''அல்லாஹுதஆலாவிடமிருந்து ஒரு மலக்கு என்னிடம் வந்தார். எனது உம்மத்தில் பாதியைச் சொர்க்கத்தில் நுழைய வைப்பது அல்லது (அனைவருக்காகவும்) பரிந்து பேசும் உரிமையை எனக்கு வழங்கிவிடுவது ஆகிய இரண்டு காரியங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க அனுமதி கொடுத்தார். ஒருவரும் விடுபடாமல் முஸ்லிம்கள் அனைவரும் பயனடைய) நான் சிபாரிசு செய்யும் உரிமையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். ஆகவே அல்லாஹுதஆலாவுக்கு இணைவைக்காத நிலைவில் மரணித்தவருக்கு என்னுடைய பரிந்துரை உண்டு.'' என்று ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அருளியதாக ஹஜ்ரத் அவ்ஃப் இப்னு மாலிகுல் அஷ்ஜஇய்யீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: திர்மிதீ) |