எல்லோரும் ஏதோ ஒருவகையில் செல்வந்தர்களே
அல்லாஹ் சிலருக்கு அழகை கொடுத்திருப்பான் அதில் அவர் செல்வந்தர்...!
சிலருக்கு அறிவை கொடுத்திருப்பான் அதில் அவர் செல்வந்தர்...!
சிலருக்கு குடும்பசெல்வாக்கை கொடுத்திருப்பான் அதில் அவர் செல்வந்தர்...!
சிலருக்கு அழகான மக்கள் செல்வத்தைக் கொடுத்திருப்பான் அதில் அவர் செல்வந்தர்...!
சிலருக்கு வீரத்தைக் கொடுத்திருப்பான் அதில் அவர் செல்வந்தர்...!
சிலருக்கு நல்ல நண்பர்களைக்கொடுத்திருப்பான் அதில் அவர் செல்வந்தர்...!
இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷயத்தில் செல்வந்தராகவே இருக்கின்றனர் இவ்வுலகத்தில்
ஆனால்
நாம்தான் இறைவனின் அருட்கொடைகளை அறியாமல் செயல்படுகின்றோம்
அதனால் நமக்கு ஏதாவது கஷ்டம் வந்து விட்டால் எப்படி நினைக்கிறோம்
அல்லாஹ் நமக்கு மட்டும்தானா இவ்வளவு கஷ்டத்தையும் விடவேண்டும்
என் வாழ்க்கையில் சந்தோஷமே வராதா என்று கவலைப்படுகின்றோம்
இவ்வுலகில் பணம்தான் சந்தோஷம் என்றால் பிர்அவ்ன் சந்தோஷமாக வாழ்ந்து இருக்கனும்
அழகு தான் சந்தோஷம் என்றால் அல்லாஹ் யூசுப் நபியை சோதித்திருக்கமாட்டான்
இந்த உலகத்தில் அல்லாஹ் எதையுமே மனிதனுக்கு நிரந்தரமாக சந்தோசம் தரும் எதையும் படைக்கவில்லை
நாம் செய்யும் அமல்களைத்தவிர
நாம் ஆசைப்படும் எதுவும் நிரந்தரமல்ல அதனால் நாம் கவலைப்படுவதில் அர்த்தமே இல்லை
நாம் உறுதியாக இருக்க வேண்டும் எனக்கு என்ன வந்தாலும் அது நிரந்தரமில்லை
எனக்கு எதுக்கும் கவலையில்லை என்ற எண்ணம் நம்மை விட்டு அகலக்கூடாது
அல்லாஹ் நம்மோடு இருக்கிறான்.....! |