Tamil Islamic Media ::: PRINT
அன்பு மனைவிகளுக்கு ! அருமையான உபதேசங்கள்!!

1. நீங்கள் தான் உங்கள் வீட்டின் வாசனை. கணவன் வீட்டினுள் நுழைந்த உடன் நீங்கள்தான் முதல் வாசனை என்பதை கணவருக்கு உணரச் செய்யுங்கள். நல்ல மணமுடன் எப்போதும் இருங்கள்.

2. கணவன் ஓய்வு எடுக்க கூடிய இடங்களை தயார் செய்து வையுங்கள். எப்பொழுதும் அழகிய தோற்றத்தில் சுறுசுறுப்பானவராக செயல்படுங்கள்.

3. கணவனுடனான தொடர்ச்சியான கலந்துரையாடலை பேணிக்கொள்ளுங்கள். வாதாட்டம், தங்களது கருத்தில் பிடிவாதம் போன்றவற்றை தவிர்த்து கொள்ளுங்கள்.

4. உங்களுக்கு ஷரிஅத் விதித்துள்ள பொறுப்புகளை விளங்கி கொள்ளுங்கள். பெண்களுக்கு இயல்பாக இருக்க கூடிய விடயங்களை ஷரீஅத் தங்களுக்கு வழங்கியுள்ளது.

5. உங்கள் சத்தத்தை அவருக்கு முன் உயர்த்தாதீர்கள். குறிப்பாக கணவன் இருக்கும் பொழுது.

6. நீங்கள் இருவரும் 'கியாமுல் லைல்' போன்ற பின்னிரவுத் தொழுகைகளை ஒன்றாக நிறைவேற்றுவதில் கவனமாக இருங்கள். ஏனெனில், அது உங்கள் இருவருக்கும் இடையில் சந்தோஷத்தையும், அன்பையும், ஒளியையும் ஏற்படுத்துகின்றது.

7. கணவன் கோபத்திலிருக்கும் போது, நீங்கள் அமைதியாக இருங்கள். கணவனின் திருப்தியின்றி, இரவில் உறங்க செல்ல வேண்டாம்.

8. கணவன் ஆடைகளை தேர்ந்தெடுப்பதில் உதவி செய்யுங்கள். அவருக்கு பொருத்தமான ஆடைகளை தேர்ந்தெடுத்து வழங்குங்கள்.

9. கணவனின் தேவைகளை விளங்கி கொள்வதற்கும், அவருடன் அழகிய முறையில் பழகுவதற்கும் நேரத்தை ஒதுக்குங்கள்.

10. உங்களுடைய தோற்றத்திலும் உடையிலும் கவனம் செலுத்துங்கள்.

11. உங்களுடைய கணவன் தனது அன்பை, விருப்பத்தை வெளிப்படுத்தும் வரை காத்து கொண்டிருக்காதீர்கள்.

12. ஒவ்வொரு இரவிலும் கணவனுக்கு புதுமண பெண்ணை போல தயாராகி தோற்றமளியுங்கள். கணவனை முந்தி நீங்கள் உறங்க செல்ல வேண்டாம்.

13. கணவன் அழகிய முறையில் உங்களை எதிர் கொள்வார் என்று எதிர்பார்க்க வேண்டாம். ஏனெனில், அவர் பல வேலைப்பளுக்களில் ஈடுபட்டவராக இருப்பார்.

14. எப்போதும் புன்னகையுடனும், அன்பை வெளிப்படுத்தும் உணர்வுகளுடனும் கணவன் பயணித்திலிருந்து திரும்பும் போது வரவேற்பளியுங்கள்.

15. கணவனின் திருப்தி அல்லாஹ்வின் நெருக்கத்தை பெறுவதற்கு முக்கியமானது என்பதை எப்போதும் ஞாபகத்தில் வைத்து கொள்ளுங்கள். எப்போதும் தோற்றத்திலும், வார்த்தையிலும் அவரை வரவேற்கும் போது புதிய விடயங்களை செய்யுங்கள்.

16. ஏதாவது ஒரு விடயத்தை கணவன் கேட்கும் போது மறுக்கவோ அல்லது தாமதிக்கவோ வேண்டாம். மாறாக, உற்சாகத்துடன் விரைவாக அதனை நிறைவேற்றுங்கள்.

17. வீட்டில் உள்ள பொருட்களை கணவன் பயணத்திலிருந்து திரும்பும் போது புதிய முறையில் ஒழுங்குபடுத்துங்கள். அதனை கணவனின் மகிழ்ச்சிக்காக செய்கின்றீர்கள் என்பதை உணர்த்துங்கள்.

18. வீட்டை அழகிய முறையில் நிர்வகிப்பதற்கும், நேரத்தை ஒழுங்குபடுத்துவதற்கும், முதன்மைபடுத்த வேண்டிய விடயங்களை ஒழுங்குபடுத்துவதற்கும் உங்களை தயார்படுத்தி கொள்ளுங்கள்.

19. பெண்களுக்கு இயல்பாக இருக்க வேண்டிய திறமைகளை(உதாரணம்: சமையல்) கற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில், அவை உங்களது வீட்டிற்கும், உங்கள் தஃவாவிற்கும் அவசியமானவையாகும்.

20. கணவன் வீட்டுக்கு கொண்டுவரும் எந்தவொரு பொருளாக இருந்தாலும் அவற்றை இன்முகத்தோடு பெற்று கொள்ளுங்கள். அதற்காக நன்றி செலுத்துங்கள்.

21. வீட்டை சுத்தமாக வைப்பதிலும், ஒழுங்காக வைப்பதிலும் பேணுதலாக இருங்கள். சில வேலை கணவன் அதனை உங்களிடம் எதிர்பார்க்காத போதும் கூட.

22. எப்போதும் திருப்திப்படுபவராக இருங்கள். வீண் விரயங்களை விட்டும் தவிர்த்திடுங்கள். வரவுக்கு மேலதிக செலவுகளை ஏற்படுத்தாதீர்கள்.

23. குடும்ப ஒன்று கூடல்களை பொருத்தமான நேரத்தில் ஏற்பாடு செய்யுங்கள்.

24. கணவன் நீண்டதொரு இடைவெளியின் பின்னர் வீட்டுக்கு வரும் போது, அவரிடம் முறைப்பாடுகளை வேதனைகளை முன் வைக்காதீர்கள்.

25. குழந்தைகள் கணவனை வரவேற்கும் வகையில் தயார்படுத்தி வையுங்கள்.

26. குழந்தைகளை பற்றி கணவன் வீடு திரும்பியவுடன் அல்லது தூங்கி எழுந்தவுடன் அல்லது உணவு சாப்பிடும் போது முறையிடாதீர்கள்.

27. கணவன் குழந்தைகளுடன் உரையாடும் போது அல்லது ஏதாவது ஒரு விடயத்திற்காக தண்டிக்கும் போது நீங்கள் தலையிட வேண்டாம்.

28. குழந்தைகளுக்கும் தந்தைக்கும் இடையில் சிறந்த தொடர்பை பேணிக்கொள்வதில் கவனம் செலுத்துங்கள்.

29. நீங்கள் எவ்வளவு தான் வேலை பளுவுடன் இருந்தாலும், குழந்தைகளை பராமரிப்பதில் பொடுபோக்காக இருப்பதில்லை என்பதை உணர செய்யுங்கள்.

30. குழந்தைகளுக்கு ஓய்வு கிடைக்கும் போது அவர்களது திறமைகளை வளர்ப்பதிலும், அவர்களுக்கு அவசியமான விடயங்களை கற்று கொடுப்பதிலும் அதிக கவனம் செலுத்துங்கள்.

31. நீங்கள் தொழுகையை பேணி கொள்ளுங்கள். கணவரையும் அவரைச் சார்ந்தவர்களையும் தொழுகையை பேண சொல்லி, அன்பு கட்டளையிடுங்கள்.

32. சிறு குழந்தைகளின் ஆளுமை விருத்திக்கு தேவையான விடயங்களை செய்யுங்கள்.

33. குழந்தைகள் மீதும் கணவர் மீதும் உள்ள உங்கள் கடமைகளுக்கு இடையில் நடுநிலைமையை பேணுங்கள்.

34. கணவனின் பெற்றோருக்கு கண்ணியம் செலுத்துங்கள். அவரையும் அவரது பெற்றோரையும் பிரிக்கும் செயலில் ஈடுபடாதீர்கள்.

35. கணவனின் குடும்பத்தினரை அன்புடனும், கண்ணியத்துடனும் நடத்துங்கள். அவர்களுக்கு பொருத்தமான சந்தர்ப்பங்களில் பரிசு பொருட்களை வழங்குங்கள்.

36. கணவனின் விருந்தினர்களை கவனிப்பதில் அக்கறை செலுத்துங்கள். திடீரென்று அவர்கள் வந்தாலும், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யுங்கள்.

37. கணவனின் உபகரணங்களை பாதுகாத்து கொள்ளுங்கள்.

38. எப்போதும் எந்தவொரு விருந்தாளியையும் அழைத்து வரும் நிலையில் நல்ல முறையில் உபசரித்துக் கொள்ளுங்கள்.

39. கணவன் தாமதமாக வரும் போது, அவரை கடிந்து கொள்ளாதீர்கள். மாறாக, அவரை எதிர்பார்த்து இருந்ததை நளினத்துடன் உணர செய்யுங்கள்.

40. வீட்டின் ரகசியங்களை பேணி பாதுகாத்து கொள்ளுங்கள்.

இவை ஒரு மனைவி கவனத்தில் கொள்ள வேண்டிய சில விடயங்கள் மட்டுமே. ஆனால், மிக முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு விடயம் இருக்கின்றது.

எப்போதும் நாம் அல்லாஹ்வின் திருப்தியின் பால் தேவையுடையவர்களாக இருக்கின்றோம். அதனை ஒரு போதும் மறந்துவிட கூடாது.

_அல்லாஹ் நம் பெண்கள் அனைவரையும் விவாகரத்து என்னும் கொடிய விடயத்திலிருந்து பாதுகாப்பானாக..!

குறிப்பு: இச்செய்தியை தங்களது குடும்பத்தில் மற்றும் நட்பு வட்டத்தில் உள்ள அனைத்து பெண்களுக்கும் பகிரவும். ஏதேனும் ஒரு பெண் இச்செய்திகளை தனது வாழ்க்கையில் பேணி நடந்து, இறைவனின் பொருத்தத்தை பெற்றுக்கொண்டால், அதில் நமக்கும் நன்மை கிடைக்கும் இச்செய்தியை பகிர்வதின் மூலம்.

தகவல்,
நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட[NWF] பெண்களுக்கான தேசிய அமைப்பு.



The view points and opinion solely those of the author or source. TamilIslamicMedia.com is not responsible for the posted contents.
 


No rights reserved.