Tamil Islamic Media

இமாம்களை கண்ணியம் செய்வோம்!

(கீழை நிஷா புதல்வன்)
 
மத்ஹபுகளை பின்பற்றக்கூடாது,அதை உருவாக்கிய இமாம்களையும் வழிகாட்டிகளாக ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று பேசியும்,எழுதியும் வரும் ஒரு சிலர் அதற்கான காரணத்தை சொல்லும் போது வேடிக்கையாக உள்ளது.அவர்கள் சொல்லும் காரணம்தான் என்ன?இமாம்களுக்குள் கருத்தொற்றுமை இல்லை என்பதுதான்!
 
மார்க்க விடயங்களில் ஒரு சில இடத்தில் ஒரு இமாம் கூடும் எனச்சொன்னால்,மற்ற இமாம்கள் அதற்கு மாற்றமான வழிமுறையை கூறுகிறார்கள்.எந்த இமாமின் கருத்தை நாம் ஏற்றுக்கொள்வது?
 
அதனால் மொத்த இமாம்களையும் புறக்கணித்துவிட்டு குர் ஆன்,ஹதீஸை மட்டும் நாம் பின்பற்றுவோம் எனக்கூறுபவர்கள் நபிமார்களையும் புறக்கணித்து விடுவார்களா?
 
எனது இந்தக் கேள்விக்கான காரணம்,சில விடயங்களில் நபிமார்களுக்குள்ளேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டதின் நிகழ்வை அல்லாஹு ரப்புல் ஆலமீன் தனது திருமறையில் இவ்வாறு கூறியுள்ளான்;
 
'விவசாய நிலத்தில் ஒரு சமூகத்தாரின் ஆடுகள் இரவில் இறங்கி மேய்ந்து விட்டபோது,அவ்வேளாண்மை விஷயத்தில் தாவூது,சுலைமான்(ஆகிய இருவரும்)தீர்ப்பளித்த சந்தர்ப்பத்தை(நபியே! நினைவு கூறுவீராக!அப்போது)அவர்களுடைய தீர்ப்புக்கு நாம் சாட்சியாக இருந்தோம்'.(அத்தியாயம்:21,வசனம்:78)
 
'தீர்ப்புக் கூறுவதில் நாம் ஸுலைமானுக்கு அ(தன் நியாயத்)தை விளங்க வைத்தோம்.(அவ்விருவரில்)ஒவ்வொருவருக்கும் (தீர்ப்புக் கூறும்)அறிவையும்,ஞானத்தையும் நாம் கொடுத்திருந்தோம்;மலைகளையும்,பறவைகளையும் தாவூதுடன்(தஸ்பீஹ் செய்ய)வசப்படுத்தியும் கொடுத்தோம்.அவை (அவருடன் அல்லாஹ்வை)துதி செய்தன;நாம் தான் இவற்றையெல்லாம் செய்வோராய் இருந்தோம்.'(அத்தியாயம்:21,வசனம்:79)
 
நபி தாவூது(அலை)அவர்கள் அரசராக இருந்த போது ஒரு வழக்கு அவர்களிடம் வந்தது,அவ்வூர் வாசி ஒருவரின் விளை நிலத்தில் மற்றொருவரது ஆடுகள் இரவு நேரத்தில் இறங்கி பயிர்களை காலியாக்கி விட்டது.காலையில் தமது விளைச்சல்களின் சேதத்தை கண்ட விவசாயி யாருடைய ஆடுகள் மேய்ந்தது என்பதனை அறிந்து கொண்டு இது தொடர்பாக நபி தாவூது(அலை)அவர்களிடம் முறையிட்டார்.
 
வழக்கில் சம்பந்தப்பட்ட இருவரையும் அழைத்து விசாரித்த நபியவர்களிடம் ஆடுகளுக்கு சொந்தக்காரர் தமது குற்றத்தை ஒப்புக்கொள்கிறார்;விவசாயத்தின் சேத மதிப்பும்,ஆடுகளின் மதிப்பும் சமமாக இருக்கவே ஆடுகளை விளை நிலத்துக்காரருக்கு சொந்தமாக்கி தீர்ப்புக்கூறினார்கள் நபி தாவூது(அலை)அவர்கள்.
 
இத்தீர்ப்புக்கு கட்டுப்பட்டு அவையிலிருந்து வெளியேறிய வாதி,பிரதிவாதி இருவரையும் நபி ஸுலைமான்(அலை)அவர்கள் சந்தித்தார்கள்.
 
 அப்போது ஸ






No articles in this category...