Tamil Islamic Media ::: PRINT
பராஅத் இரவு –நாம் பெற வேண்டிய படிப்பினைகள்பகைமையை முடிவுக்கு கொண்டு வருவோம்

பராஅத் இரவு –நாம் பெற வேண்டிய படிப்பினைகள்பகைமையை முடிவுக்கு கொண்டு வருவோம்

ஷஃபான்- 12     -     20-05-2016

இணை வைப்பவர்களையும், பகைமையுடன் இருப்பவர்களையும் அல்லாஹ் இந்த இரவிலும் மன்னிக்க மாட்டான்

عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّعَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ اللَّهَ لَيَطَّلِعُ فِي لَيْلَةِ النِّصْفِ مِنْ شَعْبَانَ فَيَغْفِرُ لِجَمِيعِ خَلْقِهِ إِلَّا لِمُشْرِكٍأَوْ مُشَاحِنٍ(ابن ماجة

உறவினர்களிடம் பகைமையுடன் இருப்பவர் மீது அல்லாஹ்வின் சாபம்

وَاتَّقُوااللَّهَالَّذِيتَسَاءَلُونَبِهِوَالْأَرْحَامَ(النساء) أي وَاتَّقُوا اللَّه الَّذِي تَعَاقَدُونَ وَتَعَاهَدُونَ بِهِ وَاتَّقُوا الْأَرْحَام أَنْ تَقْطَعُوهَا وَلَكِنْ بِرُّوهَا وَصِلُوهَا قَالَهُ اِبْن عَبَّاس وَعِكْرِمَة وَمُجَاهِد وَالْحَسَن وَالضَّحَّاك وَالرَّبِيع وَغَيْر وَاحِد (تفسير ابن كثير) وأوصىأحدالسلفابنهيابنيلاتصحبقاطعرحمفإنيرأيتلعنهفيكتاباللهقالالله وَالَّذِينَيَنْقُضُونَعَهْدَاللَّهِمِنْبَعْدِمِيثَاقِهِوَيَقْطَعُونَمَاأَمَرَاللَّهُبِهِأَنْيُوصَلَوَيُفْسِدُونَفِيالْأَرْضِأُولَئِكَلَهُمُاللَّعْنَةُ (25)الرعد -فَهَلْعَسَيْتُمْإِنْتَوَلَّيْتُمْأَنْتُفْسِدُوافِيالْأَرْضِوَتُقَطِّعُواأَرْحَامَكُمْأُولَئِكَالَّذِينَلَعَنَهُمُاللَّهُ..[محمد{22

பகைமை கொள்பவர் இருக்குமிடத்தில் அல்லாஹ்வின் ரஹ்மத் இறங்காது. ரஹ்மத் என்றால் மழை என்றும் சிலர் கூறுவர். அதனால் தான் அத்தகையவரை தம் சபையிலிருந்து வெளியேறும்படி நபி ஸல் அவர்கள் கூறினார்கள்

عن جُبَيْر بْن مُطْعِمٍ رضي الله عنهأَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَا يَدْخُلُ الْجَنَّةَ قَاطِعٌ (بخاري)عن عبد الله بن أبي أوفى رضي الله عنهما قال كنا جلوسا عند النبي صلى الله عليه و سلم فقال لا يجالسنا اليوم قاطع رحم فقام فتى من الحلقة فأتى خالة له قد كان بينهما بعض الشيء فاستغفر لها واستغفرتْ له ثم عاد إلى المجلس فقال النبي صلى الله عليه وسلم إن الرحمة لا تنزل على قوم فيهم قاطع رحم (الترغيب)ضعيف-أخرج البخاري في الأدب المفرد عن عَبد اللهِ ابْن أَبِي أَوْفَى مرفوعا إِنَّ الرَّحْمَة لَا تَنْزِل عَلَى قَوْم فِيهِمْ قَاطِعالرَّحِم ( الأدب المفرد)وَذَكَرَ الطِّيبِيُّ أَنَّهُ يُحْتَمَل أَنْ يُرَاد بِالْقَوْمِ الَّذِينَ يُسَاعِدُونَهُ1 عَلَى قَطِيعَة الرَّحِم وَلَا يُنْكِرُونَ عَلَيْهِ وَيُحْتَمَل أَنْ يُرَاد بِالرَّحْمَةِ المَطَر (فتح الباري)وَذَكَرَ الطِّيبِيُّ أَنَّهُ يُحْتَمَل أَنْ يُرَاد بِالْقَوْمِ الَّذِينَ يُسَاعِدُونَهُ1 عَلَى قَطِيعَة الرَّحِم وَلَا يُنْكِرُونَ عَلَيْهِ وَيُحْتَمَل أَنْ يُرَاد بِالرَّحْمَةِ المَطَر (فتح الباري)

விளக்கம்- ஒரு ஊரில் உறவைத் துண்டிப்பவர்கள் சிலர் இருப்பினும் அவர்களுடன் பிறர் இணங்கி வாழ்ந்தால் மழை பெய்யாது

பாவம் செய்பவர்களாக இருந்தாலும் உறவைப் பேணுபவர்களை அல்லாஹ் இவ்வுலகில் செழிப்புடன் வைப்பான்

عن أبي بكرة عن النبي صلى الله عليه وسلممَا مِنْ ذَنْبٍ أَجْدَرَ أَنْ يُعَجِّلَ الله تَعَالَى لِصَاحِبِهِ الْعُقُوبَةَ فِي الدُّنْيَا مَعْ مَا يَدَّخِرُهُ لَهُ فِي الآخِرَةِ مِنْ قَطِيعَةِ الرَّحِمِ وَالْخِيَانَةِ وَالْكَذِبِ وَإِنَّ أَعْجَلَ الطَّاعَةِ ثَوَاباً لَصِلَةُ الرَّحِمِ حَتَّى أَنَّ أَهْلَ الْبَيْتِ لَيَكُونُوا فَجَرَةً فَتَنْمُو أَمْوَالُهُمْ وَيَكْثُرُ عَدَدُهُمْ إِذَا تَوَاصَلُوا(صحيح ابن حبان)

நமக்கு தீங்கு செய்யும் உறவினர்களுக்கும் நாம் நன்மையே செய்வது

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنهأَنَّ رَجُلًا قَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ لِي قَرَابَةً أَصِلُهُمْ وَيَقْطَعُونِي وَأُحْسِنُ إِلَيْهِمْ وَيُسِيئُونَ إِلَيَّ وَأَحْلُمُ عَنْهُمْ وَيَجْهَلُونَ عَلَيَّ فَقَالَ لَئِنْ كُنْتَ كَمَا قُلْتَ فَكَأَنَّمَا تُسِفُّهُمْ الْمَلَّ وَلَا يَزَالُ مَعَكَ مِنْ اللَّهِ ظَهِيرٌ عَلَيْهِمْ مَا دُمْتَ عَلَى ذَلِكَ (مسلم)عَنْ حُذَيْفَةَ قَالَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَكُونُوا إِمَّعَةً تَقُولُونَ إِنْ أَحْسَنَ النَّاسُ أَحْسَنَّا وَإِنْ ظَلَمُوا ظَلَمْنَا وَلَكِنْ وَطِّنُوا أَنْفُسَكُمْ إِنْ أَحْسَنَ النَّاسُ أَنْ تُحْسِنُوا وَإِنْ أَسَاءُوا فَلَا تَظْلِمُوا (ترمذي)إِمَّعَةًசுய நலவாதிகளாகعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍورضي الله عنهقَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَلَيْسَ الْوَاصِلُ بِالْمُكَافِئِ وَلَكِنْ الْوَاصِلُ الَّذِي إِذَا قُطِعَتْ رَحِمُهُ وَصَلَهَا(بخاري)-باب لَيْسَ الْوَاصِلُ بِالْمُكَافِى-كتاب الادب  (بِالْمُكَافِئِ أي المجازي غيره بمثل فعله)

(அவர் பேசினால் நானும் பேசுவேன் என) பதிலுக்கு பதில் உறவு கொண்டாடுகிறவர் உறவைப் பேணுகிறவர் அல்ல. மாறாக உறவு முறிந்தாலும் அதை மீண்டும் சேர்த்துக் கொள்பவரே உறவைப் பேணுபவர் ஆவார். -  புகாரீ5991

 

உறவினர்கள் தொடர வேண்டிய உறவு இன்றைக்கு நேரடியாக அதாவது இதயங்களின் வழியாக இல்லாமல் இயந்திரங்களின் மூலமாக மட்டும் தொடர்வது நல்லதல்ல

உலகமே இன்று மெட்டீரியலிசம் என்கிற இயந்திரங்களுடனான தொடர்பை அதிகரித்துக் கொள்ளும் நிலைக்குப் போய்க் கொண்டிருப்பது கவலையான விஷயமாகும். மனிதர்களை விட இயந்திரங்களை அதிகம் நேசிப்பவர்களாக ஆகி விட்டனர். வெளிநாட்டில் ஒரு பெண் தன் குழந்தையை அடித்துக் கொன்றாள். என்ன காரணம்.. அவள் ஆசையாய் வைத்திருந்த டிவியை அந்தக் குழந்தை தள்ளி விட்டு உடைத்தது என்பதற்காக.. இப்படி ஒரு ஈவு இரக்கமற்ற காரியத்தை அவள் செய்யக் காரணம் இதயங்களின் மீதான பாசத்தை விட இயந்திரங்களின் மீதான பாசம் அதிகமாகி விட்டது. செல்போன் மட்டும் இருந்தால் போதும். தனிமையில் எவ்வளவு நேரத்தையும் ஒருவர் கடத்தி விடுவார். அருகருகே அமர்ந்து பயணம் செய்தாலும் ஒருவருக்கொருவர் பேசி அறிமுகமாகிக் கொள்ளும் காலம் கடந்து செல்போனே கதி என்றிருக்கும் சூழல் வந்து விட்டது.

அந்த வகையில் ஒரு காலம் இருந்தது. உறவினர்களை சந்திக்க அவர்களை நலம் விசாரிக்க நேரில் செல்வார்கள். ஆனால் இன்று நேரில் செல்லும் வழக்கம் குறைந்து எல்லாம் செல்ஃபோன் மூலமே என்றாகி விட்டதால் முன்பு இருந்த இதயங்களின் ஈர்ப்பு, பாசம் ஆகியவை இந்த இயந்திரங்களின் மூலம் ஏற்படுவதில்லை.உறவினர்களுக்கு ஒரு துன்பம் ஏற்பட்டால் செல்ஃபோனில் அழுவதை விட உடனடியாக நேரில் சென்று அழுதால், ஆறுதல் கூறினால் அது தான் உண்மையான ஆறுதலாக அமையும். ஆனால் இன்று அது மிகவும் குறைந்து விட்டது. வாட்ஸ்-அப் உபயோகிப்பவர்களிலும் நண்பர்களின் குரூப் தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறதே தவிர FAMILY GROUP மிகவும் குறைவு.. அப்படியே இருந்தாலும் அது பெயரளவில் தான் இருக்கும்.

நண்பர்களை, உறவினர்களை சந்திக்க செல்லும்போது ஒவ்வொரு எட்டும் நன்மையாக அமையும். அது செல்போன் மூலம் இல்லை

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ عَادَ مَرِيضًا نَادَى مُنَادٍ مِنْ السَّمَاءِ طِبْتَ وَطَابَ مَمْشَاكَ وَتَبَوَّأْتَ مِنْ الْجَنَّةِ مَنْزِلًا (ترمذي) وعنه عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَأَنَّ رَجُلًا زَارَ أَخًا لَهُ فِي قَرْيَةٍ أُخْرَى فَأَرْصَدَ اللَّهُ لَهُ عَلَى مَدْرَجَتِهِ مَلَكًا فَلَمَّا أَتَى عَلَيْهِ قَالَ أَيْنَ تُرِيدُ قَالَ أُرِيدُ أَخًا لِي فِي هَذِهِ الْقَرْيَةِ قَالَ هَلْ لَكَ عَلَيْهِ مِنْ نِعْمَةٍ تَرُبُّهَا قَالَ لَا غَيْرَ أَنِّي أَحْبَبْتُهُ فِي اللَّهِ عَزَّ وَجَلَّ قَالَ فَإِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكَ بِأَنَّ اللَّهَ قَدْ أَحَبَّكَ كَمَا أَحْبَبْتَهُ فِيهِ (مسلم) بَاب فِي فَضْلِ الْحُبِّ فِي اللَّهِ-

பகைமையை முறியடித்து நட்பை வளர்த்துக் கொள்வதில் தான் நிம்மதி இருக்கிறது

ஒரு கிராமத்தில் ஏழை விவசாயி இருந்தான்.பக்கத்து வீட்டில் ஒரு வேட்டைக்காரன் இருந்தான். அவனிடம் வேட்டைக்குப் பயன்படுத்தும் நாய்கள் இருந்தன. வேட்டைக்காரனின் நாய்கள் அடிக்கடி வேலி தாண்டிச் சென்று விவசாயியின் ஆட்டுக் குட்டிகளைத் துரத்துவதும், கடித்துக் குதறுவதுமாக இருந்தன.

இதனால் கலக்கமுற்ற விவசாயி தன் அண்டை வீட்டானாகிய வேட்டைக்காரனை சந்தித்து அப்பா... உன் நாய்களை கொஞ்சம் பார்த்துக் கொள். அவை அடிக்கடி என் பகுதிக்கு வந்து ஆடுகளை தாக்குகின்றன. காயப்படுத்துகின்றன. என்றான். வேட்டைக்காரன் அதைப் பொருட்படுத்தவில்லை. பல தடவை சொல்லியும் செவிடன் காதில் ஊதிய சங்கு போல இந்த விவசாயியின் கோரிக்கை பயனற்றுப் போனது.

ஒருமுறை நாய்கள் இதே போல வேலி தாண்டி வந்து பட்டிக்குள் புகுந்து பல ஆட்டுக்குட்டிகளை கடித்துக் குதறின. இந்த முறை இரண்டில் ஒன்று பார்த்து விடுவது என்று மீண்டும் வேட்டைக்காரனிடம் புகார் செய்ய விவசாயி சென்றார். ஆனால் வேட்டைக்காரன் சற்று கோபத்துடன் இதோ பார் ஆட்டைத் துரத்துறது,கடிக்கிறது இதெல்லாம் நாயின் சுபாவம். நான் ஒன்றும் செய்ய முடியாது. உன்னால முடிஞ்சதைப் பார்த்துக்கோ என்றான். 

இதைத் தொடர்ந்து ஊர் பஞ்சாயத்துத் தலைவரை சென்று சந்தித்த விவசாயி, வேட்டைக்காரனின் நாய்களால், தான் படும் துன்பத்தை எடுத்துக்கூறி அவன் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். முன்பு ஒரு தடவை பஞ்சாயத்துத் தலைவரின் மகளைஒரு சிறிய விபத்திலிருந்து விவசாயி காப்பாற்றியிருப்பதால் பஞ்சாயத்து தலைவருக்கு விவசாயி மீது பெரும் மதிப்பு உண்டு.

விவசாயிக்கும் வேட்டைக்காரனுக்கும் இடையே உள்ள பிணக்கைப் பற்றி விசாரித்து தெரிந்து கொண்ட அவர் விவசாயிடம் கூறினார் நான் நினைத்தால் பஞ்சாயத்தைக் கூட்டி அந்த வேட்டைக்காரனை கண்டித்து, அபராதம் விதித்து அவன் நாய்களை கட்டிப்போடச் செய்ய முடியும். ஆனால் நீ தேவையின்றி ஒரு எதிரியை சம்பாதிக்க நேரிடும்.  உனக்கு அது சொந்த வீடு. அவனுக்கும் அது சொந்த வீடு. இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் தினசரி பார்க்க வேண்டும். அப்படியிருக்கும்போது பக்கத்து வீட்டுக்காரன் நண்பனாக இருப்பது விருப்பமா அல்லது எதிரியாக இருப்பது விருப்பமா என்று கேட்டார்.

பஞ்சாயத்து தலைவர் சொல்வதில் உள்ள நியாயத்தைப் புரிந்து கொண்ட விவசாயி அண்டை வீட்டுக்காரனை ஒரு நண்பனாக பார்ப்பதில் தனக்கு விருப்பம் என்றார்.சரி.. உன் ஆட்டுக்குட்டிகளும் பத்திரமாக இருப்பது போலவும் அவனும் உன் நண்பனாக இருப்பது போலவும் நான் ஒரு தீர்வை சொல்கிறேன் கேட்பாயா என்று ஊர்த்தலைவர் கேட்க , நீங்கள் எதைச் சென்னாலும் கேட்கிறேன் என்றார் இவர்.  

உடனே ஊர்த்தலைவர் சில அருமையான ஆலோசனைகளைக் கூறினார். அதன்படி அந்த விவசாயி வீட்டுக்குச் சென்றவுடன் தனது பட்டியில் இருக்கும் ஆட்டுக்குட்டிகளிலேயே மிகவும் அழகான இரு குட்டிகளை எடுத்துச் சென்று வேட்டைக்காரனின் இரண்டு மகன்களுக்கும் தலா  ஒரு குட்டி விளையாட பரிசளித்தார். குழந்தைகளுக்கு தங்களுக்கு விளையாட புதிய தோழர்கள் கிடைத்ததில் ஒரே குஷி இருவரும் அந்தக் குட்டிகளுடன் விளையாடி மகிழ்ந்தார்கள். தன் குழந்தைகளின் புதிய தோழர்களைப் பாதுகாக்க, தற்போது வேட்டைக்காரன் நாய்களை கட்டிப் போட வேண்டியிருந்தது. யாரும் சொல்லாமலேயே தன் நாய்களை அவன் சங்கிலியால் பிணைத்தான். தனது மகன்களுக்கு விவசாயி ஆட்டுக்குட்டிகளைப் பரிசளித்ததைத் தொடர்ந்து பதிலுக்கு அவனுக்கு ஏதேனும் பரிசளிக்க விரும்பி காட்டிலிருந்து கொண்டு வந்த சில அரிய பொருட்களைப் பரிசளித்தான் வேட்டைக்காரன்.

ஆக இருவருக்கும் நல்லுறவு மலர்ந்து நாளடைவில் நல்ல நண்பர்களாகி விட்டனர்ஆக பகைமையை வளர்த்துக் கொண்டே செல்வதை விட அதை முடிவுக்குக் கொண்டு வருவதில் தான் நிம்மதி இருக்கிறது

பகைமை நீங்க சில வழிகள்-ஒருவருக்கொருவர் அன்பளிப்பு கொடுத்து பழகுவதாலும் பகைமை நீங்கி உறவு மலரும்.

عَنْ أَبِى هُرَيْرَةَ رضعَنِ النَّبِىِّ صلى الله عليه وسلم قَالَ تَهَادَوْا تَحَابُّوا(حاكم) وعنه عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ تَهَادَوْا فَإِنَّ الْهَدِيَّةَ تُذْهِبُ وَحَرَ الصَّدْرِ وَلَا تَحْقِرَنَّ جَارَةٌ لِجَارَتِهَا وَلَوْ شِقَّ فِرْسِنِ شَاةٍ (ترمذي) عَنْ أَنَسٍ :أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ  لَوْ أُهْدِىَ إِلَىَّ كُرَاعٌ لَقَبِلْتُ وَلَو دُعِيتُ إِلَى ذِرَاعٍ لأَجَبْتُ وَكَانَ يَأْمُرُنَا بِالْهَدِيَّةِ صِلَةً بَيْنَ النَّاسِ (بيهقي)

எந்த அன்பளிப்பையும் அற்பமாக கருதக் கூடாது என்ற படிப்பினையும் இதில் உண்டு

கண் கூடாக பார்க்காமல் பிறரைப் பற்றி தவறாக எண்ணுவதும் பகைமையை உண்டாக்கும்

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اجْتَنِبُوا كَثِيرًا مِّنَ الظَّنِّ إِنَّ بَعْضَ الظَّنِّ إِثْمٌ (الحجرات12)عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِيَّاكُمْ وَالظَّنَّ فَإِنَّ الظَّنَّ أَكْذَبُ الْحَدِيثِ وَلَا تَحَسَّسُوا وَلَا تَجَسَّسُوا وَلَا تَحَاسَدُوا وَلَا تَدَابَرُوا وَلَا تَبَاغَضُوا وَكُونُوا عِبَادَ اللَّهِ إِخْوَانًا (بخاري)

ஒருவருக்கொருவர் ஸலாம் கூறுவதாலும் பகைமை நீங்கி உறவு மலரும். இறுதி காலத்தில் அறிந்தவர்களுக்கு மட்டுமே சிலர் ஸலாம் கூறுவர்

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَا تَدْخُلُوا الْجَنَّةَ حَتَّى تُؤْمِنُوا وَلَا تُؤْمِنُوا حَتَّى تَحَابُّوا أَفَلَا أَدُلُّكُمْ عَلَى أَمْرٍ إِذَا فَعَلْتُمُوهُ تَحَابَبْتُمْ أَفْشُوا السَّلَامَ بَيْنَكُمْ (ابوداود)وقال رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَبَيْنَ يَدَيْ السَّاعَةِ تَسْلِيمُ الْخَاصَّةِ وَتَفْشُو التِّجَارَةُ حَتَّى تُعِينَ الْمَرْأَةُ زَوْجَهَا عَلَى التِّجَارَةِ وَتُقْطَعُ الْأَرْحَامُ (أحمد)

 

Jazakhallah: http://ulama.in/JummaUrai/337

 

The view points and opinion solely those of the author or source. TamilIslamicMedia.com is not responsible for the posted contents.
 


No rights reserved.