போராளிகள் துரோகிகளின் மூலமே ஆங்கிலேயர்களால் கொல்லபட்டனர் .அப்படிபட்ட போராளிகள் இருக்கும் பொழுது ஆங்கிலேயர்களால் இந்தியாவை கைப்பற்றுவது கேள்வி குறியானது?அப்படி பட்டவர்களின் ஒருவர் தான் இந்த மாவீரன் கான் சாஹிப்.

Read 16023 Times