Tamil Islamic Media

மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் :

மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் :(MADRAS EYE- CONJUNCTIVITIS-FACTS& PREVENTION)
Reactions:
 

தற்போது நிறைய ஊர்களில் மெட்ராஸ் ஐ பரவி உள்ளது என்று
கேள்வி படுகிறோம் அதற்கு முன் ஏச்சரிக்கை எவ்வாறு எடுப்பது
என்ற விபரங்கள் தெரிந்து பயன்பெறுவோம்!!!! மற்றவர்களுக்கும்
பகிர்துகொள்ளுங்கள்!!!

கண்களின் வெளி சவ்வு அழற்சியே - சிவந்த கண் அல்லது மெட்ராஸ் ஐ எனபடுகிறது .அடினோ வைரஸ் (ADENO VIRUS -CONJUNCTIVITIS)என்ற வைரஸ் இதற்க்கு பெரும்பாலும் காரணம் .

இது பருவநிலை மாறுபாடல் வரும் ஒரு வியாதி .இந்த வைரஸ் சூடான , ஈரபதமான சூழ்நிலையில் மிக வேகமாக பரவக்கூடியது .

இது காற்று மற்றும் உடைமைகள்(fomites) ( கர்சிப் , துண்டு ,பேனா ,பென்சில் ,அழிப்பான் ,பேப்பர் ) கை குலுக்குதல் மூலம் பரவும் ஒரு வைரஸ் வியாதி ஆகும் .

கருப்பு கண்ணாடி போடுவதால் பிறருக்கு பரவாது என்பது தவறு . கண்ணாடி போடுவதால் அதிகபடியான சூரிய வெளிச்சம் மூலம் வரும் எரிச்சலை மட்டுமே தடுக்க மூடியும்.
ஒருவர் பயன்படுத்திய கண்ணாடியை மற்றவர் பயன் படுத்த கூடாது

கண் சொட்டு மருந்தை ஒரு நாளைக்கு ஆறு முதல் எட்டு முறை மருத்துவர் ஆலோசனை படி போடவேண்டும் .

கண்களை கசக்க கூடாது .

தும்மல் , இருமல் மூலமும் இந்த வைரஸ் பரவும் , எனவே வாயில் துணி வைத்து இருமவும் .

கண்களை குளிர்ந்த நீரில் அடிக்கடி கழுவவும் ,ஆதற்கு முன்பு கைகளை நன்கு சோப்பு போட்டு கழுவவும் .

மிதமான வெந்நீரில் துண்டை நனைத்து ஒத்தடம் கொடுக்கவும்.

நேருக்கு நேர் பார்த்தால் வராது . ஆனால் எதிர்ப்பு சக்தி குறைவனவர்களுக்கும் , குழந்தைகளுக்கும் அருகில் வந்தாலே மூச்சு காற்று மூலம் தொற்று ஏற்படும் .

மருத்துவர் ஆலோசனை இன்றி steroid சொட்டு மருந்துகளை கடையில் வாங்கி போட்டால் கண் பார்வை இழப்பு ஏற்படலாம் . எனவே சுய மருத்துவம் செய்வதற்கு சும்மா இருப்பதே மேல் . ஏனெனில் இது தானாகவே சரி ஆகிவிடும் (self limiting ).
உடலின் எதிர்ப்பு சக்தியை பொருத்து 5 முதல் 7 நாட்களில் இது குணமடையும் .


குறிப்பு: தாங்கள் தெரிந்ததை மற்றவர்களுக்கும் தெரியபடுத்த முயற்சியுங்கள் !!!!














No articles in this category...