கேள்விகள் (21-30) :
சஹாபா பெண்மணிகளில்...
21) முதன் முதலாக இஸ்லாத்தை ஏற்றவர் யார்? 22) ஏறத்தாழ முப்பதாண்டுகள் நபிகளாருடன் குடும்ப வாழ்வு நடத்திய பெரும்பேறுப் பெற்றவர் யார்?. 23) அல்லாஹ்வினால் குற்றம் அற்றவர் எனத் தீர்ப்பு அளிக்கப்பட்டவர் யார்.? 24) குர்ஆனின் முதல் பிரதியைப் பெற்றப் பெருமைக்குரியவர் யார்.? 25) உம்முல் மஸாக்கீன் (ஏழைகளின் அன்னை) எனப்பட்டவர் யார்.? 26) அன்னை ஆயிஷா அவர்கள் (ரலியல்லாஹு அன்ஹா) விலைக்கு வாங்கி விடுதலைச் செய்த பெண்மணி யார்? 27) இஸ்லாத்தில் முதன் முதலாக ஷஹீதானப் பெண்மணி யார்? 28) மக்கத்துக் குறைஷியர் தண்ணீர் கூடக் குடிக்க விடாமல், தடுக்கப்பட்ட ஒரு பெண்ணுக்காக, அல்லாஹ் விண்ணிலிருந்து தண்ணீரை இறக்கினான். அப்படிப்பட்ட மாண்பு பெற்ற பெண்மணி யார்?. 29) உஹதுப் போரில் நபிகளாருக்கு அரணாக நின்றவர்களில் இடம் பெற்ற பெண்மணி யார்.? 30) நபிகளார் ஹிஜ்ரத்தின் போது,பால் அருந்தி களைப்பாறிச் சென்ற வீட்டுக்கு உரியவர் யார்.?
---- ----
பதில்கள்... 21) அன்னை கதீஜா. 22) அன்னை கதீஜா. 23) அன்னை ஆயிஷா. 24) அன்னை ஹஃப்ஸா. 25) அன்னை ஸைனப் பின்த் ஜஹ்ஷ். 26) ஹள்ரத் பரீரா. 27) ஹள்ரத் சுமைய்யா. 28) ஹள்ரத் உம்மு ஷரீக் அல் அஸதிய்யத்துல் அன்ஸாரிய்யா 29) ஹள்ரத் உம்மு உமாரா. 30) ஹள்ரத் உம்மு மஃபத்.
(ரலியல்லாஹு அன்ஹுன்ன) ----- ----- ---- By : இஸ்லாமிய அறிவகம். |