சுவர்க்கத்தின் ஒரு வாசலை நம் வீட்டிலேயே வைத்துக் கொண்டு சுவர்க்கத்திற்கு செல்லும் பாதையை நாம் வெளியில் தேடிக் கொண்டிருக்கிறோம்.
தன் அன்னை மறைந்தபோது ஒருவர் நீண்ட நேரம் அழுது கொண்டே இருந்தார்.😢😔😢😔
இந்த அளவு அழுவதற்குக் காரணம் என்ன என்று ஒருவர் கேட்டார்.
அதற்கு அவர், "எப்படி நான் அழாமல் இருக்க முடியும்? சொர்க்கம் செல்லும் வாசல்களில் ஒரு வாசல் மூடப்பட்டு விட்டதே!" என்றார்.
ஆம்!தாயுடன் சேர்ந்து வாழும் பாக்கியம் பெற்றவர்களே!
நீங்கள் சொர்க்கம் செல்லும் வாசல்களில் ஒன்று உங்கள் கண் முன்னால் இருக்கிறது.அவர்களைப் பேணுங்கள்.
அவர்களின் 'துஆ'வைப் பெறுங்கள்.எவர் தன் தாயின் மனதை குளிர வைக்கிறாரோ அவர் நல்ல உடல் நலத்துடன் நீண்ட காலம் வாழ்வார்.
ஏனென்றால் ஒரு தாய் தன் மகனைப் பார்க்கும்போதெல்லாம் மனதிற்குள்ளும்,வாய்விட்டும் தனது மகன் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்று தான் 'துஆ' செய்வார். நாம் நன்றாக வாழ வேண்டும் என்று உள்ளார்ந்த முறையில் கவலை கொண்டு நம் முன்னேற்றத்திற்காக அல்லும் பகலும் பாடுபடும் ஒரே உறவு நம் பெற்றோர்தான்.
அந்த தளவுக்கு நம் நலனை நாடுபவர்கள் நிச்சயமாக உலகில் வேறு யாரும் இல்லை.
உங்கள் பெற்றோர்களைப் பேணுங்கள். அவர்கள்உங்களுக்கு அநீதி இழைத்தாலும் சரி, அநீதி இழைத்தாலும் சரி, அநீதி இழைத்தாலும் சரி" என மூன்று முறை அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.
தனது தாய் உயிருடன் இல்லையே என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வேதனைப்பட்டதாக துணைவியர் (ரளியல்லாஹு அன்ஹுமா) அறிவிக்கின்றனர்."
மனிதனுக்கு அவனுடைய பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள். எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு." (அல்குர் ஆன் 31:14)
யார் யாரையோ நினைத்து காலத்தை கடத்துபவர்களே!!!
உங்களைக் கஷ்டப்பட்டு பெற்றெடுத்த தாயை சற்று சிந்தியுங்கள்...
நீங்கள் பிறப்பதற்கு முன்பே உங்களுக்காக அழுது துஆ செய்தவள் உங்களின் தாய்....
நீங்கள் சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதற்காக தன்னுடைய சந்தோஷங்கள் பலதை உங்களுக்காக தியாகம் செய்தவர் உங்கள் தந்தை....
பெற்றோரை ஹயாத்துடன் பெற்றிருக்கும் பிள்ளைகளே நீங்கள் பாக்கியம் பெற்றவர்கள்.
இறைவனின் திருப்தியைப் பெறுவதற்கு இன்னும் உங்களுக்கு வாய்ப்பு வழங்கப் பட்டிருக்கிறது.
அவர்கள் மரணித்தபிறகு கைசேதப் படுவதைவிட அவர்கள் இருக்கும் போதே அவர்களுக்கான நன்றிக் கடன் செலுத்தத் தவறாதீர்கள் |