திருச்சி சகோதரர்களின் கவனத்திற்கு: சோழ இளவரசி குந்தவை நாச்சியார்
சோழ இளவரசி குந்தவை நாச்சியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை முனைவர் பட்டதுக்கான ஆய்வுத் தலைப்பாக எடுத்து மிக விசாலமாக ஆய்வுசெய்து அதை அதிகாரப்பூர்வ வரலாறாக பதிவாக்கிட வேண்டும்.
இது திருச்சியை சுற்றி வாழும் வரலாற்று ஆய்வாளர்கள் மாணவர்களின் பொறுப்பாக இருக்கிறது. தமிழ்நாடு வக்ஃபு வாரியம், திருச்சி மாவட்ட ஜமாஅத்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகளும் இதற்கு உதவிட வேண்டும்.
11 ஆம் நூற்றாண்டில் பாரசீகத்திலிருந்து அழைப்புப் பணியாற்ற திருச்சி வந்த இறைநேசச் செல்வர் நத்தஹர் அவர்களின் பாதுகாப்பிலும் ஆண்மிகப் பயிற்சியிலும் அறிவுக்கூர்மை பெற்ற குந்தவை நாச்சியார் அவர்கள் தான் தனது சகோதரன் அருண்மொழி வர்மன் என்ற ராஜராஜ சோழனை சோழப் பேரரசனாக செதுக்கியவர்.ராஜராஜ சோழன் ஆண்ட 10,11 ஆம் நூற்றாண்டுகள் சோழப்பேரரசின் பொற்காலமாக கருதப்படுகிறது.
அன்றையகால உலகின் அறிவுத் தலைநகராகவும் வணிகத் தலைநகராகவும் விளங்கிய பாரசீக அப்பாஸிய கிலாஃபத்தின் பாக்தாத் நகரத்தோடும் ஐரோப்பிய அந்தலூசியாவின் (ஸ்பெயின்) கார்டோபா நகரத்தோடும் சோழப்பேரரசின் கலாச்சார வணிகத் தொடர்புகள் பற்றிய செய்திகள் ஒமான் நாட்டின் சலாலா நகரத்திலுள்ள அல்பலீத் துறைமுக அருங்காட்சியகத்தில் கிடைக்கின்றன. (அல்பலீத் துறைமுகத்துக்கு நான் சென்று பார்வையிட்டுள்ளேன்).நமது ஆய்வுகள் இதிலிருந்து துவங்கிட வேண்டும்.
அதோடு இன்றைய திருச்சி மாவட்டத்தில் உள்ள செம்பங்குளம், பெரியநாயகிசத்திரம், மண்ணச்சநல்லூர், திருச்செந்துறை, சித்தாநத்தம், கோமாகுடி, மணமேடு, பாகனூர் ஆகிய 8 வருவாய் கிராமங்களின் நிலங்கள் முழுவதும் வக்ஃபு சொத்துக்கள் என்ற செய்தி சமீபத்தில் வெளியானதை கவனித்திருப்போம்.
இது பலருக்கு வியப்பாக இருந்திருக்கலாம். என் போன்ற வக்ஃபு சொத்துக்களின் வரலாற்றை தேடுபவர்களுக்கு இது ஒன்றும் வியப்புக்குரிய செய்தியல்ல.
திருச்சியின் மதிப்புமிகுந்த BHEL நிறுவனம்,ஆயுத தொழிற்சாலை, பாரதிதாசன் பல்கலை உள்ளிட்டவையும் கூட வக்ஃபு சொத்துக்களின் பட்டியலில் தான் வருகின்றன என்ற தகவலும் உண்டு. இந்தப் பட்டியல் இன்னும் நீளமானது.ஆனால் இவை எதற்கும் சட்டரீதியான ஆவணங்கள் ஒருங்கிணைக்கப்படவில்லை.
11 ஆம் நூற்றாண்டில் குந்தவை நாச்சியார் அவர்களால் திருச்சியைச் சுற்றிய சைவ வைணவ பவுத்த சமன கோயில்களுக்கு வழங்கப்பட்ட நிலத் தானங்கள் போன்று மேலே குறிப்பிடப்பட்டுள்ள கிராமங்கள் மற்றும் பகுதிகளின் நிலங்கள் அனைத்தும் முஸ்லிம்களுக்கு குந்தவை நாச்சியார் அவர்களால் தானமாக வழங்கப்பட்டவை என்ற செய்திகள் சில வரலாற்று ஆசிரியர்களின் நூல்களில் சிதறிக் கிடக்கின்றன.
சோழப்பேரரசு மற்றும் குந்தவை நாச்சியார் அவர்களின் வரலாற்றை ஆழ அகலமாக ஆய்வு செய்தால் சோழப்பேரரசுக்கும் முஸ்லிம்களுக்குமான உறவுகளின் வேர்களையும் விழுதுகளையும் அறிந்து கொள்ளலாம்.அதேபோல காவிரிக்கரையில் இன்றைய திருச்சி தஞ்சை மாவட்டங்களைச் சுற்றியுள்ள வக்ஃபு சொத்துக்கள் குறித்து இன்னும் கூடுதலான ஆதாரங்கள் கிடைக்கப் பெறலாம்.
அவற்றையெல்லாம் தொகுத்து யாராலும் மறுக்க முடியாத அளவுக்கு கல்வி ரீதியாகவும் சட்டப்பூர்வமாகவும் (Academically & Legally) ஆவணப்படுத்த வேண்டும்.
நம்முடைய ஆய்வுக் கல்வியும் முனைவர் பட்டமும் வேலைவாய்ப்புகளை அடைவதற்கும் வாழ்வாதார தேவைகளுக்கும் சமூக அந்தஸ்த்தை பெறுவதற்கும் என்று சுருங்கிப் போனால்..... அதேபோல ஆர்பாட்டம் போராட்டம் அரசியல் அறிக்கைகள் என்று சமுதாய அமைப்புகளின் பணிகள் ஒரு மூலைக்குள் முடங்கிப் போனால்.....
முஸ்லிம்களின் நீண்டநெடிய வரலாற்றுப் பெருமைகளும் விலைமதிப்பில்லா நமது சொத்துக்களும் காணாமல் போய் இந்த மண்ணோடும் மக்களோடும் தொடர்பு அறுந்த சமூகமாக மாறிப்போவதற்கு நாமே காரணமாகி கைபிசைந்து நிற்கும் சூழல் உருவாகும்.
வரலாற்றுப் பேராசிரியர்களே மாணவர்களே முன்வாருங்கள்.
திருச்சி சகோதரர்களின் கவனத்திற்கு ------------------------------ சோழப்பேரரசி குந்தவை நாச்சியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை முனைவர் பட்டதுக்கான ஆய்வுத் தலைப்பாக எடுத்து மிக விசாலமாக ஆய்வுசெய்து அதை அதிகாரப்பூர்வ வரலாறாக பதிவாக்கிட வேண்டும்.

The view points
and opinion solely those of the author or source. TamilIslamicMedia.com
is not responsible for the posted contents.