Tamil Islamic Media

உஸ்மானியா பேரரசு கடைவீதியின் தொங்கும் கூடைகள்

 

மேலே உள்ள கானொளி உஸ்மானியா பேரரசின் கடைவீதிகளில் பின்பற்றப்பட்ட ஒரு அற்புதமான வழக்கத்தை தத்ரூபமாக எடுத்துச் சொல்கிறது....


அதாவது எல்லா கடைகளிலும் கூடைகள் தொங்கவிடப்பட்டிருக்கும்.ஒரு செல்வந்தர் அந்த கடைக்கு வந்து தனக்கு தேவையான நான்கு ரொட்டிகளுக்கு பணம் செலுத்தாமல் எட்டு ரொட்டிக்களுக்கான பணத்தை கொடுக்கிறார். கடைக்காரர் கூறுகிறார் பணம் அதிகமாக தந்து விட்டீர்கள் என்று அதற்கு செல்வந்தர் கூறினார். மீதுமுள்ள பணத்திற்கான ரொட்டியை தொங்கும் கூடையில் போட்டுவிடுங்கள்".கடைக்காரரும் அந்த பணத்தை தான் எடுத்துக் கொள்ளாமல் அந்த ரூபாய்க்கான ரொட்டிகளை அந்த தொங்கும் கூடையில் போட்டுவிடுகிறார்.

 

அடுத்தது ஒரு ஏழ்மையான மூதாட்டி வருகிறாள் கடைக்காரன் தங்களக்கு ரொட்டி வேண்டுமா என்று வினவுகிறார் ஆமாம் என்று மூதாட்டி கூற நான்கு ரொட்டிகளைக் கொண்டு பையை நிரப்பி கடைக்காரர் மூதாட்டியிடம் கொடுத்தப் போது மூதாட்டி கூறுகிறாள் எனக்கு இரண்டு போதும் மீதத்தை வேறுயாருக்காவதுக் கொடுத்து விடுங்கள் என்று கூறி தனக்கு எவ்வளவு தேவையோ அதனை மட்டும் எடுத்துக் கொண்டு விடைபெறுகிறாள்.இந்த அற்புதமான பழக்கித்தின் விளைவாக தேவையுடையவர்கள் நல்ல நிலைக்கு மாறினாலும் தான் தேவையோடு இருந்த காலங்களில் தனக்கு கிடைத்த இந்த உதவிக்கு செய்யும் நன்றிக்கடனாக அவர்கள் ஒரு ரொட்டி வாங்கினால் இரு ரொட்டிக்கான பணத்தைக் கொடுத்து மற்றொரு ரொட்டியை தொங்கும் கூடையில் போட்டுவிடுகிறார்கள்.

தனது அண்டை வீட்டுக்காரர் பசியோடு இருக்க வயிறு நிரம்ப சாப்பிடுபவர் உண்மையான முஃமினே அல்ல என்ற அண்ணலாரின் (ஸல்) கூற்றை ஒரு சாம்ராஜ்யமே கடைப்பிடித்துள்ளதற்கு இதுவொரு சிறந்த எடுத்துக்காட்டு.......

அரபி மூலம்: தியானத் டிவி
தமிழில்: மௌலவி நியாசுதீன் புகாரி நத்வி






No articles in this category...