Tamil Islamic Media ::: PRINT
கசாப்புத் தொழில் சிறந்தது....

 

�அறிவாளியின் தூக்கமும் அறிவில்லாதவன் இரவெல்லாம் நின்று வணங்குவதும் சமமாகாது � நபி ( அறிவாளியின் இரவு உறக்கம் அறிவற்றவனின் இரவு வணக்கத்தை விட உயர்ந்தது)

யாரெல்லாம் நன்றாக படித்து நல்ல பதவியில் இருந்து கொண்டு ஐவேளை தொழுகைகளையும் ஜமாத்தோடு நிறைவேற்றுகிறார்களோ அவர்கள் உண்மையிலே பாக்கியவான்கள்..........

மேலே தொடருங்கள்

�யாருக்கு அல்லாஹ் நன்மையைச் செய்ய நாடுகிறானோ அவரை மார்க்கத்தில் அறிவாளியாக்கி விடுகிறான்� நபி மொழி

�உலகிலேயே சிறந்த தொழில்கள் � கைத்தொழிலும் மோசடி செய்யாத வியாபாரமும்� நபிமொழி எல்லோரும் டாக்டர் ஆக இன்ஞினியர் ஆக தொழிலதிபராக விரும்புவோம். ஆனால் கசாப்புத் தொழில் சிறந்த்து என்று நான் சொல்கிறேன் ஏன்?

இது இஸ்லாமிய நாடு. நாற்புறங்களிலிருந்தல்ல நாற்பது புறங்களிலிருந்து வைகறைப் ஃபஜ்ர் தொழுகைக்காக இறையில்லங்களிலிருந்து அல்லாஹூ அக்பர் என்ற குரலொலிக்க செவியில் விழுந்தும் ஐப்பானிய ஓ ஜெனரல் ஒன்றரை டன் ஏசியின் சுகமாக குளிரில் கொரியன் யுனோ கம்பளியின் கதகதப்பில் நான் கிறங்கிப் போய் உறங்கியேப் போனேன் (எவன் தொழுகைக்காக தலையணையிலிருந்து தன் தலையை உயர்த்துகிறோனோ அவன் வெற்றியாளன். எவன் தன் தலையைத் தாழ்த்துகிறானோ அவன் தோல்வியாளன் நபி மொழி)

என்றைக்கெல்லாம் ஃபஜ்ர் தொழுகை தொழ முடியாமல் தூங்கிவிடுகிறேனோ அன்றெல்லாம் எனக்குத் தோன்றும் எண்ணம் இதுவே. ஏன் என நீங்கள் வினா எழுப்பலாம் புருவம் உயர்த்தலாம். விளக்கம் இதோ. (ஃபஜ்ர் தொழாதவன் காதில் ஷைத்தான் சிறுநீர் கழிக்கிறான்) அமைதியாக குறைவான சம்பளத்தில் நிறைவாக வாழந்து கொண்டிருந்த எனக்கு அதிர்ஷ்டம் (?) என்ற பெயரில் துபாய் வாழ்க்கை வந்தது.

அந்தக் காலம் துபாய் வருவதற்கு முந்தையது. நினைவலைகள் பின்னோக்கிச் செல்கின்றன........

1995க்கு முந்தைய சந்தோசமான காலங்கள் கிடைத்ததைக் கொண்டு உண்டு உறவுகளோடு சந்தோசித்த நேரங்கள் அவை.

துபாய் வரும் முன் வெறும் பாயாக அமிஞ்சிக்கரையில் அலைந்த நேரங்கள் அவ பணங்கள் சேராமல் மனங்கள் மட்டுமே சேர்ந்திருந்தக் காலமத என் நண்பர் தப்லீக்கில் இருந்தார் எனக்கு தப்லீகின் மீது மதிப்புண்டு. ஆனால் அவரைப் போல ஈடுபாட்டோடு களத்தில் இறங்கி மார்க்கப் பணியாற்ற மாட்டேன். நான் உண்டு என் வேலை உண்டு என் தொழுகை உண்டு என்று மீதி நேரத்தில் உணவு உண்டு கழித்த நேரமது.

தப்லீகில் இருந்த என் நண்பரோ ஐடியில் ஃபிட்டர் படிப்பு படித்தவர் கசாப்புக் கடை நடத்தி வந்தவர் என்னளவு மெத்தப் படித்தவரல்லர் மேன்மையான பதவியிலிருந்தவரல்லர் என்றாலும் இறைவனுக்கு நெருக்கமானவரென்று எண்ணுமளவுக்கு இபாதத் தப்லீகில் சேவை அவர் அதிகம் பேசமாட்டார் நாவடக்கம் அதிகம். புறம் பேசமாட்டர். நோன்பு காலங்களில் பள்ளிவாயிலில் நோன்பு திறக்க மாட்டார் கேட்டால் ஹராமான வழியில் சமபாதிப்பவர்கள் பலர் இந்தப் புனிதமாதத்தில் நோன்புக்கஞ்சி வடை சமோசா வழங்குகிறார்கள் கமால் என்பார்.......

நான் அவரிடம் �நீங்க ஐ டி ஃபிட்டர் படித்திருக்கிறீர்கள் ஏன் துபாய் போகக் கூடாது நன்றாக சம்பாதிக்கலாமே என்பேன் சிரிப்பார் அல்ஹம்துலில்லாஹ் இந்த தொழிலேப் போதுமென்பார் பிழைக்கத் தெரியாதவர் என்று புருவம் உயர்த்தினேன். எதுவரையென்றால் ஒரு நாள் அவரிடம்............... �உங்களின் அன்றாட செயல்பாடுகள் என்ன என்றேன்�

இரவு இரண்டு மணியளவு எழுந்திருப்பேன். தஹஜ்ஜ்த் தொழுது (கவனிக்க ஒவ்வொரு நாளும் தஹஜ்ஜத்) (தஹஜ்ஜத் நேரத்தில் அல்லாஹ் முதல் வானத்திற்கு வருகி றான் கேட்பவரின துவாவை ஒப்புக்கொள்கிறான்) விட்டு சைக்கிளில் சென்னை புளியந்தோப்பு அருகே உள்ள மாநகராட்சி ஆடுதொட்டிக்கு சென்று அறுக்கப்பட்ட ஆடுகளை வாங்கிக் கொண்டு சைக்கிளில் வைத்து வெளியே கொண்டு வரும்போது ஃபஜ்ர் நேரம் வந்து விடும் ஃபஜ்ர் ஜமாத்துடன் தொழுதுவிடுவேன் (கவனிக்க ஒரு நாளும் ஃபஜ்ர் ஜமாத்துடன் தவறியதில்லை) பிறகு டீ கடையில் நண்பர்களுடன் டீ அருந்தி விட்டு வெளியே வரும் போது இஷ்ராக் நேரம் வர அதைத் தொழுவேன். பிறகு கடைக்கு வந்து வியாபாரத்தை ஆரம்பிப்பேன். 11 12 மணிக்குள் எல்லாம் விற்று தீர்ந்துவிடும். (அவருக்கு கையில உடனே காசு மக்களுக்கு வாயில கறி) (கிரெடிட் பீரியட் பேமண்ட் ஃபாலேர் அப் என்று எதுவுமில்லை)

(இந்த உலகம் ஒரு விந்தை.. (உடலுக்கு நன்மை செய்யக்கூடிய) மோரைக் கூவி கூவி விற்க வேண்டியிருக்கிறது (உடலுக்கு தீமை செய்யக்கூடிய) கள் உட்கார்ந்த் இடத்திலே விற்றுப்போகிறது....... என்றார் கபீர்தாசர்..... ஒரு சின்ன் மாற்றம் கறி உட்கார்ந்த இடத்திலே விற்றுப்போகிறது.

பிறகு வீட்டிற்கு சென்று குளித்து முடித்து பள்ளிக்குச் சென்று லுஹர் தொழுவேன் (கவனிக்க ஒரு நாளும் லுஹர் ஜமாத்துடன் தவறியதில்லை) பிறகு வீடு திரும்பி உணவு உண்டு சிறு உறக்கம் (மதியம் சிறிது நேரம் அஸருக்கு முன் உறங்குவது நபி வழி) அஸர் (கவனிக்க ஒரு நாளும் அஸர் ஜமாத்துடன் தவறியதில்லை) மக்ரிப் (கவனிக்க ஒரு நாளும் மக்ரிப் ஜமாத்துடன் தவறியதில்லை) இஷா (கவனிக்க ஒரு நாளும் இஷா ஜமாத்துடன் தவறியதில்லை) எல்லாம் நிறைவேற........ இஷா தொழுகை முடித்து உணவு உண்டு விரைவில் உறங்கப் போவேன (ஏனென்றல் நள்ளிரவு எழுந்திருக்க வேண்டுமல்லவா அடுத்த நாள் தொழிலுக்காக)

(இஷாவுக்கு முன் உறங்குவதையும் இஷாவுக்குப் பின்னால் உறங்காமல் இருப்பதையும் நபி அவர்கள் தடுத்தார்கள்.) (ஆனால் எத்தனையோ பேர் இஷாவுக்குப் பின்னால் உடனே உறங்காமால் டிவியை 12 1 மணி வரை பார்த்து பின் ஃபஜ்ரை கோட்டை விட்டு ஷைத்தான் காதில் பெய்யும் சிறுநீரோடு 9 10 மணிக்கு காலையில் எழுந்திருக்கிறோம். இறைவனுக்கு பயப்படுவதே ஞானத்தின் ஆரம்பம் என்றார் ஈஸா (அலை) என்று படித்திருக்கிறேன

தொழுகை என்பது இறையச்சத்தின் ஒரு வெளிப்பாடு. அந்தத் தொழுகையை ஒரு மனிதன் தன் தொழிலோடு நிறைவேற்றக்கடியதாக இருந்தால் எவ்வளவு நன்மை இனிமை....இந்தப் பாக்கியம் மற்றத் தொழில்கள் வேலையை விட இந்த கசாப்புத் தொழிலில் இருப்பதாக நான் எண்ணுகிறேன். எண்ணிறந்த படித்த பதவியலுள்ள ஐவேளைத் தொழுகையை தவறாது நிறைவேற்றும் பாக்கியமுள்ளவர்கள் உண்டு. ஆனால் எல்லோருக்கும ஜமாத்துடன் தொழ இடையூறு இல்லாத வாய்ப்பு கிடைக்கும் என்று கூற முடியாது. ஐவேளைத் தொழுபவர்கள் கூட தஹஜ்ஜத் தொழுவார்கள் என்று கூற முடியாது அனுதினமும் ஒரு நாளில் ஐவேளை தொழுகைகளும் தவறுவதில்லை அதுவம் ஜமாத்துடன சுன்னத் நஃபில் வாஜிபு தவறுவதில்லை (போதுமான நேரம் கிடைக்கிறது)

இன்கிரிமென்ட் போனஸ் இன்சென்டிவ் புரமோஷன் அடுத்தவனைப பார்த்து பொறாமைப்படுத்தல் என்று எதுவுமில்லை குர் ஆன ஓத இஸ்லாத்திற்குப் பணியாற்ற போதுமான நேரம் கிடைக்கிறது. (மறுமையில் தொழுகையைப் பற்றித் தான் முதலில் கேட்கப்படும் அது சரியாக இருந்தால் மற்றவை சரியாக இருக்கும்) ஆனால் எனக்கு...... பல நேர ஜமாத் தொழுகைள் தவறுகின்றன. உபரி தொழுகைகளைத் தொழ சிரம்மாக உள்ளது வேலையின் நெருக்கடி நேரத்தின் நெருக்கடி காரணமாக. ஃபஜ்ர் தொழுகை தவறுகிறது. குதிரைக்குக் கூட கொம்பு முளைக்கலாம் ஆனால் நான் தஹஜ்ஜத் தொழுவது.............. நாளையே அலுவலுகம் அதிகாலை நாலு மணிக்கென்றால் எழுந்து போக நம்மால் முடிகிறது ஆனால் ஃபஜ்ர் தொழுகைக்கு நம்மால் எத்தனைப் பேருக்கு எழுந்து ஜமாதில் கலந்து கொள்ள முடிகிறது அல்லது வக்துக்குள் தொழ முடிகிறது.......கை சேதமே.

நான் அவரைப் பார்த்து பொறாமைப்படுகிறேன். என்னையும் என நண்பரையும் நான் நிறுத்துப் பார்க்கிறேன். மறுமையில் அவர் வெற்றியாளராக இருப்பா நான் வெற்றுஆளராக இருக்க்க்கூடாதே இரஹ்மானே........... என் கண்களிலிருந்து நீர் வழிகிறது. கையேந்துகிறேன்

இறைவனிடத்தில்..........இறைவா இஸ்லாத்தில் ஒன்றி என் நண்பரைப் போல் (ஈமானுள்ள) ஆக ஆசைப்படுகிறேன்............

Received by Email

(இறைவன் நம் அனைவரையும் வெற்றியாளர்களாக ஆக்குவானாக.. இம்மையிலும் மறுமையிலும்)

The view points and opinion solely those of the author or source. TamilIslamicMedia.com is not responsible for the posted contents.
 


No rights reserved.